Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்ஆப்ரிக்கா எதிர் இலங்கை ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம்

 

இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம்
 

தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் எஞ்சிய போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதனால் உப்புல் தரங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளதுடன், புதுமுக வீரர்களான சந்துன் வீரக்கொடி, லஹிரு மதுஷங்க, சதுரங்க டி சில்வா ஆகியோர் இலங்கை குழாத்திற்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

நுவன் பிரதீப், தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1-1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை சமநிலை வகிப்பதுடன் நாளைய மூன்றாவது போட்டி தொடரை தீர்மானிப்பதாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/01/இலங்கை-அணிக்கு-உப்புல்-த/

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டி வில்லியர்ஸ் அணித் தலைவராக நியமனம்

 

 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டி வில்லியர்ஸ் அணித் தலைவராக நியமனம்
 

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது.

தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் முடிந்த பின் 28 ஆம் திகதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகின்றது.

இதற்கான தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக முழங்கை காயத்தால் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதால் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலமாக டி வில்லியர்ஸ் அணியில் இடம்பெறாததால் டு பிளிசிஸ் தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக செயற்பட்டார். இவர் தலைமையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 எனவும், சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனவும் கைப்பற்றியது.

காயத்தில் இருந்து மீண்ட டி வில்லியர்ஸ், டெஸ்ட் அணியின் தலைவராக இருக்கப்போவதில்லை என்றும், 2019 ஆம் ஆண்டின் 50 ஓவர், டி20 உலகக்கோப்பை தொடர்தான் தன்னுடைய குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிக்கான தென்னாபிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. பர்ஹான் பெஹார்டியன், 4. குயிண்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), 5. ஜே.பி. டுமினி, 6. டு பிளிசிஸ், 7. இம்ரான் தாஹிர், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. வெயின் பர்னெல், 11. லங்கி நிகிடி, 12. பெலுக்வாயோ, 13. பிரிட்டோரியஸ், 14. காகிசோ ரபாடா, 15. தப்ரைஸ் ஷாம்சி.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக பங்கேற்பதற்கு முன் நாளை இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ் களம் இறங்க இருக்கிறார்.

http://newsfirst.lk/tamil/2017/01/இலங்கைக்கு-எதிரான-ஒருநாள/

 

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கைக்குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்திருந்தது போல் இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படவுள்ளார்.

Sri-Lanka-vs-South-Africa-Live-Streams-T

16 பேர் கொண்ட இலங்கை குழாமின் முழு விபரம் இதோ...

1.உபுல் தரங்க (தலைவர்)

2.தினேஸ் சந்திமால்

3.குசால் மெண்டிஸ்

4.தனஞ்சய டி சில்வா

5. நிரோஷன் டிக்வெல்ல

6.சந்துன் வீரகொடி

7.அசேல குணரத்ன

8.சத்துரங்க டி சில்வா

9.சச்சித் பத்திரன

10.ஜெப்ரி வெந்தர்சே

11.லஹிரு மதுசங்க

12.லக்ஷான் சந்தகன்

13.நுவான் குலசேகர

14.லஹிரு குமார

15.சுராங்க லக்மால்

16.விக்கும் சஞ்சய

http://www.virakesari.lk/article/15929

  • தொடங்கியவர்

முன்னிலை பெறுவது யார்? இன்று களம் காணும் இலங்கை - தென்னாபிரிக்கா

Untitled-1-44f3a752592b34f621e84a0cea2641e53087f8a3.jpg

 

இலங்கை மற்றும் தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. தென்­னா­பி­ரிக்­கா­விற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி அந்­நாட்டு அணி­யுடன் மூன்று வகை­யான கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் விளை­யாடி வரு­கி­றது. 

அந்­த­வ­கையில் முத­லா­வ­தாக நடை­பெற்ற மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3–0 என்ற அடிப்­ப­டையில் முழு­மை­யாக வென்­றது தென்­னா­பி­ரிக்கா. அதைத் தொடர்ந்து மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடர் நடை­பெற்­றது.  

இந்தத் தொடரை இலங்கை அணி 2–1 என்ற அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சாதனை படைத்­தது. இதன் மூலம் தென்­னா­பி­ரிக்க மண்ணில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக இரு­ப­துக்கு 20 தொடர் ஒன்றை இலங்கை அணி முதன் முத­லாக வென்­றெ­டுத்­தது. 

இந்தத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் காய­ம­டைந்த இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் நாடு திரும்­பிய நிலையில், கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டிக்கு உப தலைவர் டினேஷ் சந்­திமால் தலை­வ­ராக செயற்­பட்டார்.

இந்­நி­லையில் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. இவ்­விரு அணி­களும் இது­வ­ரையில் மொத்தம் 60 ஒருநாள் போட்­டி­களில் மோதி­யுள்­ளன. இதில் தலா 29 போட்­டிகள் வீதம் இரு அணி­களும் வெற்­றி­கொண்டு சம நிலையில் உள்­ளன. ஒரு போட்டி வெற்றி தோல்­வி­யின்­றியும் ஒரு போட்டி சம­நி­லை­யிலும் முடி­வ­டைந்­துள்­ளன. 

ஆக இது­வரை நடை­பெற்ற போட்­டிகளின் படி இரண்டு அணி­களும் சரிக்கு சம­மாக எதி­ர­ணிக்கு சிறந்த சவால்­களை கொடுத்­துள்­ளன.

நடை­பெ­ற­வுள்ள இந்த ஒருநாள் தொடரை வெற்­றி­கொண்டு யார் முன்­னிலை பெறப்­போ­கி­றார்கள் என்­பதே அனை­வ­ரது எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இலங்கை அணியைப் பொறுத்­த­வ­ரையில் அஞ்­சலோ மெத்­தியூஸ் இந்தத் தொடரில் இடம்­பெ­ற­வில்லை.

அவ­ருக்கு பதி­லாக உபுல் தரங்க உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். அத்­தோடு அணித் தலை­மை­யையும் உபுல் தரங்க ஏற்­கின்றார்.

மறு­மு­னையில் தென்­னா­பி­ரிக்க அணிக்கு அதி­ரடி ஆட்­டக்­காரர் டிவில்­லியர்ஸ் திரும்­பி­யுள்ளார். தென்­னா­பி­ரிக்­காவின் தலை­வ­ரா­கவும் அவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

டெஸ்டில் அடைந்த தோல்­விக்கு இலங்­கையும், இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் அடைந்த தோல்­விக்கு தென்­னா­பி­ரிக்­காவும் பதி­லடி கொடுக்க இந்தத் தொடரை நிச்­சயம் பயன்­ப­டுத்தும். அதனால் போட்­டியில் விறு­வி­றுப்­புக்கு பஞ்­ச­மி­ருக்­காது என்­பது நிச்­சயம்.

இலங்கை அணி 

உபுல் தரங்க (அணித் தலைவர்), தினேஷ் சந்­திமால், தனஞ்­சய டி சில்வா, நிரோஷன் டிக்­வெல்ல, சந்துன் வீரக்­கொடி, குசல் மெண்டிஸ், அசேல குண­ரத்ன, சது­ரங்க டி சில்வா, சசித் பதி­ரன, ஜெப்ரி வெண்­டர்சே, சந்­தகான், லஹிரு மது­சங்க, நுவன் குல­சே­கர, லஹிரு குமார, சுரங்க லக்மால், விகும் சஞ்­சய.

தென்னாபிரிக்க அணி 

ஏ.பி.டிவில்லியர்ஸ் (அணித் தலைவர்), பெஹார்டீன், டுமினி, இம்ரான் தாஹிர், கிரிஸ் மோரிஸ், பர்னெல், டிவைன், டப்ரைஸ் ஷம்ஸி, ஹஸீம் அம்லா, குயின்டன் டி கொக், டுபி ௌஸிஸ், மில்லர், லுங்கி நிகிடி, அண்டிலே, ரபடா.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-28#page-12

  • தொடங்கியவர்

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. 

258492.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்திர் குசால் மெண்டிஸ் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹீர் மற்றுமம் பார்னெல் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 34.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அம்லா 57 ஓட்டங்களையும், 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக இம்ரான் தாஹீர் தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/15955

  • தொடங்கியவர்

நாளை 2-வது ஒருநாள்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா?

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ் பர்க்கில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
நாளை 2-வது ஒருநாள்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா?
 
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் வென்றன.

5 ஒருநாள் போட்டித் தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ் பர்க்கில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் போட்டியிலும் வெல்லும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/31125725/1065305/South-Africa-vs-Srilanka-2nd-ODI-start-tomorrow.vpf

  • தொடங்கியவர்

இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம் ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்கா

இந்த போட்டி தென்னாபிரிக்காவின் டர்பனில் இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை  அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சந்துன் வீரகொடி மற்றும் ஜெப்ரி வெந்தர்சே ஆகியோருக்கு பதிலாக சதுரங்க டி சில்வா மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் தென்னாபிரிக்க அணி சார்பில் அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16097

South Africa 105/3 (18.5 ov)
Sri Lanka
  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு 308 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ் 105 ஓட்டங்களையும், மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் லக்மால் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/16107

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்: தென்னாபிரிக்கா வெற்றி


இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்: தென்னாபிரிக்கா வெற்றி 
 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்கா 121 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

டேர்பன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

71 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்காவின் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இலங்கை அணி ஆரம்பத்தில் ஆதிக்கத்துடன் விளையாடியது.

எனினும், இலங்கை அணியின் அழுத்தங்களை லாவகமாக எதிர்கொண்ட தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் அணித்தலைவர் பெப் டு பிளசிஸ் ஆகியோர் சதம் கடந்து வலுவான நிலைக்கு அணியை இட்டுச்சென்றனர்.

இதற்கமைய, தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணியின் வெற்றி இலக்கினை 307 ஓட்டங்களாக நிர்ணயித்தது.

பதிலளித்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தினை எதிர்கொண்டது.

இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 75 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் தினேஷ் சந்திமால் மாத்திரம் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில், இலங்கை அணி 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் வேயென் பார்னெல் மற்றும் ஜே.பி டுமினி ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

http://newsfirst.lk/tamil/2017/02/இலங்கைக்கு-எதிரான-இரண்டா/

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து மில்லர் நீக்கம்

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து மில்லர் நீக்கம்
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு டேவிட் மில்லரின் சதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் 98 பந்தில் 117 ரன்கள் குவித்ததன் மூலம் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்த்தது.

பின்னர் இலங்கை பேட்டிங் செய்யும்போது 9-வது ஓவரில் பீல்டிங் செய்ய மில்லரின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். தற்போது காயத்திற்கு தையல் போட இருக்கிறார். தையல் போட்டால் 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஆகையால் இலங்கை அணிக்கெதிரான எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/02202819/1065896/Miller-ruled-out-of-rest-of-Sri-Lanka-series.vpf

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை

 

 

தென்­னா­பி­ரிக்காவுக்கு எதி­ராக இன்று நடை­பெற்­ற­வுள்ள மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி கட்­டாய வெற்­றியைப் பெற­வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் உள்­ளது.

16195572_2064961586868371_45265409014452

ஒரு­வேளை இன்­றைய போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­ய­டைந்தால் ஒருநாள் தொட­ரையும் இழக்கும். தென்­னா­பி­ரிக்கா மற்றும்- இலங்கை அணிகள் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

 

இந்தத் தொடரில் நடை­பெற்ற முதல் இரண்டு போட்­டி­க­ளிலும் தென்­னா­பி­ரிக்க அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது.

 

இந்­நி­லையில் இவ்­ விரு அணி­களும் மோதும் 3ஆ-வது ஒரு நாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்­கி­றது. இந்தப் போட்­டியில் வெற்றி பெற்று தொடரை கைப்­பற்றும் ஆர்­வத்தில் தென்­னா­பி­ரிக்கா இருக்­கி­றது.

 

தொடரை இழக்­காமல் இருக்க வெற்றி பெற வேண்­டிய கட்­டா­யத்தில் இலங்கை உள்­ளது. இலங்­கைக்கு எதி­ரான 2-ஆவது போட்­டியில் தென்­னா­பி­ரிக்­காவின் அதி­ரடி வீரர் டேவிட் மில்லர் கை விரலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

 

இவரின் விலகல் தென்னாபிரிக்க அணிக்கு நிச்சயம் பலவீனமாக அமையும். பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கை அணி இந்தப் போட்டியில் வெல்லுமா அல்லது தொடரை இழக்குமா என்று.

http://www.virakesari.lk/article/16212

  • தொடங்கியவர்

தொடரை தீர்மானிக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டி  ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேக்கில் இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16227

  • தொடங்கியவர்
தேனீக்களின் படையெடுப்பினால் இலங்கை-தென் ஆபிரிக்க போட்டி இடைநிறுத்தம்
2017-02-04 20:03:45

இலங்கை அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, தேனீக்களின் படையெடுப்பினால் இடைநிறுத்தப்பட்டது.

 

22158sri-lanka-match--bee.jpg


ஜொஹான்னஸ்பேர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி  26.3  ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மைதானத்துக்குள் தேனீக்கள் நுழைந்தன.


இதனால், தேனீக்கள் அகற்றப்படும் வரை ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.  பின்னர் தேனீக்கள் அகற்றப்பட்டு மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=22158#sthash.Cl3FRjHG.dpuf
  • தொடங்கியவர்
இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி
2017-02-05 10:06:31

இலங்கை அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

 

22161lanka---south-africa-600.jpg


ஜொஹான்னஸ்பேர்க் நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் 163 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. நிரோஷான் டிக்வெல்ல 80 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்றார்.


தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களில் ட்வைன் பிரிட்டோரியஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 32 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்கைளப் பெற்றது.


இப்போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது மைதானத்தில் தேனீக்கள் படையெடுத்தமையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்கா தற்போது 3:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=22161#sthash.uWrTIyOS.dpuf
  • தொடங்கியவர்

உபுல் தரங்கவின் அதிரடி வீண் ; போராடி தோற்றது இலங்கை (காணொளி இணைப்பு)

 

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 40 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

 இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 367 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 368 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

 

இலங்கை அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 90 பந்துகளுக்கு 119 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சந்துன் வீரகொடி ஆகியோர் தலா 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில், கடந்த மூன்று போட்டிகளிலும் கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய நிலையில், இந்த போட்டியில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை 4-0 என கைப்பற்றியுள்ளது.

http://www.virakesari.lk/article/16362

  • தொடங்கியவர்

அம்லா, டி கொக் சதம் ; பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

 

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Unsdfsdftitled-1.jpg

தென்னாபிரிக்க அணி சார்பில் அஷிம் அம்லா 154 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால்  3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் தொடரை 5-0 என்ற கணக்கில் இழப்பதை தவிர்ப்பதற்கு இலங்கை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16500

  • தொடங்கியவர்

இலங்கையை வெள்ளையடிப்புச் செய்த தெனனாபிரிக்கா தரத்தில் முதலிடத்தைப் பிடித்தது -Highlights

 

இலங்­கைக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5–0 என்ற அடிப்­ப­டையில் வெள்ளையடிப்புச் செய்து தொடரை வென்ற தென்னாபிரிக்க அணி ஐ.சி.சி. தரப்படுத்தலில் ஒருநாள் போட்டி அட்டவணையில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

258950.4.jpg

இப் தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணி தென்­னா­பி­ரிக்­காவில் அனைத்து போட்­டி­க­ளையும் முடித்துக் கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தோற்று இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை மட்டும் வென்று அந்த கிண்­ணத்­துடன் நாடு திரும்­பு­கி­றது.

258952.4.jpg

தென்­னா­பி­ரிக்க - இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்­சூ­ரி­யனில் நேற்று நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி களத்­த­டுப்பை தேர்வு செய்­தது.

அதன்­படி தென்­னா­பி­ரிக்க அணியின் டி கொக் மற்றும் அம்லா ஜோடி தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­யது. அம்லா நிதா­ன­மாக விளை­யாட டி கொக் அதி­ரடி காட்­டினார். இந்த ஜோடி முதல் விக்­கெட்­டுக்கு 26.3 ஓவர்­களில் 187 ஓட்­டங்­களைக் குவித்­தது. டி கொக் 87 பந்­து­களில் 16 பவுண்­ட­ரி­க­ளுடன் 109 ஓட்­டங்­களைக் குவித்து ஆட்­ட­மி­ழந்தார். 

258943.4.jpg

இதில் டி கொக் 36 ஓட்­டங்­களை எட்­டும்­போது 3000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டினார். இதன்­மூலம் விக்கெட் காப்­பாளர் ஒருவர் விரை­வாக 3000 ஓட்­டங்­களைத் தாண்­டிய வீரர் என்ற பெரு­மையை பெற்­றுள்ளார். டோனி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டி கொக் ஆட்­ட­மி­ழந்த பிறகு கள­மி­றங்­கிய டு பிளஸிஸ் 34 பந்­து­களில் 41 ஓட்­டங்­களை சேர்த்தார். அணித் தலைவர் டி வில்­லியர்ஸ் 14 ஓட்­டங்­க­ளுடன் பெவி­லியன் திரும்­பினார். 134 பந்­து­களில் 15 பவுண்­ட­ரிகள், 5 சிக்­சர்­க­ளுடன் 154 ஓட்­டங்­களைக் குவித்த அம்லா 49 ஆவது ஓவரில் ஆட்­ட­மி­ழந்தார்.

258938.4.jpg

அம்லா மற்றும் டி கொக் ஆகி­யோரின் சதங்களால் தென்­னா­பி­ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 384 ஓட்­டங்­களைக் குவித்­தது. 

அதைத் தொடர்ந்து 385 என்ற இமா­லய இலக்கைத் துரத்த டிக்­வெல்ல மற்றும் தரங்க ஜோடி ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கியது. நான்­கா­வது போட்­டியில் அதி­ர­டி­யாக ஆடி இந்­தப்­போட்­டி­யிலும் வாண­வே­டிக்கை காட்­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட அணித் தலைவர் உபுல் தரங்க 7 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்ற, அடுத்து வந்த குசல் மெண்­டிஸும் ஒரு ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்தார். வீரக்­கொடி (10), தனஞ்­சய (11) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க டிக்­வெல்ல 39 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.

258939.4.jpg

அதன்­பி­றகு ஜோடி சேர்ந்த பத்தி­ரன மற்றும் குண­ரத்ன ஜோடி சற்று நிதா­ன­மாக ஆடி ஓட்­டங்­களைச் சேர்த்­தனர். இதிலும் பத்­தி­ரன 56 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, அடுத்­த­டுத்து வந்த மது­சங்க (7), வெண்­டர்சே (7) என ஆட்­ட­மி­ழந்­தனர். ஆறா­வது விக்­கெட்­டிற்­காக கள­மி­றங்­கிய அசேல குண­ரத்ன இறு­தி­வரை களத்தில் நின்று 109 ஓட்­டங்­களை விளா­சினார். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்­ணிக்கை உயர்ந்­தது.

258942.4.jpg

ஆனாலும் போட்­டியை வெற்­றி­பெ­றக்­கூ­டிய அளவில் முன்­கள வீரர்கள் அடித்துக் கொடுக்­கா­ததால் குண­ரத்­னவின் சதம் வீணா­னது. 

இறு­தியில் இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்று 88 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இந்தத் தோல்வியுடன் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து சோகமான பதிவை தென்னாபிரிக்காவில் விட்டு நாடு திரும்புகிறது.

http://www.virakesari.lk/article/16508

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.