Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் மாற்றீடு சட்டம் : சுமந்திரன்

Featured Replies

மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் மாற்றீடு சட்டம் : சுமந்திரன்

 

 

(ஆர்.யசி)

Image result for எம். எ.சுமந்திரன் virakesari

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவர தயாராகும் சட்டத்தின் திருத்தங்கள் மிகவும் மோசமானதாகவும் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்தார்.  

தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியதுடன் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றங்களை கொண்டுவரும் வகையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/19745

  • தொடங்கியவர்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: தூற்றுகிறது த.தே.கூ
 

article_1493957941-MA.jpgபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கான அமைச்சரவை அங்கிகாரத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.  

கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால், நேற்று (04) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான அங்கிகாரத்தை, கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் எங்களிடம் எவ்விதமான ஆலோசனையும் பெறப்படவில்லை. 

இதன் மூலம் சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதுடன், துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.  

அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, சட்டபூர்வமான முறையில் பயங்கரவாத செயல்களைத் தடுக்கவும், தண்டிக்கவும் செய்யும் ஒரு சட்டபூர்வமான கட்டமைப்பை ஆதரிப்பதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசாங்கத்தின் சமீபத்திய முடிவின் மூலம் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். 

இதில் முன்மொழியப்பட்டுள்ளவை, சர்வதேச ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம் இல்லாமல் போவதுடன், அரசியல்வாதியாக இருந்த அசாத் சாலி, ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமையே இதன் மூலம் ஏற்படும். 

முன்மொழியப்பட்டுள்ள வரைவுக்கு அமைய, ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் போது, நீதவானினால், நீதி அடிப்படையில் சாதாரண உத்தரவை வழங்க இயலாதிருக்கும். 

சித்திரவதைகளைத் தடுத்தல், ஒப்புதல் வாக்குமூலத்தைக் கைவிடுவது போன்றவற்றுக்கு ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டன. 

சில நிபந்தனைகளின் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு தற்போதைய வரைவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதற்கு, அனுமதிக்கப்படும். 

பயங்கரவாதத்துடன் முற்றிலும் இணைக்கப்படாதவர்களின் உரிமைகள் மீறப்படுவதை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. 

சித்திரவதை செய்வதைத் தடுப்பதற்கும் காணாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்குமான அடிப்படைத் தேவைகளை வெளிப்படையாகவும் அவசரமாக மறுசீரமைக்கவும் அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். 

முன்மொழியப்பட்ட வரைவானது இலங்கையின் பாதுகாப்பு அல்லது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில்லை.  

அதற்கு மாறாக, குடிமகன் மீது கட்டுப்பாடற்ற நிறைவேற்று அதிகாரத்தின் வரம்பை அதிகரிக்க முயல்கிறது. சுதந்திரமான பேச்சு மற்றும் பன்முகத்தன்மையைத் தூண்டுவோரை, சித்திரவதை செய்வதற்குத் தேவையான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. 

எங்களுடைய குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்தும் வலியுறுத்துவதுடன். மரபுவழி முறையிலான கொடூரமான கடத்தல்கள் உள்ளிட்டவற்றை, தொடர்ந்து அனுமதித்துகொண்டிருக்கவும் முடியாது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

- See more at: http://www.tamilmirror.lk/196006/பயங-கரவ-த-எத-ர-ப-ப-ச-சட-டம-த-ற-ற-க-றத-த-த-க-#sthash.KLFE6k4Y.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய சட்­ட­மூலம் குறித்த கொள்கை

 

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள புதிய சட்­ட­மூ­ல­மா­னது பல்­வேறு சர்ச்­சை­களை தோற்­று­விப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லான புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் தொடர்­பான கொள்­கைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் அந்த சட்­ட­மூ­லத்தை வரை­வ­தற்­காக சட்­ட­வ­ரைவு திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இவ்­வாறு பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்­திற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள புதிய சட்­ட­மூ­ல­மா­னது மக்­களின் அடிப்­படை மனித உரி­மை­களை மீறு­வ­தாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள ஊட­கப்­பேச்­சா­ளரும் எம்.பி.யுமான சுமந்­திரன் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக கொண்­டு­வர தயா­ராகும் சட்­டத்தின் திருத்­தங்கள் மிகவும் மோச­மா­ன­தா­கவும், மக்­களின் அடிப்­படை சுதந்­தி­ரத்தைக் கூட பறிக்கும் வகை­யிலும் அமைந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார். அத்­துடன் தற்­போது அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்த திருத்­தங்கள் அர­சாங்­கத்­தினால் உட­ன­டி­யாக மீள் பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது, முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்­பி­லான கொள்கை மற்றும் நீதிப்­பொ­றி­முறைக்கு அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்ள அங்­கீ­காரம் தொடர்பில் ஆழ்ந்த அவ­தா­னத்தை செலுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

அமைச்­ச­ரவை பத்­தி­ர­மாக கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் ஊட­கங்­களில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­த­து­மான இந்த வரைவு பொறி­மு­றையின் கட்­ட­ளைகள் தொடர்பில் எம்­மோடு ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை. இந்த வரைவு பொறி­மு­றை­யா­னது, சிவில் உரி­மை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கவும் அரச பாது­காப்பு அமைப்­புகள் மீதான நீதித்­துறையின் கட்­டுப்­பாட்­டினை குறை­வ­டைய செய்­வ­தா­கவும், சாத்­தி­ய­மான துஷ்­பி­ர­யோ­கத்­திற்கும் துன்­பு­றுத்­த­லுக்கும் வழி­வ­குப்­ப­தாக அமைந்­தி­ருப்­ப­த­னை­யிட்டு நாம் அதிர்ச்சி அடைந்­துள்ளோம் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அத்­துடன் நாம் சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி, அடிப்­படை உரி­மை­களை உள்­வாங்­கி­யதும், சட்ட ஒழுங்­கிற்கு இசை­வா­னதும், சட்­டத்­திற்­குட்­பட்ட வகையில் பயங்­க­ர­வா­தத்தை தடுப்­பதும், தண்­டனை வழங்­கு­வ­து­மான ஒரு நீதிப்­பொ­றி­மு­றைக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளோம். இன்று வரை நாம் பாரா­ளு­மன்­றத்தில் ஆக்­க­பூர்­வ­மாக செயற்­பட்­டுள்ளோம். எனவே இந்த வரைவு தொடர்பில் அர­சாங்­கத்தின் திருப்­பத்­தி­னை­யிட்டு நாம் அமை­தி­யற்ற ஒரு சூழ்நிலைக்கு உள்­ளா­கி­யுள்ளோம். முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வா­தத்­திற்­கான வரை­விலக்­க­ண­மா­னது, சர்­வ­தேச மட்­டத்தில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­ககள் தொடர்­பி­லான எல்­லை­க­ளுக்கு அப்பால் செல்­லு­வதை நாம் அவ­தா­னிப்­ப­தோடு, மேலும் கடந்த காலங்­களில் மாற்று கருத்து கொண்ட அசாத் சாலி போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளையும் மற்றும் திஸ்­ஸ­நா­யகம் போன்ற ஊட­க­வி­ய­லார்­க­ளையும் தண்­டிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட பேச்சு சுதந்­தி­ரத்தின் மீதான கட்­டுப்­பா­டு­களுக்கு வலுச் சேர்க்கும் ஒன்­றாக காணப்­ப­டு­வ­தனையும் அவ­தா­னிக்­கிறோம் எனவும் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன் மேலும் பல்­வேறு உதா­ர­ணங்­களை எடுத்­து­ரைத்து தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு இந்த புதிய திருத்­தத்­திற்கு கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

இதே­வேளை கடந்த மாதம் இந்த பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்­பான திருத்தம் அமைச்­ச­ர­வையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன குறித்த கொள்கைத் திட்­ட­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமைய உரு­வாக்­கப்­பட்­ட­தா­கவும் ஐரோப்­பிய ஒன்­றியம் இதற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் கூறினார். மேலும் இந்தக் கொள்கைத் திட்­டத்தில் மிக அதி­க­மான விட­யங்கள் உள்­ளன. சட்­ட­மூலம் உரு­வாக்­கப்­பட்­டதும் அவற்றைப் பார்த்­துக்­கொள்ள முடியும். இன்னும் சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான கொள்­கைத்­திட்டம் மட்டும் உரு­வாக்­கப்­பட்­டது என்றும் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அந்த வகையில் தற்­போது இந்த புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு கொள்கைத் திட்­ட­மா­னது கடும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது. நடை­மு­றையில் இருக்­கின்ற பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது பாரிய விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக உள்­ள­துடன் பொது­மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் கொண்­டுள்­ளது. கடந்த யுத்­த­கா­லத்தில் இந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் இன்னும் விடு­விக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றமை இங்கு குறிப்­பிட்டு கூற­வேண்­டிய விட­ய­மாகும். இது பாரிய மனித உரிமை மீற­லா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் கடந்­த­காலம் முழு­வ­து­மாக இந்த சட்­டத்தை மாற்­றி­ய­மைக்­கு­மாறு சர்­வ­தேசத்­திலும் உள்­நாட்­டிலும் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்டும் வரு­கின்­றது. அத்­துடன் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் புதிய சட்­ட­மா­னது சர்­வ­தேச மனித உரிமை தரங்­களை மதிப்­ப­தா­கவும் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் அமை­ய­வேண்­டு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. உள்­நாட்டில் மனித உரிமை அமைப்­புக்கள், சிவில் அமைப்­புக்கள் என்பன நடை­முறை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றன. சர்­வ­தேச மட்­டத்­திலும் மனித உரிமை கண்­காணிப்­பகம், சர்­வ­தேச மன்­னிப்பு சபை என்­பன பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி வரு­கின்­றன.

மேலும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையும் இந்த விட­யத்தை வலி­யு­றுத்தி வரு­வ­துடன் அங்கு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­க­ளிலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்ட நீக்­க­மா­னது முக்­கிய பரிந்­து­ரை­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி இலங்­கைக்கு விஜயம் செய்து அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருக்­கின்ற ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை பிர­தான பரிந்­து­ரை­யாக முன்­வைத்­துள்­ளனர். இந்த நிலை­யி­லேயே தற்­போது அர­சாங்கம் நடை­மு­றையில் இருக்­கின்ற பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. ஆனால் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்­திற்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்ள கொள்கைத் திட்­ட­மா­னது மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தாக அமைந்­தி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் மிகவும் ஆழ­மாக சிந்­தித்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு தரப்­பி­னரின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தாக கூறி­விட்டு அதற்கு பதி­லாக அத­னை­விட அபா­யங்கள் அடங்­கிய புதிய சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வர முயற்­சிப்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­தாகும். தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தை மிகவும் தெளி­வாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அதா­வது சர்­வ­தேச தரத்­திற்­குட்­பட்ட ஒரு சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ரு­வதில் தவ­றில்லை என தமிழ்த் தேசியக்­ கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. ஆனால் ஏற்­க­னவே இருக்­கின்ற சட்­ட­மூ­லத்தை விட ஆபத்­தான சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வதை எதிர்ப்­ப­தா­கவே கூட்­ட­மைப்பு கூறு­கின்­றது. மக்­களின் அடிப்படை உரி­மை­களை அங்­கீ­க­ரித்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தாக கூறியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­துள்­ளது. அவ்­வா­றான நிலையில் இருக்­கின்ற சட்­ட­மூ­லத்தை விட பாத­க­மா­ன­தொரு சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வர முயற்­சிப்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­தாகும். மக்­களின் அடிப்­படை உரி­மைகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு மதிக்கப்படவேண்டும். அவற்றை மீறுவதற்கு சட்டத்தாலும் அல்லது வேறு எதனாலும் ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.

எனவே, இது தொடர்பில் அவ­தா­ன­மாக சிந்­தித்து நட­வ­டிக்­கை­களை முன­னெ­டுக்­க­வேண்டும். கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டிய புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­ல­மா­னது உள்­நாட்டு மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மதிப்­ப­தா­கவும் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் மனித உரி­மை­களை மீறா­த­தா­கவும் அமை­ய­வேண்டும். இத­னையே பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனவே, இந்த விட­யத்தில் அர­சாங்கம் விரைவில் ஆக்­க­பூர்­வ­மான ஒரு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்கும் என எதிர்­பார்க்­கிறோம். மக்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் மீது பாரிய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அரசாங்கமானது மக்களின் அடிப்படை உரிமை களை மதித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை சிதறடிக்கப்படும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது. எனவே, புதிய பயங்கரவாத தடைச் சட்ட விவகாரத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான மீள் பரிசீலனையை செய்யும் என மக்கள் நம்புக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.