Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்குக்கயிறை நெருங்கும்போது மஹிந்த குடும்பம் எதையாவது செய்யும்

Featured Replies

தூக்குக்கயிறை நெருங்கும்போது மஹிந்த குடும்பம் எதையாவது செய்யும்

 

தொங்கினாலும் அரசாங்கம் கவிழாது என்கிறார் அமைச்சர்
(ரொபட் அன்­டனி)

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்­தினர் சிறை­க­ளுக்கும் தூக்குக்கயி­றுகள் இருக்கும் இடத்­திற்கும் செல்­லப்­போகும் நாட்கள் நெருங்­கிக்­கொண்­டி­ருக்கும் போது அவர்கள் எதை­யா­வது ஒரு விட­யத்தை கையில் எடுத்து

இவ்­வாறு தூக்­கிப்­பி­டிப்­பார்கள். எதிர்ப்­பு­க்களை கிளப்­பு­வார்கள் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்கம் தொங்­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. ஆனால், அர­சாங்கம் ஒரு­போதும் வீழ்ந்­து­வி­டாது. தொங்­கிக்­கொண்டு இருக்­கின்ற அனைத்தும் வீழ்ந்­து­விட்டால் வாழ­மு­டி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­ பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்

கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால்

எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கை­யில்;

கேள்வி:- அம்­பாந்­தோட்­டையில் சீனா­வுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணி வழங்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பா­கவும் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பா­கவும் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் ?

பதில்:- அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கமும் மத்­த­ளையில் விமான நிலை­யமும் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு மிகவும் அவ­சியம் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. இது தொடர்பில் 2002 ஆம் ஆண்டு ஐ.தே.க. அர­சாங்­கமே ஆராய்ந்­தி­ருந்­தது. ஆனால் இவை நிர்­மா­ணிக்­கப்­பட்­டதன் பின்னர் என்ன நடக்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தி­லி­ருந்து 12 கடல் மைல்­க­ளுக்கு அப்பால் சர்­வ­தேச கப்பல் பாதை உள்­ளது.

அதில் ஒரு நாளைக்கு 700 கப்­பல்கள் பய­ணிக்­கின்­றன. அந்­த­கப்­பல்கள் 300 கடல் மைல் தூரத்தில் உள்ள மும்­பைக்கும் 200 கடல் மைல் தூரத்­தி­லுள்ள சிங்­கப்­பூ­ருக்கும் சென்றே எண்ணெய் நிரப்­பு­கின்­றன. எனவே எமது அம்­பாந்­தோட்டை துறை­முகம் எண்ணெய் மாற்று நிலை­ய­மாக செயற்­ப­டு­மானால் ஒரு நாளைக்கு 500 கப்­பல்­க­ளுக்கு எண்ணெய் மீள் நிரப்ப முடியும் அப்­போது நாம் பாரிய இலா­பத்தை அடை­யலாம். ஆனால் கடந்த அர­சாங்கம் அதனை செய்­யாமல் வெறு­மனே துறை­மு­கத்தை நிர்­மா­ணித்­தது.

இதனால் தற்­போது வரு­ட­மொன்­றுக்கு 59 கோடி ரூபா நட்டம் ஏற்­ப­டு­கின்­றது. இந்த நட்­டத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வீட்­டி­லி­ருந்து கொண்­டு­வந்து கொடுப்­பார்­களா? முடி­யாது. மக்­களின் வரிப்­ப­ணம்தான் செல­வி­டப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று மத்­தளை விமான நிலை­யத்­திற்கு செல்­வ­தற்கு எந்­த­வொரு விமான நிறு­வ­னமும் விரும்­ப­வில்லை. இந்­நி­லையில் அம்­பாந்­தோட்­டையில் 15 ஏக்கர் காணியில் சுதந்­திர வர்த்­தக வல­யத்தை அமைத்தால் மத்­தள விமான நிலையம் சிறந்த பயன்­பாட்­டினைப் பெறும். இந்த விடயம் கடந்த அர­சாங்க காலத்தின் போதே பேசப்­பட்­டது. இதன்­போது பல இலட்சம் தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­படும்.

 ஆகவே சீனா­விற்கு 99 வருட குத்­த­கைக்கு 15 ஏக்கர் காணி­களை வழங்­கு­வதில் தவ­றில்லை. சீனா தான் இதில் சுதந்­திர வர்த்­தக வல­யத்தை நிர்­மா­ணிக்­கப்­போ­கின்­றது. நட்டம் ஏற்­பட்டால் அது சீனா­வையே சென்­ற­டையும், அது குறித்து நாம் கவ­லை­ய­டை­ய­தே­வை­யில்லை. அதற்­காக அந்தக் காணி சீனா­விற்கு சொந்­த­மா­னது என்று கூற முடி­யாது. இந்த யதார்த்தம் நன்கு தெரிந்தும் மஹிந்த ராஜ­பக்ஷ வேண்­டு­மென்றே எதிர்த்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.

கடந்த காலத்தில் திரு­டி­ய­வர்­களும் தர­குப்­ப­ணத்தில் வாழ்ந்­த­வர்­களும் இன்று இவற்றை எதிர்க்­கின்­றனர். இலங்­கையில் எந்­த­வொரு நல்ல திட்­டத்தை முன்­னெ­டுத்­தாலும் அதற்கு எதிர்ப்­புகள் கிளம்பும். நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்தை மஹிந்த ராஜ­பக்ஷ நிர்­மா­ணிப்­ப­தற்கு எடுத்த முடிவு பல­ராலும் விமர்­சிக்­கப்­பட்­டது.

ஆனால் அவர் அந்த நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு என்று அதனைக் கூறலாம். இதே­போன்­றுதான் இந்த நாட்டில் 13 ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வந்த போது ஈழம் உரு­வாகப் போகின்­றது என்று கூச்­ச­லிட்­டனர். அவ்­வாறு ஈழம் உரு­வாகப் போகின்­றது என்று கூறிய சிவப்பு தம்­பி­மார்கள் அதே மாகா­ண­ச­பை­களில் பின்னர் ஆட்­சியை தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக மாறினர்.

அன்று பாரா­ளு­மன்­றத்­திற்கு குண்டு வீசி­ய­வர்கள் இன்று ஜன­நாயம் குறித்து பேசு­கி­றார்கள். இவ்­வாறு இந்த நாட்டில் எந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­தாலும் அதற்கு எதிர்ப்பு தெரி­விப்­பது வழ­மை­யா­கி­விட்­டது. அந்­த­வ­கையில் ஜன­வரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டது. அந்த மாற்­றமும் முற்­று­மு­ழு­தாக நல்ல மாற்­ற­மாக அமை­ய­வில்லை. அதிலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

கேள்வி:- கூட்டு எதி­ரணி இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்­றதே?

பதில்:- அவர்கள் எதிர்­பார்ப்­பார்கள். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் குடும்­பத்­தினர் சிறை­க­ளுக்கும் தூக்கு கயி­றுகள் இருக்கும் இடத்­திற்கும் செல்­லப்­போகும் நாட்கள் நெருங்­கிக்­கொண்­டி­ருக்கும் போது அவர்கள் எதை­யா­வது ஒரு விட­யத்தை கையில் எடுத்து இவ்­வாறு தூக்­கிப்­பி­டிப்­பார்கள். எதிர்ப்­பு­களை கிளப்­பு­வார்கள். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் 15 ஆயிரம் ஏக்கர் அல்ல 25 ஏக்கர் கேட்­டாலும் கொடுக்­க­வேண்டும்.

கேள்வி:- 99 வரு­டங்­களின் பின்­னரும் சீனா அந்­தக்­கா­ணி­களை சொந்தம் கொண்­டாடும் அபாயம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அது அந்த நேரம் இருக்­கின்­ற­வர்கள் பார்த்­துக்­கொள்­ளட்டும். 99 வருட குத்­தகை என்­பது இந்த நாட்டின் சட்டம்.

கேள்வி:- அமைச்­ச­ர­வைக்கு அறி­வித்து விட்டா இதனை மேற்­கொள்­கின்­றீர்கள்?

பதில்:- அமைச்­ச­ர­வைக்கு அறி­விக்­காமல் எத­னையும் செய்ய மாட்டோம்.

கேள்வி:- 10 சீனர்­க­ளுக்கு வீசா கொடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அவ்­வாறு எதுவும் இல்லை. தற்­போது ஜன­நா­யகம் இருப்­பதால் எல்­லோரும் எல்லா விட­யங்­க­ளையும் கூறு­கின்­றனர்.

கேள்வி:- அப்­ப­டி­யானால் ஜனா­தி­பதி பல­வீ­ன­வ­மா­னவர் என்று கூறு­கி­றீர்­களா?

பதில்:- இல்லை ஜனா­தி­பதி மனி­தா­பி­மானி.

கேள்வி:- எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் ஆட்டம் காண்­ப­துடன் தொங்­கிக்­கொண்­டு­தானே இருக்­கி­றது.

பதில்:- அர­சாங்கம் தொங்­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. ஆனால் அர­சாங்கம் ஒரு­போதும் வீழ்ந்­து­வி­டாது. தொங்­கிக்­கொண்டு இருக்­கின்ற அனைத்தும் வீழ்ந்­து­விட்டால் வாழ­மு­டி­யாது. பசு­களின் மடி தொங்­கு­வதன் கார­ண­மா­கவே நாம் பால் கரக்­கின்றோம். தொங்­கு­கின்ற எவையும் இல­குவில் விழுந்­து­வி­டாது. முதலில் 2015 ஆட்­சியை மாற்­று­வ­தாக கூறினர். பின்னர் 2016 இல் மாற்­று­வ­தாக கூறினர். தற்­போது 2017 இல் மாற்­று­வ­தாக கூறு­கின்­றனர். திரு­டர்­களை காப்­பாற்­றவே இவ்­வாறு அறிக்­கை­களை விடுக்­கின்­றனர்.

கேள்வி:- பியங்­கர ஜய­ரத்ன பதவி வில­கி­யி­ருக்­கி­றாரே?

 பதில்:- நரி தனது வால் வெட்­டப்­பட்­ட­வுடன் வாலில்லாமல் இருப்பது சுகமாக இருப்பதாக கூறி ஏனைய நரிகளையும் வாலை வெட்டிக்கொள்ளுமாறு கூறுமாம். அப்படித்தான் இவரின் கதையும் அமைந்திருக்கிறது.

கேள்வி:- லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு செய்கின்றனரே?

பதில்:- அவர்கள் பணி பகிஷகரிப்பு செய்துவிட்டு போகட்டும். அதனால் யாருக்கும் நட்டமில்லை. அதுவும் கிட்டத்தட்ட சூது விளையாட்டுப்போன்றதுதான் அதனை சுரண்டாவிட்டால் வீட்டில் மனைவிமார் சந்தோஷப்படுவர். இதையெல்லாம் ஒரு பிரச்சினை என்று கூறுவது நியாயமா?

கேள்வி:- அப்படியானால் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாதா?

பதில்:- அவ்வாறு நான் கூறவில்லை. ஆனால் நிதி அமைச்சர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.