Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா? அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம்

Featured Replies

முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா?

அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம்

 
 
முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா?
  •  

 

 

“வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச் சாட்­டு­களை ஆராய்­வ­தற்கு புதிய விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் கூறி­னார். விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு அது சரி­யா­ன­தாக இருந்­தால் முத­ல­மைச் சருக்கு எதி­ரா­க­வும் எத்­த­னையோ பேர் முறை­யி­டத் தயா­ராக உள்­ள­னர்.

முதலமைச்சர் தன் மீது முறைப்பாடு வந்துள்ளது என்ப தற்காகத் தனது பத வியிலிருந்து முதல்வர் மீது…விலகுவாரா?
இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் அரசுக் கட்சி பிரேரணையை கொண்டுவரவில்லை

இந்த விடயம் பூதாகரமாக வளர்ந்துள்ளதற்குக் காரணம் என்ன? இதற்குப் பின்னால் என்ன பிரச்சினை இருக்கின்றது? இந்த ஊழல் விசாரணை என்பது சரியாக நடைபெற்றுள்ளதா? என்பன தொடர்பில் எனது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் சிலர் தங்களுடைய சுயலாபம் கருதி இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது தெட்டத்தெளிவாக அண்மைய காலச் செயற்பாட்டில் வைத்துக் கண்டுகொள்ளலாம். இதன் உண்மை நிலையை என் மக்களுக்குச் செல்ல வேண்டும். இதன்மூலம் மக்கள் சரியாக நடப்பது என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் எனது நோக்கம்.

சிலர் கூறுவதைப் போன்று முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சிதான் கொண்டு வந்ததது என்பது முற்றுமுழுதாகப் பொய்யான ஒரு விடயம். தமிழ் அரசுக் கட்சி இந்த விடயத்தைக் கொண்டு செல்கிறார்கள், 21பேர் கையெழுத்திட்டுள்ளார்கள், ஆகவே இதற்குப் பின்னால் தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கின்றது என்பதை நான் முற்றுமுழுதாக மறுக்கின்றேன்.

கடந்த மாகாண சபை அமர்வின்போது முதலமைச்சர் சில தீர்மானங்களை முன்வைத்தார். அதில் இடை நடுவே ஊழல் தொடர்பான விசாரணையின் போது அவருடைய தீர்ப்பில் அடிப்படை ஏதுக்கள் இல்லாத காரணத்தால் சில உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். ஆனால் இன்று வெளியில் வந்துள்ள விடயம், ஊழல் புரியம் அமைச்சர்களைக் காப்பாற்றி, முதலமைச்சரை நீக்கிவிட்டு பிறிதொரு முதலமைச்சரைப் பதவியில் அமர்த்திச் செய்றபட தமிழ் அரசுக் கட்சி விரும்புகின்றது என உள்ளது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நீதியாகச் செயற்பட  நீதியரசர் தவறிவிட்டார்

அவ்வாறில்லை அன்றைய தினம் அதிருப்தி அடைந்த மாகாண சபை உறுப்பினர்களில் நானும் ஒருவன். நீதியரசர் நீதியாகச் செயற்பட்டிருக்காததே இந்தளவு நிலைக்கு நாம் செல்லக் காரணமானது . ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் இருவரையும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் ஒருவரையும் விசாரணைக் குழுவுக்கு முதலமைச்சர் நியமித்திருக்கின்றார். இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் அவர்களின் பல்வேறு விடயங்களைப் பரிந்துரைகளாகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் செயற்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. இதுதான் எங்களுடைய மன ஆதங்கம்.

முதல்வர் செய்தது பெரும் தவறு

இது கட்சி ரீதியாக எடுத்த முடிவல்ல. இது ஒரு சட்ட முரணான விடயம் என்பதுதான் எமது குற்றச்சாட்டு. ஒரு விசாரணை முற்றுப்பெற்றதன் பின்பு அவர்களது பரிந்துரைகளுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்த முடிவு பிழையானது. வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் நானும் சுகாதார அமைச்சர் என்ற முறையில் சத்தியலிங்கமும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். சில குற்றச்சாட்டுக்கு சாட்சிகள் வரவில்லை. ஆகவே ஒரு விசாரணை முற்றுப்பெற்றதன் பின்னர் அது தொடர்பாக முதலமைச்சர் செய்த செயல் மிகப் பிழையான விடயம்.

கட்சித் தலைமைகள் இப்போதுதான் தலையீடு

2 அமைச்சர்களுக்கு ஒருமாதகால விடுமுறை கொடுப்பது எந்தவொரு வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படி சட்டத்திலும் இடமில்லை. இந்த நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. ஆகவே இதற்குப் பின்னால் தமிழ் அரசுக் கட்சி இருக்கின்றது என்பது பிழையான விடயம். இப்பொழுது கட்சித் தலைமைகள் தலையிட்டிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் வரையிலும் அது கொண்டு வந்து கொடுக்கும் வரையிலும், அது முற்றுமுழுதாக நிறைவடையும் வரையிலும் கட்சியின் தலைமைப் பீடங்கள் யாருக்கும் நாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.

விசாரணைக் குழுவை நியமித்ததிலேயே முரண்

இந்த விசாரணைப் பிரிவு நியமித்ததே சட்டரீதியில் முரணானது. குறிப்பாக இந்த நியமனம் முதலமைச்சரால் பரிந்துரை செய்யப்படுகின்ற போது ஆளுநர்தான் அமைச்சர்களை நியமிப்பார். ஆளுநர் அல்லது அரச தலைவர் தான் விசாரணைக் குழுவை சட்டரீதியாக நியமிக்கலாம். எங்களுடைய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர்தான் முதலமைச்சர். அமைச்சரவையிலிருக்கும் ஒருவர் அமைச்சர்களுக்கு எதிராக ஒரு குழுவை நியமிக்க முடியாது. அப்படி நியமிப்பது என்பது கேள்விக்குரியது. இருந்தும் நாங்கள் 4 அமைச்சர்களும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்தோம்.

4 அமைச்சர்கள் மீதான எழுத்து மூலமான முறைப்பாடுகள் எவற்றையும் முதல்வர் எமக்கு காண்பிக்கவில்லை. அந்த முறைப்பாடுகளை ஏன் விசாரணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை. இங்கு முதலமைச்சருடைய நோக்கம் வேறாக இருக்கின்றது. ஆகவே முறைப்பாடுகள் எவையும் இல்லாது முதல்வர் என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

பதவி ஆசை உள்ளோர் முதல்வரின் பின்னால்

ஆரம்பத்திலிருந்தே என்மீது முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். எனினும் புதிய விசாரணைக் குழுவை அமைப்பதாகவும் ஒரு மாத விடுமுறையில் செல்லுமாறும் முதல்வர் கூறியுள்ளார். புதிய விசாரணைக்குழு அமைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றை வைத்து பார்க்கும் போது பதவி ஆசை கொண்ட சிலர் முதலமைச்சருக்கு பின்னல் இருந்து செயற்படுகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது.

பதவியைத் துறந்து ஒதுங்கிவிடத் தயார்

புதிய விசாரணைக் குழு அமைக்கப்படுமானால் அது சரியானதாக இருந்தால், அதில் எத்தனையோ பேர் முறையிடத் தயாராக உள்ளனர். முதலமைச்சருக்கு எதிராகவே எத்தனையோ குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு முறைப்பாடு கொடுக்கின்ற போது முதலமைச்சர் தன்மீது முறைப்பாடு வந்துள்ளது என்பதற்காக பதவியிலிருந்து விலகுவாரா?

ஆகவே அறிக்கையில் உள்ளதற்கு ஏற்றவாறு முதலமைச்சர் நடந்து கொள்வாரானால் நான் நிச்சயமாக முழு மனதோடு ஏற்றுக்கொள்வேன். இதன் பின்னர் என்மீது குற்றச்சாட்டுகள் எழுமாக இருந்தால் ஒரு மாத விடுமுறை அல்ல பதவியை விட்டுவிட்டு ஒதுங்கிவிடுவேன். அந்தளவுக்கு நான் உறுதியாக உள்ளேன்-என்றார்.

http://uthayandaily.com/story/7047.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.