Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 நாடுகள்; பீபா வாக்கெடுப்பு இன்று

Featured Replies

உலகக் கிண்ணப் போட்­டி­களில் 48 நாடுகள்; பீபா வாக்­கெ­டுப்பு இன்று
 

இன்னும் ஒன்­பது வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 48ஆக உயர்த்த சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்­களின் சங்கம் (பீபா FIFA) திட்­ட­மிட்­டுள்­ளது.

 

21697fifa-infantino_dubai.jpg

 

உலகக் கிண்ணப் போட்­டி­களில் நாடு­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­ப­தற்கு பீபா தலைவர் ஜியானி இன்­பன்­டீனொ பெரும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார்.

 

இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிர­தி­நி­திகள் அணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதா என்­பது குறித்து நடத்­தப்­படும் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

 

அணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதில் அக்­கறை செலுத்தி வரும் பீபா தலைவர் ஜியானி இன்­பன்­டீனோ, 16 நாடு­களைக் கொண்டு மூன்று குழுக்­களில் போட்­டிகள் நடத்­தப்­ப­டு­வதை விரும்­பு­கின்றார்.

 

16 குழுக்­க­ளிலும் லீக் சுற்று முடிவில் முத­லி­டத்தை அடையும் நாடுகள் இரண்­டா­வது சுற்­றான நொக் அவுட் சுற்றில் விளை­யாட தகு­தி­பெறும். 

 

இந்தத் திட்டம் வெற்­றி­பெற்றால் 1998இல் அணி­களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக மீண்டும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21697#sthash.fCHTn9zu.dpuf
  • தொடங்கியவர்

உலக கோப்பை கால்பந்து: இனி 48 நாடுகள் விளையாடலாம்

 
 

ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து அமைப்பு, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபிஃபா உலக கோப்பை
 ஃபிஃபா உலக கோப்பை

வரும் 2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக அணிகளை பங்கேற்க செய்யும் விதமாக 16 குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும்.

இக்குழுக்களில் நடக்கும் போட்டிகளில் முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் நாக்அவுட் ( வெளியேற்றத்தை முடிவு செய்யும் சுற்று) சுற்றுக்கு தகுதி பெறும். நாக்அவுட் சுற்றில் 32 நாடுகள் விளையாடும்.

 

2014 உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி

 2014 உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி

ஆனால், இந்த புதிய வடிவ உலக கோப்பை அட்டவணையின்படி ஃபிஃபா உலக கோப்பை வெற்றியாளர்கள் தற்போதுள்ள எண்ணிக்கையை விட கூடுதல் போட்டிகளில் விளையாட தேவைப்படாது.

இது குறித்த முழு தகவல்களையும் ஃபிஃபா பின்னர் வெளியிடும். ஆனால், ஃபிஃபா உலக கோப்பை அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/sport-38571387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.