Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளம் வடிந்தது உயிரிழப்புகள் 203 96 பேர் மாயம் ஒன்றரை இலட்சம் குடும் பங்கள் பாதிப்பு 9 ஆயிரம் வீடுகள் சேதம்

Featured Replies

வெள்ளம் வடிந்தது உயிரிழப்புகள் 203

 

96 பேர் மாயம் ஒன்­றரை  இலட்சம் குடும் பங்கள் பாதிப்பு  9 ஆயிரம் வீடுகள் சேதம்  

(எம்.எப்.எம். பஸீர், ஆர்.யஷி)

நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக பெய்த அடை­மழை தற்­போது ஓய்ந்­துள்ள நிலையில் அதனால் ஏற்­பட்ட வெள் ளம் மற்றும் மண் சரிவு கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 203 ஆக உயர்ந்­துள்­ளது. அத்­துடன் இந்த அனர்த்­தங்கள் கார­ண­மாக 63 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது. 

நாட­ளா­விய ரீதியில் 15 மாவட்­டங்­களை  பாதிக்கும் வித­மாக ஏற்­பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்தம் கார­ண­மாக மொத்­த­மாக ஒரு இலட்­சத்து 64 ஆயி­ரத்து 264 குடும்­பங்­களைச் சேர்ந்த 6 இலட்­சத்து 31ஆயி­ரத்து 346 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் 19 ஆயி­ரத்து 876 குடும்­பங்­களைச் சேர்ந்த 77 ஆயி­ரத்து 643 பேர் 368 தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்ப்ட்­டுள்­ளனர்.  

இவர்­க­ளுக்­கான உணவு உள்­ளிட்ட அனைத்து வச­தி­களும் அந்­தந்த மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யங்கள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இந்த அனர்த்­தங்கள் கார­ண­மாக 1508 வீடுகள் முற்­றா­கவும் 7617 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக மாவட்ட செய­ல­கங்கள் உறுதி செய்­துள்­ளன.

அனைத்து மாவட்­டங்­க­ளிலும் மழை ஓய்ந்­துள்ள நிலையில் வெள்­ளத்தில் மூழ்­கி­யி­ருந்த காலி, மாத்­தறை, களுத்­துறை மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்கள் முற்­றாக மீண்­டுள்­ளன. வெள்ளம் வடிந்­தோ­டி­யுள்ள நிலையில் மீட்புப் பணி­களும் நிவா­ரணப் பணி­களும் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக இன்னும் 25 வீதம் மீட்புப் பணி­களே எஞ்­சி­யுள்­ள­தாக அர­சாங்கம் நேற்று அறி­வித்­தது.

எவ்­வா­றா­யினும் மழை கார­ண­மாக நாட்டில் எந்­த­வொரு நீர் தேக்­கமும் உயர் மட்­டத்தை அடை­ய­வில்லை என சுட்­டிக்­காட்­டிய அர­சாங்கம், அனைத்து நீர் தேக்­கங்­களும் 39 வீதம் மட்­டுமே நிறைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யது.

வெள்ளம் கார­ண­மாக அதி­க­மான உயி­ரி­ழப்­புக்கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பதி­வா­கி­யுள்­ளன. இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 84 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 29 பேர் காணாமல் போயுள்­ளனர். மேலும் 28 காய­ம­டைந்து சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர். இத­னை­விட களுத்­துறை மாவட்­டத்தில் 63 மர­ணங்­களும், மாத்­தறை மாவட்­டத்தில் 28 மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ள­துடன் அந்த மாவட்­டங்­களில் முறையே 52,15 பேர் காணாமல் போயுள்­ளனர்.

தெற்கின் காலி, மாத்­தறை, மேற்கின் களுத்­துறை , சப்­ர­க­மு­வவின் இரத்­தி­ன­புரி ஆகிய பகு­தி­களில் நேற்று வெள்ள நீர் பெரு­ம­ளவு வடிந்­தோ­டிய நிலையில், வெள்­ளத்­தினால் மூழ்­கி­யி­ருந்த பகு­தி­களை சுத்­தி­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களும், மண் சரிவில் சிக்­குன்­டோரை மீட்கும் பணி­களும் நேற்றும் தொடர்ந்­தன.

 தெற்கில் வெள்ள நீர் வடிந்­தோடும் நிலையில் நிவா­ரணம் மற்றும் தொற்று நோய் தொடர்பில் பெரும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. களுத்­துறை காலி, மாத்­தறை, மாவட்­டங்­களில் முப்­ப­டை­யி­னரும் இணைந்து நிவா­ரண, மீட்புப் மற்றும் நிவா­ரணப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில் இரத்­தி­ன­பு­ரியின் பல பகு­தி­களில் நிவா­ரண உத­விகள் கிடைக்­க­வில்லை என்ற முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

இத­னை­விட மாத்­தறை நில்­வளா கங்­கையின் நீர் மட்டம் குறைந்­துள்ள நிலையில் வெள்ள நீர் வடிந்­தோடி வரு­கின்­றது. எனினும் பொது மக்கள் வெள்­ளத்தால் மூழ்­கி­யி­ருந்த தமது வீடு­க­ளுக்கு செல்ல தொடர்ந்தும் அச்ச நிலையில் உள்­ளனர். குறிப்­பாக முத­லைகள் வீடு­க­ளுக்குள் புகுந்­துள்­ளதால் இத்­த­கைய அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட்­டுள்­ளன. நில்­வலா கங்­கையில் உள்ள முத­லை­களே வெள்ள நீரில் இவ்­வாறு வீடு­க­ளுக்குள் புகுந்­துள்­ளமை சுட்­டிக்­காட்­டித்­தக்­க­தாகும்.

மாத்­தறை மாவட்டம்

மாத்­தறை மாவட்­டத்தின் 17 பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் வெள்ளம் மற்றும் மண் சரிவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இம்­மா­வட்­டத்தில் 28 உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­துடன் 15 பேர் காணாமல் போயுள்­ளனர். அம்­மா­வட்­டத்தில் மட்டும் 48864 குடும்­பங்­களைச் சேர்ந்த 182711 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்ள நிலையில் அவர்­களில் 3054 குடும்­பங்­களைச் சேர்ந்த 10791 பேர் 21 முகாம்­களில் தங்­க­வைக்­கப்ப்ட்­டுள்­ள­தாக மாத்­தறை மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ பணிப்­பாளர் லெப்­டினன் கேர்ணல் சிரி­வர்­தன தெரி­வித்தார். மாத்­த­றையில் 658 வீடுகள் முற்­றா­கவும் 3314 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் அம்­மா­வட்­டத்தில் சேத­ம­டைந்­துள்­ளன.

 காலி மாவட்டம்

தொடர்ச்­சி­யாக பெய்த அடை மழைக் கார­ண­மாக காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கிய போதும் நேற்று அம்­மா­வட்­டத்தின் அனைத்து மக்கள் குடி­யி­ருப்புப் பகு­தி­களும் வெள்­ளத்தில் இருந்து மீண்­டி­ருந்­தன. கிங் கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்தன் விளை­வாக ஏற்­பட்ட வெள்­ளத்தில் குறித்த கங்­கையை அண்­மித்­துள்ள பகு­திகள் அனைத்தும் நீரில் மூழ்­கிய போதும் தற்­போது வெள்ளம் வடிந்­தோடி வரு­வ­தாக காலி மேல­திக மாவட்ட செய­லாளர் கமல் ரண­சிங்க தெரி­வித்தார்.

அனர்த்தம் கார­ண­மாக காலி மாவட்­டத்தில் 25692 குடும்­பங்­களைச் சேர்ந்த 102747 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 15 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­க­ட­டினார். பாதிக்­கப்­பட்­டோரில் 633 குடும்­பங்­களைச் சேர்ந்த 1366 பேர் 11 முகாம்­களில் தங்க வைக்­கப்ப்ட்­டுள்­ளனர்.

 இத­னை­விட காலி மாவட்­டத்தில் மட்டும் 180 வீடுகள் முற்­றா­கவும் 550 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளமை தொடர்பில் இது­வரை தக­வல்கள் பதி­வ­கி­யுள்­ளன.

களுத்­துறை மாவட்டம்

களுத்­துறை மாவட்­டத்தில் இயற்கை அனர்த்தம் கார­ண­மாக 63 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 20 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக மேலும் 52 பேர் காணாமல் போயுள்­ள­தாக களுத்­துறை மாவட்ட செய­லாளர் யூ.டி.சி. ஜயலால் தெரி­வித்தார்.

இது­வரை களுத்­துறை மாவட்­டத்தில் 39859 குடும்­பங்­களைச் சேர்ந்த 152481 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் அவர்­களில் 3399 குடும்­பங்­களைச் சேர்ந்த 13689 பேர் 94 பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைக்­கப்ப்ட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு சொந்­த­மான 331 வீடுகள் முற்­றா­கவும் 1000 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன.

களுத்­துறை, மது­ரா­வல, தொடன்­கொட பிர­தேச செய­லகப் பிரி­வு­களின் கீழ் உள்ள பகு­திகள் பல நேற்றும் அபாய எச்­ச­ரிக்­கையின் கீழேயே இருந்­தன. மேல் மாகா­ணத்­துக்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காண0படும் நிலையில் களுத்­துறை மாவட்­டத்­துக்­கான எச்­ச­ரிக்கை தொடர்­கி­றது.

 குறிப்­பாக புளத் சிங்­கள உட்­பட பல பகு­தி­களில் பதி­வான மண் சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்­கின்­றன. இந் நிலையில் மீட்புப் பணி­களை இரா­னு­வத்­தினர் தொடரும் நிலையில் கடற்­ப­டை­யி­னரும் விமா­னப்­ப­டை­யி­னரும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லேயே அதிக உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அங்கு 84 உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.

மண் சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் நேற்று அம்­மா­வட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் வெள்ள நீர் வடிந்­தோ­டி­யி­ருந்தை அவ­தா­னிக்க முடிந்­தது.

 இரத்­தி­ன­புரி யின் 325 கிராம சேவகர் பிரி­வுகள் வெள்ளம் , மண் சரி­வினால் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளன.

 மேலும் 11 மாவட்­டங்­களில் அடை மழை மற்றும் மண் சரிவு கார­ண­மாக பாதிப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவற்றில் குறிப்­பாக அம்­பாந்­தோட்டை கம்­பஹா மற்றும் கேகாலை மாவட்­டங்­களில் உயிர் சேதங்களும் பதிவாகியுள்ளன. அம்பாந்தோட்டையில் 2287 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேகாலையில் 1571 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்கள் நான்கும் பதிவாகியுள்ளன. இதனைவிட கம்பஹா மாவட்டத்தில் 1670 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றைத் தவிர கொழும்பில் 6446 குடும்பங்களும், மாத்தளையில் 34 குடும்பங்களும், கண்டியில் 27 குடும்பங்களும், வவுனியாவில் 31 குடும்பங்களும், முல்லைத்தீவில் 28 குடும்பங்களும் திருமலையில் 206 குடும்பங்களும் மட்டக்களப்பில் நான்கு குடும்பங்களும் நுவரெலியாவில் 87 குடும்பங்களும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.