Jump to content

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.


Recommended Posts

Posted

இன்று அவுஸ்ரேலியா - சிம்பாவே அணிகளுக்கு இடையான பயிற்சி துடுப்பாட்ட போட்டி நடைபெறவுள்ளது.

காமோன் ஸிம்பாவே :unsure::o :P :P

  • Replies 1k
  • Created
  • Last Reply
Posted

பிரசு சவுத் ஆபிரிக்காவுக்கு வக்காளத்து வாங்குவதன் உள்நோக்கம் என்ன? யாராவது கறுப்பிகளிடம்(இது வேறு நம்மட யாழ் கள கறுப்பி வேறு :unsure: ) மயங்கிவிட்டாரா? வெஸ்ட் இன்டீசுக்கு வேறு செமி பைனல் மட்ச் பார்ப்பதற்கு போவதாய் சொல்லியுள்ளார்! அல்லது சவுத் ஆபிரிக்காவில் தான் அசைலம் அடிக்கப்போறாரோ தெரியாது!

Posted

பிரசு சவுத் ஆபிரிக்காவுக்கு வக்காளத்து வாங்குவதன் உள்நோக்கம் என்ன? யாராவது கறுப்பிகளிடம்(இது வேறு நம்மட யாழ் கள கறுப்பி வேறு :o ) மயங்கிவிட்டாரா? வெஸ்ட் இன்டீசுக்கு வேறு செமி பைனல் மட்ச் பார்ப்பதற்கு போவதாய் சொல்லியுள்ளார்! அல்லது சவுத் ஆபிரிக்காவில் தான் அசைலம் அடிக்கப்போறாரோ தெரியாது!

இதென்னா வம்பா போச்சுப்பா...............? நான் நடுநிலையாத்தான் செய்திகள் போடுறேன், என் வீட்டிற்க்குள் 1000 வெட்டுக் குட்து இருக்கும் அதற்காக மற்றவர்கள் நமது வீட்ட்ற்க்குள் மற்றவன் வரும் போது பாத்திட்டிருப்போமா.........? அதேபோலத்தான் நானும்.............. எனது ஆதரவு இலங்கை அணிக்குத்தான் (குறிப்பு: நான் விளையாட்டை சேர்ப்பதில்லை)........

ஏன்ன்ப்பா ஒரு கறுப்பிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடே போதல்லா அதுக்குள்ள தென்னாப்பிரிக்கா கறுப்பியா ஆள விடுங்கப்பா......... நமக்கு கொன்சம் பொது அறிவு இருக்கப்பா............

எனக்கு அசைலம் அடிக்கிற் ஐடியாலம் இல்ல, எப்பவும் தமிழன, ஈழத்தவன இருக்கத்தான் விரும்புறன்

:unsure:

Posted

அடுத்த ஆட்டம் இந்தியாவிற்கும நெதர்லாந்திற்கும் ஆரம்பமாகவுள்ளது. GMT14:30 க்கு. கமோன் நெதர்லன்.

ஜானா

Posted

காமோன் நெதர்லாண்ட்.............. மாமோய் வினித் உக்காந்து மாட்ச பாருமோய் :P

Posted

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் நெருக்கடி கப்டன் இன்சமாம் காய்ச்சலால் அவதி

பாகிஸ்தான் அணியின் கப்டன் இன்சமாம் உல் ஹக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அணிக்கு சோதனைக்காலம் இன்னும் முடியவில்லை என்றே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

காயம் காரணமாக ரசாக், அக்தர், ஆஷிப் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இதனால், அணி பலவீனமாக உள்ளது. இந்நிலையில் கப்டன் இன்சமாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்ற நாள் முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.

"இன்சமாமுக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல் மட்டுமே. இன்னும் சில நாட்களில் அவர் முழுமையாகக் குணமடைந்து விடுவார். முகமது சமி, யாசிர் அராபத் ஆகியோரை எதிர்பார்த்திருக்கிறோம். ஐ.சி.சி. அனுமதி கிடைத்ததும் அணியில் இணைவார்கள்.

கனடாவுடனான முதல் போட்டிக்கு முன் அணியுடன் அவர்கள் இணைவார்கள் என்று நம்புவதாகவும் பாகிஸ்தான் அணியின் செய்தித் தொடர்பாளர் மிர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவு வந்ததிலிருந்தே வீரர்கள் மந்தமாக இருப்பதை அறிந்த பயிற்சியாளர் ஹோட்டலில் உடற்பயிற்சியும் நீச்சல் பயிற்சியும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

Posted

இந்திய அணி புதிய வியூகம் வகுக்கிறது; 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 பந்து வீச்சாளர்கள்

உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி புது வியூகம் வகுக்கவுள்ளது. 7 துடுப்பாட்ட வீரர்கள், 4 பந்து வீச்சாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய மைதானங்கள் எப்படியுள்ளன என்பதை அறிந்து அதன்படி வீரர்களை அனுப்ப இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப 7துடுப்பாட்ட வீரர்களையும் 4 பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தலாம் என்று வியூகம் அமைத்துள்ளது.

கங்குலி, டெண்டுல்கர், ஷேவாக், உத்தப்பா, ராவிட், தோனி, யுவராஜ்சிங் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்குவர், சகீர்கான், அகர்கார், முனாப் பட்டேல் ஆகியோர் பந்து வீச்சாளர்களாக களமிறங்குவார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரில் எவராவது ஒருவர் மட்டும் இறங்குவார்.

தொடக்க வீரர்களாக ஷேவாக், கங்குலி ஆகியோரை இறக்க திட்டமிட்டுள்ளனர். ஷேவாக் வீழந்து விட்டால் 3 ஆவது வீரராக உத்தப்பா இறங்குவார். 4 ஆவது வீரராக டெண்டுல்கர் இறங்குவார். இடையில் கங்குலி வீழ்ந்து விட்டால் கப்டன் ராவிட் ஆட வருவார்.

20 முதல் 30 ஓவர் நேரத்தில் யுவராஜ் சிங்கையும் அவருக்குப் பின் கடைசியில் தோனியையும் இறக்கவுள்ளனர்.

இந்த துடுப்பாட்ட வீரர்களில் எவராது ஒருவர் ஆடவில்லை என்றால் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

பதான் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. போட்டி தொடங்குவதற்குள் அவர் நல்ல நிலைக்குள் வந்து விட்டால் ஒரு பந்து வீச்சாளரை நீக்கி விட்டு அவரை இறக்குவார்கள். அவர் 3 ஆவது ஆட்டக்காரராகவும் களமிறங்குவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

srilanka.jpg

இதில மச் வேற நாள் போட்டிருக்கே. ஆனா இங்க 15ம் திகதி மச் என்டு போட்டிருக்கே. எது உண்மை?

Posted

உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதில் பார்படோஸ் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. 1 முதல் 3 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மேற்கிந்தியத் தீவுகளில், வரும் மாதத்தில் 50 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

`மெகா' போட்டியை நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதில் உதாரணத்துக்கு பார்படோஸ் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் குறித்து ஒரு அலசல்.

பிரச்சினைகள் பார்படோஸ் விமான நிலையத்திலிருந்து தொடங்குகின்றன. அங்கு நான்கு சுங்க பிரிவுகள் மட்டுமே உள்ளன. ரசிகர்கள் கூடும் விமான நிலையத்துக்கு இது மிகவும் குறைவாகும். இந்திய துணைக் கண்டங்களிலிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. `டாக்ஸிக்' கட்டணங்கள் உங்களுக்கு `ஹார்ட் அட்டாக்'கை வரவழைத்து விடும்.

ஐந்து கிலோ மீற்றர் தூரத்துக்கு பதினைந்து டொலர் (சுமார் 1,500 ரூபா) அறவிடுகிறார்கள். ஹோட்டல்களில் உணவை ஓடர் செய்து அதை சாப்பிடுவதற்குள் நமது பசி போய்விடும். சராசரியாக ஒரு மணி நேரம் சமைப்பதற்கு எடுத்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் தவிர, `இன்ரநெற்' வசதி படுமோசம்.

பெரும்பாலான ஹோட்டல்களில் `இன்ரநெற்' இணைப்பு கிடையாது. இன்ரநெற் மையங்களும் மிகக் குறைவே. `பிராட்பாண்ட்' தொழில்நுட்பம் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. இதனால், போட்டி சம்பந்தமாக செய்திகள் அனுப்பும் பத்திரிகையாளர்கள பாடு திண்டாட்டம். தொலைபேசிக் கட்டணங்களும் மிக அதிகம்.

ஐந்து டொலர் (சுமார் 580 ரூபா) மதிப்பிலான தொலைபேசி அட்டை வைத்து இரண்டு நிமிடங்களுக்கு மேல் இலங்கையில் உள்ள ஒருவரைத் தொடர்பு கொள்ள முடியாது. தொலைபேசி அட்டை வைத்திருந்தாலும் கூட சில ஹோட்டல்கள் ஒவ்வொரு முறை அழைப்பு எடுப்பதற்கும் மூன்று டொலர்கள் வரை (சுமார் 330 ரூபா) அறவிடுகின்றன.

உள்ளூர் வாசிகள் பலர் குறைந்த வாடகைக்கு ரசிகர்கள் தங்கள் வீடுகளின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால், ஹோட்டலில் ரூம் கிடைக்காமல் திண்டாடும் நிலைமை அதிகம் இருக்காது. இந்தியத் தெருக்களில் சச்சின், கங்குலி என நட்சத்திர வீரர்கள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடையாது.

ஆனால், கிரிக்கெட்டை அங்கு பிரபலப்படுத்த நட்சத்திர வீரர்கள் அடிக்கடி சிறுவர்களுடன் இணைந்து விளையாடுவதைக் காண முடியும். `பீச் கிரிக்கெட்' வெகு பிரபலம். கூடுதலாக கலிப்சோ நடனம், இசை என ரசிகர்களின் கண், காதுகளுக்கு நிச்சயம் விருந்துண்டு. சில இடையூறுகள் இருந்தாலும் உலகக் கிண்ணத் தொடரை வெற்றிகரமாக நடத்த மேற்கிந்திய அதிகாரிகள் முனைப்புடன் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Posted

வடிவேல் நீங்க இணைத்துள்ள கெல்மெட் போட்டவரின் படத்தை பார்க்கும் போது யாழ் வீதிகளில் நிற்கும் ஆமி போல தான் இருக்கு. இவர்களுடைய விளையாட்டை ரசிக்க வேணாம் பேசாமல் எங்கட பக்கம் வாங்கோ.

Posted

இதில மச் வேற நாள் போட்டிருக்கே. ஆனா இங்க 15ம் திகதி மச் என்டு போட்டிருக்கே. எது உண்மை?

13 ஆம் திகதி தான் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமாகின்றன. நேர அட்டவணையை பார்க்க:

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

Posted

தற்போதைய பயிற்சியாட்டத்தின் கள நிலவரம்

இந்தியா - நெதர்லாந்து

இந்தியா தற்போது 248 ஓட்டங்களுடன் 42.2 ஓவர்களுக்கு 6 விக்கட் இழப்பிற்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நியூசிலாந்து - பங்காளதேசம்

நியூசீலாந்து 16 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 50 ஓட்டங்களுடன் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தான் - கனடா

பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு 30 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை பறி கொடுத்து விட்டு ஆடிக் கொண்டிருக்கின்றது.

ஓஸ்ரேலியா - சிம்பாப்வே தற்போது ஆரம்பமானது.

ஜானா

Posted

அவுஸ்ரேலியா - 290 ஓட்டங்கள் (50 ஓவர்கள்) 7 விக்கற் இழப்பு.

சான் வட்ஷன்- 81 ஓட்டங்கள்

மைக்கல் கிளாக் - 82 ஓட்டங்கள்

சிம்பாவே - 184 ஓட்டங்கள் All Out.

--------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் - 273 ஓட்டங்கள் (50 ஓவர்கள்) 8 விக்கற் இழப்பு

கனடா - 196 ஓட்டங்கள் All Out.

---------------------------------------------------------------------------------------

இந்தியா - 300 ஓட்டங்கள் (50 ஓவர்கள்) 9 விக்கற் இழப்பு

நெதர்லாந்து - 118 ஓட்டங்கள் All Out.

Posted

பங்களாதேஷ்---நியூசிலாந்து ஸ்கோர் என்ன மாதிரி?

பங்களாதேஷ் நியூசிலாந்துக்கு அடிக்கும் போல் உள்ளதே?

பங்களாதேஷ் சிறீ லங்காவை ஆரம்பசுற்றில் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Posted

பங்களதேஷ் நியூசிலாந்தை இரண்டு விக்கட்டுகளினால் வெற்றிபெற்றுவிட்டது போல் இருக்கிறதே?

Bangladesh embarrass Black Caps

By JON BRAMLEY - Reuters | Wednesday, 7 March 2007

BRIDGETOWN: Bangladesh has secured a stunning pre-World Cup warm-up victory over New Zealand at the 3Ws Stadium.

Set 227 for victory, the rank outsiders made it with two wickets in hand after tail-ender Mashrafe Mortaza blasted two successive sixes off James Franklin in the penultimate over.

It was Bangladesh's first victory in eight one-day matches against New Zealand and brings the Black Caps crashing back to earth after the 3-0 whitewash of Australia.

Bangladesh had looked behind the clock for most of their run-chase after Jacob Oram, nursing a broken finger, had battered 88 in the New Zealanders' 226 all out.

They started in style with 17-year-old Tamim Iqbal tearing apart the Kiwi attack with a quickfire 46 from 48 balls including a huge six off Daniel Vettori.

His fellow opener Javed Omar weighed in with 45 but after those two had departed the Bangladesh innings lacked momentum until the late assault from fast bowler Mortaza.

He hit 30 from 14 balls including three sixes, one of which came off the bowling of New Zealand spearhead Shane Bond.

Mortaza had also shone with the ball, claiming four for 44.

Earlier, the hefty 28-year-old Oram had repaired the New Zealand innings at 75 for six when he and Brendon McCullum blasted a seventh-wicket 105-run partnership.

Oram arrived in the Caribbean last week nursing a badly broken finger on his left hand and was intending to play with a fibreglass sheath to protect it from further damage.

He and McCullum (46) barely gave a chance before the latter was run out by a direct hit from the outfield by Mortaza.

Oram eventually went 12 short of his ton when he holed out to Syed Rasel at long-on. He hit five fours and a massive straight six in his 107-ball stay.

Mortaza was the pick of the Bangladesh bowlers with four for 44 off 9.2 overs.

Posted

ஓம் மாப்பிளை அண்ணா பங்களாதேஸ் நியூசிலாந்தை வென்று விட்டது :mellow:

Posted

எல்லாம் Dav WhateMore இன் மாயஜால வேலைகள்தான். தன்னை அவமதித்த சிறீ லங்கா கீரிக்கட்டு போர்ட்டுக்கு உலககோப்பை முதல்சுற்று ஆட்டத்தில் பங்களாதேசை வெற்றிபெற வைப்பதன் மூலம் நல்ல பாடம் படிப்பித்து பழிதீர்க்க Dav What more கங்கணம் கட்டி இருக்கக்கூடும். Dav Whatmore இல்லாவிட்டால் சிறீ லங்கா 1996 உலகக் கோப்பையை தூக்கியிருக்குமா என்பது சந்தேகமே!

Bangladesh Coach Dav WhatMore

_39867247_whatmore203x152.jpg

Posted

வங்கத்துப் புலிகளின் இந்த வெற்றி கிரிக்கட் ஜம்பவான்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும். போராடி வெல்லும் குணம் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக பாங்களதேசத்திடம் உள்ளது.

ஜானா

Posted

மேற்கிந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றி. (ஆட்ட விபரம்)

சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் மேற்கிந்திய அணி கென்யாவுடனான பயிற்சிப் போட்டியை 21 ஓட்டங்களால் வென்றது. இதன்போது சாமுவேல்ஸ் சதம் விளாசினார்.

ஜமைக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களமிறங்கிய சந்தர்போல், கெயில், ஜோடியால் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சந்தர்போல் ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்தார். என்றாலும், கெயில் சாமுவேல்ஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது. சாமுவேல்ஸ் 100 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக்கொண்டார். கெயில் 75 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஓடோயோ, விரையா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலெடுத்தாட களமிறங்கிய கென்ய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. ஒபுயா ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பவல், பொல்லார்ட், கொலிமோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து மேற்கிந்திய அணி தனது கடைசி பயிற்சி போட்டியில் நாளை இந்தியாவை சந்திக்கிறது.

-Virakesari-

Posted

சொல்ல முடியாது. அந்த நாட்டவனுடன் பேசினால் அவன் கூறுவது சீக்கிரம் நாமும் சிரிலங்கா போல் உலக கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்பதே. அவ்வளவு நம்பிக்கை. ;)

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறீலங்காவும் கொட்லன்டும் விளையாடின முடிவு எங்கயப்பா?

Posted

சிரிலங்கா 294 - 50 - 7

ஸ்கொட்லன்ட் 159 - 41.2 - சகல விக்கட்டுகளையும் இழந்து.

ஜானா

Posted

வடிவேலு ஸ்ரீ லங்கா அணியின் தீவிர ஆதரவாளர் போல இருக்கு :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.