Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர்

Featured Replies

எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர்

 
எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர்
 

தன் மீது நம்­பிக்­கை­யில்லை எனத் தெரி­வித்து மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வட மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளித்த மனு­வைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டால் தற்­போ­தைய பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்­கொள் ள­லாம் எனத் தெரி­வித்­த◌ார் வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். தனக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்­றி­பெ­றாது என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

‘‘அவர்­கள் ஒரு மனுக் கொடுத்­துள்­ள­னர் ஆளு­ந­ரி­டம், அந்த மனு­வைத் திரும்ப வாங்­க­வேண்­டும், இந்­தக் கொந்­த­ளிப்­புத் தானா­கவே நிறுத்­தப்­ப­டும். ஏனென்­றால் மனு­வைத் திரும்­பப் பெற்­ற­வு­டன் அது சம்­பந்­த­மான நட­வ­டிக்கை தொட­ராது. எவ­ருமே அதைப் பற்றி பேச வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எங்­கள் வேலை­கள் நடந்­து­கொண்­டு­போ­கும்” என்­றார் அவர்.

வடக்கு மாகாண சபை தொடர்­பாக எழுந் துள்ள அர­சி­யல் சிக்­க­லைத் தொடர்ந்து நேற்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். அப்போது அவர் தெரிவித்த தாவது,

கேள்வி: சம்பந்தருடன் என்ன பேசினீர்கள்?

பதில்: நாங்கள் சம்பந்தனுடன் பேசிய விடயங்கள் தொடர்பாகத்தான் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றோம். அறிக்கையில இரண்டு பேரைப் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றது, மற்றைய இருவரைப் பற்றியும் சொல்லவில்லை, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார் சம்பந்தன்.
அவர்கள் சம்பந்தமான விசாரணை நடத்தப்படவில்லை.

முறைப்பாட்டாளர் வராதபடியால் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஆனால் 7ஆம் திகதி முறைப்பாட்டாளர் சபையில், இன்னொரு விசாரணை நடத்தினால் இருவர் பற்றியும் உரிய சாட்சியம் வழங்க முடியும் என்று கூறினார். அதன் பின்னரும் முறைப்பாடுகள் புதிதாகக் கிடைத்துள்ளன. அதனடிப்படையில்தான் எனது தீர்மானம் அமைந்திருந்தது.

முறைப்பாட்டாளர் திரும்ப வருவதாகக் கூறியதால் விசாரணையைத் திரும்ப நடத்தத் தீர்மானித்தேன். ஒரு மாதத்திற்கு அவர்களை விடுமுறையில் இருக்கும்படியும் அவர்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்றும் கார் வைச்சிருக்கலாம் எல்லாம் செய்யலாம் என்றும் அதால அவர்களை விடுமுறையில் இருக்கும்படியும் கேட்டேன். அவர்களின்ர அமைச்சுக்களை நான் பார்த்துக்கொள்கின்றேன் என்று சொன்னேன். விசாரணைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறினேன். இது சம்பந்தமாகத்தான் சம்பந்தன் பேசினார்.

அவர்கள் தொடர்ந்து அமைச்சர்கள் என்ற முறையில் வேலை செய்ய என்ன செய்யலாம் என்று சம்பந்தன் கேட்டார். அவர்கள் எழுத்து மூலமாக, இந்த விசாரணை நடக்கும்போது எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது நடந்து கொள்கின்றோம் என்ற அடிப்படையில் தங்களைத் தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவி வகிக்க இடமளிக்கவேண்டும் என்று சொல்லிக் கேட்டால் அதை நான் பரிசீலித்து அனுமதியைக் கொடுக்க முடியும் என்று தெரிவித்தேன்.

இதேவிடயத்தைத்தான் சித்தார்த்தனும், சிறீதரனும், சாள்””ஸ்சும் கேட்டனர். அப்படி எதுவும் எழுத்தில் கேட்காமல் நீங்களாகவே வேலையைச் செய்யச் சொல்லிச் சொல்லுங்கோவன் என்று சிறிதரனும் சாள்ஸ்சும் கேட்டனர். நான் அப்படிச் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.

நான் எழுத்திலேயே போட்டுள்ளேன். அந்த எழுத்த மாத்த வேண்டும் என்றால் எழுத்திலதான் கேட்கவேண்டும், நான் நினைச்சமாதிரிச் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். அதைதான் கன நேரமாக கதைத்துப் பார்த்தார்கள். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். போய்விட்டார்கள். சம்பந்தன், மாவையிடம் கதைச்சுப்போட்டுச் சொல்லுறன் என்று கூறினார். ஆனால் இதுவரையில் சொல்லவில்லை.

கேள்வி: மதத் தலைவர்களைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?
பதில்: நாங்கள் மதத் தலைவர்களைச் சந்தித்தது, என்ன நடந்தது என்பதைத் தெரியப்படுத்தத்தான். ஏனென்றால் மக்கள் இப்போது கொந்தளிச்சு இருக்கின்றார்கள். அந்த நிலையிலேயே மதப் பெரியார்கள் எல்லோரும் இதைப் பற்றி அறிந்திருந்தால்தான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிய வரும்.

இந்தக் கொந்தளிப்பை அடக்க என்ன செய்யவேண்டும் என்று நல்லை ஆதினம் கேட்டார். நான் சொன்னேன், அவர்கள் ஒரு மனுக் கொடுத்துள்ளனர் ஆளுநரிடம், அந்த மனுவைத் திரும்ப வாங்கவேண்டும், கொந்தளிப்புத் தானாகவே நிறுத்தப்படும் என்று. ஏனென்றால் மனுவைத் திரும்பப் பெற்றவுடன் அது சம்பந்தமான நடவடிக்கை தொடராது. எவருமே அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. எங்கள் வேலைகள் நடந்துகொண்டுபோகும்.

கேள்வி: – எழுத்துமூலம் (அமைச்சர்கள்) தருவதில் என்ன பிரச்சினை ?
பதில்: அது வந்து, கொஞ்சம் நாங்கள் கொழுத்திட்டம்தானே. கஷ்டமாக இருக்கின்றது. (சிரிக்கின்றார்.) அவ்வளவுதான்.

கேள்வி: பதவி விலகல் கடிதத்தைக் குருகுலராசா தந்து விட்டரா ?
பதில்: – தருவேன் என்று சொல்லியிருக்கின்றார். என்னிடம் சொல்லவில்லை. வேறு ஒருவரிடம் சொல்லியிருக்கின்றார். தருவார்.

கேள்வி: தங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று தெரியாமல் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் மனுவில் கையொப்பம் இட்டோம் என்று சிலர் கூறுகின்றனரே ?

பதில்: – பசுபதிப்பிள்ளை ஐயாவும், ஜவாகிர் அப்பிடிச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான் எனக்கும் தெரியும். உங்களுக்குத் தெரிந்த அளவுதான் தெரியும். நான் அவர்களுடன் கதைக்கவில்லை. இருந்து பார்ப்போம். அப்பிடியென்றால், எனக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்களுடைய தொகை குறைந்து கொண்டு போகக்கூடும். அப்ப இந்த மனுவைத் திரும்பப் பெறுவதில் பிரச்சினை இருக்காது.

கேள்வி: அமைச்சர் சரத்பொன்சேகா, இரு வாரத்துக்கு முன்னர் உங்களை பதவி நீக்குவது தொடர்பில் பேசியதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அவர் எங்கே சொல்லியிருந்தார்.
பதில்: – இரண்டு கிழமைக்கு முதலோ மூன்று கிழமைக்கு முதலோ அந்தச் செய்தி வந்தது. நீங்கள் எந்தப் பத்திரிகை என்பதைத் தேடிக் கண்டறியுங்கள்.

கேள்வி: – சரத்பொன்சேகாவுடன் பேசியபோது, அவர்தான் அப்படிச் சொல்லவில்லை என்கின்றாரே ?

பதில்: – பத்திரிகையில் இருந்தது. தனது உதவியாளரிடம் சிங்களத்தில் பேசினார். தமிழ் பத்திரிகையில்தான் கண்டிருக்கின்றம். அவருடைய கருத்தை வைத்து நடந்திருக்கிறதை அனுமானிக்கின்றன். மற்றதுகளைப் பற்றி என்னால் சொல்லமுடியாது. கொழும்பில இருந்து வரும் ஒருவர் இங்கு இப்பிடி ஒன்று நடக்கப்போகுது என்று கூறமுடியுது என்றால், அதாவது என்னுடைய பதவி பறிபோகக் கூடிய நிலை இருக்காதபோதே விரைவில் அவருடைய பதவி பறிபோகப் போகின்றது என்றால், எங்கோ ஓரிடத்தில் இதைப் பற்றி பேசியிருக்கினம். கதைச்சிருப்பினம். இது சம்பந்தமாக நடவடிக்கைகள் நடக்கப் போதை அவருக்குத் தெரியப்படுத்தியிருப்பதால்தான் அவர் இங்கு வந்து அதனைச் சொல்லியிருப்பார். இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: ஐங்கரநேசனைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவால் அவருக்கே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறதே!
பதில்: – முதலில் ஐங்கரநேசனுக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுக்கள் வந்தன. அது சம்பந்தமாக விசாரித்துக் கொண்டு போகும்போது ஏனையோருக்கு எதிராகவும் குற்றங்கள் சுமத்தப்பட்டன. சபையில சத்தம் போட்டது எல்லாம் ஓர் அமைச்சருக்கு எதிராகத்தான். ஆனால் எனக்கு பல முறைப்பாடுகள் வந்தன, எல்லாருக்கும் எதிராக. ஆகவேதான் 4 பேருக்கும் எதிராக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

கேள்வி: – அமைச்சர் ஐங்கரநேசன், நீங்கள் நியமித்த விசாரணைக் குழுவின் நீதிபதி ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அவரை நீங்கள்தானே நியமித்தீர்கள்.
பதில்: – நாங்கள் நியமிக்கேக்க எல்லாத்தையும் பார்க்கேலாது. ஒவ்வொருத்தரைப் பற்றியும் விசாரிக்க இயலாது. அவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள்.

கேள்வி :- ஐங்கரநேசன், விசாரணைக் குழு மீது குற்றச்சாட்டுச் சொல்வது சரியா ?
பதில்:- அதைப் பற்றி எனக்குச் சொல்ல முடியாமல் இருக்கு. விசாரணைக் குழுவில் இருந்த ஒருவர் ஒரு வழக்கில் சட்டத்தரணியாக ஈடுபட்டிருக்கின்றார். அது எனக்குத் தெரியாது.ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருந்தா நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாம் முடிந்து தீர்மானம் எடுத்த பின்னர் சொன்னால் நான் என்ன செய்ய ?

கேள்வி: – சுமந்திரனின் ஊடக அறிக்கை குறித்து?
பதில்: – முதலிலேயே இதைத்தான் சொன்னான். ஐங்கரநேசனுக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுக்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் 4 பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதுதான் உண்மை.

கேள்வி: – சமாதான முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?
பதில்: – இப்போ இருக்கிற நிலையில் பலருடைய ஆதரவும் கிடைக்கிற மாதிரித்தான் தெரியுது. ஆனால் நிச்சயமாக என்னால் சொல்ல முடியாது. அவர்கள் கொடுத்த மனு தள்ளுபடியாகும். அது முன்னேறாது. அதிலும் பார்க்க அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவைத் திரும்பப் பெற்றால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். மற்றம்படி நாங்கள் முன்னேறலாம் என்றதுதான் நிலை. சமரசம் பேசினால் பேசிக் கொண்டே போக வேண்டியதுதான். இது தீருமோ தீராதோ என்று தெரியாது.

கேள்வி: – உங்களுக்கு ஆதரவான மக்கள் போராட்டத்தால் நாளை வன்முறையும் வெடிக்கலாம்?
பதில்: – கட்டாயம். கட்டாயம். மக்கள் வந்து தங்களுடைய மனோநிலையை எடுத்துக் காட்டி விட்டார்கள். அதற்கு நான் தலை வணங்குகின்றேன். ஆனால் அதே நேரத்திலே அதை அவர்களாகவோ அல்லது அதில் உள்ளிருக்கும் சில கறுத்த ஆடுகளோ எங்கயாவது இருந்து ஒரு தகாத முறையில் நடந்து கொண்டார்களானால் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அழைகக்கக் கூடியநிலை ஏற்படும்.

அதனால்தான் நான் கூறுகின்றேன். இவர்கள் தங்களுடைய மனுவை விரைவில் திரும்ப வங்கிக்கொண்டால் மக்களை விரைவில் சாந்தப்படுத்த முடியும். ஆனால் மக்களும் தங்களுடைய மனோநிலையை அளவுக்கு மீறிக் காட்டத் தலைப்படக் கூடாது. அப்படிச் செய்வதால் மக்களுக்குதான் நட்டம் ஏற்படும். அரசு அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம். மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் குறிப்பிட்ட கறுத்த ஆடுகள் செய்யக் கூடும். ஆகவே நீங்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

கேள்வி: – நீங்கள் தமிழ் அரசுக் கட்சிக்கு கடிதம் ஒன்று 2013ஆம் ஆண்டு கொடுத்ததாகக் கூறப்படுகின்றதே ?
பதில்: – நான் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. அது என்னுடைய கையெழுத்து என்றால் என்னுடைய கடிதமாகத்தான் இருக்கவேண்டும். என்ன எழுதியிருக்கு என்று எனக்கே தெரியாது.

ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அது என்ன காரணத்திற்கு என்பதைப் பார்த்த பின்னர்தான் சொல்ல முடியும். ஏதோவொரு காரணத்துடன்தானே பதில் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் காரணம் அல்லது அந்த சூழலுக்கு ஏற்ற விடயத்தை எல்லாக் காலத்திலையும் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியாது.

http://uthayandaily.com/story/7033.html

  • தொடங்கியவர்

பத்திரிகை மீது விக்கி காட்டம்

 
 
பத்திரிகை மீது  விக்கி காட்டம்
 

“பத்­தி­ரி­கை­யில் செய்­தி­க­ளைப் போட்டு வடக்கு மாகாண சபையை நாற­டித்­து­ விட்­டார்­கள்’’ இவ்வாறு வடக்கு மாகாண முத­ல­மைச் சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் இல்லத்தின் முன்பாக நேற்று நடை பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர்கள் மீதான விசாரணை நடக்கவேண்டும் என்று எமது உறுப்பினர்கள்தான் கூறியிருந்தார்கள். இதனை என்னிடம் நேரடியாக அல்லது பிரத்தியேகமாகக் கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். அதனை விடுத்துப் பத்திரிகையில் தங்களுடைய பெயர் வரவேண்டும் என்பதற்காக, இந்தச் செய்திகளைப் பத்திரிகையில் போட்டு வடக்கு மாகாண சபையை நாறடித்து விட்டார்கள் – என்றார்.

முதலமைச்சர் இவ்வாறு பத்திரிகை என்று பேசியபோது, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் ‘உதயன் ஒழிக’ என்று கோசமிட்டனர். இந்தக் கோசங்கள் எழுப்பப்பட்டபோது முதலமைச்சர் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.

http://uthayandaily.com/story/7052.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.