Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் இலங்கையில்

Featured Replies

உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் இலங்கையில்
 
 

article_1494241195-7777.jpg

உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக  எதிர்வரும் புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.

இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்.

இதில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள், லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

article_1494241029-777.jpg

- See more at: http://www.tamilmirror.lk/196263/உலக-ல-ம-தல-வத-நவ-ன-ல-சர-வ-ச-க-இலங-க-ய-ல-#sthash.wdnMiKwE.dpuf
  • தொடங்கியவர்

நவீன லேசர் வெசாக் அலங்காரபந்தல்

 

 

நவீன லேசர் வெசாக் அலங்காரபந்தல்

 

 
உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக நாளை மறுதினம் (10) அதாவது வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படும்.

கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த அலங்கார பந்தல் புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலிற்கு அமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும்.

கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்த நவீன வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு இலங்கை , துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக பௌத்த சங்கம் ஆகிய ஒன்றினைந்தே கொலந்தொட்ட வெசாக் வலயத்தை நான்காம் தடவையாக ஏற்பாடுச் செய்துள்ளது.

கொழும்பு காலிமுகத் திடல் மற்றும் துறைமுக வளாகத்தை மையமாகக் கொண்டு இந்த வலயம் அமைக்கப்படவுள்ளது.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரபந்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இதன் உயரம் 60 அடிகளாகும். அகலம் 40 அடிகளாகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள் லேசர் கீற்று வெசாக் அலங்கார பந்தலில் காட்சிப்படுத்தப்படும்.

ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வெசாக் அலங்கார பந்தலை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த அவர்கள் வடிவமைத்துள்ளார்.

விமலஜீவ தொம்பவத்த இதற்கான பின்னனி இசை அமைத்துள்ளதுடன் , திமுத்து சிந்தக்கவினால் கதை விபரிக்கப்படும்.

இரவு வேளையில் ஆகாயத்தில் காட்சிப்படுத்த இந்த அலங்கார பந்தல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் மனங்களை கவருமென பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த தெரிவித்தார்.

' லேசர் முறையில் பல்வேறுப்பட்ட தொழில்நுட்ப முறைகள் காணப்படுகின்றன.

வைத்திய துறையிலும் லேசர் முறை பயன்படுத்தப்படுகின்றது. அதேப்போல் யுத்த நடவடிக்கைளின் பொழுது, அளவீட்டு நடவடிக்கைகளின் பொழுது மற்றும் பொறியில் தொழில்நுட்பத்திலும் இவ் லேசர் தொழில்நுட்பம் பயன்படுகின்றது.

அதேப்போல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொழுது பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொருட்டு உபயோகிக்கின்ற லேசர் கீற்றுகளையே நாம் அங்கு பயன்படுத்தவுள்ளோம்.

இதன் மூலம் உடம்பிற்கு எவ்வித கெடுதலும் நேராது.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொருட்டு உபயோகிக்கின்ற லேசர் கீற்றுகளை இல்லையேல் லேசர் கலையை புத்த கதாபாத்திரங்களுடன் தொடர்புப்படுத்தி மக்கள் மத்தியில் பக்தியை ஏற்படுத்துவது எப்படி என்பதே இந்த நிர்மாணப்பணிகளின் பொழுது நாம் எதிர்கொண்ட பிரதான சவாலாகும்.

நாம் இந்த சவாலை வெற்றிக்கொண்டுள்ளதாக தான் எண்ணுவதாக பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த தெரிவித்தார்.

(அத தெரண தமிழ்)

http://tamil.adaderana.lk/news.php?nid=2470&mode=head

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.