Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 2,36,346 பேர் குடிநீரின்றி பரிதவிப்பு - நாடுமுழுவதும் 6,95,000 பேர் கடும் பாதிப்பு

Featured Replies

வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­கின்­றது. இதன்­பி­ர­காரம் ஒரு இலட்­சத்து 71 ஆயி­ரத்து 407 குடும்­பங்­களைச் சேர்ந்த 6 இலட்­சத்து 95 ஆயிரம் பேர் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது. 

அதே­போன்று களுத்­துறை மாவட்­டத்­திலும் 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நாட்டில் நிலவும் வரட்சி கார­ண­மாக பொது மக்கள் தமது அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு போது­மான அள­விற்கு நீர் இன்­மை­யினால் தவித்து வரு­கின்­றனர். குறிப்­பாக வடக்கு,கிழக்கு, வட­மத்­திய, வடமேல், மேல் மாகா­ணங்­களில் பல பிர­தே­சங்­களில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவி வரு­வ­தாக அர­சாங்க மட்­டத்­தி­லான தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வடக்கு, கிழக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் தக­வல்­களின் பிர­காரம் வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் அதி­க­ளவில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்தில் 51 ,328 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 85ஆயி­ரத்து 382 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பெரு­ம­ள­வி­லான மக்கள் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கி­ணங்க யாழ்ப்­பா­ணத்தில் 27,224 குடும்­பங்­களை சேர்ந்த 95 ஆயி­ரத்து 387 பேர் குடிநீர் இன்­றியும் விவ­சாயம் செய்­ய­மு­டி­யா­மலும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு மன்னார் மாவட்­டத்தில் 16,348 குடும்­பங்­களை சேர்ந்த 55 ஆயி­ரத்து 245 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதே கணிப்பின் பிர­காரம் வவு­னியா, முல்­லை­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் வரட்சி நிலவி வரு­கின்­றது.

அதே­போன்று நாட்டில் நிலவும் வரட்­சி­யினால் அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் கிழக்கு மாகா­ணத்­திலும் பதி­வா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமே வரட்­சியின் கோர பிடியில் சிக்கி தவிக்­கின்­றது. மட்­டக்­க­ளப்பில் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2ஆயி­ரத்து ஐந்து பேர் வரட்­சி­யினால் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்­டத்­திலும் பாதிப்­புகள் ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன.

ஏனை­ய­மா­வட்­டங்­களின் நிலைமை

அத்­தோடு வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தவிர வட­மத்­திய மாகா­ணத்தின் பொலன்­ன­றுவை , அநூ­ர­தா­புரம் மாவட்­டங்­களில் குளங்கள் வற்­றிப்­போ­யுள்­ளன. மேலும் மேல் மாகா­ணத்தில் களுத்­துறை மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 200 பேர் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று கொழும்பு, கம்­பஹா, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, காலி,புத்­தளம், குரு­நாகல் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் அதி­யுச்ச வெப்­ப­நிலை நில­வு­கின்­றது.

குடி­நீர்­தட்­டுப்­பாடு

வரட்­சி­யான கால­நி­லை­யினால் வட­மத்­திய , மத்­திய மாகா­ணங்­க­ளி­லுள்ள நீர்­தேக்­கங்­களின் நிலைமை பெரும் மோச­மான நிலை­மைக்கு வந்­துள்­ளன. இதன்­படி நீர் தேக்­கங்­களின் நீர் மட்டம் 23 ஆக குறை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக இரா­ஜாங்­கனை, திஸ்ஸ வெவ, சேனா­நா­யக்க சமுத்­திரம், பராக்­கி­ரம சமுத்­திரம், நச்­சான்­துவ, ஹூறுலுவெவ,லுனுகம் வெகர, லக்ஷபான, விமலசுரேந்திர ஆகிய நீர்தேக்கங்களில் பெருமளவில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளன. அதேபோன்று குளங்கள் பலவும் வரட்சியினால் வற்றிப்போயுள்ளன. இதன்காரணமாக எதிர்வரும் காலங்களில் பெருமளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-1

  • தொடங்கியவர்

இலங்கையில் வறட்சியால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இலங்கையில் வறட்சியான கால நிலை காரணமாக ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அனர்த்த முகாமைத்துவ மையம் கூறுகின்றது.

குடி நீர் விநியோகம்
குடி நீர் விநியோகம்

வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடு தழுவியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலே பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரியவருகின்றது..

இம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் தேவையான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் இயக்குநரான பிரதீப் கொடிப்புலி கூறுகின்றார்.

பருவ மழை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள வறட்சியால் நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் 23 - 27 சத வீதமாக குறைந்து காணப்படுவதாக நீர்ப்பாசன இலாகா கூறும் அதே வேளை குழாய் நீர் விநியோகம் எந் நேரத்திலும் மட்டுப்படுத்தப்படலாம் என தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவிக்கின்றது.

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் குழாய் நீர் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

ஐ. நா மற்றும் அதன் துணை அமைப்புகள் உதவி

ஐ.நா மற்றும் துணை அமைப்புகளின் உதவியை ஜனாதிபதி நாடியுள்ளார்ஐ.நா மற்றும் துணை அமைப்புகளின் உதவியை ஜனாதிபதி நாடியுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறட்சியை எதிர்கொள்வதற்கும் நிவாரண உதவிகள் தொடர்பாகவும் ஐ. நா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரும் , ஐ.நா அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதியும் உலக உணவு திட்ட பிரதிநிதியுமான பிரெண்டா பார்ட்டன் மற்றும் உலக உணவுத் திட்ட நிறைவேற்று இயக்குநரான ஏர்த்தரின் கசின் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இது தொடர்பான சந்திப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முதற்கட்டமாக வறட்சி தொடர்பான பேச்சுவார்த்தை, மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான நிபுணர்களை அனுப்புவது போன்ற உதவிகளை வழங்க ஐ.நா பிரதிநிதிகள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

வறட்சி காரணமாக தொழில்களை இழந்துள்ள கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது அமைப்பு ஊடாக வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சி காரணமாக எழுந்துள்ள குடிநீர் பிரச்சனை நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வவுசர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-38649326

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.