Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் நிபந்தனையின் அடிப்படையில் கால அவகாசம் அமையவேண்டும்

Featured Replies

கடும் நிபந்தனையின் அடிப்படையில் கால அவகாசம் அமையவேண்டும்

samanthan-4c033918bac0ab93b33f20b0dcc9d5065ecdb4e8.jpg

 

ஆர்.பி

ஐ.நா. பேர­வையின் கூட்­டத்­தொடர் குறித்து கூட்­ட­மைப்பு தலைவர் இரா. சம்­பந்தன்

நாளை ஆரம்­ப­மாகும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை அர­சாங்கம் தனக்கு கால­அ­வ­காசம் வழங்க வேண்­டு­மெனக் கோரினால் அது கடும் நிபந்­த­னையின் பேரில் குறு­கிய கால அவ­கா­சத்தில் அமைய வேண்டும். எவ்­வா­றெ­னினும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகையில் ஐ.நா. நடந்து கொள்­வது முக்­கி­ய­மாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அர­சாங்கம் தனது உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் கால அவ­காசம் கோரும் என்ற கருத்­துக்கள் மேலோங்­கி­யுள்­ளன. அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  நிலைப்­பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.  

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

உண்­மையில் இவ்­வி­வ­காரம் தாம­த­ம­டைந்து செல்­வதை நாம் ஒரு­போதும் விரும்­ப­வில்லை. எவ்­வா­றெ­னினும் கடந்த ஒன்­றரை வருட கால எல்­லையில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றை நாம் வர­வேற்­கின்றோம். மேலும் பல்­வேறு கரு­மங்கள் ஆற்ற வேண்­டிய நிலை இருந்து வரு­கின்­றது. அவற்றை கால­தா­ம­த­மின்றி நிறை­வேற்­று­வது அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும். அதே­வேளை, ஐ.நா. இவ்­வி­வ­கா­ரத்தில் தொடர்ந்தும் தனது கண்­கா­ணிப்­புக்­களை மேற்­கொள்­வ­துடன் கடும் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் தாம­த­மின்றி நிறை­வேற்­றக்­கூ­டிய கால அவ­கா­சத்தை வழங்­கு­வதன் மூலம் இந்தக் கரு­மங்­களை நிறை­வேற்ற வைக்­கலாம். 

தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில் மிகுந்த எதிர்­பார்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அவர்கள் கால அவ­காசம் நீண்டு செல்­வதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் நம்­பிக்கை தரும் வகை­யிலும் துரி­த­க­தி­யிலும் அமைய வேண்டும் என்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. இதனை சகல தரப்­பி­னரும் புரிந்­து­கொள்­வது அவ­சியம் என்றார். 

கால­அ­வ­கா­சத்தைப் பெற்று காலத்தை இழுத்­த­டிக்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் ஒரு­போதும் மேற்­கொள்ளக் கூடாது. அவ்­வாறு இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் அது தமிழ் மக்­களை மேலும் விரக்­திக்கு இட்­டுச்­செல்­வ­தா­கவே இருக்கும் என்று கூறிய அவர், அர­சாங்கம் கடந்த காலங்­களில் ஒரு சில முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இருப்­பினும் அது தமிழ் மக்கள் மத்­தியில் முழு­மை­யான திருப்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வில்லை. 

காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் விடயம் மற்றும் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது மக்கள் தொடர்பில் உண்­மை­களைக் கண்­ட­றிதல் போன்ற விட­யங்கள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. வெறு­மனே கால­அ­வ­கா­சத்தைக் கோரி இதே­வ­கை­யான நிலை­மைகள் தொட­ரு­மானால் அது தமிழ் மக்­களை விரக்தி கொள்­ளவே வழி­வ­குக்கும். இதனை உணர்ந்து ஐக்­கிய நாடுகள் சபை அதற்­கான அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பது அவ­சி­ய­மாகும். 

இலங்கை அர­சாங்கம் கால­அ­வ­கா­சத்தைக் கோரு­வது தமிழ் மக்­களின் புரை­யோ­டிப்­போன பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காணும் இத­ய­சுத்­தி­யுடன் இருக்­கு­மானால் அது கவ­னிக்­கத்­தக்க ஒன்­றாக அமையும் மாறாக காலத்தைக் கடத்தும் நோக்­குடன் அமை­யு­மானால் இறு­தியில் ஏமாற்­றமே மிஞ்சும். எனவே ஐ.நா. மனித உரிமைப் பேரவை இவ்­வி­ட­யத்தில் உரிய கரி­சனை செலுத்தி தமிழர் பிரச்­சி­னைக்கு ஓர் விடிவை பெற்­றுக்­கொ­டுக்க தன்­னா­லான பங்­க­ளிப்பை மேற்­கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரி­வித்தார். 

இதே­வேளை, கேப்­பா­ப்பு­லவில் மக்கள் மேற்­கொண்­டு­வரும் காணி மீட்புப் போராட்டம் நான்கு வாரங்­களை எட்­டி­யுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என வின­விய போது, அதற்கு பதி­ல­ளித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், தமிழ் மக்கள் தமது நியா­ய­மான போராட்­டத்­திற்­காக குரல் கொடுத்து வரு­கின்­றனர். இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மிகுந்த கரி­சனை கொண்­டுள்­ளது. இது குறித்து பதில் பாது­காப்பு செய­லாளர் கிங்­ஸிலி பெர்­னாண்டோ மற்றும் முல்­லைத்­தீவு அர­சாங்க அதி­ப­ருடன் பேச்­சுக்­களை மேற்­கொண்டேன். மொத்­த­மாக 54 காணி உறு­திகள் தொடர்­பான விவ­ரங்கள் இரா­ணு­வத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 42 காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு அவற்றை உரிய மக்­க­ளுக்கு வழங்­கலாம் என்ற பரிந்­து­ரையை அர­சாங்க அதிபர் வழங்­கி­யுள்ளார். 

இந்­நி­லையில், மக்கள் தமது காணி­களை வழங்­கக்­கோரி இரவு பக­லாக மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நான் பதில் பாதுகாப்பு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஜனாதிபதி உத்தரவு வழங்கியதும் குறித்த மக்களுக்கு காணிகளை வழங்கலாம் என அவர் கூறினார். நான் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இன்று அல்லது நாளை அவரை சந்தித்து பேசக் கூடியதாகவிருக்கும். அந்த வகையில் முன்னேற்றம் ஏற்பட இடமுண்டு என் றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-26#page-1

  • தொடங்கியவர்

சம்மந்தனின் கருத்துக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் கண்டனம்

suresh-1.jpg
 
ஒட்டுமொத்த தமிழ் மக்களும்,  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசுக்கு ஜநா கால நீடிப்பு வழங்க கூடாது என்று இருக்கும்  போது சம்மந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்துக்கு   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை   மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை   திங்கள் மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் தெரிவிக்கையில்
 
ஒட்டுமொத்தமான த மிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள் எற்கனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க  மறுத்தவர்கள்  ஜநாவில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள்  இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப்போகின்றார்கள்.
 
இராணுவத்தை விசாரிக்கமுடியாது சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பிற்பாடு கால அவகாசம் எதற்கு? இது சம்மந்தனுக்கு விளங்கவேண்டும் எற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜநா இல்ங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.  பல மாகாண  உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள் எனவே சம்மந்தன் அவர்கள் இதனை விளங்கிகொண்டு உடனே  கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஜநாவுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது எனது கட்சி சர்ந்தும் தமிழ் மக்கள் சார்ந்தும  நான் முன் வைக்கும் கோரிக்கையாகும் எனத்தெரிவித்த அவர்
 
 
இலங்கை அரசாங்கம் தமதா உறவுகளை தேடித்தராது, இங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருகிறது,  என்பதனை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்  எனவேதான்  ஒரு சர்வதேச விசாரணைக்கு ஊடாக மாத்திரம்தான்   கண்டுபிடிக்க முடியும் அது மாத்திரம் மன்றி  உண்மைகள் வெளிக்கொண்வரப்படவேண்டும். ஆதாவது  காணாமல் போனவர்கள் எங்கிருகின்றார்கள் அல்லது இருகின்றார்களா இல்லையா அல்லது இல்லையென்றால்  அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா அவ்வாறு கொலை கொலை செய்யப்பட்டிருந்தால் யாரால் கொலை செய்யபட்டார்கள் என்ற உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் எனவேதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணை என்பது  மிக மிக  அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/archives/19365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.