Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

Featured Replies

வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

 

 

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

1.jpg

வவுனியா - கந்தசாமி ஆலயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (24) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

2.jpg

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/17081

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Published by RasmilaD on 2017-02-26 14:21:16

 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

DSC_0014.jpg

இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன் முஸ்ஸிம் மற்றும் சிங்கள மக்கள் இப்போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.

DSC_0011.jpg

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கிறது.

http://www.virakesari.lk/article/17092

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.