Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க செயலணியின் பரிந்துரையை நிராகரித்தது அரசாங்கம்

Featured Replies

நல்லிணக்க செயலணியின் பரிந்துரையை நிராகரித்தது அரசாங்கம்
 
 
நல்லிணக்க செயலணியின் பரிந்துரையை நிராகரித்தது அரசாங்கம்
உள்ளக விசாரணையில் கலப்பு நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிபதி உள்வாங்கப்பட வேண்டும் என நல்லிணக்க செயலணி முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்பதற்கு  அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பு   தெரிவித்துள்ளது.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட  அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன அரசின் மேற்படி நிலை ப்பாட்டை அறிவித்தார் 
 
யார் எவ்வகையான பரிந்துரைகளை முன்வைத்தாலும் அதனை ஏற்பதா? இல்லையா? என்பது பற்றி அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
 
சில அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும். ஆனால் உள்ளகப் பொறிமுறையில் வெளி நாட்டு பிரதிநிதித்துவம் சேர்க்கப்படப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. தொழில் நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் வழங்க முடியும். ஆனால் விசாரணைகளில் உள்நாட்டு நீதிபதிகளே பங்குகொள்வார்கள். நல்லிணக்க செயலணி போன்று பலரது அறிக்கைகள் காணப்படுகின்றன. சமர்ப்பி க்கப்ப டுகின்ற அறிக்கைகளில் உள்ள விடயங்களை ஆராய தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதிலுள்ள  எல்லாவற்றையும் முழு மையாக அமுல்படுத்த முடியாது. அதில் என்னென்ன விடயங்களை அனுமதிக்க முடியும் என்பதை அமைச்சரவையே தீர்மானி க்கும். 
 
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம் என்பதை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடமும் தெரிவித்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். விசேட ஞானமுடைய அல்லது உலகளாவிய ரீதியலான நிபுணர்களை அல்ல, உள்நாட்டிலுள்ள சிலரையே இந்த செயலணிக்கு நாம் நியமித்தோம். அதன்படி அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதிலுள்ள விடயங்களை ஏற்பதா? இல்லையா? என்பதை நாமே தீர்மானிப்போம்” - என்றார்.
 
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டது.
 
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் உள்நாட்டு பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவதோடு அதன் ஒவ்வொரு அமர்விலும் சர்வதேச நீதிபதி ஒருவராவது இடம்பெற வேண்டுமென நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தா லோசனைக்கான செயலணி பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
 

http://www.onlineuthayan.com/news/22265

  • தொடங்கியவர்

சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஒரு­போதும் ஏற்கமுடி­யாது

04-5297d68e3d82c24367b00a0c12781b08091641da.jpg

 

நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரைக்கு அமைச்சரவை பேச்சாளர் ராஜித பதில் :  ஏற்­க­வேண்­டிய கட்­டாயம் இல்லை என்­கி­றார் 
(ரொபட் அன்­டனி)

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வழங்கும் பொறி­மு­றையில் எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாது. இதற்கு எந்­த­வி­த­மான சாத்­தி­ய மும் இல்லை. இதனை நாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யா­ள­ரி­டமும் தெளி­வாகக் கூறி­விட்டோம். நாங்கள் நிய­மித்த செய­ல­ணியில் அனைத்துப் பரிந்­து­ரை­க­ளையும் பொறுப்­பேற்க வேண்­டு­மென்ற கட்­டாயம் இல்லை என்று 

 அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். குறித்த செய­ல­ணியில் இருந்­த­வர்கள் விஞ்­ஞான ரீதியில் மிகப்­பெ­ரிய உய­ரத்தில் இருப்­ப­வர்­களோ, அல்­லது உயர்ந்த மட்ட புத்­தி­ஜீ­வி­களோ அல்ல. எமது நாட்டைச் சேர்ந்­த­வர்­களே இதில் இடம்­பெற்­றுள்­ளனர். எனவே இவர்­களின் பரிந்­து­ரை­களை கட்­டாயம் ஏற்­க­வேண்­டு­மென்ற எந்­த­வொரு நிய­தியும் கிடை­யாது என்றும் ராஜித சேனா­ரட்ன சுட்­டிக்­காட்­டினார். 

 அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊக­ட­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

மக்கள் கருத்­த­றியும் நல்­லி­ணக்க செய­ல­ணி­யா­னது சர்­வ­தேச நீதி­ப­தி­களைக் கொண்ட விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என பரிந்­துரை செய்­துள்­ளமை தொடர்­பாக அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்று செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர். 

அமைச்சர் சந்­திப்பில் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்:- 

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­வ­ழங்கும் பொறி­மு­றையில் எக்­கா­ரணம் கொண்டும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை ஏற்க முடி­யாது. இந்த நிலைப்­பாட்டில் அர­சாங்கம் தெளி­வாக இருப்­ப­துடன் அதனை பல்­வேறு தட­வைகள் திட்­ட­வட்­ட­மா­கவும் கூறி­விட்­டது.  

தொழில்­நுட்ப உத­விகள் மற்றும் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வெளி­நாட்டு பங்­க­ளிப்பை பெற முடியும். ஆனால் சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதில் நாங்கள் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம். இந்த விட­யத்தில் நாங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னுக்கும் கூறி­யி­ருக்­கின்றோம். அவரும் அதனை ஏற்­றுக்­கொண்­டுள்ளார் என்றார். 

கேள்வி:- அர­சாங்கம் நிய­மித்த செய­லணி முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை நிரா­க­ரிக்க முடி­யுமா?

பதில்:- அர­சாங்கம் செய­ல­ணியை நிய­மித்­தது என்­ப­தற்­காக அந்த செய­லணி முன்­வைக்­கின்ற அனைத்து பரிந்­து­ரை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற தேவை அர­சாங்­கத்­திற்கு இல்லை. செய­லணி எவ்­வா­றான பரிந்­து­ரை­களை முன்­வைத்­தாலும் அர­சாங்­கமே இறுதித் தீர்­மானம் எடுக்கும். அந்த வகையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­பது எமது முடி­வாகும்.  

மேலும் இந்த செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் உள்­நாட்டைச் சேர்ந்­த­வர்கள். இந்தப் பரிந்­து­ரை­களை விஞ்­ஞான ரீதியில் உயர்ந்த மட்­டத்தில் உள்­ள­வர்­களோ, மிகப்­பெ­ரிய புத்­தி­ஜீ­வி­களோ முன்­வைக்­க­வில்லை. 

கேள்வி:- அப்­ப­டி­யானால் ஏன் இந்­தக்­கு­ழுவை நிய­மித்­தீர்கள்?

பதில்:- எமக்கு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் செயலணியை நியமித்தோம். ஆனால் அரசாங்கம் செயலணியை நியமித்தது என்பதற்காக செயலணி கூறுகின்ற அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.