Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டனில் `தொங்கு நாடாளுமன்றம்`

Featured Replies

பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையை இழக்கிறார் தெரீசா மே?

 

பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.

தெரீசா மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கன்சர்வேடிவ் கட்சியினர், தனிப் பெரும் கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுப்பார்கள் என்று கணிப்புகள் காட்டினாலும், அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் பல இடங்களை இழந்துவிட்டார்கள் .

இந்த முடிவு பிரதமர் தெரீசா மேவுக்கு மோசமான முடிவாக அமைந்துள்ளது என்றும் அவர் மீதான பொதுமதிப்பை எப்போதும் மீட்க முடியாது என்று தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் டாம் வாட்சன் தெரிவித்துள்ளார்.

மே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக, தனது கட்சியின் பெரும்பான்மையை அதிகப்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையில், தேர்தலை நடத்த எடுத்த முடிவு, நவீன காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய அரசியல் தவறுகளில் ஒன்றாக முடியக்கூடும் என்று பிபிசியில் அரசியல் விவகார ஆசிரியர் தெரிவித்தார்.

வாக்களிப்பைப் பொறுத்தவரை, 2015 தேர்தல் வாக்களிப்பை விட இம்முறை அதிக அளவில் இளம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாந்து: ஆளும் எஸ்.என்.பிக்குப் பின்னடைவு

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில், இதுவரை ஸ்காட்லாந்திலிருந்து வெளிவந்துள்ள முடிவுகள், அங்கு பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற இரண்டாவது கருத்துக் கணிப்பை கோரும் ஆளும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி, பெருந்தோல்விகளை சந்தித்திருப்பதைக் காட்டுகின்றன.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது)படத்தின் காப்புரிமைPA Image captionபிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது)

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி ( எஸ்.என்.பி) அங்கு இருக்கும் நாடாளுமன்ற இடங்களில் மூன்றைத் தவிர அனைத்து இடங்களையும் வென்றது.

ஆனால் இம்முறை மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான தொகுதிகளை அது இழக்கவிருக்கிறது.

எஸ்.என்.பியின் தொகுதிகளை , கன்சர்வேடிவ், தொழிற்கட்சியினர் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியினர் என அனைத்து கட்சியினரும் பறித்துள்ளனர்.

எஸ்.என்.பியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர், ஆங்கஸ் ராபர்ட்சன், தோற்றுப்போனவர்களில் ஒருவர்.

http://www.bbc.com/tamil/global-40212481

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரிட்டன் பொதுத்தேர்தல்... அதிர்ச்சியில் தெரசா மே!

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 44 ஆண்டு காலமாக இருந்துவந்த பிரிட்டன், தற்போது லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty ) 50-வது விதியின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இரண்டு வருடங்களில் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த சட்ட நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, முழுவதுமாக பிரிட்டன் விலகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலிமை வாய்ந்த நாடாக நிலையான தலைமையுடன் தனித்து இயங்குவதற்காக பிரிட்டன் பொதுத்தேர்தலை அறிவித்தது.

GettyImages-624826852-1-714x476_05356.jp

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே-யின் அறிவிப்பின்படி நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன.


அதன்படி, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், தேர்தல் முடிவுகள் தெரசா மே-வுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.


தற்போது வரை வெளியான முடிவுகளின்படி கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். இதனால், அங்கு தொங்கு பாராளுமன்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலை அறிவித்தது தெரசாவின் தவறான முடிவு என்றும் விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. மேலும், வெளியாகியுள்ள முடிவுகளில் கன்சர்வேடிவ் கட்சி 15 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

http://www.vikatan.com/news/world/91760-uk-general-election-a-hung-parliament-in-brittan.html

  • தொடங்கியவர்

பிரிட்டன் தேர்தலில் இழுபறி நிலை: தெரசா மே ராஜினாமா செய்ய ஜெர்மி கார்பின் கோரிக்கை

 

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ், தொழிலாளர் கட்சிகளிடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெர்மி கார்பின் கூறியுள்ளார்.

 
 
 
 
பிரிட்டன் தேர்தலில் இழுபறி நிலை: தெரசா மே ராஜினாமா செய்ய ஜெர்மி கார்பின் கோரிக்கை
 
லண்டன்:
 
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.
 
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்துள்ளது. 
 
இதுவரை சுமார் 450 இடங்களுக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழிலாளர் கட்சி 218 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 215 இடங்களை பிடித்துள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.  
 
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்பின் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து பேசிய ஜெர்மி, “தெரசா மே தனது கன்சர்வேட்டிவ் தொகுதிகளை இழந்துள்ளார். வாக்குகளை இழந்துள்ளார். ஆதரவு மற்றும் நம்பிக்கையை இழந்துள்ளார். அவர்கள் வெளியேறுவதற்கு இதுவே போது என்று எனக்கு தோன்றுகிறது” என்றார்.
 
ஜெர்மி தான் போட்டியிட்ட இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தெரசா மேவும் வெற்றி பெற்றுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/09085559/1089805/Britains-Jeremy-Corbyn-Calls-For-PM-Theresa-May-To.vpf

  • தொடங்கியவர்

பிரிட்டன் பொத்துத் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்கு திணறும் கன்சர்வேடிவ் கட்சி

 

 
பிரதமர் தெரசா மே. (அடுத்தபடம்) தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கார்பின். | படங்கள்: ஏஎப்பி/ புளூம்பர்க்
பிரதமர் தெரசா மே. (அடுத்தபடம்) தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கார்பின். | படங்கள்: ஏஎப்பி/ புளூம்பர்க்
 
 

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட நிலவரத்தின்படி, பிரதமர் தெரசா மே-யின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையைப் பெற திணறிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பொறுப் பேற்றார். பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 ஜூலை 13-ல் தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

ஏற்கெனவே அறிவித்தபடி 650 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் உள்ளனர்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக களம் கண்டார்.

இந்திய நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவு நிலவரம்:

மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 597 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 205 இடங்களைக் கைப்பற்றி ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி முன்னிலை வகிக்கிறது. பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 191 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

பெரும்பான்மை 326 இடங்கள் தேவை.

 

கட்சி

வெற்றி நிலவரம்

மொத்த தொகுதிகள்

கன்சர்வேடிவ்

288

650

தொழிலாளர்

245

650

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி

33

650

 

தலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களும், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

http://tamil.thehindu.com/world/பிரிட்டன்-பொத்துத்-தேர்தல்-முடிவுகள்-பெரும்பான்மைக்கு-திணறும்-கன்சர்வேடிவ்-கட்சி/article9723264.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது – தொங்கு பாராளுமன்றம் அமைகிறது:-

ukgeneralelection-hung-parliament.jpg

Hung parliament

 
326 seats needed to win
 
 
 
 
 
 
UK results
Party CONConservative LABLabour SNPScottish National Party LDLiberal Democrat DUPDemocratic Unionist Party OTHOthers
Seats 313 260 34 12 10 13
Change −12 +29 −21 +4 +2 −2
Change −12 +29 −21 +4 +2 −2
UK Results
PREDICTION

After 641 of 650 seatsSeatsChange

Latest headlines

  1. LATEST
    Conservatives largest party, but short of a majority.
  2. RESULT
    06:25 Crewe & Nantwich LAB GAIN FROM CON
  3. RESULT
    06:20 Ceredigion PC GAIN FROM LD
  4. RESULT
    06:17 Newcastle-under-Lyme LAB HOLD

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன நிலையில், பிரதமர் திரேசா மே தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. மொத்தமாக 650 ஆசனங்களுக்காக நேற்றைய தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் இதுவரையில்  313 ஆசனங்களை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுள்ளது.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சி 312 ஆசனங்களையும், தொழிற் கட்சி 260ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. SNP 34, LD – 12, DUP – 10 ஏனையவை 13 என ஆசனங்களைப் பெற்றுள்ளன.  ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு பெரும்பான்மை ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக்கொள்ளாத நிலைமை உருவாகக் கூடும் என ஏற்கனவே அரசியல் விமர்சனங்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. பிரிடெக்ஸின் பின்னர் பிரதமர் திரேசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்த எடுத்தத் தீர்மானத்திற்கு அமைய நேற்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டது.

http://globaltamilnews.net/archives/29269

  • தொடங்கியவர்

பிரிட்டனில் `தொங்கு நாடாளுமன்றம்`

 

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது.

நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார்.

ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, தேறாத கட்சி என்று கைகழுவப்பட்ட தொழிற்கட்சி, எதிர்பாராத விதமாக பல இடங்களை வென்றிருக்கிறது.

பொருளாதாரத்தில் `சிக்கன நடவடிக்கை` அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் கூறியிருக்கிறார்.

தெரீசா மே பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

சில கன்சர்வேடிவ் கட்சியினர் அவர் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

கடந்த தேர்தலில் இருந்த்தை விட வாக்குப்பதிவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/40216571

  • தொடங்கியவர்

பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம்: எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளிட்ட எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், அந்நாட்டில் தொங்கு பாராளுமன்ற உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம்: எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை
 
லண்டன்:
 
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. 
 
தொடக்கத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுது. ஆனால் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் வெற்றி பெற்றுள்ளது.
 
மொத்தமுள்ள 650 இடங்களில் 645 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 314 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 260 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் 5 இடங்களின் முடிவுகள் தான் மீதமுள்ளது. இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி மெஜாரிட்டையை இழந்துள்ளது. மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 
 
இதனால், ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே இதர கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
 
ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி 35, லிபரல் ஜனநாயக கட்சி 12, ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் மற்ற கட்சிகளை தெரசா மே அணுகி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. 
 
645 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-
 
201706091201432150_Table._L_styvpf.gif
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/09120136/1089851/Hung-parliament-confirmed-as-UK-votes-for-chaos.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.