Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத முரண்பாடுகளை தூண்டும் நடவடிக்கை தொடர்பில் 14 பேர் கைது

Featured Replies

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைது

p14-1b61982865db4325fac11b7e011ac853d7ef4322.jpg

 

அனைத்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர் 
(எம்.எப்.எம்.பஸீர்)

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட 14 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று பொலிஸ் பேச்­சாளர்,  

பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அத்­துடன் இது­வரை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டாத வெல்­லம்­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல், எல்­பிட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு, வென்­னப்­பு­வையில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு தொடர்பில் சந்­தேக நபர்­களை கைது செய்ய அந்­தந்த பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் கீழ் சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­வ­தா­கவும் மிக விரைவில் அவர்­களைக் கைது செய்ய முடியும் என நம்­பு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

நுகே­கொடை பகு­தியில் நான்கு முஸ்லிம் கடைகள் தீ வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் உறுப்­பி­னரை நாம் கைது செய்த போது, பொது பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தினார்.

அந்த சந்­தேக நபர் தமது அமைப்பை சேர்ந்­தவர் இல்லை எனவும் அவர் பொது பல சேனாவை சேர்ந்­தவர் என நிரூ­பிக்­கு­மாறு பொலி­சா­ருக்கு சவால் விடுத்தார். அத்­துடன் குறித்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் நிரூ­பிக்­கு­மாறு சவால் விடுத்தார்.

 நான் அவ­ரது பாணியில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்தி அதற்கு பதி­ல­ளிக்­க­வில்லை. மாற்­ற­மாக செயலில் காட்­டினோம். குரு­ணாகல் மல்­ல­வ­பிட்­டிய ஜும் ஆ பள்­ளி­வாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கைதா­ன­வர்கள் யார்?

யார் என்ன சொன்­னாலும் கைதா­ன­வர்கள் யாறென்றும் அவர்கள் யாருக்­காக வேலைப் பார்த்­தார்கள் எவர்­க­ளது நிக்ழ்ச்சி நிரல் என்­பதும் குரு­ணாகல் மக்­க­ளுக்கு நன்கு தெரியும்.

 இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் படி, நாட்டில் அண்­மையில் பதி­வான அனைத்து இன, மத முரண்­பாட்டு குற்­றங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பல சேனா இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

கைதா­கி­யுள்ள அனைத்து சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரா­கவும் இன­வாதம், மத­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ரா­கவும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் உறுப்­பு­ரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனைவிட தண்டனை சட்டக் கோவையின் 291 (1) ஆம் பிரிவின் கீழும் குற்றம் சாட்டப்பட்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.' என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.