Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி

Featured Replies

அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி

 
Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016) Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016)
singer-league-2017-728.jpg

இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி அவுஸ்திரேலியாவின் முன்னனி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் நாளை (17.04.2017) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகின்றார்.

யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்த இவர் மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை வலைபந்தாட்ட அணியின் நட்சத்திரமாக உருவெடுத்தார்.

உலகின் முதல்தர வலைபந்தாட்ட வீராங்கனையான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் நாளை அவுஸ்திரேலியா நோக்கி விளையாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவரது முகாமையாளர் கோபிநாத் அவர்கள் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு வலைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் சிறந்த ஷூட்டர் (Shooter) விருதினைப் பெற்ற தர்ஜினி, கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை தேசிய அணி சார்பாக எந்தவொரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 10 வருடங்களிற்கு மேலாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக ஆடிவந்த தர்ஜினி கடந்த ஒரு வருடகாலமாக போட்டிகளில் பங்கெடுக்காது விலகியிருந்தமை இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் பெரும் சவாலாக இருந்த அதேவேளை பலரை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும் தற்போதைய புருனே அணியின் பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளரான கோபிநாத் ஆகியோரினது முயற்சினால் தர்ஜினிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இவரினுடைய இவ் ஆறு மாதகால பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவின் மெல்பெர்னிலிருந்து சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் (City west falcon) அணி மற்றும் சென். அல்பன்ஸ் வலைபந்தாட்டக் கழகம் (St. Albans Netball club) ஆகியவற்றிற்காக விளையாடவுள்ளார். அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும் பயிற்றுவிப்பாளருமான நிக்ஹோலி றிச்சர்ட்சனின் பயிற்றுவிப்பின் கீழ் தன்னையும் தயார்படுத்தவுள்ளார்.

மேற்படி சுற்றுப்பயணம் தொடர்பாக தர்ஜினி சிவலிங்கம் Thepapare.com இற்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையில் “நான் அவுஸ்திரேலியாவின் முதல்தர கழகத்திற்கு விளையாட இருப்பதையிட்டும், அங்கு சிறந்த நிபுணரின் கீழ் பயிற்றுவிக்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த திலகா ஜினதாஸ, கோபிநாத் மற்றும் ஆலோசனை வழங்கிய ஏனையோரிற்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னுடைய இலக்கு எப்போதும் இலங்கையின் வலைபந்தாட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதேயாகும். நான் ஆறு மாதகால பயிற்சியின் பின்னர் தாயகம் திரும்பி இலங்கை தேசிய அணிக்கு என்னால் இயலுமான பங்களிப்பை வழங்குவேன்” என உறுதியுடன் தெரிவித்தார்.

“இலங்கையிலிருந்து ஒரு வீராங்கனை வலைப்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களாக வலம்வரும் அவுஸ்திரேலிய கழகம் ஒன்றிற்கு விளையாடுவது இதுவே முதல் தடவை. தர்ஜினிக்கு தன்னார்வலர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இது போன்ற வாய்ப்பினை எதிர்காலத்தில் ஏனையோரிற்கும் உருவாக்கிக்கொடுக்க இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வேளை தர்ஜினிக்கு இலங்கை வலைபந்தாட்டத்தில் உரிய இடம் வழங்கும் அதேவேளை, இலங்கையின் வலைபந்தாட்ட வளர்ச்சி தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்” என்றார் தர்ஜினியின் முகாமையாளர் கோபிநாத்.

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்த தர்சினி சிவலிங்கம்

 

அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்த தர்சினி சிவலிங்கம்

 

ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

இதற்கமைவாக தர்சினி அவுஸ்ரேலிய சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார்.

ஆறுமாத கால ஒப்பந்தஅடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான திலக்காக ஜெனதாச வழங்கியிருந்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகினறன.

http://tamil.adaderana.lk/news.php?nid=90593

  • தொடங்கியவர்

ஆஸியில் தனது முதல் போட்டியில் 65 கோல்கள் புகுத்தி அசத்தினார் தர்ஜினி சிவலிங்கம்

 

Dharjini

அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஜீ.எவ்.எல். வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யாட ஒப்­பந்­த­மா­கி­யுள்ள ஆசி­­யாவின் அதி உய­ர­மான வலை­ப்பந்­தாட்ட வீராங்­க­னையும் இலங்­கையின் நட்­சத்­தி­ர­மு­மான தர்­ஜினி சிவ­லிங்கம் தனது அறி­முகப் போட்­டியில் அபார ஆற்­றலை வௌிப்­ப­டுத்தி செய்ன்ற் அல்பன்ஸ் அணிக்கு மிகவும் அவ­சி­ய­மான வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்தார்.

செய்ன்ற் மேரிஸ் அணிக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஜீ. எவ். லீக் போட்­டியில் செய்ன்ற் அல்பன்ஸ் அணி 66 க்கு 53 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

அப் போட்­டியில் முழுத் திற­மையை ெவளிப்­ப­டுத்­திய 35 வய­து­டைய தர்­ஜினி சிவ­லிங்கம் தனி ஒரு­வ­ராக 65 கோல்­களைப் போட்டு அரங்கில் குழு­மி­யி­ருந்த பார்­வை­யா­ளர்­களை அசத்­தினார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் அவுஸ்­தி­ரே­லியா பய­ண­மான தர்­ஜினி சிவ­லிங்கம், அங்கு விக்­டோ­ரியா வலைப்­பந்­தாட்ட லீக் போட்­டியில் சிட்டி வெஸ்ட் பெல்கன்ஸ் அணிக்­காக விளை­யா­டு­கின்றார்.

தர்­ஜி­னியின் வலை­பந்­தாட்ட ஆற்றல் பற்றி எதி­ர­ணி­யான செய்ன்ற் மேரிஸ் பயிற்­றுநர் புறுஸ் வோல்ட்ரன் கூறு­கையில், தர்­ஜி­னியின் தெரி­வா­னது தமது அணியை திக்­கு­முக்­காட வைத்­து­விட்­டது என்றார்.

‘‘அவர் திற­மை­யாக விளை­யா­டக்­கூ­டிய ஆற்றல் மிக்­கவர். அவ­ரது விள­யைாட்­டா­னது போட்­டியில் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. இங்கு அனே­கரை அவர் வியக்­க­வைக்­கப்­போ­வது திண்ணம். மேலும் அவரது விளையாட்டால் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் போய்விட்டது’’ என ப்றுஸ் வோல்ட்ரன் மேலும் தெரிவித்தார்.

http://metronews.lk/?p=6606

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தர்ஜினியின் அறிமுகம் முன்னரே கிடைத்திருந்தால்

 
Tharjini Sivalingam (centre) with City West Falcons coach Marg Lind and Nicole Richardson. Picture Damjan Janevski Tharjini Sivalingam (centre) with City West Falcons coach Marg Lind and Nicole Richardson. Picture Damjan Janevski
singer-league-2017-728.jpg

உலகின் உயர்ந்த(208 cm) வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம், தான் வலைப்பந்தாட்டத் திடலினுள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றார்.

இலங்கையின் சிறந்த வலைப்பந்தாட்ட வீரங்கனையான இவர் தற்போது தனது புதிய கழக அணியான சிற்றி வெஸ்ர் பெல்கன்ஸ் (City West Falcons) அணியுடன் இணைந்து களத்தினுள்ளேயும், வெளியேயும் பல இலக்குகளை எட்டுவதற்கான முனைப்பிலுள்ளார்.

 

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்..

பெல்கன்ஸ் அணி தமது புதிய வீராங்கனையை விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக் (Victorian Netball League) சுற்றுத்தொடரின் முதற்சுற்றில் அறிமுகப்படுத்தியிருந்தது.

பெல்கன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க் லின்ட்அவுஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்றிருக்கும் தர்ஜினி  உண்மையிலேயே திறமையான வீராங்கனைஎன்றார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், உலகின் உயர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினிக்கு வாழ்க்கையானது அவ்வளவு எளிதானதாக அமைந்திருக்கவில்லை.

அது ஒரு நீண்ட கதை, அவர் உண்மையிலேயே தனது உயரம் காரணமாக பலத்த சிரமத்திற்குள்ளானதே அதிகம்.”

அவர் தனது இளமைக்காலத்தில் தனது உயரம் காரணமாக கேலிக்கைகளிற்கும், தொந்தரவிற்கும் உள்ளாகியுள்ளார். இன்றும் கூட இலங்கையிலுள்ள சிலர் அவரது உயரத்தைப்பார்த்து நகைத்துக்கொண்டே உள்ளனர்.”

தர்ஜினி தனது முன்னாள் பயிற்றுவிப்பாளரான திலகா ஜின்தாஸ, லின்ட் மற்றும் பெல்கன்ஸ்ஸின் துணை பயிற்றுவிப்பாளர் நிக்கோலி றிச்சர்ட்சன் ஆகியோருடன் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றின் போது மேற்கொண்ட கலந்துரையாடலினூடாகவே பெல்கன்ஸிற்கு விளையாடும் வாய்ப்புப்பெற்றார்.

கலந்துரையாடலினூடாகநாங்கள் தர்ஜினி இலங்கையில் விளையாடி தனது காலத்தினை வீணடிப்பதாக அறிந்தோம்என்றார் லின்ட்.

அதன் பின்னர் அவரை மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு அவுஸ்திரேலியாவில் எம்முடன் இணைந்து ஓராண்டு காலம் விளையாடுவதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தோம்.”

 

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட சர்வதேச வலைப்பந்தாட்ட தர வரிசைப்பட்டியலில்..

லின்ட்பெல்கன்ஸ் அணியின் பிரதான நோக்கம் தர்ஜினியை அடுத்த கட்ட சுற்றுத்தொடர்களிற்கு எடுத்துச்செல்வதாகும்என்றார்.

சண்கோர்ப் சுப்பர் வலைப்பந்தாட்ட(Suncorp Super Netball) தொடரில் வெஸ்ற் கோஸ்ற் ஃபீவர்(West Coast Fever) அணியானது, இப்பருவகால போட்டிகளிற்கு தமது அணிக்கு உயர்ந்த சூட்டரிற்கான(Shooter) தேவை ஏற்படின் இவரையே நாடவுள்ளது.

ஃபீவர் அணியின் துணை பயிற்றுவிப்பாளரான றிச்சர்ட்சன் அவர்களே, தர்ஜினியின் விஷேட பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார்.

லின்ட்தர்ஜினியை முடிந்தளவு  விரைவாக அவுஸ்திரேலிய முறைக்கு பழக்கப்படுத்தி, அவரை அடுத்த கட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவோம்என்றார்.

தர்ஜினி பெல்கன்ஸிற்கு விளையாடுவது அவரிற்கு மட்டும் நன்மை இல்லை, அவர் இலங்கை தேசிய அணிக்காக 10 வருடங்களிற்கு விளையாடியுள்ளார். சில காலங்களில் அணியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவ் அனுபவம் பெல்கன்ஸிற்கு பெரிதும் கைகொடுக்கும்.

தர்ஜினி 2011 உலக வலைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் சிறந்த சூட்டர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலைப்பந்தாட்ட சம்மேளனத்துள்ளான அரசியல் நிலமைகள் காரணமாக இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணிக்கு தர்ஜினி அண்மைக்காலமாக தெரிவுசெய்யப்படவில்லை.

அவர் தேசிய அணிக்கு மீண்டும் விளையாடுவதனை மிகவும் விரும்புகின்றார். அவ்வாறே, அவுஸ்திரேலியாவின் முதற்தர தொடரான சண்கோர்ப் சுப்பர் நெற்போல்(Suncorp Super Netball) தொடரிலும் விளையாடுவதற்கு ஆவலாகவுள்ளார்.

லின்ட் மற்றும் நிக்கோலி ஆகியோர் நான் அவர்களது கழகத்திற்கு(பெல்கன்ஸ்) விளையாடுவதனை விரும்பினர். எனக்கும் என்னை முன்னேற்றுவதில் விருப்பம் இருந்தது. ஆகவே, சம்மதம் தெரிவித்துவிட்டேன்என்றார் தர்ஜினி.

நான் எப்போதும் வலைப்பந்து விளையாடுவதையும், நட்பு வட்டத்தினை விஸ்தரித்துக்கொள்வதையும் விரும்புகின்றேன்.”

அவுஸ்திரேலியாவில் இருப்பது நன்றாகவிருக்கின்றது. நல்ல மனிதர்கள் நிறையவே இருக்கின்றனர்என தொடர்ந்தும் கருத்திடுகையில் குறிப்பிட்டார் தர்ஜினி.

 

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின்..

2012இல் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிற்கு எற்கனவே சென்றிருந்த தர்ஜினி, தற்போது அவுஸ்திரேலியா சென்றிருப்பது இரண்டாவது தடவையாகும்.

லின்ட், தர்ஜினிக்கு ஆரம்பகாலத்தில் அவுஸ்திரேலியாவில் இவ்வாறான வாய்ப்பினை ஏற்படுத்த முடியவில்லை என்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார். “அவரை 10 அல்லது 15 வருடங்களிற்கு முன் எவரும் கண்டுகொள்ளவில்லை, அவர் றொமெல்டா ஏய்க்கென் போன்று உருவாகியிருக்க வேண்டியவர்என்றார்.

தர்ஜினியை 35 வயதில் அறிமுகம் பெற்றதற்குப் பதிலாக 24 வயதில் யாராயினும் அறிமுகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தர்ஜினி மிகவும் வெட்கமான மனப்பாங்கினைக் கொண்டவர். தேசிய அணியில் விளையாடுவதற்கு ஆரம்பித்ததன் பின்னரே அவர் ஏனையோருடன் பழகுவதற்கு ஆரம்பித்திருந்தார்.

தனது திறனை மேம்படுத்திக்கொண்டு இலங்கை தேசிய அணிக்கு சேவையாற்றுவதற்காகவும், அவரது எதிர்காலம் சிறப்பானதாக அமையவும் Thepapare.comஇன் வாழ்த்துக்கள்!

http://www.thepapare.com

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...இன்னும் சாதிக்க வேண்டும்...அம்மாடியோவ் என்ன உயரம் இந்தப் பெண்:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.