Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Featured Replies

ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை

 

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

259082.jpg

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்­நாட்டு அணி­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் விளை­யா­டு­கி­றது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­று­கின்­றது.

259097.jpg

தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா சென்றடைந்தது இலங்கை அணி.

பெரும் நம்­பிக்­கை­யுடன் இருக்கும் இளம் இலங்கை அணி, அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இந்தத் தொடரை நிச்­சயம் வெல்­லு­ம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­மா­கவே இருக்­கி­றது. 

259097.jpg

காரணம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இரு­ப­துக்கு 20 தொடரை மாத்திரம் வென்­றெ­டுத்­தது.

அதேபோல் இலங்கை அணியில் ஒன்றரை வரு­டங்­க­ளுக்குப் பிறகு நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க இணைக்­கப்­பட்­டுள்ளார்.

259083.jpg

அவுஸ்திரேலியாவில் உபுல் தரங்க தலை­மை­யி­லான அணி பயிற்சிப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

259091.jpg

http://www.virakesari.lk/article/16738

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

 

 
 

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

 
 
 
 
ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
 
மெல்போர்ன் :

மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ் ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவ சாலிகள்.

இருப்பினும் டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிளைஞ்சர், பென் டங் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கே உரிய அதிரடி காட்டுவதில் திறமைசாலிகள். இதனால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் காயத்தால் விலகி விட்டதால் அந்த அணியை உபுல் தரங்கா வழிநடத்துகிறார். காயத்தால் ஒதுங்கி இருந்த ‘யார்க்கர் மன்னன்’ 33 வயதான மலிங்கா ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். அவரது பந்து வீச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இலங்கை அணியிலும் பெரும்பாலான வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்றாலும், வெற்றியுடன் தொடங்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தரங்கா கூறுகையில், ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சமீபத்தில் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடியவர்கள். நன்றாகவும் செயல்பட்டு உள்ளனர். இன்னும் அந்த அணி சிறந்ததாக இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை பத்து 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 4-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மைக்கேல் கிளைஞ்சர், பென் டங், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், டிம் பெய்ன், ஆஷ்டன் டர்னர், ஜேம்ஸ் பவுல்க்னெர், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை.

இலங்கை: நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா (கேப்டன்), முனவீரா, குணரத்னே, ஸ்ரீவர்த்தனே, கபுகேதரா, சீக்குகே பிரசன்னா, குலசேகரா, உதனா, மலிங்கா, விகும் சஞ்ஜெயா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/17102508/1068835/Australia-Sri-Lanka-first-Twenty20-cricket-match-going.vpf

  • தொடங்கியவர்

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி

 

இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 6 விக்கட்டுகளை இழந்த 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆஸி அணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 43 ஓட்டங்களையும், கிலிங்கர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் லசித் மலிங்க 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெறவேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 169 ஓட்டங்களை பெற வேண்டும்.

http://www.virakesari.lk/article/16766

  • தொடங்கியவர்

இறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : திரில் வெற்றிபெற்றது இலங்கை

 

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

259165.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

C43esB0WYAAgO2w__1_.jpg

இலங்கை அணி சார்பில் இருபதுக்கு-20 போட்டியில்  தனது முதலாவது அரைச்சதத்தை அசேல குணரத்ன பூர்த்திசெய்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இணைந்த முனவீர அபாரமாக துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

C43bagZXUAMcB3j.jpg

இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசேல குணரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

3 இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது

http://www.virakesari.lk/article/16775

  • தொடங்கியவர்

 

கடைசி ஓவர்

Inside Melbourne Metro Train Lankan fans

  • தொடங்கியவர்

நேற்றைய போட்டியின் இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : வைரலாகும் காணொளி

 

 

ஆஸி அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இறுதிப்பந்து ஓவரில் இலங்கை அணியின் லசித் மலிங்க  துடுப்பாட்ட ஆலோசனை வழங்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு பந்து ஓவருக்கு 6 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதன்போது மலிங்க அணி வீர்கள் இருக்கும் இடத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதுமாத்திரிமன்றி போட்டி நிறைவுபெறும்வரை மலிங்க அங்கும் இங்கும் சென்றவாறு கடும் பதற்றத்தில் இருந்தமை காணொளியில் வெளியாகியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/16797

 
 
  • தொடங்கியவர்

மலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் :  17 ஆவது ஓவரில் வெளியானது

 

 

 இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில்  வைத்துக்கொண்டிருந்தார்.

அதனை ஒளிப்பதிவு கெமராக்கள் மூலம் பார்வையிட்ட மூன்றாவது நடுவர், கள நடுவருக்கு அறிவித்து மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராயுமாரு கூறினார்.

3D567BE400000578-4235032-Malinga_in_the_

இதனையடுத்து கள நடுவர் ஆராய மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  இருந்த “கை சூடாக்கியை” மலிங்க எடுத்துக்காட்டினார்.

எம்.சி.ஜி. மைதானத்தில் குளிராக இருந்ததால் குறித்த கை சூடாக்கியை மலிங்க வைத்திருந்தார். இதேவேளை குளிராக இருந்தால் கை சூடாக்கியை வீரர்கள் பயன்படுத்த முடியும் என போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3D567BED00000578-4235032-Umpires_momenta

3D567BFC00000578-4235032-Malinga_showed_

 
 

http://www.virakesari.lk/article/16805

  • தொடங்கியவர்

இலங்கைக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி

 

இலங்கை அணிக்கெதிரான  இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களை பெறவேண்டும்.

Australia 173 (20/20 ov)
Sri Lanka 176/8 (20/20 ov)
Sri Lanka won by 2 wickets (with 0 balls remaining)
  • தொடங்கியவர்

அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : தொடரை கைப்பற்றியது இலங்கை (Final two overs-Video)

Published by Pradhap on 2017-02-19 18:10:03

 

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது. 

sri-lanka-won.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

 

பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி பந்தில் தனது வெற்றியை பதிவுசெய்தது.

 

 

இந்த போட்டியில் ஆரம்பத்தில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும் குணரத்ன, கபுகெதர ஜோடி அணிக்கு ஆறுதல் அளித்து.

259229.jpg

இந்நிலையில் கபுகெதர 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க  இலங்கை கடும் சவாலுக்கு உள்ளானது.

எவ்வாறாயினும் தனியொரு ஆளாக களத்தில் நின்ற குணரத்ன ஆட்டமிழக்காமல் 46 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

259231.jpg

இதனடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

குறித்த இருபதுக்கு-20 தொடர் வெற்றியானது அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 3 ஆவது இருபதுக்கு-20 தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

259230.jpg

 

 

 

http://www.virakesari.lk/article/16843

 

https://www.youtube.com/watch?v=6CS_mU8lj3I&feature=player_embedded

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸியுடனான டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

 

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றதுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

ஜிலோங் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அவுஸ்ரேலிய வீரர் ஹென்றிகுயிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் குலசேகர நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடைசி ஓவரை வீசிய குலசேகர மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும், இலங்கை வீரர்கள் பல பிடிகளை தவறவிட்டது பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

GEELONG, AUSTRALIA - FEBRUARY 19:  Moises Henriques of Australia bats during the second International Twenty20 match between Australia and Sri Lanka at Simonds Stadium on February 19, 2017 in Geelong, Australia.  (Photo by Quinn Rooney/Getty Images)

இதனையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, கடைசியில் குணரத்னவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

கடைசி பந்தில் இலங்கை வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில் குணரத்ன பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை வீழத்தி டி20 தொடரை கைப்பற்றியது.

இலங்கை தரப்பில குணரத்ன ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் குவித்தார். அவுஸ்ரேலிய தரப்பில் ரை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குறித்த போட்டியின் ஆட்டக்காரரா க இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் அசேல குணரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

http://onlineuthayan.com/sports/?p=4195

  • தொடங்கியவர்

போட்டியின் இடைநடுவே ஆரோன் பின்ச்சுடன் சிங்களத்தில் உரையாடிய ரசல் (வைரல் வீடியோ)

 

 

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச்சை “பின்சி மச்சாங்” என சிங்களத்தில் அழைத்தமை பார்வையாளர்களை குதுகலப்படுத்தியுள்ளது.

 

வீரர்கள் மைதானத்தில் விளைாடிக்கொண்டிருந்தவாறு, வர்ணனையாளர்களிடம் உரையாடுவது தற்போதைய இருபதுக்கு-20 போட்டிகளில் சகஜமாகி வருகிறது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது இவ்வாறு உரையாடும் போதே ரசல் ஆர்னல்ட் , பின்சை “பின்சி மச்சாங், இட்ஸ் ரொஷல், கோஹமத?” என அழைத்துள்ளார்.

இதற்கு ஆரோன் பின்ச் “ஹலோ மச்சான்”  என கூறி குதுகலத்தை அதிகரித்துள்ளைமை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/16860

  • தொடங்கியவர்

இறுதி 12 பந்துகளுக்கு 36 ஓட்டங்கள்

  • தொடங்கியவர்

நிரோஷன் டிக்வெல்லவுக்கு விளையாடத் தடை

 

 

இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்லவுக்கு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

258949_copy.jpg

ஐ.சி.சி.யின விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தால் இவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது நடுவரின் தீர்ப்பினை அவமதித்த குற்றச்சாட்டு மற்றும் தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது ஐ.சி.சி. விதிமுறையை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 போட்டியில் இவர் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/16896

  • தொடங்கியவர்

நெருக்கடியில் ஆஸி : வைட்வொஷ் செய்யுமா இலங்கை?

 

 

இலங்கை - அவுஸ்திரேலியா மோதும் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 2.20 ஆரம்பமாகவுள்ளது.

fsfsdfsf1.jpg

இந்த போட்டியை பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்த நிலையில், இந்த போட்டியில் கட்டயா வெற்றியை பெற வேண்டிய நோக்கில் களமிறங்கும்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

இதேபோல் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணிக்கு ஒரே ஒரு தடுமாற்றம் டிக்வெல்ல அணியில் இல்லாதது எனலாம்.

எனினும் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணியை வைட்வொஷ் செய்ய வேண்டும் என்ற இலக்குடனெ இலங்கை களமிறங்கும்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் டிக்வெல்ல கடந்த போட்டிகளில் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன், அவுஸ்திரேலிய பந்தவீச்சாளர்களுக்கு கடும் சவாலாகவும் இருந்தார்.

டிக்வெல்லவுக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் டிக்வெல்லவுக்கு பதிலாக தசுன் சானக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியில் டிக்வெல்லவுக்கு பதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டில்சான் முனவீர களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் விக்கட் காப்பாளராக குசால் மெண்டிஸ் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தங்களுக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, முதல் இரண்டு போட்டிகளில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பான போட்டியொன்றை தமது ரசிகர்களுக்கு கொடுக்க எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றது.

இதனால்  இன்றைய போட்டியில் விறுவிறுப்பு மற்றும் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமிருக்காது எனலாம். 

http://www.virakesari.lk/article/16927

  • தொடங்கியவர்

வைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு - 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.

C5RPYeJUMAI9zB2.jpg

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான அரோன் பின்ஜ் (53 ஓட்டங்கள்) மற்றும் மிச்சல் கிளிஞ்ஞர் (62 ஓட்டங்கள்) என சிறப்பாக  விளையாடவே 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து ஆஸி அணி 187 ஓட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணிக்கு 188 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட, இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 18 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, சகல விக்கட்டுகளையும் இழந்தநிலையில் 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மூன்று போட்டிகளை கொண்ட 20க்கு இருபது தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  2-1 என தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/16958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.