Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை: மங்களவிடம் நேரடியாக குற்றச்சாட்டு

Featured Replies

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இலங்கை மனித உரிமைகள் சட்டத்தரணியும், மனித உரிமைக்கும், அபிவிருத்திக்குமான நிலையத்தின் இணைப்பாளருமான திருமதி. மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தமக்கு திருப்தி இல்லை என்றும், இலங்கையின் நீதித்துறை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு ஏதேனும் சட்டத் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளீர்களா..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத் தரணிகளை ஈடுபடுத்துவது தொடர்பில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்களா..? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவ்வாறான எந்த சட்டத்தையும் நாம் கொண்டு வரவில்லை.

சட்ட ரீதியில் தீர்மானம் முன்னெடுப்பது தொடர்பில், உயர்மட்ட குழுக்கள் இருக்கின்றன என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் அவ்வாறு ஒரு சட்டத்தை கொண்டுவரும் போது வெளிநாட்டு நீதிபதிகள் இருந்தும் இல்லாமலும் குறித்த சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக அவர் பதிலளித்துள்ளார்.

 

 

 

 

http://www.tamilwin.com/politics/01/137443?ref=home

 

Edited by போல்

  • தொடங்கியவர்

ரவிராஜ் மற்றும் குமாரபுரம் படுகொலைகள்! ஐ.நாவில் தடுமாறிய இலங்கை முக்கியஸ்தர்கள்

கனடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் தொடுக்கப்பட்ட ரவிராஜ் கொலை வழக்கு மற்றும் குமாரபுரம் படுகொலையில், இலங்கை நீதித் துறையின் செயற்பாடுகளை கடுமையாக ஆட்சேபித்ததுடன் அதற்கான சரியான பதிலை வழங்குவதில், இலங்கை அரச தரப்பினர் பல சங்கடங்களுக்கு உள்ளானதை அவதானிக்க முடிந்தது.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல, அரசியல் யாப்புக் குழுவின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரெட்ன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதுவர் ரவிநாத் ஆரியசிங்க, ஓய்வு நில நீதிபதி, மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டத்தொடரில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/politics/01/137445?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.