Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கை இணைத்து தனி அலகை உருவாக்கும் திசையை நோக்கி நாடு பயணிக்கிறது நாட்டின் தேவை இடதுசாரி கொள்கை நூல் வெளியீட்டு விழாவில் விமல் தெரிவிப்பு

Featured Replies

வடக்கு, கிழக்கை இணைத்து தனி அலகை உருவாக்கும் திசையை நோக்கி நாடு பயணிக்கிறது

 

நாட்டின் தேவை இடதுசாரி கொள்கை நூல் வெளியீட்டு விழாவில் விமல் தெரிவிப்பு
(ந.ஜெகதீஸ்)

ஒரு நாட்டில் பாதிக்­கப்­பட்ட மக்கள் குழு வாழும் பகு­தியில் சர்­வ­தேச சட்­டத்­தினை மீறும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்கும் பட்­சத்தில் அவர்கள் வாழும் பகு­தியை சுயா­தீன ராஜ்­ஜி­ய­மாக அமுல் படுத்த வேண்டும் என்றே சர்­வ­தேச சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய இன்று இலங்­கையின் பூகோள வடிவ மாற்­றங்­க­ளை­க்கூட ஐ.நாவே தீர்­மா­னிக்­கின்­றது. எனவே வடக்கு, கிழக்கை இணைத்து தனி­யான ஒரு அல­காக உரு­வாக்­க­ப்படும் திசையை நோக்கி நாடு பய­ணிக்­கின்­றது

என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார். கொழும்பு சம்­புத்­தத்வ ஜயந்தி மாளி­கையில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவின் நாட்டின் தேவை இட­து­சாரி கொள்­கை­யாகும் என்ற நூல் வெளி­யீட்டு நிகழ்வின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முத­லா­வ­தாக ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் நன்றி கூற வேண்­டி­யுள்­ளது. அவர்­களே எனக்கு புத்­தகம் எழு­து­வ­தற்­கான காலத்தை வழங்­கி­னார்கள். ஒரு­வேளை சிறைக்கு செல்­லா­தி­ருந்தால் என்னால் புத்­தகம் எழுத காலம் கிடைத்­தி­ருக்­காது.

மேற்­படி இரு­வரும் அவர்­களின் அர­சியல் தேவைக்­காக என்னைச் சிறை­யிட்­டி­ருந்­தாலும் அவர்கள் சிறை­யிட்­டி­ருக்­கா­விடின் என்­னக்கு புத்­த­கத்தை எழுத காலம் கிடைத்­தி­ருக்­காது. சிறை­யி­லி­ருந்த போதுதான் ஒக்­டோபர் புரட்­சிக்கு 100 வரு­டங்கள் பூர்த்­தி­யா­னது.

அதற்­காக பிர­தமர் தலை­மையில் ஒரு நிகழ்வும் இடம்­பெற்­றது. அது ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் வந்து ஒக்­டோபர் புரட்­சியை கொண்­டா­டி­யது போன்­ற­தாகும். அண்­மையில் ஒக்­டோபர் பூர்த்தி 100ஆவது விழா கொண்­டாடப்­பட்­டது. 100 வரு­டத்தை கொண்­டா­டி­னாலும் இன்று சோவியத் ரஷ்­யாவின் சமூ­க­வு­டமை கொள்கை இல்­லாது போயுள்­ளது.

100 வரு­டங்கள் கடந்­தாலும் புரட்­சி­யா­ளர்­களை பற்­றி­யி­ருந்த கருத்­துக்கள் மாற்றம் பெற்­றுள்­ளன. சர்­வ­தேச சக்­திகள் இன்று தமது கொள்­கை­களை உலக நாடு­களின் முதன்­மை­யான கொள்­கை­க­ளாக மாற்­றிக்­கொண்­டுள்­ளனர். அதேபோல் நாம் தற்­போது மே மாதத்தின் ஆரம்­பத்தில் உள்ளோம்.

இது வெசாக் மற்றும் யுத்த வெற்றி நாளை கொண்ட மாதம் என்ற வகையில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு மாத­மாக அமைந்­துள்­ளது. இவ்­வா­றான தரு­ணத்தில் நாம் சோவியத் புரட்­சியின் 100ஆவது வருட பூர்­த்தியை கொண்­டா­டி­னாலும் எமது நாட்டில் அவ்­வா­றான சமூ­க­வு­டைமை கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தா­தி­ருக்க பெரிதும் தாக்கம் செலுத்­திய காரணம் என்­ன­வென்­பதை பற்றி சிந்­திக்க வேண்டும்.அது குறித்த கார­ணங்­க­ளையே புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்ளேன்.

தற்­கா­லத்தில் எமது நாடு தீர்­க்கமா­ன தரு­ணத்தில் உள்­ளது. பொரு­ளா­தாரம் நாளாந்தம் பல­வீ­ன­மா­கின்­றது. வெளி­நாட்டு முத­லீட்­டாளர்­க­ளுக்கு எமது நாடு களம் கொடுக்­கின்­றது. இந்­தி­யா­விற்கு எமது நாடு பகுதி பகு­தி­யாக வழங்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. மறு­மு­னையில் ஐக்­கிய நாடுகள் சபைக்கு வழங்­கிய வாக்­கு­று­தியின் பிர­காரம் தோற்­க­டிக்­கப்­பட்ட தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு தேவை­யான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது.

ஜெனிவா பரிந்­து­ரைக்கு அமை­வாக நாளாந்தம் தேசிய பாது­காப்பு பல­வீனப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அதற்கு தீர்வை தேட எமக்கு எமது நோக்­கத்தை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. அதனை தெளிவு படுத்­தவே புத்­தகம் எழு­தினேன். இன்று எமது நாட்டில் ஏற்­பட்­டுள்ள பல­மான பொரு­ளா­தார வீழ்ச்­சியை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் பல­ன­டைய பார்க்­கின்­றன.

இந்­நி­லையில் இலங்கை 2 ஆக பிரிக்­கப்­பட வேண்­டுமா அல்­லது 3 துண்­டு­க­ளாக பிரிக்­கப்­பட வேண்டுமா என்­பதை ஐக்­கிய நாடுகள் சபை தீர்­மா­னிக்­கின்ற நிலைமை வந்­துள்­ளது. அவர்­களே இன்று இலங்­கையின் யுத்த குற்றம் பற்றி தேடு­கின்­றனர். அவர்கள் இலங்கை மீது முன்­வைத்த குற்­றச்­சாட்டை அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஏற்­றுக்­கொண்டும் உள்ளார். காணாமல் போனோர் குறித்து தேடு­வ­தற்­கான ஒரு அலு­வ­ல­கமும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­கான நீதி­மன்­றமும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த நீதி­மன்­றத்­தினால் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு கார­ண­மாக இருந்த நபர் மற்றும் அதற்கு ஆணை­யிட்­ட­வர்­களை தண்­டிக்க கூடிய அதி­காரம் அந்த நீதி­மன்­றத்­திற்கு உள்­ளது. அதனால் வெளி­நாட்டில் உள்ள ஒருவர் கூட இரா­ணு­வத்தின் மீது போலி குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்த முடியும்.

அந்த சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்­ப்பித்­துள்­ளனர். இவ்­வா­றி­ருக்­கையில் அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஒரு கருத்தை கூறி­யுள்ளார்.தற்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையில் இலங்கை பற்­றிய பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அது குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டினை ஆராய்­வ­தற்கே வன்­னியில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு இங்கு வன்­னியில் கலந்­து­ரை­யா­டினோம் என்று கூறி­யுள்ளார். அதன் போது ஐக்­கிய நாடுகள் சபை இலங்கை அர­சாங்­கத்­தி்ற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இலங்கை அர­சாங்கம் முறை­யாக ஐ.நா.வின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தா­விடின் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சர்­வ­தேச நீதிக்­க­மை­வாக தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற விட­யங்­களை குறிப்­பிட்­டுள்­ளனர்.

இதில் சர்­வதேச சட்­டத்தின் பிர­காரம் ஐ.நா. தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்­பது குறித்து அவ­தானம் செலுத்த வேண்டும். சர்­வ­தேச சட்­டத்தின் பிர­காரம் பார்க்­கின்ற போது பாதிக்­கப்­பட்ட மக்கள் வாழ்­கின்ற பகு­தியில் சர்­வ­தேச சட்­டத்­தினை மீறும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெறும் பட்­சத்தில் அம்­மக்கள் வாழ்­வ­தற்­கான சுயா­தீன ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான அதி­காரம் உள்­ளது என்று கூறப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச சட்டம் என்று பார்க்கின்ற போது இனப்­ப­டு­கொ­லையும் சர்­வ­தேச சட்­டத்தின் கீழேயே வரு­கி்ன்­றது. அவ்­வா­றி­ருக்­கின்ற போது எமது நாடும் இன்று அந்த திசையை நோக்­கித்தான் பய­ணிக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது. அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதற்­கான வழி­ந­டத்தல் குழு­விற்கு பிர­தமர் பெளத்த சம­யத்தின் முத­லி­டத்தை வழங்­கு­வ­தாக கூறி­விட்டு சகல ஆக­மங்­க­ளுக்கும் முத­லி­டத்தை வழங்க முயற்­சிக்­கின்­றார்.

மறு­பு­றத்தில் ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­மாறு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. ஒத்­தி­சைவு பட்­டியல் உள்­ள­தா­லேயே இன்று மத்­திய அர­சாங்­கத்­தினால் மாகாண சபையின் செயற்­பா­டு­களில் தலை­யீடு செய்­ய­மு­டி­கின்­றது என்­பது நாம் கருத்திற் கொள்ள வேண்­டிய விடய­மாகும். அதே­நேரம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை சேர்­ந்த­வர்­களை பிர­தா­ன­மாக கொண்டு அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்கும் முன்­னெ­டுப்­புக்­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

மேலும் இரு சபைகளை ஒன்றாக்கக் கூடிய பரிந்துரைகள் நிறைவேற்றிக்கொள்ளப்படும் வாய்ப்பு கிட்டவுள்ளது. வடக்கு கிழக்கை இணைத்து தனியான ஒரு ஆட்சி அழகு உருவாகும். அதனை உறுதிப்படுத்த அரசியலமைப்புக்கான விசேட நீதிமன்றத்தினால் முடியும். அதற்கான முன்னெடுப்புகளுக்குத்தான் இன்று எமது தேசம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அதனை தான் சுமந்திரனும் கேட்கின்றார். அமைச்சர் மங்களவும் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் சுமந்திரனின் கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. அதனால் இன்று எமது நாட்டின் பூகோள வடிவ மாற்றத்தையும் கூட சர்வதேச சக்திகளே தீர்மானிக்கின்றன.

விரைவில் இலங்கையில் அமெரிக்காவின் ஒத்துசேவை காரியாலயம் ஒன்றும் இலங்கையில் நிறுவப்படவுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-08#page-1

விமல் வீர­வன்­ச­வின்­ ‘நாட்டின் தேவை இடதுசாரி கொள்­கை­­’

01-1143ccd9957217fd0254960804ca9fb79d00e39c.jpg

 

விமல் வீர­வன்­ச­வின்­ ‘நாட்டின் தேவை இடதுசாரி கொள்­கை­­’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் விமலிடமிருந்து தினேஷ் குண­வர்­த்த­ன எம்.பி. நூலை பெற்றுக்கொண்டபோது... (படப்பிடிப்பு : உதேஷ் இந்திக்க)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.