Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மோகத்தில் மலையக பெண்கள்

Featured Replies

வெளிநாட்டு மோகத்தில் மலையக பெண்கள்

 

மலை­ய­கத்தில் இருந்து வெளி­நாட்­டிற்கு பணிப்­பெண்­க­ளாக செல்­வோரின் தொகை இன்னும் குறைந்­த­பா­டில்லை. வெளி­நாட்டு மோகம் என்­பது மலை­யகப் பெண்­க­ளி­டையே அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது. இதனால் பாத­க­மான விளை­வுகள் பலவும் மேலோங்­கு­கின்­றன என்­பதும் சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் இருந்து வெளி­நாட்­டிற்கு பணிப்­பெண்­க­ளாக செல்­வோரை நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்றும் மாற்று வாழ்­வா­தா­ரத்தை கண்­ட­டைய வேண்­டு­மென்றும் தற்­போது கோரிக்­கைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

மலை­யக பெண்கள்

மலை­யக பெண்கள் என்போர் இந்­நாட்டின் முக்­கிய பிர­ஜை­க­ளாக விளங்­கு­கின்­றனர். நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்­காக உச்­சக்­கட்ட பங்­க­ளிப்­பினை இவர்கள் வழங்­கு­கின்­றனர். இப்­பெண்கள் பல துறை­க­ளிலும் பங்­கேற்று நாட்டின் வரு­வாயை அதி­க­ரிக்கச் செய்து வரு­கின்­றனர். இவற்றுள் தேயிலைத் தொழிற்­துறை, ஆடைத் தொழிற்­துறை, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு என்­பன குறிப்­பி­டத்­தக்­க­ன­வாக உள்­ளன. தன்னை உருக்கிக் கொண்டு இப்­பெண்கள் நாட்டின் உயர்­வுக்­காக பாடு­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இந்­நி­லையில் தேயிலை தொழிற்­து­றையில் ஈடு­பட்டு வரும் பெண்­களின் நிலை­மைகள் குறித்து நோக்­கு­கின்­ற­போது இது மிகவும் பரி­தா­ப­க­ர­மாக உள்­ளது. கூடிய நேரம் வேலை செய்து மிகவும் குறைந்­த­ள­வி­லான ஊதி­யத்­தி­னையே இவர்கள் பெற்­றுக்­கொள்­கின்­றனர். உழைப்­புக்­கேற்ற ஊதியம் இல்­லாத நிலையில் இப்­பெண்­களின் வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றது. கம்­ப­னி­யி­னரின் கெடு­பி­டிகள் பெண் தொழி­லா­ளர்கள் மீது சற்று அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. ஒரு நாளைக்கு பறிக்க வேண்­டிய தேயிலைக் கொழுந்தின் அள­வினை கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கமும் எதேச்­சா­தி­கார ரீதியில் அதி­க­ரித்­துள்ள நிலையில், இதனால் பெண் தொழி­லா­ளர்கள் கூடி­ய­ளவு சிர­மத்­திற்கு உள்­ளாகி வரு­கின்­றனர்.

பெண்­களின் போஷாக்கு மற்றும் சுகா­தார நிலை­மைகள் பெரிதும் பின்­ன­டைவு கண்­டுள்­ளன. இதனால் பல­வி­த­மான நோய்­க­ளுக்கும் இவர்கள் ஆளாகி வரு­வதும் தெரிந்த விட­ய­மாக உள்­ளது. கர்ப்­பிணிப் பெண்­களின் குறை போஷாக்கு நிலை­மைகள், சேய்­களின் நலன்­க­ளிலும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. தேயிலை மலை­க­ளிலும் உயர்­வான இடங்­க­ளிலும் பெண்கள் தொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் போது பல்­வேறு உடல் உபா­தை­க­ளுக்கும் உள்­ளா­வ­தாக ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். இத­ன­டிப்­ப­டையில் மலைச்­ச­ரி­வு­களில் பெண்கள் ஏறி இறங்கி தொழில் புரி­வதன் கார­ண­மாக பிர­சவம் தொடர்­பான பல்­வேறு உடற்­கோ­ளா­று­க­ளினால் துன்­பப்­ப­டு­வ­தாக 1995 இல் வெளி­வந்த நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மலை­யகம் குறித்த இந்த நூலில் மேலும் பல விட­யங்­களும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. ஈரக் கால­நி­லையில் நாள் முழு­வதும் வேலை செய்யும் பெண்கள் தடிமல், இருமல் ஆகிய நோய்­க­ளினால் எப்­போதும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இரும்­புச்­சத்து குறைவு, இரத்த அழுத்தம், பெரு­விரல், ஆட்­காட்டி விரல் புண்­ணாதல், தோல்­பட்டை, முது­கெ­லும்பு வலி, காலில் ஆணி ஏற்­படல் போன்ற பல­வற்­றுக்கும் தேயிலை தோட்­டத்தில் தொழில் புரியும் பெண்கள் உள்­ளா­வ­தாக நூல் மேலும் வலி­யு­றுத்­து­கின்­றது. பெண்கள் சரா­ச­ரி­யாக 9 முதல் 10 மணி நேர வேலை செய்­வதும் ஓய்­வின்­மையும் போஷாக்­கின்­மையும் கார­ண­மா­கவே இத்­த­கைய நோய்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆடைத் தொழிற்­து­றையில் மலை­யக பெண்­களில் அதி­க­மானோர் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இப்­பெண்­களும் கூட தொழில் ரீதி­யாக பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றனர். வேலை நேர அதி­க­ரிப்பு மற்றும் பணியில் உள்ள சிர­மங்கள் என்­ப­ன­வற்றின் கார­ண­மாக இப்­பெண்கள் பல­வி­த­மான நோய் நொடி­க­ளுக்கும் ஆளாகி வரு­கின்­றனர். ஊதிய ரீதி­யிலும் திருப்தி கொள்ள முடி­யாத ஒரு நிலை­மையே வெளிப்­ப­டு­கின்­றது.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புத்­துறை என்­பது இன்று எமது நாட்­டிற்கு கூடு­த­லான வரு­மா­னத்தை ஈட்டித் தரு­கின்ற ஒரு துறை­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. கூடு­த­லான நபர்கள் வெளி­நாட்டு தொழிலில் மோகம் கொண்டு பல­வித தொழில்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். வரு­டா­வ­ருடம் வெளி­நாடுகளுக்கு செல்­வோரின் தொகையில் அதி­க­ரித்த நிலை­மை­யையே காண முடி­கின்­றது. 2011 ஆம் ஆண்டில் இரண்டு இலட்­சத்து 62 ஆயி­ரத்து 961 பேர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்காக சென்­றி­ருந்­தனர். இவர்­களில் 68 ஆயி­ரத்து 552 பேர் சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றி­ருந்­தனர். ஏனை­யோர்­களில் 52 ஆயி­ரத்து 743 பேர் கட்­டா­ருக்கும், ஐம்­ப­தா­யி­ரத்து 624 பேர் குவைத்­துக்கும், 39 ஆயி­ரத்து 320 பேர் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கும், 51 ஆயி­ரத்து 722 பேர் ஏனைய நாடு­க­ளுக்கும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காக சென்­றி­ருந்­தனர். இதே­வேளை பால் வகை­யின்­படி ஒரு இலட்­சத்து 36 ஆயி­ரத்து 307 ஆண்­களும் ஒரு இலட்­சத்து 26 ஆயி­ரத்து 654 பெண்­களும் தொழில்­வாய்ப்பு கருதி வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றி­ருந்­தனர். 2012 இல் இலங்­கை­யர்­க­ளுக்கு உரிய வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புகள் அதி­க­ரித்­த­மையின் மூலம் நாட்­டிற்­கான தொழில்­வாய்ப்பின் முக்­கிய மூல­மா­கவும் வெளி­நாட்டு நாணய உட்­பாய்ச்­சலின் உறு­தி­யான மூல­மா­கவும் இது விளங்கி வரு­வ­தாக மத்­திய வங்­கியின் அறிக்கை குறிப்­பி­டு­கின்­றது. மேலும் 2012 இல் இலங்கை தொழி­லா­ளர்­க­ளுக்­கான முக்­கிய சந்­தை­யாக மத்­திய கிழக்கு நாடுகள் விளங்கி இருக்­கின்­றன. இந்­நா­டு­க­ளுக்கு தொழில் வாய்ப்­பிற்­காக சென்­ற­வர்கள் 2012 இல் மொத்த புலம்­பெ­யர்ந்­தோரில் 94.4 சத­வீ­தத்­திற்கு வகை கூறி இருந்­தனர். இது முக்­கி­ய­மாக வீட்டுப் பணிப்­பெண்­களை உள்­ள­டக்கி இருந்­தது. நான்கு மத்­திய கிழக்கு நாடு­க­ளான சவூதி அரே­பியா, கட்டார், குவைத் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் என்­பன சேர்ந்து 2011 இல் பதிவு செய்­யப்­பட்ட 80.3 சத­வீ­தத்­துடன் ஒப்­பி­டு­கையில் 2012 இல் மொத்த புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்கள் 84.3 சத­வீ­தத்­திற்கு வகை கூறி இருக்­கின்­றனர். சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­ற­வர்­களின் எண்­ணிக்கை முன்­னைய ஆண்­டிலும் பார்க்க 42.1 சத­வீத அதி­க­ரிப்பை காட்டி நின்­றது.

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான மொத்த வெளிச் செல்­லல்கள் 2014 இல் இரண்டு இலட்­சத்து 79 ஆயி­ரத்து 952 இற்கு 1.7 சத­வீ­தத்தால் சிறி­த­ளவில் அதி­க­ரித்­தது. மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு புலம்­பெ­யர்ந்த பெண்­களின் எண்­ணிக்கை குடும்பப் பின்­னணி அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தற்கு விதிக்­கப்­பட்ட கட்­டாய தேவைப்­பா­டுகள் கார­ண­மாக 2014 இல் மேலும் எட்­டா­யி­ரத்து 148 ஆல் வீழ்ச்­சி­ய­டைந்­தது. இது உரிய கவ­னிப்­பின்றி பெண் புலம்­பெ­யர்­வோரின் பிள்­ளை­களை தனி­யாக விட்டுச் செல்­வதால் ஏற்­படும் மனோ­தத்­துவ – சமூக செலவை குறைக்­கின்ற குறிக்­கோ­ளுடன் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இவ் வீழ்ச்சி சவூதி அரே­பியா, கட்டார், குவைத் போன்ற நாடு­க­ளுக்­கான வெளிச் செல்­லல்­களில் தெளி­வாக அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. மாறாக சவூதி அரே­பி­யா­வுக்­கான தேர்ச்­சி­யற்ற தொழில் நிலை வகைக்­கான பெண்­களின் வெளிச் செல்­லல்­களில் அதி­க­ரிப்பு அவ­தா­னிக்­கப்­பட்­டது. அபி­வி­ருத்­தி­களின் விளை­வாக பணிப்­பெண்கள் நீங்­க­ளான மொத்த வெளிச்­செல்­லல்கள் 8 சத­வீதம் கொண்ட குறிப்­பி­டத்­தக்க அதி­க­ரிப்பை பதிவு செய்­த­தாக மத்­திய வங்­கியின் அறிக்­கையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­க­ளிலும் கணி­ச­மான தொகை­யினர் வெளி­நாட்டு வேலை வாய்ப்­புக்கென்று எமது நாட்டில் இருந்தும் புலம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

வரு­டாந்தம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்காக செல்­வோரில் மலை­ய­கத்து பெண்­களின் தொகையும் அதி­க­ரிப்­பினை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது. உள்­ளூரில் வரு­மானம் பற்­றாக்­கு­றையை காரணம் காட்டி பல பெண்கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்­வ­தனை வழக்­க­மாக கொண்­டி­ருக்­கின்­றனர். கடந்த சில ஆண்­டு­களின் அடிப்­ப­டையில் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக செல்லும் பெண்­களின் தொகையை நோக்­கு­கின்­ற­போது அது பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. இதற்­கேற்ப 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக நான்கு இலட்­சத்து 51 ஆயி­ரத்து 897 பேர் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றி­ருந்­தனர்.

இவர்­களில் இரண்டு இலட்­சத்து 48 ஆயி­ரத்து 492 பேர் தாய்­மார்­க­ளாவர். 2008 ஆம் ஆண்டில் வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக ஒரு இலட்­சத்து ஒன்­ப­தா­யி­ரத்து 486 பேர் சென்­றி­ருந்­தனர். இவர்­களில் 40 ஆயி­ரத்து 665 பேர் தாய்­மார்­க­ளாவர். 2009 இல் பணிப்­பெண்­க­ளாக வெளி­நாடு சென்­றி­ருந்த ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 508 பேரில் 60 ஆயி­ரத்து 448 பேர் தாய்­மார்­க­ளாக இருந்­தனர். அண்­மைய ஆண்­டு­க­ளிலும் கணி­ச­மான தாய்­மார்கள் பணிப்­பெண்­க­ளாக வெளி­நா­டுகள் பல­வற்­றுக்கும் சென்­றி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது. வரு­டாந்தம் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக மலை­யக பெண்கள் பலர் செல்­லு­கின்ற நிலையில் இதனால் பல பாதக விளை­வு­களும் மேலோங்கி காணப்­ப­டு­வதும் நாம் அறிந்த விட­ய­மாகும்.

பாதக விளை­வுகள்

மலை­யக பெண்கள் தொழில் நிமித்தம் வெளி­நாடு செல்­வதன் கார­ண­மாக சம்­பந்­தப்­பட்ட பெண்­களும் அவர்தம் குடும்­பத்­தி­னரும் பாதக விளை­வு­களை சந்­தித்து வரு­கின்­றனர். குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்லும் சிலரின் வாழ்க்கை திசை­மா­றிப்போய் இருக்­கின்­றது. உழைப்பின் மூல­மாக பெரும் பணத்தை திரட்ட வேண்டும், குடும்­பத்தின் உயர்­வுக்கு வித்­திட வேண்டும் என்று கனவு கண்ட சில பெண்­களின் வாழ்க்கை கல்­ல­றையில் முடிந்­தி­ருக்­கின்­றது. சூடு வைத்தல், ஆணி அறைதல், சுடு­நீரை ஊற்றி கொடு­மைப்­ப­டுத்­துதல், அடி உதை என்று பல இன்­னல்­க­ளுக்கு மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில் புரியும் சில பெண்கள் உள்­ளாகி வரு­கின்­றார்கள். போதாக்­கு­றைக்கு எஜ­மா­னர்­களின் பாலியல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் இப்­பெண்கள் ஆளாக வேண்டி இருக்­கின்­றது. இப்­பெண்கள் எஜ­மா­னர்­களின் வீடு­களில் இருந்தும் வெளி­யேறி தஞ்சம் புகுந்­துள்ள சில இடங்­க­ளிலும் பாலியல் ரீதி­யான தொல்­லை­க­ளுக்கு உட்­ப­டு­வ­தாக ஏற்­க­னவே செய்­திகள் வெளி­யாகி இருந்­தமை தொடர்பில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். வெளி­நா­டு­க­ளுக்கு தொழில் வாய்ப்பு கருதி சென்ற சில பெண்­களின் இறப்­புகள் சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. தற்­கொலை செய்து கொண்­டார்­களா? அல்­லது வேறு விதத்தில் மரணம் சம்­ப­வித்­துள்­ளதா என்­றெல்லாம் சந்­தே­கங்கள் வலுப்­பெற்று காணப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையில் வெளி­நா­டு­ சென்­றுள்ள பல பெண்­களின் குடும்­பங்கள் கண்­ணீரில் தள்­ளா­டு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. பிள்­ளை­களின் கல்வி நிலை பாதிப்பு, சுகா­தார பாதிப்பு, போஷாக்கு பாதிப்பு சமூக வாழ்க்கை நிலை பாதிப்பு என்று பாதிப்­புகள் இன்­னு­மின்னும் இக் குடும்­பங்­களில் தொடர்ந்த வண்­ண­மா­கவே உள்­ளன. கண­வன்மார் பிள்­ளை­க­ளுக்­கு­ரிய பாது­காப்­பி­னையும் அன்­பி­னையும் வழங்­காது நெறி­த­வறி போன சம்­ப­வங்­களும் அநே­க­மாகும். இதனால் பிள்­ளை­களின் நிலைமை மென்­மேலும் சிக்­க­லுக்கு உள்­ளா­கின்­றன. பெண்கள் வெளி­நாடு செல்லும் குடும்­பங்­களில் உள்ள பிள்­ளைகள் பலர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கின்­றனர். தந்­தையால், சகோ­த­ரனால், உற­வி­னர்­களால், நண்­பர்­களால், அய­ல­வரால் என்று பல நிலை­க­ளிலும் பிள்­ளைகள் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாகி வரு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இலங்­கையில் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களின் தொகை அதி­க­ரித்து வரு­கின்­றது. 2000ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் இரு­பத்து ஏழா­யி­ரத்து மூன்று சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக புள்ளி விப­ரங்கள் வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றன. 2007 இல் இரண்­டா­யி­ரத்து 624 சிறு­வர்­களும், 2008 இல் மூவா­யி­ரத்து 196 சிறு­வர்­களும், 2009 இல் இரண்­டா­யி­ரத்து 954 சிறு­வர்­களும், துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கின்­றனர். 2010 இல் நான்­கா­யி­ரத்து இரு­பது சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்­குள்­ளாகி இருந்­தனர். சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களின் அதி­க­ரிப்­பிற்கு தாய் வெளி­நாடு சென்­றுள்­ள­மையும் பிர­தா­ன­மான ஒரு கார­ண­மாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தந்­தையின் பொறுப்­பற்ற நடத்தைக் கோல­மா­னது துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு மேலும் வலு­சேர்க்­கின்­றது.

பொருத்­த­மற்ற வயதில் திரு­ம­ணங்கள்

திரு­ம­ணத்­திற்கு பல பொருத்­தங்கள் இருக்க வேண்டும் என்று மூத்தோர் கூறுவர். இந்த வகையில் திரு­ம­ணத்­திற்கு உரிய பொருத்­த­மான வய­தெல்­லையும் அவ­சி­ய­மாகும். எனினும் தாயார் வெளி­நாடு சென்­றுள்ள குடும்­பங்­களில் உள்ள சில பிள்­ளைகள் உரிய திரு­மண வய­தெல்­லையை அடையும் முன்னர் திரு­மண பந்­தத்தில் நுழைந்து விடு­வ­த­னையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. அன்பு, காப்பு இவற்­றுக்­காக ஏங்கும் இப்­பிள்­ளைகள் தனக்­கென்று ஒரு துணையைத் தேடிக் கொள்­வதன் மூல­மாக இவற்றை பெற்றுக் கொள்­ளவும் முனை­கின்­றனர். உடல் இச்­சைகள் உந்­தித்­தள்­ளு­கின்ற நிலையில் இன்னும் சில பிள்­ளைகள் திரு­மண பந்­தத்தை தேர்ந்­தெ­டுத்துக் கொள்­கின்­றனர். எனினும் மோகம் குறைந்­ததும் திரு­மண பந்தம் இவர்­க­ளுக்கு கசக்­கின்­றது. இதன் வெளிப்­பா­டாக நீதி­மன்­றங்கள், வழக்­குகள், விவா­க­ரத்­துகள் என்று நாட்கள் கழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. உரி­ய­ வ­ய­துக்கு முன்­ன­தாக திரு­ம­ணங்­களை செய்து கொள்­வதன் கார­ண­மாக மேலும் பல்­வேறு வித­மான பாதக விளை­வு­களும் ஏற்­ப­டு­வ­தனை நீங்கள் நன்­க­றிந்­தி­ருப்­பீர்கள்.

விரி­சல்கள்

பெண்கள் தொழில்­வாய்ப்பு கருதி வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லு­கின்ற நிலையில் பல நிலை­க­ளிலும் விரி­சல்கள் ஏற்­ப­டு­கின்­றன. இது தொடர்­பான ஒரு பன்­முக பார்­வையை நாம் செலுத்­து­கின்­ற­போது அது பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. குடும்­பத்­துக்­குள்­ளே­யான விரி­சல்கள், குடும்­பங்­க­ளுக்கு இடை­யே­யான விரி­சல்கள், குடும்­பத்­துக்கும், சமூ­கத்­துக்கும் இடை­யே­யான விரி­சல்கள் மற்றும் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான விரி­சல்கள் எனப்­ப­லவும் ஏற்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இத்­த­கைய விரி­சல்­களின் கார­ண­மாக உயி­ரி­ழப்­புகள் கூட ஏற்­பட்­டி­ருப்­ப­த­னையும் நான் இங்கு கூறி­யாதல் வேண்டும். உடை­மைகள் பல­வற்­றுக்கும் சேதங்கள் ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் விரிசல் நிலைகள் வித்­திட்­டி­ருக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது.

போலி முக­வர்கள்

வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­களை அனுப்­பு­வதில் போலி முக­வர்கள் சிலரும் ஈடு­பட்டு வரு­வ­தனை பலரும் கண்­டித்துப் பேசி இருக்­கின்­றனர். போலி முக­வர்­க­ளிடம் சிக்­கிய சிலர் அவர்­களின் ஆசை வார்த்­தை­க­ளுக்கு கட்­டுப்­பட்டு உள்­ள­தையும் இழந்த சம்­ப­வங்கள் அதி­க­மாக இடம்­பெற்­றுள்­ளன. போலி­யான முக­வர்­களை நாடி போலி­யான உடன்­ப­டிக்­கையின் மூலம் தமது வாழ்­வினை இத்­த­கையோர் சீர­ழித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே சுய­நலம் மிக்க போலி முக­வர்கள் விட­யத்­திலும் மக்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும்.

வெளி­நாடு செல்லும் பெண்கள் குறித்து   சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் சோபனா தேவி  

மலை­யக பெண்கள் சிலர் வாழ்க்­கையை வள­மாக்கிக் கொள்­வ­தற்­காக வெளி­நா­டு­க­ளுக்கு செல்­கின்­றனர். எனினும் இதனால் தீமைகள் பலவும் விளை­வ­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் திரு­மதி. சோப­னா­தேவி இரா­ஜேந்­திரன் குறிப்­பி­டு­கின்றார். மேலும், அவர் இது­பற்றி குறிப்­பி­டு­கையில், மலை­யக பெண்கள் பணிப்­பெண்­க­ளாக வெளி­நாடு செல்­வதன் கார­ண­மாக நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி ஏற்­ப­டு­கின்­றது. வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காக நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 803 பேர் பய­ண­மா­வ­தாக 2013 ஆம் ஆண்டில் வெளி­யான தகவல் ஒன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் நாட்­டி­லுள்ள சுமார் இரு­பது சத­வீ­த­மான குடும்­பத்­தினர் வெளி­நாட்டு வரு­மா­னங்­களை பெறு­ப­வர்­க­ளாக இருப்­ப­துடன், வருடம் ஒன்­றுக்­கான தேறிய சரா­சரி சம்­பாத்­தியம் ரூபா இரண்டு இலட்­சத்து எண்­ப­தா­யிரம் ஆகும். நாட்டின் பிர­தான அந்­நியச் செல­ாவணி சம்­பாத்­தி­ய­மாக காணப்­ப­டு­கின்ற வெளி­நாட்டு ஊழி­யர்­களின் வரு­மானம் 2005 இல் காணப்­பட்ட ரூபா 198 பில்­லி­யனில் இருந்து 2013 இல் ரூபா 827.6 பில்­லியன் வரை அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. 2013 இல் மொத்த ஊழியப் படையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு இரு­பது சத­வீ­தத்தை பதிவு செய்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

2013 ஐ தொடர்ந்து 2014, 2015, 2016 ஆம் ஆண்­டு­க­ளிலும் வெளி­நாட்டு ஊழி­யர்­களின் வரு­மானம் நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்டில் கணி­ச­மான ஒரு வகி­பா­கத்­தினை கொண்­டி­ருக்­கின்­றது. இந்த வகையில் மலை­யக பெண்­களும் வெளி­நாடு சென்று உழைத்து நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு வித்­திட்டு வரு­கின்­றனர்.

எனினும் குடும்ப நிலை­மையை பொறுத்­த­வ­ரையில் இன்னும் குறிப்­பி­டத்­தக்க வளர்ச்சி பல குடும்­பங்­களில் இடம்­பெ­ற­வில்லை. குறு­கிய கால சுக­போ­கங்­களை சில குடும்­பங்கள் அனு­ப­விக்­கின்­றன. காலப்­போக்கில் இத்­த­கைய குடும்­பங்­களும் வறு­மையில் சிக்கி அல்­லல்­ப­டு­கின்­றன. மலை­யக பெண்கள் தேயிலை, ஆடைத் தொழில், வெளி­நாட்டுத் தொழில் என்­ப­வற்றில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்­களின் உழைப்பு மிகவும் அதி­க­மாக உள்­ளது. வெளி­நாடு செல்லும் பெண்கள் உழைத்­த­னுப்பும் பணத்­தினை பல கண­வன்மார் ஊதா­ரித்­த­ன­மாக செல­வ­ழித்து வரு­கின்­றனர். எந்த வித சிந்­த­னையும் தூர­நோக்கும் இல்­லாத நிலை­யி­லேயே செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. வெளி­நாட்டு தொழி­லுக்­காக செல்லும் மலை­யகப் பெண்கள் எதிர்­நோக்­குகின்ற பிரச்­சி­னைகள் அநே­க­மாகும். பல பிரச்­சி­னைகள் வெளித்­தெ­ரி­வ­தில்லை. நவீன அடி­மைகள் என்ற நிலையில் வெளி­நாட்டு தொழி­லுக்­காகச் செல்லும் சில பெண்­களின் நிலைமை ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றது. உழைக்கக் கூடிய வயதில் வெளி­நாட்­டி­லி­ருந்து ஒன்­றுமே கையில் இல்­லா­த­வர்­க­ளாக சிலர் நாடு திரும்­பு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இன்னும் சில பெண்கள் தான் உழைத்­த­னுப்­பிய பணம் மற்றும் பொருட்கள் எதுவும் இல்­லாத நிலை­மையில் விரக்­தி­யுடன் மீண்டும் வெளி­நாடு நோக்கி பய­ணித்து வரு­கின்­ற­மை­யையும் குறிப்­பிட்­டாதல் வேண்டும்.

வெளி­நாடு செல்லும் பெண்கள் உள்­நாட்டு உழைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தோட்­டப்­ப­கு­தி­களில் வளங்கள் பலவும் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. இவ்­வ­ளங்­களை முறை­யாக பயன்­ப­டுத்­து­வதன் மூல­மாக உள்­நாட்டில் உற்­பத்தி மற்றும் வரு­வாய்க்­கான ஒரு களத்­தினை பெண்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு போன்ற துறை­களில் கவனம் செலுத்­துதல் வேண்டும். இன்று கிரா­மத்து பெண்­களை எடுத்துக் கொண்டால் அப்­பெண்கள் வரு­வாயின் நிமித்தம் பல வித­மான தொழில்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இதனை மலை­யகப் பெண்கள் ஒரு முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்ளல் வேண்டும். அர­சாங்கம் இன்று பல்­வேறு தொழில் முயற்­சி­களை மேற்­கொள்ள பயிற்­சி­க­ளையும் ஏனைய உத­வி­க­ளையும் வழங்கி வரு­கின்­றது. மலை­யகப் பெண்­களில் சிலர் இத்­த­கைய பயிற்சி நெறி­களில் பங்குக் கொண்டு ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் பெற்று கொள்­கின்ற போதும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தயக்கம் காட்­டியே வரு­கின்­றனர். முழு­மை­யான பயிற்சி நெறியில் ஈடு­ப­டாது இடை­ந­டுவில் பெண்கள் திரும்பி வரு­வதும் உண்டு. உட­னடி வரு­மா­னத்தை எதிர்­பார்க்­கின்ற இப்­பெண்கள் ஆலோ­சித்து நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

வெளி­நாடு என்ற மாயையில் இருந்தும் பெண்கள் விடு­பட வேண்டும். இப்­பெண்­களை சரியாக வழிநடத்த வேண்டும். மலையக அறிவியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள், தொழில் ரீதியான ஆலோசனையையும் வழிகாட்டல்களையும் உரியவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று தொழிலாளர்களுக்கு வழங்குதல் வேண்டும். இதிலிருந்தும் அவர்கள் பின்னடித்துவிடுதல் கூடாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருக்கிறது . இத்தகைய ஆற்றல்களை ஒவ்வொரு பெண்ணும் சரியாக இனங்கண்டு கொள்ளுதல் வேண்டும். அதற்கேற்ப தமது வாழ்க்கையினை சிறப்புடன் அமைத்துக் கொள்ளுதலும் வேண்டும். இதனை விடுத்து வெளிநாட்டு மோகத்தில் அலைந்து திரிவதால் எவ்விதமான சாதகமான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பதை விளங்கிச் செயற்படுதல் வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்

பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வலியுறுத்தியிருந்தன. இதனால் ஏற்படும் பாதக விளைவுகளையும் சுட்டிக் காட்டி இருந்தன. எனினும் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் தொகையில் எதிர்பார்த்த அளவு வீழ்ச்சி நிலைமையை காணமுடியவில்லை.

இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற மகளிர் தின விழாவில் உரையாற்றுகையில், "மலையகத்தில் இருந்து வெளி நாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேயிலை ஏற்றுமதி வருமானம் இன்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வோர் அனுப்பும் பணமே இலங்கையின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தருகின்றது. மலையக பெண்களும் பணிப்பெண்களாகச் சென்று இதற்குப் பங்களிப்புச் செய்கின்றனர். ஆனால் வருமான மூலம் பல்வேறு சமூக உளவியல் சிக்கல்களைக் கொடுக்கின்றது.

எனவே வெளிநாட்டு பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம். மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைவோம் என்று திலகராஜ் தெரிவித்திருந்தார். இதற்கமைய மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுச் செல்லும் அவல நிலைமைக்கு முற்றுப் புள்ளி இடுதல் வேண்டும்.

துரைசாமி நடராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.