Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்சவுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேன்

Featured Replies

விமல் வீர­வன்­ச­வுக்கு நான் அடைக்­கலம் கொடுப்பேன்

 

 

விமல் வீர­வன்ச  தற்­போது சுயா­தீ­ன­மாக இயங்க வேண்­டிய  நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.  அவர் தனித்­தாலும் அவ­ருக்கு அர­சி­யலில் அடைக்­கலம் கொடுப்­ப­தற்கு  நான் தயா­ரக உள்ளேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

தேசிய வளப்­பா­து­காப்பு மத்­திய நிலையம் நேற்று வியா­ழக்­கி­ழமை  நாரஹேன்பிட்­டி­யவில் அமைந்­துள்ள அப­ய­ராம விகா­ரையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.  இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் 

அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை கண்­கா­ணிப்­ப­தற்கும் அவ்­வே­லைத்­திட்­டங்­களை முகா­மைத்­து­வப்­ப­டுத்­து­வ­தற்கும் தேசிய வளப் ­பா­து­காப்பு மத்­திய நிலையம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை தற்­போது எழுந்­துள்­ளது. 

நல்­லாட்­சியில் சிறந்த முகா­மைத்­துவம் மற்றும் திட்­ட­மிடல் இன்­மையால் தற்­போது எமது நாடு பாரிய எதிர் விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. இதனால் நாட்­டி­னது வளங்­களை தனி­யா­ருக்கும் ஏனைய நாடு­க­ளுக்கும் விற்­பனை செய்­வ­தற்கு நேரிட்­டுள்­ளது. அதனை ஐக்­கிய தேசியக் கட்சி  தாரை­வார்க்­கின்­றது.

கடந்த காலத்தில் எமது ஆட்­சியை பொறுத்­த­வ­ரையில் நாட்­டினை அபி­வி­ருத்தி பாதையில் முன்­னோக்கி கொண்டு  செல்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் எமது முகா­மைத்­துவ திட்­ட­மி­டலை உரு­வாக்கி அத­ன­டிப்­ப­டையில் எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து சென்றோம்.

அந்­த­வ­கையில் இலங்கை விமான சேவை காப்­பு­றுதி கூட்­டுத்­தா­பனம் கனி­ய­வளம் மற்றும் ஏனைய நாட்டில் இயங்கும் சகல சேவை­க­ளையும் அர­சாங்கம் திறம்­பட முகா­மைத்­துவம் செய்­தது. இதனால் நாட்­டி­னது விரை­வான அபி­வி­ருத்­தியின் மீது ஏனைய நாடு­க­ளுக்கு மிகுந்த எதிர்­பார்ப்­பி­ருந்­தது. விரை­வான அபி­வி­ருத்தி குறித்த எதிர்­பார்ப்­பினால் நாட்­டிற்­கான மேல­திக வளங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் வாய்ப்­பேற்­பட்­டது. 

அத­ன­டிப்­ப­டையில்  மத்­த­ள­வி­மான நிலையம் அம்பாந்­தோட்டை துறை­முகம் அதி­வேக மார்க்­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதனால் நாட்­டி­னது வளங்கள் பாது­காக்­கப்­பட்­ட­துடன் அதற்கு மேல­தி­க­மாக புதிய வளங்­களும் வரப்­ பி­ர­சா­தங்­களும் கிடைக்­கப்­பெற்­றன.

ஆனால் தற்­போ­தைய நல்­லாட்­சியில் கடந்த காலத்தில் நாட்­டுக்கு கிடைத்த  வரப்­பி­ர­சா­தங்­க­ளான வளங்­களை தனி­யா­ருக்கு விற்­பனை  செய்­துள்­ளனர்.  கடந்த காலத்தில்   நில­விய மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கடன் சுமை கார­ண­மா­கவே குறித்த வளங்­களை கொண்டு நடத்த முடி­யாமல் உள்­ளன என்றும்  ஆகவே அதனை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்தோம் எனவும்  எம்­மீது பகி­ரங்­க­மான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.

நாட்டில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சாங்­கத்­தினால் நிதி செல­வி­டப்­ப­ட­வேண்டும். இதனால் ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து கடன்­பெற வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. இருப்­பினும் கடந்த 2005 ஆம் ஆண்­டு ­கா­லப் ­ப­கு­தி­யி­லி­ருந்து எமது அபி­வி­ருத்தி திட்­டங்கள் அதன் செல­வீ­னங்கள் குறித்த சகல தர­வு­களும் காணக்­காய்­வாளர் திணைக்­க­ளத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

நாம் ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து கடன் பெற்­றி­ருப்­பினும் குறித்த கடன் தொகை­யினால் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதே தவிர நாட்டை ஒரு­போதும் பொரு­ளா­தார ரீதியில் பின்­தள்ளி மக்­களை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­த­வில்லை. அர­சாங்கத் திணைக்­க­ளங்கள்  அடைந்த இலா­பத்தின் அடிப்­ப­டையில் குறித்த கடன் தொகையை செலுத்தி நாட்­டி­னது அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு வந்தோம்.  

ஆனால் தற்­போ­தைய ஆட்­சியில் அவ்­வா­றா­ன­தொரு செயற்­பாட்டை காண முடி­யா­துள்­ளது. கடந்த பத்­து­ வ­ருட காலத்தில் நாம்  பெற்­றுக்­கொண்ட கடன் தொகையை விடவும் அதி­க­மாக தற்­போ­தைய நல்­லாட்­சியின் இரு­வ­ருட பூர்த்­திக்­குள்­ளேயே பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். 

குறித்த கடன் தொகை­யா­னது கடந்த காலத்தில் எமது ஆட்­சியில் பெற்றுக் ­கொண்ட கடனை அடைப்­ப­தற்­காகவே பெற்­றுக்­கொண்­டார்கள் என்­கின்­றனர் அரச நிறுவனங்கள் ஏன் நட்டத்தில் இயங்க வேண்டும். இவை அரசாங்கத்தின் இயலாமையினையே வெளிப்படுத்துகின்றது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச   சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகு

வதற்கு தீர்மானித்துள்ளாரே தவிர எம்முடன் எப்போதும்  இணைந்தே செயற்படுவார். அவர் தனித்தாலும் அவருக்கு அரசியலில்  அடைக்கலம் கொடுப்பதற்கு  நான் தயாரா கவே  உள்ளேன் எனவும் சுட்டிக்காட்டினார். 

http://www.virakesari.lk/article/17006

  • தொடங்கியவர்

விமலின் முடிவுக்கு ரணில் மகிழ்ச்சி
 

article_1462418152-image.jpg-ஜே.ஏ.ஜோர்ஜ்

விமல் வீரவன்சவின் முடிவையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுயாதீன குழுவாக அல்ல, சுயாதீன உறுப்பினர்களாகவே தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள் செயற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக்காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், விமல் வீரவன்ச எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து தாம் விலகி விட்டதாகவும் தனது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எம்.பிக்கள் ஐவரையும் சபையில் தனித்து செயற்படுவதற்கு அனுமதிக்குமாறும் கோரிநின்றார்.  

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் சபையில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது. இதன்போதே பிரதமர் ரணில் விக்கிமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

விமல் வீரவன்ச தனது ஒழுங்குப் பிரச்சினையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டோம். தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த ஐந்து பேரை சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்குமாறு இதற்கு முன்பு சபையில் நான் கூறவில்லை என ஆளும் தரப்பினரும் சபாநாயகரும் குறிப்பிட்டிருந்தனர்.   

எனினும், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதிய ஹன்சாட்டில், நான் இவ்வாறு கூறியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.  

எனவே, எம்மை சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்குமாறு கோரி பல மாதங்கள் கடந்துவிட்டன. எனினும் இதுவரையில் சபாநாயகரினால் தீர்வு வழங்கப்படவில்லை. இது பெரும் அநியாயம். எனவே சபாநாயகர் அவர்களே நீங்கள் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தலைவராகும். ஆகவே கால தாமதம் ஆகாமல் தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.  

ஜனநாயக உரிமைகளுக்காக நீங்கள் மஞ்சள் நிறத்திலான, சால்வையை அணிந்திருந்தீர்கள் என்பதனையும் நான் அறிவேன்.   

ஏனென்றால் இந்த நாடாளுமன்றத்துக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. இந்த நாடாளுமன்றம் தொடர்ந்து செல்லுமா என்பது சந்தேகமாகும். பிரதமருக்கு என்ன நடக்க போகின்றது என்பது தெரியாது. ஆகவே தாமதம் இன்றி தீர்வு வேண்டும் என்றார்.  

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில்,  

“இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவசரமாக தீர்மானம் எடுக்க முடியாது. எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை புறக்கணிக்க மாட்டேன். இதற்கு தீர்வினை வழங்குவேன்” என்றார்.  
எனினும் இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாப்பில் தேசிய சுதந்திர முன்னணி கட்சி இல்லை. ஆகவே அம்முன்னணியை சுதந்திரமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும்” என்றார். 

குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  

ஐ.ம.சு.மு கூட்டணியில் இவர்கள் விலகுவதாக இருந்தால் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐவரை சுயாதீன பிரதநிதிகளாக கருத முடியும். எனினும் எந்தவொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் செயற்படுவதற்கு விருப்பமில்லை என்பதனை விமல் வீரவன்ச கூறியுள்ளார். விமல் வீரவன்ச அவ்வாறான முடிவுக்கு வந்ததையிட்டு தான் மகிழச்சி அடைவதாக பிரதமர் கூறினார்.  

இதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச, நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை எதிர்க்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் கூட்டு எதிரணிக்கு பக்கபலமாக இருக்கவுள்ளோம் என்றார். 

- See more at: http://www.tamilmirror.lk/192130/வ-மல-ன-ம-ட-வ-க-க-ரண-ல-மக-ழ-ச-ச-#sthash.PL6mGMGz.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.