Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்

Featured Replies

தமிழ்நெற் ஒரு news agency தான். ஆங்கில மொழியில் தமிழ்நெற் நல்ல தரத்தில் இருக்கு. அதை பலப்படுத்தி சேவைகளை விரிவாக்க முயற்சி எடுக்கலாம்.

தமிழ் மொழியில் புதின த்தை பலப்படுத்தலாம். சங்கதியும் பறவாயில்லை. ஆனால் இவர்களிடம் professional நடத்தை இல்லை. அதைப்பற்றிக் கதைத்தால் ஓசியில செய்யிறம் உது காணாதோ எண்ணுவினம்.

தமிழ்நெற்றின் சேவைகளை நாமே மதிக்க தெரியாதவர்களாகத்தான் வெட்டி ஒட்டுவது மூலமும் , மூலம் குறிப்பிடாத மொழிபெயர்ப்புகள் மூலமும் நடந்து கொள்கிறோம். விளக்கம் கேட்டால் தேசியத்திற்கு பின்னால் ஒளித்துக் கொள்வார்கள். இன்னொரு கூட்டம் தன்னாவலர்கள் என்று புராணம் பாடுங்கள்.

வெட்டி ஒட்டலுக்கு முன்னர் யாழ்களத்தில் ஒரு நியாம் எழுதப்பட்டது. அது வந்து டாங்கிகளுக்கு காத்துப் போக கோபுரங்கள் சரிஞ்சு விழ கட்டுப்பாட்டு தலமையகங்கள் இடம் மாறிய காலம். அந்தக் காலத்தில வருகையாளர்கள் ஊடி சில முன்னணி இணையத் தளங்கள் quota முடிந்து பார்க்க முடியாது அவதிப்பட்ட காலம். அந்த நேரங்களில் வெட்டி ஒட்டின தளங்களில் வாசிக்கக் கூடியதாக இருந்தது என்று நியாம் எழுதின பிரபலங்களும் உண்டு. வருகையாளர்கள் கூடின இணய சேவை வேணும் என்றால் அதை நடத்தும் மூல ஊடகங்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தி அடைய முடியாதா? சரி hackers பிரச்சனை என்றால் ஏன் உத்தியோக புhர்வரீதியில் mirror site ஆக நடத்தக் கூடாது?

நம்மவர்கள் உள்ளதைப் பலப்படுத்தாது புதுசு புதுசாக உருவாக்க நிற்பதால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மேலும் விரையமாகிக் கொண்டு இருக்கிறது.

வருடத்திற்கு 100 டொலரும், கணனி பாவிப்பது வெப்சைற் பற்றி கொஞ்ச அறிவும் மினக்கட நேரமும் கிடைத்தால் செய்திச் சேவை தொடங்கிவிடலாம் என்ற நிலையில் எத்தனை பேர்?

இவற்றில் விரையமாக்கப்டுபவற்றை ஏலவே நடத்துபவர்களிற்கு கொடுத்து ஊக்குவிக்க பலப்படுத்த ஏன் நினைக்கிறார்கள் இல்லை?

Edited by mooki

இது எம்மில் உள்ல பிரச்சனை தான்..எம்மில பெரும்பாலானோர் ஊடக துறையை தேர்ந்து எடுப்பது மிகவும் குறைவு..முதலாவ்து காரனம்,நான் நினைகிறேன், சம்பளம்..ஒரு ஊடகவியளாளார் பெறும் சம்பளம், ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே..அத்துடன் இவர்கள் பல இன்னலகளை நோக்க வேன்டி இருக்கும்..இப்படி எத்தனையோ காரணங்கள்.எமது போராட்டதுக்கு எதிரா எழுதும் போது தான் உள்ள சர்வதேச செய்தி நிறுவனங்கள் எல்லாம் பெரும் தொகை கொடுக்க முன் வருகிறார்கள்.

கொழும்பு பல்கலைகழகத்தில் ஊடகவியல் தொடர்பான ஒரு கற்கை நெறி ஆரம்பித்தார்களாம்..ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததுடன், அவர்களின் ஆங்கில அறிவு இன்மையாலும் அதை வெற்றி பெறசெய்ய முடியவில்லை என்ரு ஒரு பேராசிரியர் கூறினார்..இன்று Mass Communications என்று ஒரு துறை இருகிறது..ஆனால் மேற்கத்தைய நாடுகளில் அது பிரபலம் அடைந்த அளவுக்கு எம்மவர் மத்தியில் இன்னும் அது பிரபலம் அடைய்யவில்லை..பலருக்கு அது என்னவெண்றே தெரியாது..மேலும், இப்பொல்ழுது வாசிக்கும் பழக்கம் மிகவும் அரிதாகி போகின்றது..இந்த நிலையில் எப்படி இவர்களுக்கு விழிபூட்ட முடியும்?..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாசிரியர், சில மிக முக்கிய கருத்துக்களைத் தொட்டிருக்கிரார்! யூத இன மக்கள் தமது நாட்டுக்காகச் செய்தது அளப்பரியது! பாலஸ்தீன மக்களுக்கு யூதர் இழைத்த / இழைத்துக் கொண்டிருக்கிர கொடுமைகளை தவிர்த்து, அவர்கள் தமது நாட்டுக்காற்றியவை எமக்கு நல்ல வழி காட்டியாக இருக்க முடியும்!

எமது அடுத்த சந்ததி அல்லது பிள்ள்ளைகளென்று பார்க்கும் போது, அவர்களது முன்னேற்றம் வரவேற்கக் கூடியது! அமெரிக்கா/கனடா போன்ற நாடுகளில், எம்மவர்களது முன்னேற்றம் மிக மிக நம்பிக்கையூட்டுவதாகவும், வரவேற்கக் கூடியதாகவுமே உள்ளது! இந்த நாடுகளில், அவர்கள் பல் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை! அரசியலில் அவர்களது ஈடுபாடு காணுமா என்பது கேள்விக் குறிதான், ஆனாலும் சில முன்னேற்றங்களை கனடாவில் பார்க்கக் கூடியதாகவும், முக்கிய அரசியல் கட்சிகளில் அவர்களது ஈடுபாடு அதிகமாவதையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது. மற்றைய துறைகள், மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பொருளியல் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உள்ளது! கனடாவில், ரொறொன்ரோ நகரில் கூடுதலாக எல்லாத் துறைகளிலும் (வங்கி, வைத்தியம், தனியார் வர்த்தகங்கள், பொறியியல் கொம்பனிகள்) எம்மவரது திறைமைகள் கண்கூடு! பல பல பாடசாலைகளிலும், எமது மாணவர்கள் மிக மிக சிறந்து விளங்குகிறார்கள்!

அதே நேரம், 'காவாலிக் கூட்டங்களும்', அடி தடிக் குழுவினர்க்கும் குறைவில்லை (அவர்கள் எங்கே தான் இல்லை?). தவிர, எமது மக்கள் பொதுவாக இந்த நாடுகட்கு வந்த பின்பாவது 'முன்னேறி விட்டார்களா?' என்றால், அது ஓர் பெரிய கேள்வி!

மீண்டும், இந்த நாடுகளில், தமிழ் ஊடகத்துறை முன்னேறி விட்டதா என்றால், ஓர் பெரிய 'இல்லை' என்பது தான் எனது பதில்!

ஐரோப்பா நாடுகளைப் பொறுத்த வரை, அது ஓர் சிக்கலான விடயம்! பல மக்கள், மற்றைய நாடுகளிலிருந்து லண்டனுக்கு இடம் பெயர்வது (மீண்டும்) பற்றி குரிப்பிட்டுள்ளீர்கள்! அது உண்மையே! என்ன காரணங்கள்? இங்கிலாந்து தவிர்ந்த நாடுகளில், மொழி ஓர் பிரச்சனையாக் இருக்கிறது! அண்மையில், பாரிசில் வாழும் ஓர் தமிழருடைய பேட்டி ஒன்று வாசித்தேன். அவர் கீழே உள்ள சில முக்கிய கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

[ul]"பிரான்ஸை பொருத்தமட்டில் மிகக் கொடுமையான வேலை முறைகள். துன்பங்கள் துயரங்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஐரோப்பாவை பொறுத்தளவில் பெருவாரியான அடித்தள ஈழத் தமிழர்கள் பிரான்ஸில்தான் இருக்கிறார்கள். மேட்டுக்குடி ஈழத் தமிழனின் லட்சியமே லண்டன், கனடா போவதுதான். "[/ul]

நான் இவரது கருத்துக்களில் �#8220;ரளவாவது உண்மை இருப்பதாகவே உணர்கிறேன்! அண்மையில் �#8220;ர் நாள் பாரிஷ் போயிருந்த போது, எமது சில மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் பலருடைய வாழ்க்கை முறை, மிகவும் வித்தியாசமாகவே எனக்குப் பட்டது! சிலர், 10, 15 வருடங்கள் அங்கே வாழ்ந்தவர்கள் கூட, இன்னும் மொழி தெரியாமல் தடுமாறுகிறார்கள்! பலரது வாழ்வு உணவு விடுதிகளில் வேலை செய்வதிலேயே போகிறது (ஒருவர் தான் 20 வருடமாக ஒரே உணவு விடுதியில் வேலை செய்வதாக பெருமையடித்துக் கொண்டார்!). இந்த மக்கள் லண்டன் போன்ற நகர்களைத் தேடிப் போவதில் குறை கூறுவதற்கில்லை!

ஊடகங்கள் இந்த மக்களுக்கு ஏதாவது வழி காட்டுதலாக உள்ளனவா என்றால், இல்லை!

எமது அடுத்த சந்ததி அல்லது பிள்ள்ளைகளென்று பார்க்கும் போது, அவர்களது முன்னேற்றம் வரவேற்கக் கூடியது! அமெரிக்கா/கனடா போன்ற நாடுகளில், எம்மவர்களது முன்னேற்றம் மிக மிக நம்பிக்கையூட்டுவதாகவும், வரவேற்கக் கூடியதாகவுமே உள்ளது! இந்த நாடுகளில், அவர்கள் பல் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

இக்கூற்று எவ்வளவு உண்மையானது என்று ஆதாரத்துடன் விளக்க முடியுமா? கனடாவில் தான் எம்மக்கள் மிக மிக அதிகமாக வாழ்கிறார்கள். எனவே எல்லாத் தரத்திலும் உள்ள மக்களை நாம் காண முடியும். உயர் படிப்பு படித்து வேலை செய்பவரையும் காணமுடியும், தொழிற்சாலை வேலை செய்பவர்களையும் ஏராளமாகக் காணமுடியும். இந்நிலையில் மேற்சொன்ன கூற்று வெறும் தனிப்பட்ட அவதானிப்புக்களின் பெறுபேறாகவன்றி (sample trials) வேறென்னவாக இருக்க முடியும்? சென்றவருடம் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் "தமிழர் பரப்புரை போதாது" என்ற விடயம் சம்பந்தமாக எழுதிய கட்டுரையின் படி கனடாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கீழ்நிலை அடிமட்ட வேலைகளையே செய்வதாகவும், அவுஸ்திரேலியாவில் வசிப்போர் தாம் ஓரளவிற்கேனும் நல்ல உத்தியோகங்கள் பார்ப்பதாகவும் கூறியிருந்தது இங்கு நினைவுகூரப்பட வேண்டியது.

ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை அறிய புள்ளிவிபர ஆய்வுகள் (statistical data and analysis) தேவை. இதை நாங்கள் செய்யத்தேவையில்லை. Statistics Canada என்று ஒரு திணைக்களம் இருக்கிறது. அவர்களிடம் கனடாவில் எத்தனை தமிழர் உள்ளனர், அதில் எத்தனை பேர் இலங்கையர், எத்தனை பேர் நிரந்தர உத்தியோகத்தில் இருக்கிறார்கள், அவர்களின் கல்வியறிவு என்ன என்ற சகல விபரங்களும் உள்ளன. நான் நினைக்கிறேன் எந்த ஒரு கனேடியப் பிரஜையும் ஒரு எழுத்துமூல வேண்டுகோளை Statistics Canada விற்கு விடுத்து இந்த விபரங்களைப் பெறமுடியும். நம்மவர் பற்றிய ஆய்வு இவ்வாறான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எட்டப்படவேண்டும். “எங்கட ஆட்களெல்லாம் கனடாவிலை கொடிகட்டிப்பறக்கிறார்கள்” போன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் வெறும் மாயையேயன்றி வேறல்ல.

மற்றைய துறைகள், மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பொருளியல் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உள்ளது! கனடாவில், ரொறொன்ரோ நகரில் கூடுதலாக எல்லாத் துறைகளிலும் (வங்கி, வைத்தியம், தனியார் வர்த்தகங்கள், பொறியியல் கொம்பனிகள்) எம்மவரது திறைமைகள் கண்கூடு! பல பல பாடசாலைகளிலும், எமது மாணவர்கள் மிக மிக சிறந்து விளங்குகிறார்கள்!

நல்ல விடயம். ஆனாலும், இக்கூற்றுக்களை ஆதாரத்துடன் அலசப்படவேண்டியவை. எந்தெந்தத் துறையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அவர்கள் படிக்கும் அதே துறையில் வேலை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்களா? மற்ற இனங்களுடன் ஒப்பிடும் போது எம்மவர் குழந்தைகளின் சராசரிப் பெறுபேறு என்ன? உயர்வானதா அல்லது தாழ்வானதா? இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்குச் செல்லும் பல டாக்டர்கள், இஞ்சினியர்கள் (இது தென்னாசியர்களுக்கு பொதுவானது) அங்கு வேலை இல்லாது இருப்பதும், பலர் இப்போது அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்படுவது போன்ற கதைகளுமுண்டு. எனவே இது பற்றிய ஆய்வுகள் எதுவும் செய்யாது முடிவுகள் எட்டப்படுவது எம்மை நாமே ஏமாற்றும் ஒரு வேலையே.

இவ்வாறான ஆய்வுகளை செய்யவேண்டியவர்களும் ஊடவியலாளர்களே!

Edited by balapandithar

இக்கூற்று எவ்வளவு உண்மையானது என்று ஆதாரத்துடன் விளக்க முடியுமா? கனடாவில் தான் எம்மக்கள் மிக மிக அதிகமாக வாழ்கிறார்கள். எனவே எல்லாத் தரத்திலும் உள்ள மக்களை நாம் காண முடியும். உயர் படிப்பு படித்து வேலை செய்பவரையும் காணமுடியும், தொழிற்சாலை வேலை செய்பவர்களையும் ஏராளமாகக் காணமுடியும். இந்நிலையில் மேற்சொன்ன கூற்று வெறும் தனிப்பட்ட அவதானிப்புக்களின் பெறுபேறாகவன்றி (sample trials) வேறென்னவாக இருக்க முடியும்? சென்றவருடம் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் "தமிழர் பரப்புரை போதாது" என்ற விடயம் சம்பந்தமாக எழுதிய கட்டுரையின் படி கனடாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கீழ்நிலை அடிமட்ட வேலைகளையே செய்வதாகவும், அவுஸ்திரேலியாவில் வசிப்போர் தாம் ஓரளவிற்கேனும் நல்ல உத்தியோகங்கள் பார்ப்பதாகவும் கூறியிருந்தது இங்கு நினைவுகூரப்பட வேண்டியது.

ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை அறிய புள்ளிவிபர ஆய்வுகள் (statistical data and analysis) தேவை. இதை நாங்கள் செய்யத்தேவையில்லை. Statistics Canada என்று ஒரு திணைக்களம் இருக்கிறது. அவர்களிடம் கனடாவில் எத்தனை தமிழர் உள்ளனர், அதில் எத்தனை பேர் இலங்கையர், எத்தனை பேர் நிரந்தர உத்தியோகத்தில் இருக்கிறார்கள், அவர்களின் கல்வியறிவு என்ன என்ற சகல விபரங்களும் உள்ளன. நான் நினைக்கிறேன் எந்த ஒரு கனேடியப் பிரஜையும் ஒரு எழுத்துமூல வேண்டுகோளை Statistics Canada விற்கு விடுத்து இந்த விபரங்களைப் பெறமுடியும். நம்மவர் பற்றிய ஆய்வு இவ்வாறான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எட்டப்படவேண்டும். “எங்கட ஆட்களெல்லாம் கனடாவிலை கொடிகட்டிப்பறக்கிறார்கள்” போன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் வெறும் மாயையேயன்றி வேறல்ல.

நல்ல விடயம். ஆனாலும், இக்கூற்றுக்களை ஆதாரத்துடன் அலசப்படவேண்டியவை. எந்தெந்தத் துறையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அவர்கள் படிக்கும் அதே துறையில் வேலை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்களா? மற்ற இனங்களுடன் ஒப்பிடும் போது எம்மவர் குழந்தைகளின் சராசரிப் பெறுபேறு என்ன? உயர்வானதா அல்லது தாழ்வானதா? இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்குச் செல்லும் பல டாக்டர்கள், இஞ்சினியர்கள் (இது தென்னாசியர்களுக்கு பொதுவானது) அங்கு வேலை இல்லாது இருப்பதும், பலர் இப்போது அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்படுவது போன்ற கதைகளுமுண்டு. எனவே இது பற்றிய ஆய்வுகள் எதுவும் செய்யாது முடிவுகள் எட்டப்படுவது எம்மை நாமே ஏமாற்றும் ஒரு வேலையே.

இவ்வாறான ஆய்வுகளை செய்யவேண்டியவர்களும் ஊடவியலாளர்களே!

[color="#FF0000"]நம்முடைய ஊடகங்கள் புலம் பெயர்ந்த மக்கள் பற்றிய கணக்கொடுப்பை எடுக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எந்த ஊர் காரர் எந்த நாட்டில அதிகம் வாழுகினம். எந்த கோவில் திருவிழாவை காட்டினால் ஆருக்கு காட் விக்கலாம்? யாருக்கு ஏந்த சினிமாவையும் சின்னத்திரையையும் போட்டால் அவர்களை அதிலேயே மூழ்கியிருக்கச் செய்யலாம்.இந்தக் கணக்கெடுப்பெல்லாம் எல்லா ஊடகங்களாலும் செய்யப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு தாயகம் பற்றி பேசுவதை சைவச் சாப்பட்டுக்கு ஊறுகாய் வைக்கிற மாதிரித் தான் நினைக்கிறார்கள்.

இக்கூற்று எவ்வளவு உண்மையானது என்று ஆதாரத்துடன் விளக்க முடியுமா? கனடாவில் தான் எம்மக்கள் மிக மிக அதிகமாக வாழ்கிறார்கள். எனவே எல்லாத் தரத்திலும் உள்ள மக்களை நாம் காண முடியும். உயர் படிப்பு படித்து வேலை செய்பவரையும் காணமுடியும், தொழிற்சாலை வேலை செய்பவர்களையும் ஏராளமாகக் காணமுடியும். இந்நிலையில் மேற்சொன்ன கூற்று வெறும் தனிப்பட்ட அவதானிப்புக்களின் பெறுபேறாகவன்றி (sample trials) வேறென்னவாக இருக்க முடியும்? சென்றவருடம் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் "தமிழர் பரப்புரை போதாது" என்ற விடயம் சம்பந்தமாக எழுதிய கட்டுரையின் படி கனடாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கீழ்நிலை அடிமட்ட வேலைகளையே செய்வதாகவும், அவுஸ்திரேலியாவில் வசிப்போர் தாம் ஓரளவிற்கேனும் நல்ல உத்தியோகங்கள் பார்ப்பதாகவும் கூறியிருந்தது இங்கு நினைவுகூரப்பட வேண்டியது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளில் முக்கியமான ஒருவர்.அவர் பல தடவை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஊடகங்கள் எப்படி செயற்படவேண்டும் என்று கருத்துச் சொல்லி இருக்கிறார். என்ன பிரயோசனம். நான் அறிந்த வரை சில ஊடகங்களில் அவருடன் தொடர்பு கொள்வதற்கே தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கூற்று எவ்வளவு உண்மையானது என்று ஆதாரத்துடன் விளக்க முடியுமா? கனடாவில் தான் எம்மக்கள் மிக மிக அதிகமாக வாழ்கிறார்கள். எனவே எல்லாத் தரத்திலும் உள்ள மக்களை நாம் காண முடியும். உயர் படிப்பு படித்து வேலை செய்பவரையும் காணமுடியும், தொழிற்சாலை வேலை செய்பவர்களையும் ஏராளமாகக் காணமுடியும். இந்நிலையில் மேற்சொன்ன கூற்று வெறும் தனிப்பட்ட அவதானிப்புக்களின் பெறுபேறாகவன்றி (sample trials) வேறென்னவாக இருக்க முடியும்?

நான் குறிப்பிட்ட தகவல்கள் எனது சொந்தக் கருத்தே, புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டவையல்ல! அத்தோடு, நான் குறிப்பிட்டது, எமது அடுத்த சந்ததி அல்லது பிள்ள்ளைகளைத் தான் குறிப்பிடிருந்தேன்! நிட்சயமாக, எமது இந்தத் தலைமுறையினர் யாவரும் பட்டப் படிப்புப் படித்து நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள் அல்லது இருக்க வேண்டும் என யாராவது கூறினால் அதை விட வேரு மூடத்தனம் இருக்க முடியாது! “எங்கட ஆட்களெல்லாம் கனடாவிலை கொடிகட்டிப்பறக்கிறார்கள்” என்ற கருத்தை யாரும் இங்கு முன் வைக்கவில்லை! உங்கள் எதிர்க் கதுத்தை முன் வைக்க முன் அல்லது மற்றவர்களின் கருத்தை எதிக்க முன், தயவு செய்து மற்றவர்களின் கருத்தை புரிந்து கொள்ளுங்கள்.

கனடாவில், சில வருடங்கட்கு முன்னால், ஓர் ஊடகமோ அல்லது பொது நிறுவனமோ பாடசாலை (high school) அடிப்படையில் ஓர் ஆய்வு நடத்தி, தமிழ் மாணவர்கள் சில துறைகளில் மிக முன்னிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தவிர, எதாவது ஓர் ஊடகமோ அல்லது நிறுவனமோ கணக்கெடுப்பு நடாத்தினாலேயொழிய, உண்மையான புள்ளி விபரங்களை அறிவது இலகுவாக இருக்காது. Statistics Canada வில் இந்த விபரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே!

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்குச் செல்லும் பல டாக்டர்கள், இஞ்சினியர்கள் (இது தென்னாசியர்களுக்கு பொதுவானது) அங்கு வேலை இல்லாது இருப்பதும், பலர் இப்போது அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்படுவது போன்ற கதைகளுமுண்டு. எனவே இது பற்றிய ஆய்வுகள் எதுவும் செய்யாது முடிவுகள் எட்டப்படுவது எம்மை நாமே ஏமாற்றும் ஒரு வேலையே.

இவ்வாறான ஆய்வுகளை செய்யவேண்டியவர்களும் ஊடவியலாளர்களே!

முற்றிலும் உண்மை! நானும் ஓர் வகையில் இதில் பாதிக்கப் ப்ட்டுள்ளேன்! ஆனால், இது யாருடைய பிரச்சனை? கனடிய அரசு இந்த விடயங்களில் கட்டுப் பாடுகளை வைத்துள்ளது, நாமோ அல்லது எமது ஊடகங்களோ ஏதாவது செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இந்தத் தலைமுறையினர் யாவரும் பட்டப் படிப்புப் படித்து நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள் அல்லது இருக்க வேண்டும் என யாராவது கூறினால் அதை விட வேரு மூடத்தனம் இருக்க முடியாது!

எமது இளைய தலைமுறையினரை வழிநடத்த (கல்வி, தொழில் துறைகளில்) அவ்வவ் நாடுகளில் மிகச்சிறந்த கட்டமைப்பு உள்ளது. ஆண்டு தோறும் பில்லியன் கணக்கான பணத்தை அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்கிறார்கள். இந்த வகையில் கனடாவில் பிறந்த ஒரு குழந்தையோ அல்லது பிரன்சில் பிறந்த ஒரு குழந்தையோ மிகச் சிறந்த கல்வி தொழில் வாய்ப்புக்களை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது எமது முயற்சியின் பலன் என்று பெரிதாக நாம் பெருமைப்பட எதுவுமில்லை என்பதே என் கருத்து.

ஆனாலும் ஒரு குழந்தையின் கல்வி மற்றும் சமுக வாழ்வில் அதன் பெற்றோரும் பெருமளவு பங்களிப்பு செலுத்துகிறார்கள். அந்தக் குழந்தைக்கு வழிகாட்டியாக ஒரு உந்துசக்தியாக பலவழிகளில் இருக்கிறார்கள். இந்தவகையில் தான் எமது முதல் தலைமுறை வெளிநாட்டவர்களான பெற்றோர் கவனத்திர்கு வருகிறார்கள். பெருமளவில் அகதிகளாக வரும் இவர்கள் இந்த நாடுகளில் உரிய தொழில் மற்றும் கல்வி அறிவு பெற பற்பல ஊக்குவிப்புத் திட்டங்கல் இருந்தும் இவர்கள் அவற்றை குறுகிய நோக்கிற்காக miss use பண்ணுவதை பெருமளவில் காணக்கூடியதாகவுள்ளது.

உதாராணமாக, புதிதாக அகதிகளாக வந்தவர்களுக்கு உடனடியகவே அரசு ஒரு உதவித்தொகை கொடுத்து பல தொழில், கல்வி கற்கும் வாய்ப்புக்களும் வழங்குகிறது. எனினும் இவர்கள் அவற்றை பயன்படுத்தாது, பணத்தை மட்டும் பெற்ருக்கொண்டு களவாக வேறுவெலை செய்து இன்னும் பணம் சம்பதிகிறார்கள். இதற்கு பல காரணன்ங்கல் இருந்த போதிலும்,நீண்டகால அடிப்படையில் இவர்களின் முடிவு மிக மிக தவறானது. கவலைக்குரிய விதத்தில், இவர்களுக்கு நல் வழிகாட்ட வேண்டிய காட்டக்கூடிய பல தமிழர் நிறுவனங்கள் இவற்றை ஊக்குவிக்கின்றன. எனக்குத் தெரிந்த பலர், இலங்கையில் பல்கலைகழக அனுமதி பெற்றவர்கள் (கணித, விஞ்ஞான, வர்த்தக துறைகளில்) இங்கு வந்து படிக்காது கீழ்நிலை உத்தியோகம் செய்கிறார்கள். இங்கு தான் ஊடகங்களின் பங்கு வருகிறது. படித்து நல்ல உத்தியோகத்தில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளையும் கீழ்நிலை வேலை செய்வோரின் குழந்தைகளினையும் ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

அகதியாய் வந்தவர்கள் தானே (இதை நீங்கள் சொன்னதாக நான் சொல்லவில்லை) இவர்கள் என்னத்தைப்படித்து என்னத்தைக் கிழிக்கப்போகிறார்கள் என்றரீதியில் பொறுப்புள்ள தமிழர் நிறுவனங்கள் இவர்களை கைவிடுவதனாலும் தவறாக வழி நடத்துவதினாலும் நாங்கள் தம்மிழர்களே இதற்குரிய விலையையும் கொடுக்கவேண்டிவரும். கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எமது இரண்டாவது புலம்பெயர் சந்ததியின் பெறுபேற்றிலும் தாயகம் தொடர்பான அவர்களின் உணர்வுகளிலும் இது பெரும் தாக்கத்தை செலுத்துகிறது, செலுத்தப்போகிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

Edited by balapandithar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.