Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடு வழங்க இடமளிக்கமாட்டோம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடு வழங்க இடமளிக்கமாட்டோம்

யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடு வழங்க இடமளிக்கமாட்டோம்

 

 
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் அல்லது ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும் அனைவரும் கட்சியை வளர்ப்பதற்காகவே செயற்படுகிறார்கள் என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.


இதன்போது ஐக்கிய தேசிய கட்சியை வளர்ப்பதற்காகவா, பொருத்து வீட்டுத்திட்டத்தினை வடக்கு வாழ் மக்களிடத்தில் திணிக்கின்றீர்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சர் விஜயகலாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.


அவர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வளர்க்கவில்லை.

மாறாக ஐக்கிய தேசிய கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் வளர்ப்பதற்காக செயற்படுகின்றார்கள்.


அபிவிருத்தி கூட்டம் என்றால், அபிவிருத்தி தொடர்பாக மட்டும் கதையுங்கள் கட்சியைப் பற்றி கதைக்க வேண்டாம் என பதிலளித்தார்.


மேலும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கூறுவதுடன், கட்சியும் வளர்க்க வேண்டும் தான், ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


மக்களை மீண்டும், மீண்டும் படுகுழியில் தள்ளுவதற்கு நாங்கள் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.


பொருத்துவீடுகளைப் பற்றி கதைக்க அதற்குரிய அமைச்சர் தற்போது இங்கு இல்லை. பொருத்து வீட்டினை வழங்குவதற்கு நாமும் அனுமதிக்கமாட்டோம்.


எனவே இந்த இடத்தில் பொருத்து வீடுகள் தொடர்பாக கதைப்பது பொருத்தமானதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஐன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

http://tamil.adaderana.lk/news.php?nid=87098

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.