Jump to content

வெந்தயக்கீரை பிரியாணி


Recommended Posts

பதியப்பட்டது

62p1.jpg

வெந்தயக்கீரை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன்.

தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நெய்யை அடுப்பில் காயவைத்து பட்டையைப் போட்டு தாளித்து கீரையைச் சேர்க்கவும். பிறகு, வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து தேவையான உப்பு போட்டு வடித்த சாதத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். சேர்ந்தாற்போல் வெந்து வந்ததும் அழுத்திவிட்டு ஒரு தட்டால் மூடி வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து பிறகு இறக்கவும்.

புது சுவையில் வித்தியாசமான மணத்துடன் வெந்தயக்கீரை பிரியாணி ஊரைக்கூட்டும்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.