Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப்ரீ டயாபடீஸ்... அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்..!

Featured Replies

தும்மல், இருமல் எல்லோருக்கும் அவ்வப்போது வரும். ஆனால் டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயும் இன்றைக்குப் பெரும்பாலானோர் மத்தியில் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முன்னொரு காலத்தில் அது வசதி படைத்தவர்களின் நோய் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. "மருத்துவத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்தபோதிலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இந்நாள் வரை பதில் தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, 'வரும் முன் காப்பது சிறப்பு' என்பதே சர்க்கரை நோயைப் பொருத்தமட்டில் சாலச் சிறந்தது" என்கிறார் பொது நல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணரான பாஸ்கர்.

ப்ரீ டயாபடீஸ்

டயாபடீஸ்

நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின்மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.Dr. பாஸ்கர்

அதென்ன ப்ரீ டயாபடீஸ்?

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பர். சரியான நேரத்தில் இதனைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை முறைகளும் பயிற்சியும் மேற்கொண்டால் ப்ரீடயாபடீஸிலிருந்து டைப்-2 சர்க்கரை (தேவைக்கும் குறைவாக இன்சுலின் சுரத்தல்) எனும் நிலைக்குச் செல்வதைத் தடுக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

முடி உதிர்தல்

பாதிப்புகள் என்னென்ன?

முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்கள் (குறிப்பாக ரெட்டினா பகுதி) பாதிப்படைதல், உடம்பில் எங்கேனும் அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

காய்கறிகள்

எந்த மாதிரியான உணவு உட்கொள்ளலாம்?

கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் காய்கறிகள், நல்ல கொழுப்புள்ள அல்லது கொழுப்பு குறைவாக உள்ள உணவு வகைகள், பழங்கள் (குறிப்பாக கேரட், ஆரஞ்சு, மாதுளை முதலியவற்றை பழச்சாறாக அருந்தாமல் அப்படியே எடுத்துக் கொள்வதால் முழுமையான சத்துகளைப் பெற முடியும்). மருத்துவர் பரிந்துரைத்த பிரத்யேகமான ஃபுட் சார்ட் எனப்படும் உணவு அட்டவணையைப் பின்பற்றுதல் என்பது ப்ரீடயாபடீஸ் மற்றும் டயாபடீஸ் உள்ளவர்களுக்கு சிறந்தது.

பழங்கள்

எவற்றை தவிர்க்க வேண்டும்?

ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பாஸ்ட் புட் உணவுகள்

என்ன மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்ளலாம்?

எளிய உடற்பயிற்சிகளே போதுமானது. வாக்கிங், யோகா போன்ற எளிய பயிற்சிகளே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு குடும்பத்தினரின் அன்பான ஆதரவும் தேவைப்படுகிறது.

யோகா

முறையான உணவு முறைகளும், சரியான பயிற்சியும் இருந்தாலே இந்தச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். அப்படி வந்தாலும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

http://www.vikatan.com/news/health/90542-how-to-prevent-prediabetes-and-its-symptoms.html?artfrm=suggarticle_free

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்...!

 
உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்களோ, அதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும். பசியோடு இருக்க வேண்டியது இல்லை... நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வை இது தரும். 
சர்க்கரை நோய் என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால், சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். அவ்வகை உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்காக...

shutterstock_80855992_09496.jpg

பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும். 

shutterstock_212382772_09043.jpg


மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்புசெல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

shutterstock_67699489_09198.jpg


நார்ச்சத்து அதிகம் உணவு: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

shutterstock_115127377_09410.jpg


பட்டை: பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.

 

shutterstock_84179392_09593.jpg


நட்ஸ்: நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது. 

shutterstock_121614085_09151.jpg


சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது. எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். நோய்த்தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.
கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சுறுசுறுப்பாக்குகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது. 

shutterstock_86774995_09300.jpg


பீன்ஸ் வகைகள்: பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

 

shutterstock_69881389_09188.jpg

வெந்தயம்: வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.

shutterstock_147817271%20(1)_09411.jpg

 

நாவல் பழம்: நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது

http://www.vikatan.com/news/health/73087-10-foods-that-control-diabetes-.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

 

காலை உடற்பயிற்சியின் 7 நன்மைகள்

   p34a.jpg

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம் காலை உடற்பயிற்சி. சிலருக்குக் காலைத் தூக்கத்துக்கும் உடற்பயிற்சி ஆர்வத்துக்கும் நடக்கும் போரில் பெரும்பாலும் காலைத் தூக்கமே வெற்றிபெறுகிறது. இதனால், பல நாட்கள் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம். 

 

காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
 
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் ( norepinephrine) எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன்   (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.

                                         shutterstock_196140077.jpg 

உடற்பயிற்சி, வாழ்நாளை   அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது. வயதாகும்போது செல்களின் செயல்திறன் குறைந்து, அவை இரண்டாகப் பிரியத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, தோல் செல்களின் மையப் பகுதியான நியூக்ளியஸில் உள்ள குரோமோசோம்களின் அளவு சிறிதாகும். இதனால், தோலில் சுருக்கம் விழும். பல வருடங்கள் உடற்பயிற்சி செய்வதால், இந்த குரோமோசோம்களின் நீளம் குறையத் தாமதமாகிறது என்றும், இதனால் தோலில் சுருக்கம் விழுவதும் தள்ளிப்போடப்படுகிறது என்றும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் (blood vessel ) உருவாகும்.
 
கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்தஅளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.

முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
 
தீவிர நோய்களுக்கு உள்ளானவர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்டநாட்களாக இருந்து வருகிறது.  கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா   மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம்   உள்ளிட்ட தீவிரநோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; இதன் மூலமாக நோயின் தாக்கம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

http://www.vikatan.com/news/health/68202-seven-benefits-of-morning-exercises.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.