Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 6124 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க வேண்டும் சிறுபான்மை மக்கள் குறித்த ஐ.நா.நிபுணர் பரிந்துரை

Featured Replies

வடக்கில் 6124 ஏக்கர் காணியை உட­ன­டி­யாக விடு­வி­க்க வேண்டும்

p13-e5cbc2583cab44fe6a3c4c8759f78f46bac30576.jpg

 

சிறுபான்மை மக்கள் குறித்த ஐ.நா.நிபுணர் பரிந்துரை

வட : கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படல் வேண்டும்

சமஷ்டி முறைமையில் அரசியல் அதிகாரங்களை பகிரலாம்

மலையக மக்களுக்கு விசேட திட்டங்கள் அவசியம்

சிறுபான்மையினருக்கு சுயாதீன ஆணைக்குழு அவசியம்

(ரொபட் அன்­டனி)

வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். மேலும் கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­வதும்

 முக்­கி­ய­மா­ன­தாகும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா பரிந்­துரை செய்­தி­ருக்­கிறார். 

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதற்குப் பதி­லாக முன்­வைக்­கப்­படும் சட்டம் சர்­வ­தேச தரங்­களைப் பின்­பற்ற வேண்டும். சிறு­பான்மை மக்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அர­சியல் அமைப்­புக்­குட்­பட்ட விசேட ஆணைக்­குழு ஒன்றும் உரு­வாக்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும் எனவும் ஐ.நா. விசேட நிபுணர் பரிந்­துரை செய்­தி­ருக்­கிறார்.

கடந்த ஒக்­டோபர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள தனது விப­ர­மான அறிக்­கை­யி­லேயே இந்தப் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேலும் சில பரிந்­து­ரைகள் வரு­மாறு,

தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புக்­கா­கவும் பல வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. ஆனால் அர­சாங்­கத்­துக்கும் நாட்டின் சமூ­கங்­க­ளுக்கும் இடை­யி­லான நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. அத்­துடன் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாத நிலைமை ஆரா­யப்­ப­டாமல் உள்­ளது. இது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

சிறு­பான்மை மக்கள் தாம் பாது­காப்­பா­ன­வர்கள் என்­பதை உணர வேண்டும். இது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பதற்­றத்தை குறைப்­ப­தற்கு உத­வு­வ­துடன் நல்­லாட்­சியின் முக்­கிய கார­ணி­யா­கவும் அமையும். சிறு­பான்மை மக்­களின் உரி­மையைப் பாது­காப்­ப­திலும் ஊக்­கு­விப்­ப­திலும் தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­ப­திலும் முரண்­பட வேண்­டி­ய­தில்லை. தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் சிறு­பான்மை மக்­களின் உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றன.

குறிப்­பாக சிறு­பான்மை மக்கள் உயர்­மட்ட தீர்­மானம் எடுக்கும் நிலை­க­ளுக்கு உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். நல்­லாட்­சியின் செயற்­பா­டுகள் வெற்­றி­பெ­று­வ­தற்கு சமூ­கத்தின் நம்­பிக்கை மீளு­ரு­வாக்­கப்­பட வேண்டும். கடந்த கால தவ­றுகள் தொடர்­பாக பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­ப­துடன் இலங்­கை­யர்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும். 

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­களும் நிலை­மாறு கால நீதி தொடர்­பான செயற்­பா­டு­களும் எப்­போதும் இல்­லா­த­வா­றான சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான சந்­தர்ப்­பத்தை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது. எனவே சிறு­பான்மை மக்­களின் உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கட்­ட­மைப்பை அர­சாங்கம் கால அட்­ட­வ­ணை­யுடன் முன்­வைக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அலு­வ­லகம் நல்­லி­ணக்­கத்தை கூட்­டி­ணைப்­ப­தற்­கான செய­லகம் ஆகி­யன முக்­கி­ய­மான வகி­பா­கத்தை வகிக்­கின்­றன. காணா­மற்­போ­னோரை கண்­ட­றி­வ­தற்­கான அலு­வ­லகம் விரை­வாக இயங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். மேலும் சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் நோக்கில் அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்ட விசேட சுயா­தீன ஆணைக்­குழு நிறு­வப்­பட வேண்டும். இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். இதில் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­திகள் இடம்­பெற வேண்டும்.

இந்த ஆணைக்­கு­ழுவின் ஆணை தீர்­மானம் எடுக்கும் தரப்­புக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தாக இருக்க வேண்டும். தாம் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாக சிறு­பான்மை மக்கள் கரு­து­கின்­ற­மையை தடுத்து அந்த மக்கள் பாது­காப்பை உணரும் வகையில் நட­வ­டிக்கை வேண்டும். சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பங்­க­ளித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பங்­க­ளிப்­பா­னது பல வழி­களில் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். 

சமஷ்டி முறை­மை­யி­லான அதி­கா­ரங்­களை பகிரும் முறைமை, பாரா­ளு­மன்­றத்தில் ஒதுக்­கப்­பட்ட ஆசன முறைமை என்­பன ஊடாக செய்­யப்­ப­டலாம். எதிர்­கால தேர்தல் முறை மாற்­றங்­க­ளா­னது அனைத்து சிறு­பான்மை மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டாக அமைய வேண்டும். அர­சியல் உள்­ளீ­டு­களில் சிறு­பான்மை மக்­களின் நேர்­மை­யான அழுத்­தங்கள் உள்­ளீர்க்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

இலங்­கையின் பல்­லினத் தன்­மை­யா­னது அர­சாங்கம் மாகாண அலு­வ­ல­கங்கள், சட்­டத்தை அமுல்ப்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள், முப்­ப­டைகள், கல்வி மற்றும் சுகா­தார நிறு­வ­னங்கள் என்­ப­வற்றில் பிர­தி­ப­லிக்­கப்­பட வேண்டும். இது ஒரு ஆணை­யு­ட­னான கோட்டா முறை­மையில் இடம்­பெற வேண்டும். 

பல்­மொழி சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான சமூக உறவு அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தற்கு நான் பரிந்­துரை செய்­கிறேன். அனைத்து அரச நிறு­வ­னங்­க­ளிலும் மாகாண அலு­வ­ல­கங்­க­ளிலும் பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் முப்­ப­டை­க­ளிலும் இவ்­வாறு அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் ஆலோ­சனை செயற்­பா­டுகள் பாராட்­டுக்­கு­ரி­யவை. ஆனால் அனைத்து மட்­டங்­க­ளிலும் இந்த ஆலோ­சனை செயற்­பா­டுகள் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான செயற்­பா­டுகள் மக்­க­ளுக்கு அனைத்துக் கட்­டங்­க­ளிலும் அறி­விக்­கப்­பட வேண்டும். வெறுக்­கத்­தக்க பேச்­சுக்கள் மூல­மாக அநீ­தி­க­ளுக்கு உட்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளையும் வன்­மு­றை­களை தூண்­டு­கின்­ற­வர்­க­ளையும் சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன மற்றும் மத ரீதி­யாக வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வர்­களை தண்­டிக்­காமல் இருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும்.

புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள அனைத்து மதப் பேரவை மக்கள் மத்­தியில் சகிப்­புத்­தன்­மை­யையும் சமா­தான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்த வேண்டும். அர­சாங்கம் பிராந்­திய மட்­டங்கள் உள்­ளிட்ட அனைத்து மட்­டங்­க­ளிலும் சிறு­பான்மை மக்­களின் வழி­பாட்டுத் தலங்­க­ளையும் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

பல் மொழி செயற்­பாடு திட்­டத்தை உரி­ய­மு­றையில் அமுல்­ப­டுத்­து­வ­தற்கு வளங்கள் போது­மா­ன­தாக இல்லை. இது­தொ­டர்பில் ஆரா­யப்­பட வேண்டும். மூன்று மொழி­க­ளிலும் தர­மான கல்­வியைப் புகட்­டவும் தமிழ் பேசும் ஆசி­ரி­யர்­களின் குறை­பாட்டை நீக்­கவும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் அமை­தி­யான சக­வாழ்வை உறு­திப்­ப­டுத்த அர­சாங்கம் விரி­வான திட்­ட­மி­டப்­பட்ட ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றிதல், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல், காயங்­களை ஆற்­றுதல் ஆகி­ய­வற்றை முன்­னெ­டுக்க வேண்டும். இதற்­கான பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு இடம்­பெ­றுதல் வேண்டும். இது ஒரே இரவில் செய்­யப்­பட முடி­யா­தது. இது தொடர்­பான அர­சாங்­கத்தின் சிறு­பான்மை மக்­களை பாது­காப்­ப­தற்­கான அர­சியல் எதிர்­பார்ப்பை அர­சாங்கம் மிகவும் வலு­வான முறையில் வெளிக்­காட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மேலும் அர­சாங்கம் முன்­னு­ரிமை நட­வ­டிக்­கை­யாக வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். தற்­போது இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள் தொடர்­பாக ஒரு முறை­யான திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 

இரா­ணுவத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வதை நியா­யப்­ப­டுத்த முடி­யாத காணி­களை அதன் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும். எந்­த­வி­த­மான முறை­யான செயற்­பாடும் இன்­றியும் நட்­ட­ஈடு இன்­றியும் அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள் வழங்­கப்­பட வேண்டும் அல்­லது நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­கின்­ற­மை­யா­னது மக்­களின் அன்­றாட வாழ்க்­கைக்கு முக்­கி­ய­மா­னது மட்­டு­மன்றி ஒரு அடை­யா­ளத்­துக்­கா­கவும் செய்­யப்­பட வேண்டும். 

மேலும் பொலிஸார் இன மற்றும் மொழி பிர­தி­ப­லிப்பை சரி­யான முறையில் பின்­பற்ற வேண்டும். இதன்­மூ­லமே நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு காணப்­ப­டு­கின்ற தடை­களை நீக்க முடியும். மோதல் மற்றும் குற்­றங்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டாத செயற்­பா­டா­னது மக்­களின் நம்­பிக்கை கலா­சாரம் மற்றும் அடை­யா­ளத்­துக்­கான உணர்­வு­களைப் பாதித்­துள்­ளது. 

1990 ஆம் ஆண்டு புலி­க­ளினால் வெ ளியேற்­றப்­பட்ட மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். இதற்­காக அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்க வேண்டும். இந்த விட­யத்தில் ஐ.நா.வின் இடம்­பெயர் மக்கள் தொடர்­பான பரிந்­து­ரைகள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 

ஆனால் புதிய சட்டமானது சர்வதேச தரத்திற்கு அமைய வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகள் உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். அநீதிகளினால் சிறுபான்மை பெண்களும் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும். 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் உடனடியாக வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டும். பெண்களின் குரல்கள் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் செவிமடுக்கப்பட வேண்டும். மேலும் கண்டியன் சட்டம் தேசவழமை சட்டம் 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலங்கள் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டும். 

குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டமூலமானது அந்த சமூகத்தின் பெண்களின் ஆலோசனைகளுடன் திருத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான அநீதிகளும் இழைக்கப்படக் கூடாது. மலையக தமிழ் மக்களுக்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அடுத்த ஐந்து வருடத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். குடும்பங்களுக்கு 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்கும் செயற்பாட்டில் தோட்ட முகாமைத்துவங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.