Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் என்னுடன் கைகோர்த்தமையே எனது பாதுகாப்பு நீக்கப்பட காரணம்

Featured Replies

மக்கள் என்­னுடன் கைகோர்த்­த­மையே எனது பாது­காப்பு நீக்­கப்­பட காரணம்

Mahi000-f7a8b95badc61f2c717a26ee605b8c9787018d2b.jpg

 

 

(ஆர்.யசி)

மே தினத்தில் மக்கள் என்­னுடன் கைகோர்த்­ததன் பிர­தி­ப­ல­னா­கவே எனது பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது. என்னை அச்­சு­றுத்த முன்­னெ­டுக்கும் எந்த நட­வ­டிக்­கை­யையும் கண்டு நான் அஞ்­சப்­போ­வ­தில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். 

அர­சாங்­கத்­துடன் தனிப்­பட்ட கார­ணி­க­ளுக்­காக முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. இந்த மக்­க­ளையும் நாட்­டையும் அழிக்கும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எதிர்த்தே நான் போராடி வரு­கின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தங்­கா­லையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

இப்­போ­தெல்லாம் ஒவ்­வொரு நாட்­களும் இரவு வேளை­களில் நான் சந்­திப்­பு­களை மேற்­கொள்­வதை குறைத்து வரு­கின்றேன். எனது பாது­கா­வ­லர்கள் என்னை எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆரம்­பத்தில் எனக்கு வழங்­கப்­பட்ட இரா­ணுவ பாது­காப்பு குறைக்­கப்­பட்­டது. பின்னர் விசேட படை­களும் கலைக்­கப்­பட்­டன. பின்னர் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்ட நிலையில் அவர்­க­ளையும் நீக்­கி­யுள்­ளனர். ஆகவே இப்­போது என்­னுடன் உள்ள ஒரு சிலர் என்னை அதிக கவ­ன­மாக செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

இதெல்லாம் மே தினத்தின் பிர­தி­ப­லன்கள் என சிலர் கூறு­கின்­றனர். எனினும் எம்மை வீழ்த்த வேண்டும் அல்­லது அச்­சு­றுத்த வேண்டும் என நினை­கின்­றனர். ஆனால் இவர்­களை கண்டு நான் ஒரு­போதும் அஞ்சப் போவ­தில்லை. இந்த சிறிய விட­யங்­க­ளுக்கு அஞ்­சினால் எம்மால் அர­சியல் செய்ய முடி­யாது. நாம் அர­சி­யலில் நல்ல அனு­ப­வங்­களை பெற்­றுள்ளோம். பல்­வேறு அச்­சு­றுத்­தல்­களை எத்­ரி­கொண்டு அடி­க­ளையும் வாங்­கி­யுள்ளோம். சிறை­களில் இருந்­துள்ளோம். ஆகவே இந்த விட­யங்­களை தாங்கிக் கொள்ளும் சக்தி எமக்கு உள்­ளது . ஆனால் இன்று ஆட்­சிக்கு வந்­த­வர்­க­ளுக்கு தாங்­கிக்­கொள்ளும் சக்தி மிகவும் குறை­வாக உள்­ளது. 

அதேபோல் மக்­க­ளுக்கும் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை தங்­கிக்­கொள்ள முடி­யாது உள்­ளது. மக்­களே அர­சாங்­கத்தை எதிர்க்கும் நிலைமை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. மக்­களின் மனங்­களில் சகிப்­புத்­தன்மை குறை­கின்­றது. மனம் விரக்­தி­ய­டை­கின்­றது . மக்­களின் எதிர்­பார்ப்பு நிரா­க­ரிக்­கப்­படும் நிலை­யிலும், மக்­களின் உரி­மைகள் சலு­கைகள் பறிக்­கப்­படும் நிலை­யிலும் ஒரு நாடு இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­படும். நானும் அந்த கார­ணிக்­கா­கவே மக்­க­ளுடன் இணைந்து போராடி வரு­கின்றேன். இந்த அர­சாங்­கத்­தையோ அல்­லது தனிப்­பட்ட ஒரு சில­ரையோ தூற்ற வேண்டும் என நாம் முயற்­சிக்­க­வில்லை. இந்த நாடு அழிக்­கப்­ப­டு­வ­தையும் மக்­களின் உரி­மைகள் மழுங்­க­டிக்­கப்­ப­டு­வ­தையும் எதிர்த்தே நாம் போராடி வரு­கின்றோம். 

மே தினக் கூட்­டத்தில் என்­னுடன் மக்கள் கைகோர்த்து செயற்­பட்­டனர் என்­ப­தற்­காக எனது பாது­காப்பை குறைக்கும் கீழ்­மட்ட அர­சியல் நோக்­கத்தில் இந்த நாட்டின் தலைவர்கள் செயற்படுவது இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல. 

 அரசியலில் எமது மக்களை பழிவாங்க நினைப்பதை மோசமான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். எம்மை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எமது மக்களையும் நாட்டையும் அழிக்க வேண்டாம் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.