Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும்

Featured Replies

இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம்.

நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன.

பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன?

பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பெருகுவதை கட்டுப்படுத்துகிறன. அத்துடன் சமிபாட்டு செயற்பாடுகளும் , உடலின் நோய் எதிர்ப்பு செயற்பாட்டையும் சரியாக நடைபெற தூண்டுகிறன.

நுண்ணுயிர்கொல்லிகளின் பயன்பாடு

மனிதனை பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிர் கொல்லிகள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. இவற்றின் கண்டுபிடிப்பின் பின்பே பல தொற்று நோய்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன எனபது கவனத்திற்கு உரியது.

இவை மனிதனை மட்டுமன்றி மிருக வளர்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் மொத்த நுண்ணுயிர் கொல்லி பாவனையில் பாதிக்கும் மேற்பட்ட அளவு விலங்கு வேளாண்மைக்கும், பயிர் செய்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் நோயை நீக்க மட்டுமன்றி அவற்றின் வளர்ச்சியை கூட்டவும் விலஙகுணவுகளில் இவை பயன்படுத்தப்படுகிறன. ஸ்ரெப்றோமைசின் , ஒட்சி ரெற்ற சைக்கிளின் (streptomycin, oxytetracycline) ஆகியவை மரக்கறிகளிலும், பழங்ளிலும் பக்ரீரியாக்களினால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்தப்பயன் படுத்தப்படுகிறன.

மனிதன், விலங்குகளுக்கு மருந்தாக பயன் படுத்தபடும் நுண்ணுயிர் கொல்லிகளில் ஒருபகுதி உடலில் அனுசேப செயற்பாடுகளால் பிரிந்தழிவுக்கு உள்ளனாலும், பெரும்பகுதி மனித, விலங்கு கழிவுகளுடன் சூழலுக்கு வெளியேற்றப்படுகிறன.

கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் 12500 தொன் நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் பாவனை வரும் காலத்தில் அதிகரிக்கும். உடலியல் செயற்பாட்டால் பிரிந்தழிந்தவை பொக மிகுதியான பல ஆயிரம் தொன் நுண்ணுயிர் கொல்லிகள் சூழலுக்கு மனித / விலங்கு கழிவுகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளன. அண்மைய சோதனைகளின் படி இவற்றை நகர கழிவுகள், விவசாய கழிவுகள் என்பவற்றில் மீந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கழிவு பொருட்களில் மீந்திருக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆறுகள், நீர்தேக்கங்கள், நிலத்தடி நீர் நிலைகளை சென்றடைவதில் ஆச்சரியபட ஏதுமில்லை.

ஐக்கிய அமெரிக்க நாடுக்ளில் மட்டும் ஆறுகளில்: 170,750 miles, நீர் தேகங்களில் 2,417,801 acres , கண்டல் நிலங்களில் 1,827 square miles விவசாய நடவடிக்கையால் மாசாக்கம் அடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறன. ( இக்கணிப்பு தனியே நுண்ணுயிர் கொல்லி மாசாக்கத்தை மட்டும் கருதவில்லை. ஆனால் விவசாய நடவடிக்கை எனும் போது அதற்குள் நுண்ணுயிர் கொல்லிகளின் மாசாகமும் அடங்கும்.)

இவை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறன.

இயற்கை சூழலில் பல்வேறு பக்ரீரியாக்கள் ஒன்றாக காணப்படுகிறன. இவை ஒரு சமனிலையை தமக்குள் பேணி வருகிறன. சில நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தமக்கு பொட்டியான நுண்ணங்கிகளை அழித்து தாம் சூழலில் நிலைத்திருக்க முயற்சிக்கும். அதே நேரம் மற்றைய நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை செயல் இழக்க செய்யும் பொருட்களை சுரந்து அவற்றில் இருந்து தப்பிவாழ முயற்சி செய்யும். இயற்கையில் இது ஒரு சமநிலையில் பேணப்படுவதால் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் கழிவுகள் மூலம் சூழலை அடையும் நுண்ணுயிர் கொல்லிகள் இச்சமனிலையை குழப்பி, நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு உள்ளவை போக ஏனைய நுண்ணங்கிகளை அழிக்கிறன. இதனால் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பான நுண்ணங்கிகள் அசாதாரணமாக பெருக்கமடைய ஆரம்பிக்கிறன.

இவற்றில் மனிதனுக்கு நோய் விளைவிக்கும், நோய் விளைவிக்காத நுண்ணங்கிகளும் அடங்கும். இவ்வகை பக்ரீரியாக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பெருக்கம் அடைந்தாலும் ( அதாவது நுண்ணுயிர் கொல்லிகள் கழிவகற்றப்படும்/ மாசாக்கப்படும் இடங்கள்) இலகுவில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு காற்று, நீர், உணவு, விலங்குகள், மனிதன் மூலம் கடத்தப்படக்கூடியவை.

உதாரணமாக

Cefotaxime எனும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு எதிராக தொழிற்படும் நொதியங்கள் (Enzyme) Cefotaximases (CTX-M என்ற குறிட்டு பெயரை கொண்டவை) உற்பத்தி செய்கின்ற நுண்ணங்கிகள் பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் CTX-M 15 எனுன் குறியீட்டு பெயர் உடைய நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் 1999 ஆண்டு இந்தியாவின் புது டெல்லியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பாட்ட நோயாளிகளில் முதன் முதல் கண்டரறியப்பட்டன. இதற்கு 3 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் இதே நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் நோயளிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டாண்டு காலத்துக்குள் இதே நொதியத்தை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகள் போலந்து, கனடா, பல்கேரியா, இத்தால், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், தாய்வான் என உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் ஆரம்பத்தில் CTX-M 14 எனும் நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகளே அதிகளவில் இருப்பதாக அறியப்படிருந்தன. ஆனால் தற்போது CTX-M 15 ஐ சுரக்கும் நுண்ணங்கிகளின் அளவு வைத்திய சாலை நுண்ணங்கிகளில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக கருத்தில் எடுக்க வேண்டிய விடயம் இந்த நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான நொதியத்தை சுரப்பதற்கு காரணமான பரம்பரை அலகுகள் (Genes) ஒரு நுண்ணங்கியில் இருந்து இன்னுமொரு நுண்ணங்கிக்கு பிளஸ்மிட்டுக்கள் (Plasmids) எனும் பொருட்கள் மூலம் கடத்தப்படக்கூடியவை. இதனால் இவற்றை கொண்டிருக்காத சாதாரண நுண்ணங்கிகளும் இலகுவில் இவற்றை தமது பரம்பரை அலகுகளில் சேர்த்துகொண்டு நுண்ணுயிர் கொல்லிகளில் இருந்து தம்மை காத்துகொள்ள ஏதுவாகிறது.

இதனால் ஏற்படுக்கூடிய பாதிப்புக்கள்

மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தாத பக்ரீரியாக்களில் இருந்து இவ்வகையான பரம்பரை அலகுகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்களுக்கு கடத்தப்படலாம். இவ்வாறு நிகழும் போது இப்பக்ரீரியாக்கள் சாதாரணமாக பாவிக்கும் நுண்ணுயிரி கொல்லிகளுக்கு கட்டுப்படாது உடலில் பெருகி கொள்ளகூடிய சூழல் ஏற்படும்.

Staphylococcus aureus, Mycobacterium tuberculosis, Escherischia coli நோய் விளைவிக்கும் சில பக்ரீரியாக்கள் இவை நுண்ணுயிர் கொல்லிக்கான எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன.

இவ்வாறு ஏற்கனவே இருந்த நுண்ணுயிர் கொல்லிகளுக்கு கட்டுப்படாத நுண்ணங்கிகள் பெருக்கத்தொடங்கியதால் 1ம் ,2ம், 3ம் 4ம் என பல சந்ததி?? (Generation) நுண்ணுயிர் கொல்லிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

ஆனால் என்ன இவற்றுக்கும் எட்டிக்கு போட்டியாக பக்ரீரியாக்களும் நொதியங்களை உருவாக்கிய வண்ணம் தான் இருக்கிறன.

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இவ்வகை பக்ரீரியாக்கள் (எதிர்புள்ள) மனித குடல்களிலும் காணப்படுகிறன. ஒருவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்வாராக இருந்தால அவர் பயணம் செய்யும் அனைத்து நாடுகளிலும் இவ்வகை பக்ரீரியாக்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு தான் தன் நாட்டுக்கு திரும்புவார்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் பயனாக கழிவு நீரை சுத்திகரிக்குக் புதிய படிமுறைகளின் மூலம் இன் நுண்ணுயிர் கொல்லிகளை அகற்ற முடியும் என அறியப்பட்டுள்ளது.

இம்முறை உலக நாடுகளில் பாவனைக்கு வர எவ்வளவு நாட்கள் எடுக்கும், பொதுவாக இவை மனித, குடிசார் கழிவு நீரே சுத்திகரிப்புக்கு உடபடுத்தப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிப்புக்கு உட்படாது நீர் நிலைகளை அடையும் கழிவு நீர், அபிவிருத்தி அடந்து வரும் நாடுகளில் எந்த பரிகரிப்புமே சரியாக நடைபெறாமல் அகற்றப்படும் கழிவு நீர் என்பவை எல்லாம் பிரச்சனைக்குரிய விடயங்களாகவே இருக்க போகிறன.

உசாத்துணை, படங்கள்:

http://earthwatch.unep.net/emergingissues/...cresistance.php

http://www.tufts.edu/med/apua/Ecology/EIA.html

http://www.epa.gov/agriculture/ag101/impacts.html#table1

http://www.dhushara.com/book/genes/genaug/antibio.htm

பிரதியிடப்பட்டது ---->

http://viriyumsirakukal.blogspot.com இருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.