Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பங்காளிகள் முதலமைச்சருடன் சந்திப்பு:-

Featured Replies

கூட்டமைப்பின் பங்காளிகள் முதலமைச்சருடன் சந்திப்பு:-

PLOT-TELO.jpg

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலமைகள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன…

http://globaltamilnews.net/archives/30108

  • தொடங்கியவர்

TNAயின் பங்காளிகள் உடனான சந்திப்பின் பின், சம்பந்தனுக்கு விக்கி பதில் கடிதம்:-

 
 w1.jpg
 
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்
 
அச் சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் அனுப்புவது தொடர்பிலையே இக் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.
 
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடாக சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய கடிதத்திற்கான பதிலின் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும். இரு அமைச்சர்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதி மொழியினை தந்தால் அதனை ஏற்க தயாராக உள்ளேன். என மேலும் தெரிவித்தார்.
 
குறித்த சந்திப்பில் மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
w2.jpgw3.jpg

https://globaltamilnews.net/archives/30108

  • தொடங்கியவர்

புளொட், ஈபிஆர்எல்எவ், ரெலோ சமரசம் ஏற்படுத்துவதில் தீவிரம்

 
 
புளொட், ஈபிஆர்எல்எவ், ரெலோ சமரசம் ஏற்படுத்துவதில் தீவிரம்
 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாட்டை அடுத்து எழுந்துள்ள அரசியல் சிக்கலைத் தீர்ப்பதில் – இரு தரப்புகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதில் – முன்னாள் ஆயுத இயக்கங்களான புளொட், ஈபிஆர் எல்எவ், ரெலோ ஆகியன தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இந்த இயக்கங்களின் தலைவர்கள் நேற்று முதலமைச்சரைச் சந்தித்து முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தனர். இதன் பயனாக சில விடயங்களின் அடிப்படையில் இணங்கி வருவதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்து அது தொடர்பான கடிதத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்றிரவு அனுப்பி வைத்தார். எனினும் தனது கடிதத்திற்குச் சம்பந்தனின் பதில் கிடைத்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட இருவருக்கு எதிராகவும் தான் மீண்டும் ஆரம்பிக்க எண்ணியுள்ள விசாரணையை அவர்கள் இருவரும் குழப்ப மாட்டார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர் உறுதிமொழி தந்து, அதனடிப்படையில் முன்னாள் இயக்கங்களின் தலைவர்களும் அதே உறுதிமொழியை வழிமொழிந்தால் குறித்த அமைச்சர்கள் இருவரும் விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்லவேண்டும் என்ற தனது நிபந்தனையைக் கைவிட்டு சமரசம் ஒன்றுக்கு வருவதற்குத் தயார் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தரின் கடிதம்
முன்னதாக இந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

அன்புக்குரிய விக்னேஸ்,
தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி.
நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செய்து அவர்களது அறிக்கையை உங்களுக்குச் சமர்ப்பித்திருந்தார்கள். இதில் இருவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய இருவரும் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை.

விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீங்கள் செயற்படப்போவதாக மாகாண சபையில் தெரிவித்திருந்தீர்கள். குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் பதவியில் இருந்து விலகுமாறு நீங்கள் கோரிக்கை விடுத்திருந்தீர்கள். அந்தத் தீர்மானத்துக்கு எவரும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை.

விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நீங்கள் எடுத்த நடவடிக்கை தொடர்பிலேயே முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானதாகவும் பொருத்தமற்றதாகவுமே பார்க்கப்படுகின்றது.

13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான் தங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசியபோது இத்தகைய நடவடிக்கை குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களினாலும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் எனவும் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறும் கூறியிருந்தேன்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் பேசியிருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜாவோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடாமை தொடர்பிலும் எனது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தேன். அதன் பின்னர், அன்றே நீங்கள் அவரோடு உரையாடியபோது குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதனை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
14ஆம் திகதி புதன்கிழமை, குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களுக்கு எதிராகவும் தண்டனை நடவடிக்கையை அறிவித்திருந்தீர்கள். அதற்குப் பிற்பாடு இடம்பெற்றவை எல்லாமே நீங்கள் மேற்கொண்ட மேற்குறித்த நடவடிக்கையின் விளைவேயாகும்.

இந்தச் சம்பவங்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமெனில், முதலில் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பிலும் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும், வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது.

எனவே, உங்களது விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இது, நீங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் – என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமரச முயற்சி 
இந்தக் கடிதம் முதலமைச்சருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்தே புளொட், ஈபிஆர்எல்எவ், ரெலோ அகியவற்றின் தலைவர்களான த.சித்தார்த்தன், க.பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினர்.

அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீது நடத்தப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்கு அவர்களால் தடை ஏற்படாது என்று சம்பந்தரே உறுதியளித்திருப்பதன் அடிப்படையில் தாங்களும் அதற்குப் பொறுப்பு நிற்பதாக மூன்று கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அவ்வாறு சம்பந்தர் உறுதிமொழி வழங்கி அதனை மற்றைய தலைவர்களும் பொறுப்பேற்பார்களானால் அமைச்சர்கள் இருவரும் விசாரணைக் காலத்தில் விடுமுறையில் இருக்கவேண்டும் என்கிற தனது நிபந்தனையைக் கைவிடுவதற்கு இணங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சம்பந்தனின் பதில் கடிதத்தின் பின்பே இது தொடர்பில் இறுதி முடிவு ஒன்று எட்டப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலையில் முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் 15 உறுப்பினர்களும் ஆதரவாக மற்றைய மூன்று கட்சிகளையும் சேர்ந்த 15 உறுப்பினர்களும் ஆளுநரிடம் தமது சத்தியக் கடதாசிகளை வழங்கியிருந்தனர். எனினும் இப்போது முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் தமிழ் அரசுக் கட்சியுடன் அவரைச் சமரசம் செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

http://uthayandaily.com/story/7170.html

  • தொடங்கியவர்

உத்தரவாதமளித்தால் மீள் பரிசீலனைக்கு தயார் : சம்பந்தனின் கடிதத்திற்கு சி.வி.பதில்

cvp38-25ca77c09e315a05edb686a7e6dc78c508f7843c.jpg

 

ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்

வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாணும் வகையில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எழு திய கடிதத்துக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அவர் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் வடமாகாணசபையில் இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டாய விடுமுறை அளிக்கப்பட்ட அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனிஸ்வரன் ஆகியோர் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உத்தரவாதமளித்தால் எனது நிபந்தனையை மீள்பரிசீலனை செய்வதற்கு தயாராக உள்ளேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களான சுரேஷ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன் ஆகியோர் முதல்வருடன் நேற்று சனிக்கிழமை மாலை முக்கிய சந்திப்பை நடத்தியிருந்தார்.

இதனையடுத்தே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறான அறிவிப்பை கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் 14ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் விசேட அமர்வில் இருவேறு தீர்மானங்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அங்கு நெருக்கடி நிலைமைகள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் இருதரப்பிற்கும் இடையில் மத்தியஸ்த முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், குறித்த இரு அமைச்சர்களும் விசாரணைகளில் தலையீடு செய்யமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கும் வகையிலான எழுத்துமூல கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்திலேயே தனது அறிவிப்பை மாற்றுவது குறித்து சிந்திப்பேன் என உறுதியாக தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த இரண்டு அமைச்சர்களும் அவ்வாறான உத்தரவாத கடிதத்தை வழங்குவதற்கு தயாராக இல்லாதிருந்ததுடன் அமைச்சர்களுக்கு கட்டாய விடுப்பு அளிப்பதானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் கூறி அதனை நிராகரித்தனர். இதனால் இருதரப்பினரிடையிலும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் காலை எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண சபையின் அமைச்சர்கள் இருவர் மீது விசாரணைக்குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக முதலமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவு பொருத்தமற்றது. ஆகையினால் அதனை மீள திருத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்றை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனையடுத்து நேற்று மாலையளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும், குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்தின் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் சர்வேஸ்வரன் ஆகியோர் நேற்று மாலை 5.30மணியளவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவருடைய உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைமைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குறித்து மிகவும் கரிசனை காட்டப்பட்டது.

இதனையடுத்து, பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஏகோபித்த கருத்தொன்றை முன்வைத்தனர். அதாவது, கட்டாய விடுப்பு வழங்கப்பட்ட இரு அமைச்சர்கள் உத்தரவாத கடிதம் வழங்குவதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அவர்கள் குறித்த உத்தரவாத்தை அளிக்கும் பட்சத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தாங்கள் அதனை வழிமொழிவதோடு, அதற்குத் துணையான உறுதிப்பாட்டை வழங்குவதாகவும், எனவே தாங்கள் உத்தரவாதக் கடிதம் என்ற விடயத்தை மீளப்பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதனையடுத்து முதலமைச்சர் ``நான்கு கட்சிகளும் கூட்டாகவே என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏகோபித்த தீர்மானத்தினை எடுத்து நிறுத்தியிருந்தன. தற்போது அந்த இரு அமைச்சர்கள் விடயத்தில் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் உட்பட நான்கு கட்சிகளும் உத்தரவாதமளித்தால் அதனை மீள்பரிசீலிக்கின்றேன்" என்று குறிப்பிட்டதுடன், அந்த விடயத்தை மையப்படுத்தியும் நேற்றுக்காலை தனக்கு கிடைக்கப்பெற்ற அவரின்(சம்பந்தனின்) கடிதத்திற்குமாக பதில் கடித்தை அனுப்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அச்சந்திப்பு வடமாகாண சபையின் நெருக்கடி நிலைமைகளை சீர்செய்துவிடலாம் என்ற முதற்கட்ட நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்திப்பு மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாணசபையின் நிலைவரம் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு பதில் கடிதம் அனுப்பவேண்டிய அவசியம் இருந்தது.

பதில் கடிதம் அனுப்பும்போது ஏனைய பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடவேண்டிய அவசியமும் இருந்தது. அதன் நிமித்தம் அவர்களுடன் கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து கூட்டமைப்பின் தலைவருக்கு பதிலை அனுப்பியுள்ளேன்.

நான் அனுப்பிய கடிதத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதிலில் இருந்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எத்தகையது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும். குறிப்பாக இரண்டு அமைச்சர்கள் விடுமுறை தொடர்பில்தான் கூடுதலான விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் என்னால் கூறப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களின் உத்தரவாதம் தொடர்பில், அவர்கள் பின்னிற்பதாகவே அறியமுடிகின்றது. இது தொடர்பிலேயே எனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவருடைய பதிலில்தான், நான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.