Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஏழ்மையில் தவிக்க இடங்கொடுக்ககூடாது'

Featured Replies

'ஏழ்மையில் தவிக்க இடங்கொடுக்ககூடாது'
 
 

article_1483091899-1.jpg“நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

“பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை ஆறாம் நாளாகவும் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, நேற்று  உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/188938/-ஏழ-ம-ய-ல-தவ-க-க-இடங-க-ட-க-கக-ட-த-#sthash.rBpb2z0f.dpuf

article_1483091926-3.jpg

12898.jpg

நாட்டு மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்து செல்வதாக தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், புதுவருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை நேற்றுமுன்தினம் ஆறாம் நாளாகவும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண் டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுடைய பல மக்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்கக்கூடாது. எம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும்.

உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் எம்முடைய இச்சிறு தேசத்தை உலகிற்கு அறியப்படுத்துவதற்கு பெரிதும் துணைபுரிந்துள்ளது. இலங்கை மக்கள் அனைத்து மத கொண்டாட்டங்களையும் பொதுவாக கொண்டாடுவார்கள் என்பதை நாம் அறிவோம். வெசாக் கொண்டாட்டம் சிங்கள தமிழ் புத்தாண்டு முஸ்லிம்களின் திருநாள்கள் என அனைத்து திருநாள்களையும் இலங்கையர்கள் கொண்டாடுகின்றார்கள். 

இச்செயற்பாட்டின் மூலம் எம் மக்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமை வெளிப்படுகின்றது. எங்களுடைய சமய கலாசார மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டியவாறு ஒரு இனமாக வாழ்வதற்கான தேவை இதன் மூலம் வெளிப்படுகின்றது என சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12898&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.