Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்

Featured Replies

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்

 
 

பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண்
 பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண்

கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது.

சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.

அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்

இதேவேளையில், "இத்தகைய விடயங்கள் நிச்சயம் நடக்கதான் செய்யும்" என்கிற அமைச்சரின் கூற்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

"மனப்பான்மையில் மட்டுமல்ல, அவர்களை போல ஆடை அணிவதிலும் மேற்குலகினரை பார்த்து இளைஞர்கள் நடக்கின்றனர்" என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டை கொண்டாடும் வகையில் மத்திய வர்த்தக மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரகாடே சாலை பகுதியில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதாக பெங்களூரில் இருக்கும் பிபிசி இந்தி மொழி பிரிவின் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.

பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

"இந்த பகுதியில் வழக்கமாக கூடும் மக்களை விட அன்று மூன்று மடங்கு மக்கள் அதிகமாக கூடியதாக, பெங்களூரு மிரர் செய்தித்தாளின் புகைப்படக் கலைஞர் ஆனந்த சுப்பிரமணியன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவருடைய புகைப்படங்கள் இந்த நகரின் ஆண்களின் நடத்தை பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்  பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

சனிக்கிழமை இரவு நடந்தது என்ன?

"இரவு 11:45 முதல் நள்ளிரவு 12:30 வரை இந்த பகுதியில் மக்கள் நகரக்கூட முடியவில்லை. இரண்டு சாலைகளின் சந்திப்புக்கு அருகில்தான் காவல்துறை மக்கள் கூட்டத்தை கலைக்க முடிந்தது. ஆனால், மீண்டும் மக்கள் அங்கு கூடத் தொடங்கினர்" என்று அவர் கூறினார்.

"அந்த மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வழியில், காவல் துறையினரிடம் வந்தடைந்த மக்களில், தாங்களுக்கு பாலியல் தெந்தரவு கொடுக்கப்பட்டதை புகாராக தெரிவிக்கும் பெண்களை என்னால் காண முடிந்தது. அந்த மனிதர்களை இனம்காட்ட முடியுமா என்று காவல்துறையினர் கேட்டபோது, அங்கே பெருங்கூட்டமாக இருந்தால், அவர்களால் இயலவில்லை".

"பல ஆண்களால் சூழப்பட்டிருந்த பெண்ணொருவர் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.

பழிவாங்குதல் மற்றும் சமூக அளவில் முத்திரை குத்தப்படுவதால், பாலியல் தாக்குதல்களை பற்றி புகார் தெரிவிக்க இந்தியாவிலுள்ள பெண்கள் தயங்குகின்றனர்.

ஆனால், சனிக்கிழமையன்று தங்களுக்கு நடைபெற்ற இந்த கொடுமையை பற்றி எடுத்துக் கூற பல பெண்கள் முன்வந்தனர்.

பாலியல் தொல்லை கொடுக்கும் இளைஞர்  "இத்தகைய விடயங்கள் நிச்சயம் நடக்கதான் செய்யும்" என்கிற அமைச்சரின் கூற்றால் மக்கள் கோபம்

பணியில் இருந்து திரும்புகையில் இரவு நேரத்தில் தனக்கு ஓர் ஆண் பாலியில் தொல்லை கொடுத்ததை புகைப்படக் கலைஞர் சாய்தாலி வாஸ்நிக் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்.

"நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று எண்ணி, லாவகமாக அவர் அவ்வாறு செய்தார்" என்று அவர் கூறினார். நான் அந்த மனிதரோடு போராடிய போதும் காவல்துறையினர் தலையிடவில்லை என்றும் தெரிவித்தார்,

அந்த இரவில் அங்கிருந்த பெண்களில் ஒருவர் தான் எஷிதா (முழு பெயரல்ல). "20-30 ஆண்கள் திடீரென சாலையில் ஓடத் தொடங்கியபோது, சில பெண்களை தொட்டு பாலியல் தொல்லை அளித்தனர்" என்று அவர் உறுதி செய்தார்.

"நான் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களோடு 12-15 பேராக குழுவாக இருந்தேன். அதனால் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம்" என்று அவர் கூறினார். அங்கு நின்றிருந்த பல காவல்துறையினர் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையம் வரை எங்களை பாதுகாப்பாக அழைத்து சென்றதால், நாங்கள் தொல்லைக்கு உள்ளாகவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு காணொளி பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன" என்று பெங்களூரு காவல்துறை ஆணையாளர் பிரவீன் சூட் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"இந்த காணொளி பதிவுகளிலும், புகைப்படங்களிலும் பாலியல் தொந்தரவு வழங்கப்பட்டதற்கான சான்றுகளை தேடி வருகின்றோம். சான்றுகளை கண்டறிந்தவுடன் அது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதற்கான காணொளி பதிவுகள் அல்லது புகைப்படங்கள் இருந்தால் வழங்க வேண்டும் என சூட் பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்களே சென்று அவர்களின் புகார்களை பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38498518

  • தொடங்கியவர்

பெண்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விமர்சிக்கும் 'நியாயவான்'களுக்கு 5 கேள்விகள்! #BengaluruNewyearEveshame

புத்தாண்டு

பெங்களூருவில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், ஆண்களால் கூட்டு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானது, தேசத்துக்கே அதிர்ச்சி தந்த செய்தி.

கடந்த சனி அன்று, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்ஜி சாலை மற்றும் பிரிகேட் சாலைகளில் புத்தாண்டைக் கொண்டாடக் கூடினார்கள் மக்கள். 'இரவின் சாலைகளும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நமக்கும்தான்' என்று நம்பி வந்த இளம் பெண்களை, பாலியல் பொருளாக மட்டுமே பார்த்தது அங்கிருந்த ஆண்களின் மனம்.

கூட்டத்தை சாக்காக வைத்து, கடந்த பெண்களை எல்லாம் அருவருக்கத்தக்க பாலியல் சீண்டல்கள் செய்தார்கள் ஆண்கள். அதிர்ச்சியில், அவமானத்தில், வேதனையில், கோபத்தில், கொந்தளிப்பில் எழுந்த பெண் குரல்களுக்கு, அந்தக் கூட்டத்தில் எந்த நியாயமும் தரப்படவில்லை. பத்திரிகையாளர்களின் கேமராவில் பதிவானதில் வெளியிடப்பட்ட, பெண் காவலர் ஒருவரின் தோளில் முகம் சாய்த்து விம்மும் அந்தப் பெண்ணின் புகைப்படமும், தனக்கு நேர்ந்த வக்கிரத்தால் ஆற்றாமையில் அழும் மற்றொரு பெண்ணின் புகைப்படமும், அந்தச் சாலைகளில் மற்ற பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அநியாயத்தை அறைந்து சொல்கின்றன.

'பாதுகாப்புப் பணிகளுக்கு அங்கு 1600 காவலர்கள் இருந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 60,000 மக்கள் அங்கு குழும, அந்தச் சாலைகள் எங்கள் கட்டுப்பாட்டை இழந்தன' என்று சொல்லியிருக்கிறார், காவல் துறை அதிகாரி. தேசத்தையே தலைகுனிய வைத்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது, இன்னும் வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவ், 'கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான்' என்று 'கவனிக்க வேண்டிய' தன் கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் மகராஷ்டிர மாநில தலைவர், எம்.எல்.ஏ அபு ஆஸ்மி,  'பெண்கள் குட்டையான உடைகள் அணிவதால் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன' என்று தான் கண்டறிந்த உண்மையைத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, 'பெண்கள் புத்தாண்டு கொண்டாடுறோம், மாடர்ன் டிரெஸ் போடுறோம்னு வந்தா, இதெல்லாம்தான் நடக்கும்' என்ற மனநிலையில், இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துபவர்களுக்கும், சலனமின்றிக் கடப்பவர்களுக்கும் இந்த 5 கேள்விகள்...

* 'புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டால் அப்படித்தான் நடக்கும்' என்ற உங்களின் அதிகார வார்த்தைகளின் மூலம், அந்த அயோக்கியர்களின் வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்ற அடிப்படைப் பிழைகூடப் புரியாதா உங்கள் புத்திக்கு?

* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களும், நாகரிக உடை அணியும் பெண்களும்தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்றா  நினைக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளும், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளானவர்கள்தான் என்ற உண்மையை அறிவீர்களா? அதற்குக் காரணம், உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளின் உடையும், செயல்பாடுகளும்தான் என்று வழக்கம்போல் தீர்ப்பு சொல்லிவிடலாமா?

* 'புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம், பேன்ட், டி ஷர்ட் என வெஸ்டர்ன் கலாசாரங்களை பெண்கள் பின்பற்றுவதன் விளைவு இது' என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். பள்ளிச் சீருடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் மரணங்களுக்கு தொகுத்துத் தரவும் உங்களிடம் ஆண் மைய நியாயங்கள் இருக்கிறதா?   

* ஐந்து வயதுப் பெண் குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' கற்றுக்கொடுக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவீர்களா? அவளிடம் அவள் மழலையைப் பிடுங்கிக்கொண்டு, 'நீ பெண்' என்ற கவசத்தை மாட்டிவிடும் அவலத்தை தந்தது யார்? ஆண்கள் ஆண்கள் ஆண்கள்!
 
* 'ஆண்கள் அப்படித்தான். பெண்கள்தான் அதற்கு வாய்ப்புத் தராமல் இருக்க வேண்டும்' என்ற உங்களின் மேலான எண்ணத்தை நீங்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தப் பெண்ணும் ஆணுக்கு வாய்ப்புத் தர விரும்பி எதையும் செய்வதில்லை. அவள் தன் உரிமையை, தனக்கான மகிழ்ச்சியை, கொண்டாட்டங்களை பெறவே விரும்புகிறாள். எப்போதும் பெண்களின் உறுப்புகளையே உற்றுநோக்கும் கண்களும், அதை நியாயப்படுத்தும் வாய்களும் வெட்கப்பட வேண்டுமே தவிர, இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெண் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

புத்தாண்டும், இரவும், சாலைகளும், கொண்டாட்டங்களும் பெண்களுக்கும்தான். பெங்களூருவில் நடந்த அசிங்கத்துக்கு, ஒரு பெண்ணின் உடலை எந்தக் குற்ற உணர்வும் இன்றி வக்கிரமாகச் சீண்டலாம் என்று நினைத்து அந்த அசிங்கத்தைச் செய்த ஆண் மனங்களும், அந்த ஆண்களை அந்த மனநிலையில் வளர்த்தெடுத்த குடும்பங்களும், சக மனுஷி பாதிக்கப்பட்ட ஓலம் கேட்கும்நிலையில்கூட, 'பெண்கள் அப்படி இருக்கக்கூடாது' என்று வகுப்பெடுக்கும்   நாட்டாமைகளும்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தலைகுனியுங்கள்!

http://www.vikatan.com/news/india/76815-5-questions-for-those-who-justify-bengaluru-mass-molestation.art

  • தொடங்கியவர்

’ச்சீ... நீங்களெல்லாம் ஆண்களா..!?’ - கொந்தளிக்கும் விராட் கோலி

விராட் கோலி

இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் அடையாளங்களுள் ஒன்று, அவரின் முன்கோபம். எதிரணி வீரர்களை களத்தில் வசைபாடக்கூடியவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால், பலரும் அறியாத அவரின் மற்றொரு முகம், பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான மரியாதை குறித்து தொடர்ந்து பேசிவரும் அவரின் சமூக அக்கறை. 

பெங்களூரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த தனது ஆதங்கத்தை, தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் கோலி. 

''பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. அந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமையைத் தட்டிக்கேட்காமல் போனது கேவலமான செயல். உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் அவர்களை ஆண்கள் என கூறிக்கொள்ளக் கூடாது. எனக்கு ஒரே ஒரு கேள்விதான். இதே விஷயம் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிகழ்ந்திருந்தால் உதவி செய்திருப்பீர்களா? அல்லது வேடிக்கை பார்த்திருப்பீர்களா?

இதனை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள். தட்டிக் கேட்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு இது சரியென்று தோன்றும் அளவுக்கு உங்களை நிலைப்படுத்திக்கொள்கிறீர்கள். காரணம், அந்த பெண் ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறாள் என்பதுதான் உங்கள் பதில். 

அது அவளது வாழ்க்கை, அவளது முடிவு, அவளது விருப்பம். இதனை மாற்றிக்கொள்ளச் சொல்வது தவறு. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தக் கொடுமைகளை ஏதோ ஒரு கோணத்தில் சரியென்று ஏற்றுக்கொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

நாம் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆணையும், பெண்ணையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் இடத்தில் நமது குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் எப்படி நடந்து கொள்வோமோ அதனைச் செய்தாலே போதும். ஜெய்ஹிந்த்!" இவ்வாறு தன் வீடியோவில் பேசியுள்ளார் கோலி!

இப்போது மட்டுமல்ல, எப்போதும் பெண்மைக்கு மரியாதை அளிக்கும் இளைஞராகவே வெளிப்பட்டிருக்கிறார் கோலி. சென்ற வருடம் டி20 உலகக் கோப்பையின்போது அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்தவர்களை தன் 'ஷேம்' ஸ்டேட்டஸ் மூலம் காலி செய்தார். அதுதான் சென்ற வருடத்தின் இந்தியாவின் பெஸ்ட் ட்வீட்டாகக் கொண்டாடப்பட்டது. 

 

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity

Cen5iI6W8AARUfV.jpg
 
 

அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் பெங்களூரு சம்பவம் குறித்து வாய்மூடி வேடிக்கை பார்த்தபடி இருக்கும்போது, 28 வயதாகும் நம் சமகால இளைஞனின்  குரல் ஓங்கி ஒலிப்பது வரவேற்புக்கு உரியது. ஒவ்வொரு இளைஞனும் விராட் கோலியை போல் இருந்தால், பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் உறுதி செய்யப்படும்! 

http://www.vikatan.com/news/miscellaneous/77077-are-you-really-men-virat-kohli-slams-bangalore-guys.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.