Jump to content

வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8


Recommended Posts

பதியப்பட்டது

வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8

 
 

சாம்சங் #GalaxyS8

சாம்சங் மீம்ஸ் ஆல்பம்

ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம்.

இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். 

5 அல்லது 5.5 இன்ச் டிஸ்ப்ளேவே பார்த்தவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக, 5.8 இன்ச் டிஸ்ப்ளே தந்திருக்கிறார்கள். Curved edge ஸ்க்ரீன் என்பதால், முழுமையான ஒரு விஷுவல் அனுபவம் கிடைக்கும். ஹோம் பட்டனை திரைக்கு உள்ளே கொண்டு சென்றிருக்கிறார்கள். அதனால், அந்த இடமும் ஸ்க்ரீனுக்கு கிடைத்திருக்கிறது. எஸ்7 மாடலை விட எஸ்8 ஸ்க்ரீன் 18% அதிகம் என ஒரு கணக்கு சொல்கிறது சாம்சங்.

HDR என கிட்டத்தட்ட அனைத்து மொபைல்களும் சொல்லிக்கொண்டாலும், முதல் சர்டிஃபைட் HDR சாம்சங் எஸ்8 மாடல்தான். 
பின்பக்க கேமரா 12 மெகாபிக்ஸல். கேமரா தரத்தில் சாம்சங் எப்போதும் சறுக்கியதில்லை. எஸ்8ல் ஸ்பெஷல் கேமரா இருக்கும் டிசைந்தான். கொஞ்சம் கூட வெளியே எட்டிப்பார்க்காமல், ஸ்மூத் ஆக ஒட்டிக்கொண்டிருக்கிறது கேமரா. முன்புறம் 8 மெகாபிக்ஸல் கேமரா, செல்ஃபிக்கு நான் கியாரண்டி என்கிறது.

டூயல் கலர் எல்.ஈ.டி ஃப்ளாஷும் கலர்ஃபுல்லான வசதிதான். C-Type usbயும், ஃபாஸ்ட் சார்ஜிங் மோடும் இருப்பதால் “பட்டுனு ஏறும்.. சட்டுன்னு கிளம்பலாம்” வகை ஆட்களுக்கு டபுள் சந்தோஷம். 3000mAh பேட்டரி எப்படியும் ஒரு நாளை கடத்த உதவும் என எதிர்பார்க்கலாம். எஸ்8+ மாடலில் 35000 mAh பேட்டரி.  வயர்லெஸ் சார்ஜிங்கும் உண்டு என்பது இந்த மாடலை அதிகம் எதிர்பார்க்க செய்கிறது. 

ஜியோ ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ஜியோ சிம்மை சப்போர்ட் செய்யும் சாம்சங் எஸ்8. 

சாம்சங்

சாம்சங் மீம்ஸ் ஆல்பம்

ஐபோன் சிரி போல, சாம்சங் பிக்ஸ்பி என்னும் அஸிஸ்டெண்ட்டை களம் இறக்கியிருக்கிறது. மற்ற போட்டியாளர்களை விட பிக்ஸ்பி அறிவாளி என்கிறது சாம்சங். ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் பிக்ஸ்பி செய்து முடிக்குமாம். ஆனால், இன்று அறிமுகமாகும் மாடல்களில் வாய்ஸ் அஸிச்டெண்ட் வசதி இருக்காது என சொல்லியிருக்கிறார்கள். பின்னர், இது சேர்க்கப்படலாம் என்கிறார்கள் டெக் ஆர்வலர்கள்.

எஸ்8 மாடல் மொபைல்களோடு புதிதாக டாக்கிங் (Docking) சிஸ்டத்தையும் இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங். இந்த dock மூலம் மொபைலை எளிதில் டி.வியுடன் இணைக்கலாம். டி.வி திரைக்கு ஏற்ப டிஸ்ப்ளே அளவையும் மாற்றிக்கொள்ளலாம். 42 இன்ச் டி.வியில் ஆங்க்ரி பேர்டில் இருந்து எல்லாம் மொபைல் கேம்களையும் விளையாடலாம் என்பது வாவ் விஷயம் தானே?

இதுவரை வந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் எஸ்8 மாடலில்தான் சிறந்த ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் புதுமைகள் இருப்பதாக பெருமையுடன் சொல்கிறது சாம்சங். விலையும் அந்த ரேஞ்சில் தான் இருக்கும் என்பதற்கான லீடாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆரம்ப விலையே 55000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நோட் தந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல எழுந்து வருகிறது சாம்சங். இந்திய மார்க்கெட் அவர்களுக்கு என்ன தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/news/information-technology/86888-samsung-launches-galaxy-s8-today-in-india.html

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.