Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விநியோக வர்தமானியில் மஹிந்தவின் கையெழுத்து.? நாளை விசாரணை ஆரம்பம்

Featured Replies

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விநியோக வர்தமானியில் மஹிந்தவின் கையெழுத்து.? நாளை விசாரணை ஆரம்பம்

 

 

(க.கமலநாதன்)

2015 ஆம் ஆண்டு  ஜனவரி முதலாம் திகதியன்று மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து சகிதம் வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணைகள் அரச அச்சகத்தின் பணிப்பாளரிடத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

central_bank.jpg

மேலும் நிதி அமைச்சின் செயலாளரிடத்திலும் இது குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

மேற்படி திகதியில் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தினை பரிசீலிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிடத்தில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான ஒரு வர்தமானி அறிவித்தல் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளரான ஆர்.எச்.எஸ். சமரதுங்க பதிலளித்திதார்.

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே.டீ.சித்திசிறி, பி.எஸ். ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் வேலுபிள்ளை ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை கடந்த வியாழக்கிமையன்று மூன்றாவது  நாளாகவும் முன்னெடுக்கபட்ட போதே நிதி அமைச்சின் செயலாளரிடத்தில் மேற்படி சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 

இதன்போது முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது விசாரணைகள் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிடத்தில் அவரின் தொழில்சார் செயற்பாடுகள் குறித்து வினவப்பட்டது. இந்த கேள்விகளை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த கோதாகொட தொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய வங்கி பிணை முறி விவகாரம் குறித்த கேள்விகளை நெறிப்படுத்தி வினவிய அரச சிரேஷ்ட சட்டவாதி அவந்தி பெரேரா 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, இந்த வர்தமானி அறிவிப்பு குறித்து தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டார். அதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் கே.டீ.சித்தசிறி இந்த விசாரணைகளை நாளை வரையில் ஒத்திவைப்பதாகவும் அதற்கு முன்னர் நாளை விசாரணைகளின் போது அரச அச்சகத்தின் பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அறிவித்தார்.

மேலும் இந்த குழப்பத்தின் மத்தியில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவே  2015.01.01 வர்தமானியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமையினால் அச்சீட்டின் போது திகதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க கூடுமா? என்பது குறித்த விரிவான விசாரணைகள் நாளை முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.

அதன் பிரகாரம் இந்த விவாகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மற்றும் நிதி அமைச்சி, திறைசேரியின் செயலாளர் ஆர்.எச். எஸ் சமரதுங்கவிடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக விவகாரத்தின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி  வெயிளிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இடப்பட்டுள்ளமை குறித்த தீர்க்கமான விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளமையினால் மத்திய வங்கி விவகாரத்தில் திருப்பு முனை ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் மேலீட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/17075

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.