Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப்பகிர்வுடன் கூடியதான அரசியல் தீர்வுத்திட்டத்தை விரைவில் வழங்குவோம்

Featured Replies

அதிகாரப்பகிர்வுடன் கூடியதான அரசியல் தீர்வுத்திட்டத்தை விரைவில் வழங்குவோம்

p6-6f66227dd5e32f16bd14b005b4469b87041887e8.jpg

 

பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்; சம்பந்தன் சிறந்த பங்களிப்பு என்கிறார் பிரதமர்
(ரொபட் அன்­டனி)

இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப்பகிர்வின் அடிப்­ப­டையில் தீர்வைக் காண்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை அர­சாங்கம் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

அதி­காரப்பகிர்வு தொடர்­பான பேச்­சுக்­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு நாங்கள் முயற்­சிக்­கின்றோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

 இரண்டு பிர­தான கட்­சி­க­ளுடன் அனைத்து கட்­சி­களும் இணைந்து விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வைக்­காண அனை­வரும் முயற்­சிக்­கின்றோம். அதற்­கான சவாலை மக்கள் எங்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளனர். நாங்கள் அதற்கு முகம்­கொ­டுக்­க­வேண்டும் என்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டினார்.

 முன்னாள் நடி­கரும் அர­சி­யல்­வா­தி­யு­மான விஜ­ய­கு­மா­ர­துங்­கவின் 29 ஆவது நினை­வு­தின நிகழ்வு நேற்­று­முன்­தினம் இரவு கொழும்பில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

 விஜ­ய­கு­மா­ர­துங்­க­வுக்கு எதி­ரான அர­சியல் தரப்­பி­லி­ருந்து செயற்­பட்­டவன் என்ற ரீதியில் அவர் மீதான எனது பார்வை எவ்­வாறு இருந்­தது என்­பதை நான் கூற வேண்டும். அவர் உயிர்த் தியாகம் செய்த நோக்­கத்­தினை அடை­வ­தற்கு 29 வரு­டங்­களின் பின்னர் நாங்கள் தற்­போது முயற்­சித்து வரு­வ­துடன் அதற்கு அருகில் வந்­து­விட்டோம்.

 இந்த நாட்டின் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு முயற்சி செய்த ஒரு தலை­வ­ராக விஜ­ய­கு­மா­ர­துங்­கவைக் கூறலாம். அவர் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்­தினார். வேறு நாடு­களைப் போன்று இலங்­கை­யிலும் அர­சி­ய­லா­னது இரண்டு கட்­சி­க­ளி­டையே தங்­கி­யுள்­ளது. விஜ­ய­கு­மா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக எவ்­வாறு செயற்­பட்டார் என்­பது நாம் நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

 1977 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரிய வெற்­றியைப் பெற்­றது. 1977 ஆம் ஆண்டு தேர்­த­லா­னது ஒரு தீர்க்­க­மா­ன­தாக அமைந்­தது. அதனை அர­சியல் புரட்சி என்றே கூறலாம். அந்த அர­சியல் புரட்­சிக்கு அமை­வாக சுதந்­திரக் கட்சி மீளு­ரு­வாக்­கப்­பட வேண்டும் என விஜ­ய­கு­மா­துங்க கரு­தினார். சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் இணைந்து அவர் அந்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்தார்.

 எமது நாட்டின் இன­வாத பிரச்­சி­னை­களின் பின்னர் மற்றும் சிறி­ய­ள­வி­லான பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இடம்­பெற்ற பின்னர் விஜ­ய­கு­மா­ர­துங்க எடுத்த தீர்­மா­ன­மா­னது அவ­ரது வாழ்க்­கையில் எடுத்த தீர்க்­க­மான முடி­வாகும். அவர் தனது கட்­சிக்­குள்­ளேயே விமர்­சிக்­கப்­பட்டார். 1983 ஆம் ஆண்டு கல­வ­ரத்தின் பின்னர் விஜய குமா­ர­துங்க அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தார்.

 நாட்டு மக்­களின் உயிர்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கா­ததன் கார­ண­மா­கவே அவர் அர­சாங்­கத்தை விமர்­சித்தார். அவர் சில காலம் எமது அர­சாங்­கத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். அப்­போ­துதான் அவரின் மாற்­றத்தை அனை­வரும் புரிந்து கொண்­டனர்.

 விஜ­ய­கு­மா­ர­துங்க உள்­ளிட்ட தலை­வர்கள் இந்த நாட்டின் இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தனர். நாங்கள் அன்று யாழ்ப்­பாணம் சென்­ற­போது அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியில் இரண்டு பிரி­வுகள் காணப்­பட்­டன. எனினும் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன எம்மை யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்­று­வ­ரு­மாறு கூறினார்.

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் அப்­போது இரண்டு பிரி­வுகள் இருந்­ததை விஜ­ய­கு­மா­ர­துங்க அறிந்­தி­ருக்­க­வில்லை. எனினும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று அவர் அறிக்­கை­யிட்டார். அதன்­பின்னர் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக சென்­னைக்குச் சென்­ற­போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் பிரச்­சி­னைகள் தோன்­றி­யி­ருந்­தன. அர­சியல் தீர்­வுக்கு செல்­வதா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எடுக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் எமக்கு ஏற்­பட்­டது.

அதன் பின்­னரே இலங்கை இந்­திய உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்டு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. 13 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு சில அமைச்­சர்­களே பயந்­தி­ருந்த நேரத்தில் விஜ­ய­கு­மா­ர­துங்க சிறந்த தீர்­மா­னத்தை எடுத்தார். அந்தத் தீர்­மா­னத்தின் கார­ண­மாக அவர் உயிரை இழந்தார்.

அவ­ரு­டைய உயிர் இல்­லா­வி­டினும் அவ­ரு­டைய எதிர்­பார்ப்­புகள் முன்­கொண்­டு­வ­ரப்­பட்­டன. 1988 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்சி மாகாண சபை தேர்­தலை பகிஷ்­க­ரித்­தது. எனினும் 1993 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்சி மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்­டதன் மூலம் மற்­றொரு புரட்சி ஏற்­பட்­டது.

அதன் பின்னர் சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றார். நான் எதிர்க்­கட்­சிக்குச் சென்றேன். எனினும் அன்று அவர் இந்த விட­யங்­களை ஆரம்­பித்­தி­ருக்­கா­விடின் என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை நான் எண்­ணிப்­பார்த்தேன். அதனால் தான் விஜ­ய­கு­மா­ர­துங்க ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்­தினார் என்­பதை நான் கூறினேன். அவரின் பய­ணத்தை சந்­தி­ரிகா முன்­கொண்டு சென்றார்.

யுத்­தத்தை முடிப்­ப­தற்கு எவ்­வ­ள­வுதான் முயற்­சிக்­கப்­பட்­டாலும் அதனை பிர­பா­கரன் விரும்­ப­வில்லை. எவ்­வா­றா­யினும் யுத்தம் முடிந்­ததும் மக்­க­ளுக்கு சமா­தானம் கிடைக்கும் என அனை­வரும் எதிர்­பார்த்­தனர். எனினும் யுத்த வெற்­றி­யா­ளர்கள் மக்­க­ளுக்கு சமா­தா­னத்தைக் கொடுக்­க­வில்லை.

சமா­தா­னத்தைக் கொண்­டு­வர முடி­ய­வில்லை. இலங்கை என்ற அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. இந்­நி­லை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு நாட்டின் சிங்­கள, தமிழ், முஸ்லிம் என அனை­வரும் வேறு­பா­டு­க­ளின்றி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­தனர். 1952 ஆம் ஆண்டு அனைத்து மக்­களும் இணைந்து டட்லி சேன­நா­யக்­கவை தெரி­வு­செய்­ததைப் போன்று 2015 ஆம் ஆண்டு மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தெரி­வு­செய்­தனர்.

நாட்டின் ஜன­நா­ய­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் பலப்­ப­டுத்த நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்தோம். நாம் தற்­போது முன்­சென்று கொண்­டி­ருக்­கின்றோம். தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். எமது பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் இது தொடர்பில் பேசப்­பட்டு வரு­கி­றது.

அதி­கா­ரங்­களைப் பகிர்­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு ஏன் இவ்­வ­ளவு காலம் எடுக்­கி­றது என சிலர் கேட்­கின்­றனர். 2016 ஆம் ஆண்­டுதான் பிர­தான வழி­ந­டத்தல் குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போது நாம் 14 மாதங்­களை கடந்­துள்ளோம். இக்­கா­லப்­ப­கு­தியில் பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக திறந்த மன­துடன் பேசினோம். 40 வரு­டங்கள் பழை­மை­யான அர­சியல் பிரச்­சி­னையை ஒரே தட­வையில் தீர்க்க முடி­யாது.

எனினும் பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்­றங்­களை நாம் காண்­கின்றோம். நாம் தற்­போது முக்­கி­ய­மான சந்­தர்ப்­பத்­திற்கு வந்­தி­ருக்­கிறோம். பிர­தான கட்­சிகள் இரண்டும் ஏனைய கட்­சி­களும் இணைந்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை முன்­வைக்க முடியும். இந்த நாட்டு மக்கள் அதற்­கான சவாலை எமக்குத் தந்­துள்­ளனர்.

ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வு­செய்­யப்­பட்­டதும் தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. இதில் பல்­வேறு கருத்­துக்கள் உள்­ளன. எனினும் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தேசிய அர­சாங்­கத்தின் பலம் அவ­சியம். பேச்­சு­வார்த்தை மட்­டத்தில் இந்தப் பிரச்­சி­னையத் தீர்க்கும் விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தேசிய ஒற்­று­மைக்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் பாரிய சேவையை ஆற்­றி­யுள்ளார்.

சம்­பந்தன் ஒரு­முறை என்­னிடம் இவ்­வாறு கூறினார். ''ரணில் 1948 ஆம் ஆண்டு இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்த தினத்­தன்று திரு­கோ­ண­ம­லையில் மக்கள் பிர­தி­நி­தி­யாக இருந்த எனது மாமாவிடம் ஒற்று பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு சுதந்திர சதுக்க கட்டடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சுதந்திரத்தைக் கொண்டாடினேன். அன்றிருந்த அந்த தேசிய ஒற்றுமையை மீண்டும் கொண்டுவருவதே எனது நோக்கம்'' இவ்வாறு சம்பந்தன் என்னிடம் கூறினார்.

இதேவேளை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். அப்படியாயின் நாம் தற்போது அதற்கு முகம்கொடுக்க வேண்டும். கடந்த 7, 8 மாதங்களாக சிலர் இனவாதத்தை முன்னெடுக்க முயற்சித்தனர். எனினும் அவை வெற்றியடையவில்லை.

இலங்கையின் சிரேஷ்ட கலாசாரத்தை ஏற்று தமது மத மற்றும் கலாசாரங்களைக் கடைப்பிடிக்க மக்களுக்கு இடமளிக்க வேண்டும். சில தரப்பினர் மற்றும் ஊடகங்கள் தேசிய இனப்பிரச்சினையில் அரசியல் சுயலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.