Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை

Featured Replies

சீனாவுடன்  காேபம் இல்லை - ஆட்சியை  கவிழ்ப்பேன்  : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை 

 

 

(லியாே நிராேஷ தர்ஷன்)

அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

Mahida-Rajapaksa.jpg

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம்  குறித்து காெள்கையற்ற தற்பாேதைய  நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே கடும் காேபமும் சாபமும் காணப்படுகின்றதே தவிர , சீனா உள்ளிட்ட எந்தவாெரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சிைனையில்லை என முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை  நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று  புதன் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்காெண்டு உரையாற்றும் பாேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தாண்டில் பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளாேம். இலங்கைக்கு இது முக்கியமான வருடமாகும்.  ஜனநாயக ரீதியில் ஆட்சியை கவிழ்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/15072

  • தொடங்கியவர்

ரணிலின் முதுகில் குத்­த­மாட்டேன் 2017இல் ஆட்சிக்கவிழ்ப்பு நிச்­சயம்

p17-bd8d2f9db90880ee96e8166da1b77c8506ffc4d7.jpg

 

மீண்டும் சூளு­ரைத்தார் மஹிந்த

(லியோ நிரோஷ தர்ஷன்)

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவின் முதுகில் குத்தி ஆட்­சியை கைப்­பற்றப்போவ­தில்லை. ஆனால் உறு­தியளித்­தது போன்று 2017 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்பேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.  

சீனா உள்­ளிட்ட எந்­த­வொரு சர்­வ­தேச நாடு­க­ளு­டனும் எமக்கு கோப தாபங்கள் கிடை­யாது. ஆனால் தேசிய பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்­களை கருத்தில் கொள்­ளாது ஒப்­பந்­தங்­களை  செய்யும் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதே எமக்கு கடு­மை­யான நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.  

புத்­தாண்டில் பணி­களை ஆரம்­பிக்கும் முக­மாக பத்­த­ர­முல்லை - நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இணைப்பு அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற விஷேட நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

புத்­தாண்டு பிறந்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டில் இந்த அலு­வ­ல­கத்தில் மக்கள் பணி­களை சுப நேரத்தில் ஆரம்­பித்­துள்ளோம். குறிப்­பாக இலங்­கையை பொறுத்த வரையில் 2017 ஆம் ஆண்டு முக்­கி­ய­மா­னதும் தீர்க்­க­மா­ன­து­மாகும். ஒரு பெறும் மாற்­றத்­திற்­கான கால­மா­கவே இது அமைந்­துள்­ளது. அதற்­கான பய­ணத்தை நாங்கள் இன்று ஆரம்­பிக்­கின்றோம்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நிம்­ம­தி­யாக வெளி­நாடு சென்று நாடு திரும்­பட்டும். அவ­ரது முதுகில் குத்தி ஆட்­சியை கைப்­பற்ற வேண்­டிய தேவை எனக்கு கிடை­யாது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் ஆட்­சியை கவிழ்ப்­ப­தாக நான் கூறினேன். ஜன­நா­யக முறைப்­படி அதனை வெற்­றிக்­க­ர­மாக செய்வேன். அதற்­கான அர­சியல் செயற்­பா­டுகள் மற்றும் மக்கள் அணித்­தி­ரட்­டல்கள் வெற்றி கர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

தொழில் வழங்­கு­வ­தாக கூறி நாட்டின் காணி­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­கின்­றனர். எமது ஆட்சி காலத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட பல விட­யங்கள் இன்று திட்­ட­மிட்ட வகையில் செய­லி­ழக்க செய்­யப்­பட்­டுள்­ளன. நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் பின்­ன­டை­வு­களை மக்­களின் வாழ்­வா­தா­ரத்தின் ஊடாக தெளி­வாக கணிக்க முடியும். பல்­வேறு வரி விதிப்­புகள் மற்றும் உணவு பொருட்­களின் விலை ஏற்றம் என்­பன நாட்டு மக்­களை வாட்­டு­கின்­றது.

எம்மை திரு­டர்கள் என கூறி நல்­லாட்சி அர­சாங்கம் தேசிய சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிக்­கின்­றது. இதனால் தான் மக்கள் எம்­முடன் இணைந்து அரச எதிர்ப்பு கொள்­கை­யுடன் செயற்­ப­டு­கின்­றனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மைத்­துவம் எங்­குள்­ளது என்­பது மக்­க­ளுக்கு நன்கு தெரியும். சுதந்­திர கட்­சியின் கொள்­கை­யுடன் இன்றும் நாங்கள் செயற்­ப­டு­கின்றோம். டாலி வீதியில் உள்ள கட்­டடம் மாத்­திரம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாகி விடாது.

அந்த கட்­சியின் ஆலோ­ச­க­ராக இன்றும் நான் உள்ளேன். ஆனால் கொள்­கையை விட்டு கொடுத்து செயற்­பட வேண்­டிய தேவை எனக்கு கிடை­யாது. இது வரையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நான் எவ்­வி­த­மான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்க வில்லை. ஆனால் நிச்­ச­ய­மாக விரைவில் அவ­ருக்கு ஆலோ­ச­ணை­களை வழங்­குவேன்.

அபி­வி­ருத்தி திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுக்கும் போது ஒரு நீண்­ட­கால திட்­டத்­துடன் முன்­னெ­டுத்தோம். நாங்கள் ஆரம்­பித்த திட்­டங்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திறந்து வைக்­கின்றார். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அதனை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­கின்றார். இதுவே தற்­போது அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார கொள்­கை­க­ளாக காணப்­ப­டு­கின்­றது. செலுத்த கூடிய தகுதி இருந்­த­மை­யி­னா­லேயே நாங்கள் கடன் பெற்றோம். எமக்கு செலுத்த முடி­யாது என்றால் சர்­வ­தேசம் எமக்கு கடனை கொடுத்­தி­ருக்­காது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தால் கடனை பெற்றுக் கொண்­டாலும் அதனை செலுத்­து­வ­தற்கு முடி­ய­வில்லை. இது அவர்­க­ளது இய­லா­மை­யாகும்.

பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றுக்­காக ஒதுக்­கப்­பட்ட சிறப்­பான காணியில் வொக்ஸ் வொகன் கார் நிறு­வனம் அமைக்க வெளி­நாடு ஒன்­றுக்கு அந்த காணியை வழங்­கி­யுள்­ளனர். இதுவா ? நல்­லாட்­சியின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி ? தேசிய பொரு­ளா­தாரம் மற்றும் நாட்டின் எதிர்­காலம் தொடர்பில் அவ­தானம் செலுத்­தியே சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஒப்­பந்­தங்­களை செய்ய வேண்டும். ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு அவ்­வா­றா­ன­தொரு நிலைப்­பாடும் அறிவும் கிடை­யாது.

சீனா உள்­ளிட்ட எந்­த­வொரு சர்­வ­தேச நாடு­க­ளு­டனும் எமக்கு பிரச்­சி­னையும் இல்லை. அவர்­களை நாங்கள் சாடவும் இல்லை. அம்பந்தோட்டை துறைமுகத்தில் இரண்டு கப்பல்களை நிறுத்த கூடியதாக காணப்பட்டது. எமது காலத்தில் தொடர்ந்தும் அங்கு கப்பல்கள் வந்து சென்றனர். ஆனால் அரசாங்கம் எம்மை சாடி விட்டு அதே துறைமுகத்தை முன் வைத்து சர்வதேச முதலீட்டாளர்களை அழைக்கின்றது.

எனவே அரசாங்கத்தின் பொறுப்பட்ட செயற்பாடுகளும் ஒப்பந்தங்களும் கண்டனத்துக்குறியவை . இதற்காக சர்வதேச நாடுகளை எம்மாள் குறை கூற முடியாது என குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.