Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Featured Replies

பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

 

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார்.

'' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது, அமெரிக்காவை தண்டிக்கும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ளமுடியாது,'' என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி தனது வார்த்தைகளில் டிரம்ப் தெரிவித்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தனது தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்த முடிவு அமெரிக்காவின் இறையாண்மை மீது எதிர்காலத்தில் ஏற்படும் ஊடுருவல்களில் இருந்து பாதுகாக்கும் என்றார்.

மனிதர்களின் செயல்களால் உலக வெப்பமயமாதல் ஏற்பட்டது என்ற அறிவியல் கருத்துக்கு அவர் சவால் விடவில்லை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலைகளின் விளைவுகள் பற்றியும் குறிப்பிடவில்லை.

http://www.bbc.com/tamil/global-40129077

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... ட்ரம்ப் முடிவால் பிரான்ஸ் அதிபர் அதிருப்தி!

 

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்ததற்கு, பிரான்ஸ் அதிபர் மக்ரான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மக்ரான்

2015 ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து... இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதற்கு ஏற்றார்ப்போல, நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இதனிடையே, அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்துவிடும் எனக் கூறி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

 

இதையடுத்து, ட்ரம்ப்பின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார், பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மக்ரான். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'நாம் எங்கு வாழ்ந்தாலும், யாராக இருந்தாலும், நம் அனைவருக்கும் பொறுப்பு ஒன்றுதான். அது, இந்த பூமியைப் பாதுகாப்பது. அமெரிக்காவின் முடிவை மதிக்கிறேன். ஆனால், அமெரிக்கா மற்றும் இந்த பூமிக்கு எதிராக செய்யப்படும் மிகப்பெரிய தவறு இது' எனக் கூறியுள்ளார். மேலும் 'ட்ரம்ப்பின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ள விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், குடிமகன்களுக்கு பிரான்ஸின் கதவுகள் திறந்தே இருக்கும்' என மக்ரான் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/world/91089-immanuel-macron-unhappy-with-trumps-decision.html

  • தொடங்கியவர்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா: இந்தியா, சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

 

 
 
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் | படம்: ஏபி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் | படம்: ஏபி
 
 

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, "பாரீஸ் ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன.

பாரீஸ் ஒப்பந்தத்தால் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இரட்டிப்பாகும். மேலும் நிலக்கரி சுரங்கங்களை கட்டுவதற்கும் சீனாவுக்கு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா எதையும் செய்ய முடியாது.

நான் அமெரிக்காவுக்கு பணிபுரிவதற்காகவே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பாரீஸ் ஒப்பந்ததிற்காக அல்ல. அமெரிக்கா வரிசெலுத்தும் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள விரும்புகிறது.

நான் அமெரிக்க மக்களுக்காக தினமும் சண்டையிடுகிறேன். அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. எனவே, அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் - விவரம்:

பாரீஸ் ஒப்பந்தம் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாடு கரியமில வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் நிலக்கரி நிலையங்களை மூடுதல் போன்றவற்றை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வலியுறுத்துகிறது. இந்த விதிமுறை கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணைந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பாரீஸ் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தில் முடக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார்.

இந்த நிலையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/பாரீஸ்-பருவநிலை-ஒப்பந்தத்திலிருந்து-வெளியேறியது-அமெரிக்கா-இந்தியா-சீனா-மீது-ட்ரம்ப்-குற்றச்சாட்டு/article9718239.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதால் ஏற்படும் ஐந்து விளைவுகள்

 

பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, உலகின் மற்ற நாடுகளின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?

காற்றாலை மின்சாரம்படத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்காவின் விலகல் பாரிஸ் ஒப்பந்தத்தையும், உலகத்தையும் பாதிக்கும்

உலகின் தட்பவெப்ப நிலையை இரண்டு செல்சியசுக்கு குறைவாக வைத்திருக்கவேண்டும் என முன்மொழியப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை உலக நாடுகள் அடைவதை , டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, மேலும் சிரமமாக்கும் என்பதில் ஐயமில்லை.

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு 15 சதவீதமாகும்.

ஆனால் அதிகரிக்கும் தட்பவெப்பத்திற்கு எதிராக போராடும் உலகின் வளரும் நாடுகளின் முயற்சிகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.

வரைபடம்

''இந்த முடிவு ஒரு வரலாற்றுத் தவறாக பார்க்கப்படும். யதார்த்தம் மற்றும் அறநெறி இரண்டில் இருந்தும் வெளியேறி எவ்வாறு ஒரு உலக தலைவர் தனித்து செயல்பட்டார் என்று நமது பேரக்குழந்தைகள் நமது முடிவுகளை திரும்பிப் பார்த்து அதிர்ந்து போவார்கள்,'' என்று சியரா கிளப் என்ற அமெரிக்க சுற்றுச் சூழல் குழுவை சேர்ந்த அமெரிக்க சுற்றுச்சூழல்வாதி மைக்கேல் ப்ருனே தெரிவித்தார்.

அமெரிக்காவின் சிரமம் , சீனாவுக்கு வாய்ப்பு

பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்றிய உறவு என்பது, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையிலானதாகும்.

சிறிய தீவு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன், ''பெரிய லட்சியத்திற்கான கூட்டணி'' ஒன்றை கட்டியமைப்பதில் ஒரு பொதுவான கருத்துடன்பாட்டைக் காண்பதில் ,அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவராலும் முடிந்தது.

பாரிஸ் உடன்படிக்கைக்கு சீனா தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது; மேலும், கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த கூடுதலான ஒத்துழைப்பை அளிப்பது தொடர்பாக நாளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு அறிக்கையை வெளியிடவுள்ளது.

''இந்த விவகாரத்தில் யாரும் பின்னால் விடப்படக் கூடாது, ஆனால், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் முன்னோக்கி செல்வதாக முடிவு எடுத்துள்ளனர், '' என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் மிகுவல் ஆரியாஸ் கெனெட்டே தெரிவித்துள்ளார்

அதிகரிக்கும் தட்பவெப்ப நிலையை குறைக்கும் உலக அளவிலான முயற்சிகளில், அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க நாடுகளாக உருவாகலாம்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைEPA

உலக வணிக தலைவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்

அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் தொடரவேண்டும் என்பதற்கு ஆதரவான அழுத்தமான குரலை எழுப்புபவர்கள் அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்கள்தான்.

கூகுள், ஆப்பிள் மற்றும் பெரிய எரிபொருள் தயாரிப்பாளர்களான எக்ஸான் மொபில் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா நிலைக்கவேண்டும் என்று டிரம்ப்பை வலியுறுத்தியுள்ளனர்.

எக்ஸான் மொபில் தலைவர் டேரன் வூட்ஸ் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தில், இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா இருந்து கொண்டேகூட, ''போட்டியிடுவதற்கான நல்ல நிலையில்'' அமெரிக்கா உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தில் நிலைத்திருப்பது என்பது, ''பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மேடையில் இருந்துகொண்டு ஒரு சரிசமமான ஒரு தளத்தை உறுதிப்படுத்துவது போன்றது,'' என்று கூறியுள்ளார்.

நிலக்கரி பயன்பாடு திரும்புவது சாத்தியமல்ல

நிலக்கரி பயன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகியதை அடுத்து அந்த நிலை மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் எதிரொலிக்கின்றது.

ஐக்கிய ராஜ்ஜியம் 2025 ஆண்டு வாக்கில் மின்சாரத்திற்காக நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தவுள்ளது.

அமெரிக்காவில் கூட, தற்போது சூரிய ஒளி மையமாக கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாதி அளவுதான் நிலக்கரி ஆலைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை என்ற நிலை உள்ளது.

இன்னும் சில தசாப்தங்களுக்கு வளரும் நாடுகள் நிலக்கரியை மின்சாரத்திற்கான பிரதான ஆதாரமாக கொண்டிருக்கக்கூடும் என்றாலும், அதனால், காற்றின் தரத்தில் ஏற்படும் விளைவு மற்றும் மக்களிடையே மாசுபாடு பற்றிய கோபம் என்பவை, இந்த நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தப்படுவதற்கான காரணிகளாக இருக்கும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(renewables) சாதனங்களின் விலைகள் வீழ்ச்சியடைவது, வளர்ந்துவரும் நாடுகள் பசுமையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிச் செல்வதை ஊக்கப்படுத்துகிறது.

இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஏலங்களில் சூரிய ஆற்றலுக்கான விலை, நிலக்கரிஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான சராசரி விலையை விட 18% குறைவாக இருந்திருக்கிறது.

டிரம்ப் விலகினாலும் அமெரிக்க வாயு உமிழ்வு குறையும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் அமெரிக்காவில் காரியமில வாயுவின் வெளிப்பாடு குறையும்.

முந்தைய அதிபர் ஒபாமா திட்டமிட்டத்தில் கரியமிலவாயுவின் வெளிப்பாடு பாதியளவு குறையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

ஏனெனில், அமெரிக்காவின் மின்சார ஆற்றல் தயாரிப்பு நிறுவனங்கள் நிலக்கரியை காட்டிலும் இயற்கை எரிவாயுவை ஆதாரமாக கொண்டுள்ளன.

பாறைகளை குடைந்து அதில் சிக்கியிருக்கும் எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும் தொழில்நுட்பம் 'பிராக்கிங்' ( fracking) எனப்படும். இந்த தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது இயற்கை எரிவாயுவின் விலைகளில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்துவரும் புதுப்பிக்கும் ஆற்றல்(renewable sources) சாதனங்களுடன், இயற்கை எரிவாயு, நெகிழ்வான மற்றும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது என்பதால், அதை எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள் விரும்புகின்றன.

http://www.bbc.com/tamil/india-40130208

  • தொடங்கியவர்

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: உலக நாடுகளின் பார்வை

 
 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பருவ நிலை மாற்றம் தொடர்பான 2015ல் கையெழுத்தான ஒரு ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதற்கு ஆதாரவாகவும், எதிராகவும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாரிஸ் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின்போது, அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

''பாரிஸ் ஒப்பந்தத்தில் நீடிக்கும் நாடுகள்தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் பயன்களை பெரும் நாடுகள் ஆகும். இந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவின் தலைமை இல்லாத நேரத்தில் கூட, எதிர்காலத்தை நிராகரிக்கும் ஒரு சில நாடுகளுடன் இந்த நிர்வாகம் கைகோர்த்தால் கூட, நமது மாகாணங்கள், நகரங்கள், தொழில்நிறுவனங்கள் முயற்சித்து, ஒப்பந்தத்தில் இருப்பதை காட்டிலும் அதிகமாக செய்து, நமக்குக் கிடைத்தி்ருக்கும் ஒரே உலகத்தை, நம் எதிர்கால சந்ததிகளுக்காக காப்பாற்ற உதவ வேண்டும்.''

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்

''இன்று இரவு நான் உறுதியாக சொல்லுகிறேன்: ஒரு ஆர்வம் குறைந்த உடன்பாட்டை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நிச்சயமாக செய்யமாட்டோம். காலநிலை பற்றி தவறாக எண்ணாதீர்கள்; நம்மிடம் வேறு திட்டம் இல்லை ஏனெனில் நம்மிடம் வேறு பூமி இல்லை.''

அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்

''உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் இந்த நேரத்தில்,நமது எதிர்கால சந்ததியினருக்காக இந்த பூமி கோளை பாதுகாக்கும் முயற்சிகளில் இருந்து விலகிகொள்ளும் தார்மீக உரிமை நமக்கில்லை.''

அமெரிக்க குடியரசு கட்சியின் சபாநாயகர் பால் ரயன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்க குடியரசு கட்சியின் சபாநாயகர் பால் ரயன்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி

''முதலில் அமெரிக்கா ("America First") என்ற உறுதிமொழியைத் தந்த அதிபர் நம்முடைய நாட்டை கடைசியாக வைக்கும் சுய அழிவு நடவடிக்கையை எடுத்துள்ளார். இது அமெரிக்க தலைமையை இதற்கு முன் எப்போதும் காணாத வகையில், செல்லாக்காசாக்கும் ஒரு முடிவு. இதன் வாயிலாக அமெரிக்காவின் செல்வாக்கு இழப்பு, வேலை இழப்பு, மற்ற நாடுகள் மனிதகுலத்தின் இருத்தலியலுக்கான நெருக்கடியை சமாளிப்பதில் இருந்து வெளியேற அழைப்பு விடுக்கும் விதமாக அமைகிறது. நாம் இந்த உலகத்தை இணைக்கும் நடவடிக்கைகளை எடுத்த பிறகு, இந்த முடிவு அமெரிக்காவை அதிலிருந்து தனிமைப் படுத்துகிறது''

அமெரிக்க குடியரசு கட்சியின் சபாநாயகர் பால் ரயன்

''பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நியாயமற்ற ஒரு ஒப்பந்தம். செனேட்டின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் ஒபாமாவால் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், மின்சார விலையை உயர்த்தியது, நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியது. அமெரிக்க மக்களுக்காக தனது பொறுப்பை நிறைவேற்றியதற்காகவும் இந்த மோசமான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்காவும் நான் அவரை பாராட்டுகின்றேன்.''

ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமர் தெரீசா மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐக்கிய ராஜ்யத்தின் பிரதமர் தெரீசா மே

ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமர் தெரீசா மேவின் அறிக்கை

''அமெரிக்காவின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஐக்கிய ராஜ்யம் பாரிஸ் உடன்பாட்டில் உறுதியாக உள்ளது என்று வலியுறுத்தினார்.

''எங்களது குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிசக்தி மலிவான மற்றும் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி அதே நேரத்தில் பாரிஸ் ஒப்பந்தம் வருங்கால தலைமுறையினரின் செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரியான உலகளாவிய வடிவமைப்பை வழங்குகிறது.''

ஐநா சபையின் பொது செயலாளர் அன்டோண்யோ கூடெர்ரெஸ் (செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டஜார்ரிக் வாயிலாக)

"காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு,

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும் உலகின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், எடுக்கப்பட்டுவரும் உலகளாவிய முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அமெரிக்கா சுற்றுச்சூழல் பிரச்சினையில் ஒரு தலைமை பொறுப்பு வகிப்பது முக்கியம்."

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக எடுத்துள்ள முடிவு எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. காலநிலை மாற்றத்தை தடுக்கவும், தூய்மையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் உள்ள அர்ப்பணிப்பில் கனடா உறுதியாக உள்ளது. "

ஹில்டா ஹெய்ன், பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தல் நிலையில் உள்ள மார்ஷல் தீவின் அதிபர்

"இன்றைய தீர்மானம் ஏமாற்றத்தை மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்திக்கும் முன்னணி வரிசையில் வாழும் எங்களைப் போன்ற நாடுகளுக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது. உலகின் மற்ற நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு உறுதியுடன் உள்ளன. எங்களின் உறுதிப்பாடு, அதிலும் எங்கள் பரந்த பசிபிக் நாடுகளின் குடும்பம் அதை ஒருபோதும் கைவிடவதில்லை.'

 

http://www.bbc.com/tamil/india-40129448

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.