Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பத்திரம் யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் ; அரச சட்டவாதி உறுதி

Featured Replies

வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பத்திரம் யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் ; அரச சட்டவாதி உறுதி

 

 

வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வுப் பத்திரம் மே மாதம் 12 ஆம் திகதிக்கு முதல்  சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அரச சட்டவாதி இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

Vidya_case.jpg

வித்தியா படுகொலை வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிப்பதற்காக இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியிடம் உறுதியளித்தார்.

 

இதையடுத்து 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடித்து உத்தவைிட்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, அவ்வுத்தரவை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

http://www.virakesari.lk/article/19768

  • தொடங்கியவர்
மாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வு - நீதிபதி மா.இளஞ்செழியன்
 
 
மாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வு - நீதிபதி மா.இளஞ்செழியன்
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் .இவ்வாறு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை, எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுமென, அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
 
குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஒன்பதுபேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில், இன்று விசாரணை இடம்பெற்றது.
 
இதன் போது சந்தேகநபர்கள் 9 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் போன்றன எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் பரப்படுத்தப்படும். எனவே, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு அரச சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
 
இதனை அடுத்து 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது தரப்பினர்கள் இரு வருட காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சந்தேகநபர்களை இரண்டு வருட காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மேல். நீதிமன்றுக்கு இல்லை. எனவே, 4 ஆம், 7ஆம் மற்றும் 9 ஆம் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
 
இந்த நிலையில், குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபர், எமது சார்பாக முன்னிலையாக யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் முன் வருகின்றார்கள் இல்லை. நாம் அன்றாடம் உழைத்து உண்பவர்கள். எமக்கு பெருமளவில் செலவு செய்து சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ய முடியாது, என மன்றில் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் நீதிபதி மா.இளஞ்செழியன், குறித்த வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் தீர்ப்பினை வழங்குவேன்.
 
இதேவேளை, மரண தன்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களுக்கு சந்தேகநபர்களின் பிணை தொடர்பில் மேல் நீதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு. எனவே, சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 
மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
 
இச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10ஆம் சந்தேகநபரான ஜெயவர்த்தன மற்றும் 12ஆம் சந்தேகநபரான ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய கடந்த 28ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இருவரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/26040

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.