Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்

Featured Replies

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
 
 
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் சில முடிவுகளை தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்னார் விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டின் உத்தரவை பின்பற்றத் தவறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி இந்த அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/02122526/1059573/SC-removes-Anurag-Thakur-Ajay-Shirke-from-BCCI.vpf

  • தொடங்கியவர்

பிசிசிஐ சரிவு தொடங்கியது எங்கே? ஓர் அலசல்...

பிசிசிஐ

புத்தாண்டில் முதல் சிக்ஸரை அடித்துள்ளது சுப்ரீம் கோர்ட். நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பரிந்துரையைப் பின்பற்ற மறுக்கும் மற்ற மாநில கிரிக்கெட் சங்க  நிர்வாகிகளும் வீட்டுக்குச் செல்லலாம் என எச்சரித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் பிரேக்கிங் நியூஸ் இதுதான். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையால், கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். சரிவு தொடங்கியது எங்கே? ஒரு ஃபிளாஷ்பேக்...

மே 2013, ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்
2013 ஐ.பி.எல். தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சர்மா, அஜித் சண்டிலா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. வீரர்கள், புக்கிகள், தரகர்கள் மட்டுமல்லாது சி.எஸ்.கே. அணியின் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

அக்டோபர் 2013, முக்தல் கமிட்டி நியமனம்
சூதாட்ட வழக்கு மற்றும் பி.சி.சி.ஐ. விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி முகுல் முக்தல் தலைமையிலான குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2014, சி.எஸ்.கே. ராஜஸ்தான் ராயல்ஸ் மீது குற்றச்சாட்டு
ஐ.பி.எல். சி.ஓ.ஓ சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது முக்தல் கமிட்டி. இந்த விதிமீறல் குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் மீது, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார் என அறிக்கை தாக்கல் செய்தது முக்தல் கமிட்டி.

ஜனவரி 2015, லோதா கமிட்டி நியமனம்
ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை  உறுதி செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். அதோடு பி.சி.சி.ஐ.யில்  சீர்திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஜூலை 2015, சி.எஸ்.கே. ராஜஸ்தான் அணிகளுக்கு தடை
ஸ்பாட் ஃபிக்சில் தொடர்புடைய சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை  இரண்டு ஆண்டுகள், ஐ.பி.எல்.போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது லோதா கமிட்டி. அந்த அணியின் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மற்ற அணிகளில் விளையாட அந்த இரு அணி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஜனவரி 2016, பி.சி.சி.ஐ.யில் முழு மாற்றத்துக்கு பரிந்துரை
ஒட்டுமொத்த பி.சி.சி.ஐ.,யின் அதிகாரத்தையும் மாற்றி அமைக்க பரிந்துரைத்தது லோதா கமிட்டி. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, 70 வயதுக்கு மேற்பட்டவர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் நீடிக்கத் தடை என நீண்டது அந்த புரிந்துரை. 

ஃபிப்ரவரி 2016, பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ஜனவரி 31-ம் தேதிக்குள் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், பி.சி.சி.ஐ. அதைப் பின்பற்றவில்லை. மாறாக, சட்ட சிக்கலைச் சீர்க்க ஒரு குழு அமைத்தது. மீண்டும் மார்ச் 3-ம் தேதி வரை டெட்லைனை நீட்டித்தது பி.சி.சி.ஐ. இதற்கும்  பி.சி.சி.ஐ. மசியவில்லை.

மார்ச் 2016, அறிக்கைக்கு எதிராக பி.சி.சி.ஐ. விளக்கம்
பி.சி.சி.ஐ. சார்பில் 55 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மட்டுமே ஏற்க முடியும். பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக  பி.சி.சி.ஐ. வாதம் செய்தது.

ஏப்ரல் 2016, நிதி பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு
விதிமுறைகளை மீறி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்தது. அதோடு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே என்ற கமிட்டியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை நிராகரித்தது.

மே 2016, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை
பி.சி.சி.ஐ.யின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, ஸ்திரமான நிலைப்பாடு இல்லை என விளாசிய சுப்ரீம் கோர்ட், இந்த கட்டமைப்பை மாற்றாமல் எதுவும் சரியாகாது என கொந்தளித்தது.

செப்டம்பர் 2016, வழிக்கு வரவும், இல்லையெனில்...
‛லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி பி.சி.சி.ஐ. தலைவரை நீக்க தயங்க மாட்டோம்’ என கண்டித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‛‛தங்களுக்கென்று ஒரு சட்டம் இருப்பதாக பி.சி.சி.ஐ. கருதுகிறது. அவர்கள் தங்களை கணவான்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. வழிக்கு வரவும். இல்லையெனில் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்’’ என எச்சரித்தார்.

அக்டோபர் 2016, பண பரிவர்த்தனைக்குத் தடை
அவசரக் கூட்டம் நடத்தி, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு 1,100 கோடி ஒதுக்குவதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. ஆனால், பண பரிவர்த்தனையை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு லோதா கமிட்டி உத்தரவிட்டது. இதனால், இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டதாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார். இதையடுத்து, அன்றாட பரிவர்த்தனைக்கு லோதா கமிட்டி அனுமதி அளித்தது.

அக்டோபர் 2016, தாக்கூருக்கு கோர்ட் உத்தரவு
லோதா கமிட்டி பரிந்துரை விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து கடிதம் கோரினார் அனுராக். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அனுராக் தாக்கூருக்கு  கோர்ட் சம்மன் அனுப்பியது. 
இதற்கிடையே, சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கமிட்டியின் சில பரிந்துரைகளை ஏற்பதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. இருப்பினும் வயது வரம்பு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு போன்ற விஷயங்களில் சீர்திருத்தம் செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்தது.

நவம்பர் 2016, தலைவரை நீக்க குழு பரிந்துரை
பிசிசிஐ சொன்ன பேச்சு கேட்காமல் அடம்பிடித்ததை அடுத்து, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக நீக்குமாறு லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ. நகர்வுகளை கண்காணிக்க முன்னாள் உள்துறை செயலர் கோபால் கிருஷண பிள்ளையை நியமித்தது உச்ச நீதிமன்றம்

டிசம்பர் 2016, பி.சி.சி.ஐ. மீண்டும் அடம்
‛எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ என, லோதா கமிட்டியை சந்தித்த பின் சொன்னார் பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே. ஹைதராபாத், விதர்பா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க சம்மதித்தது.

டிசம்பர் 2016, தாக்கூருக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட வேண்டும் என அனுராக் கோரியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு ‛நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்’ என தாக்கூரை எச்சரித்து, அடுத்த விசாரணையை 2017, ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

ஜனவரி 2, 2017,  தலைவர் அனுராக், செயலர் ஷிர்கே நீக்கம்
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியது உச்ச நீதிமன்றம். ‛‛இது கிரிக்கெட்டின் வெற்றி. நிர்வாகிகள் வருவார்கள், போவார்கள். தனிநபர்களை விட கிரிக்கெட்தான் முக்கியம்’ என நீதிமன்றம் தெரிவித்தது. அதோடு, லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில், பின்னடைவு ஏற்படுத்த ஐ.சி.சி.யிடம் இருந்து கடிதம் பெற முயற்சித்ததற்காகவும், அந்த கடித விவகாரத்தை மறைத்ததற்காகவும், அனுராக் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாய்ந்தது. 

http://www.vikatan.com/news/sports/76608-the-falldown-of-bcci-a-detailed-report.art

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீதிமன்றங்கள் ஆடக்கூடாத விளையாட்டு

சேகர் குப்தா

 

 
 
 
koli_3116643f.jpg
 
 
 

கடந்த வாரம் மிகுந்த தயக்கத்துடன் விமான நிலையம் சென்றேன். ஏற்கெனவே 2 மணி நேரம் தாமதமாகிவிட்ட அந்த பெங்களூரு விமானம் ரத்து செய்யப்படக்கூடாதா என்றுகூட நினைத்தேன். கிரிக்கெட் பற்றிய சிந்தனையாலோ, உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா குழு கிரிக்கெட் வாரியத்தின் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் பற்றிய நினைப்பாலோ அப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகவில்லை. அப்போது மல் யுத்தம் பற்றியே சிந்தித்தேன். 46 விநாடிகளுக்குள் சோபியா மாட்சனிடம், பபிதா போகாட் தோற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்திய ரசிகர்களில் சிலர் சோபியாவைக்கூட ஆதரித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்! பிறகு நிர்மலா தேவி, கரோலினா கேஸ்டிலோ இடால்கோவை புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அப்போது அரங்கில் தோன்றியவர் முகம் பரிச்சயமாக இருந்தது. அவர் அசர்பைஜானின் டொக்ருல் அஸ்கரோவ். உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவர். அவரை எதிர்த்துக் களத்தில் நின்றவர் அதிகம் நாம் பார்த்திராத இந்தியர் விகாஸ் குமார். முதல் சுற்றில் பின்தங்கியவர், இரண்டாவது சுற்றில் ஆவேசம் வந்தவரைப்போல தாக்கி வெற்றி பெற்றார்.

இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளில் நிறையப் பணம் கொட்டுகிறது. என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணிக்காக, மும்பை மகாரதி அணிக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்டார் அஸ்கரோவ். உலகத் தரமுள்ள வீரர்களை வெல்லவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் இந்தியாவிலும் மல்யுத்த வீரர்கள் தயாராகிவிட்டனர்.

இன்னொரு விளையாட்டு சேனலில் பேட்மிண்டன் (பூப்பந்து) போட்டிகள் காட்டப்பட்டன. பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) என்ற அந்தப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த், டென்மார்க்கைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாமிட ஆட்டக்காரருமான ஜேன் ஆஸ்டர்கார்ட் ஜோர்கன்சனை வென்றார்.  காந்த் உலக அளவில் 15-வது இடத்தில்தான் இருக்கிறார். காந்த் ‘அவர் வாரியர்ஸ்’ அணிக்காகவும் ஜோர்கன்சன் ‘டெல்லி ஏசர்ஸ்’ அணிக்காகவும் விளையாடினர்.

இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்குப் புரவலராக இருப்பவர் இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவரான அகிலேஷ் தாஸ். இவர் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பனாரசி தாஸின் மகன். பேட்மிண்டன் போட்டிகளில் தேசத்துக்காக ஆடியவர் இல்லை அவர். ஆனால் மிகச் சிறந்த நிர்வாகி.

இந்திய மல்யுத்த சம்மேளனம் என்ற அமைப்பு, உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவரின் உடமையைப் போல உள்ளது. 16 வயதிலேயே குற்ற வழக்குக்கு உள்ளானவர், பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் சேர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர், தடா சட்டப்படி சிறைவாசம் அனுபவித்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல (பி.சி.சி.ஐ.) மல்யுத்த, பூப்பந்து சங்கங்களையும் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உள்படுத்தினால் அகிலேஷ், பிரிஜ் பூஷண் சரண் நிர்வாகிகளாக இருக்க முடியாது.

அபய் சவுடாலா தலைவராக இருந்த 2007 முதல் 2012 வரையில் குத்துச் சண்டைப் போட்டிகள் பிரபலமடைந்தன. அவர் நீக்கப்பட்ட பிறகு குத்துச் சண்டைக்கே ஆதரவு குறைந்தது. பிறகு ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தலைமையில் குத்துச் சண்டை சம்மேளனம் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. உலக கபாடி சம்மேளனத் தலைவராக ஜனார்த்தன் சிங் கெலோட் பதவி வகிக்கிறார். இவரும் தீவிர அரசியல்வாதி. இந்திய கபாடி சங்கத்துக்கு இவருடைய மனைவி மிருதுள் படவ்ரியா தலைவராக இருக்கிறார்.

விளையாட்டு சங்க நிர்வாகிகளாகப் பதவி வகிக்க லோதா குழு நியமித்துள்ள வயது, தொழில், பதவிக்கால வரம்பு ஆகிய நியதிகளை இவர்களுக்குக் கட்டாயமாக்கியிருந்தால் இவர்களுடைய பங்களிப்பில் வளர்ந்த விளையாட்டுகள் எதுவுமே இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்காது.

அதலடிக்ஸ் சம்மேளனத் தலைவராக முன்னணி அதலடிக் வீரர் ஆதில் சுமாரிவாலா பதவி வகிக்கிறார். மிக வேகமாக ஓடுவதில் வல்லவர். அவர் ஒரு அதலட் என்பதுடன், பதவி வகிப்பதற்கான வயது வரம்பிலும் இருக்கிறார்.

இப்போது மீண்டும் கவனிப்பையும் வெற்றிகளையும் பெற்றுவரும் விளையாட்டு ஹாக்கி. ஆனால் இந்திய ஹாக்கி சம்மேளனம் நன்றாக நிர்வகிக்கப்படுகிறதா, இல்லையா என்று கேட்டால் உறுதியாகக் கூற முடிய வில்லை. சம்மேளனத்தின் தலைவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி கே.பி.எஸ். கில். தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வீரர்களிடம் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சிலர் லஞ்சம் வாங்கியது ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு அம்பலமானது. ஹாக்கி இந்தியா என்ற அமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகமும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கமும் சேர்ந்து உருவாக்கின. சுரேஷ் கல்மாடி ஊழல் புகாருக்கு ஆளாகி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்திய ஹாக்கி சங்கத் தலைவராக நரீந்தர் பாத்ரா பதவி வகிக்கிறார். இவர் டெல்லியில் பிரபலமான பாத்ரா மருத்துவமனையின் நிறுவனர். இவர் சர்வதேச ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் பதவியை தேசிய ஹாக்கி வீராங்கனையான மரியம்மா கோஷிக்கு அளித்திருக்கிறார் பாத்ரா.

இப்படி குழப்பம் தரும் தகவல்களிலிருந்து நாம் எந்த முடிவுக்காவது வர முடியுமா? வயது, அரசியல் தொடர்பு, பணக்காரப் பின்புலம், சொந்தமான விளையாட்டுச் சாதனைகள் ஆகியவை இரு்பபதாலோ, இல்லாமல் இருப்பதாலோ ஒரு விளையாட்டு சங்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்துவிட முடியாது. அப்படியென்றால் என்னதான் அடிப்படைத் தகுதிகள், அதுவும் கிரிக்கெட்டுக்கு. இந்தியாவின் ராஜ விளையாட்டு கிரிக்கெட் என்றால் மிகையில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக அல்லாமல் திரைமறைவில்தான் செயல்படுகிறது, அதில் ஊழல்கள் அதிகம். உச்ச நீதிமன்றமும் அது நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவும் கிரிக்கெட் வாரியத்தை எப்படிச் சீர்படுத்த முடியும்?

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை வாரியம் செய்துவிட்டது. லோதா குழுவின் பரிந்துரையை அமல் செய்துதான் தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கோபத்தில் இடப்பட்ட ஆணையாகவே கருத வேண்டியிருக்கிறது. நீதிமன்றமோ அது நியமித்த குழுவோ வாரியத்தைச் சீர்திருத்தும் வேலையில் நேரடியாக இறங்கியிருக்கக்கூடாது. லோதா குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்திருக்க வேண்டும்; அந்த அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும்.

நவீன காலத்தில் விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. பணத்தைப் போட்டு பெருக்கும் தொழில்முனைவோர்கள் இதில் ஈடுபடும்போது இது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் கேளிக்கை, விற்பனை, லாபம் என்று பல இலக்குகளுடன் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட பெரிய வியாபாரம். இதை மனதில் கொள்வது அவசியம்.

 

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

http://tamil.thehindu.com/opinion/columns/நீதிமன்றங்கள்-ஆடக்கூடாத-விளையாட்டு/article9474429.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.