Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டில் கைதாகி பிணையில் சென்றவர்களே தாவடியிலும் அட்டகாசம் -மீளவும் கைதாகி விளக்கமறியலில்

Featured Replies

வாள்வெட்டில் கைதாகி பிணையில் சென்றவர்களே தாவடியிலும் அட்டகாசம் -மீளவும் கைதாகி விளக்கமறியலில்
 
 
வாள்வெட்டில் கைதாகி பிணையில் சென்றவர்களே தாவடியிலும் அட்டகாசம் -மீளவும் கைதாகி விளக்கமறியலில்
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
 
யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம்| அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 8 மாதங்களாகத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ப்பட்டிருந்தனர். 
 
இந்நிலையில் குறித்த நபர்களின் பிணை தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணை மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த நபர்களுக்கு பிணை வழங்கினார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று க்கிழமை மாலை யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவதற்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் அவ்வீதியில் அடாவடியில் ஈடுபட்டனர். கடமையில் இருந்த பொலிஸார் இவர்களை வழிமறித்த நிலையிலும் அவர்கள் நிற்காமல் தப்பிச் சென்றனர். 
 
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணைகளிலும், அப்பகுதி மக்களின் சாட்சியங்களின் அடிப்படையிலும் ரொக்ஸ் ரீமின் முக்கியஸ்தர்களான செந்தூரன், தனு என்பவர்கள் பொலிஸாரால் நேற்றுக்கைது செய்யப்பட்டனர்.
.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் இன்று யாழ் நீதவான் நிதிமன்றில் நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட னர்.வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கு ம்படி உத்தரவிடடார்.

http://www.onlineuthayan.com/news/24475

  • தொடங்கியவர்

‘றொக்ஸ் ரீம்’ குழுவைச்சேர்ந்த செந்தூரன் – தனு – யாழில் மீண்டும் கைது:-

arrest_CI.jpg

யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘றொக்ஸ் ரீம்’ என அழைக்கப்படும் குழுவைச்சேர்ந்த செந்தூரன் மற்றும் தனு ஆகியோரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் யாழ். நீதவான் நிதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டபோது குறித்த நபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அண்மையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தார்கள் என பொதுமக்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/19561

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.