Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை

Featured Replies

 

டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை

01-183e9e3fc130dd7b10a5d3eedf5e84195dcc7987.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

 டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதி­ரணி எழுப்­பிய கேள்­விக்கு பிர­த­மரோ, சுகா­தார அமைச்­சரோ பதி­ல­ளிப்­ப­தற்கு முன்­வ­ரா­த­மை­யினால் சபையில் ஆளும், எதிர்த்­த­ரப்­பு­க­ளுக்­கி­டையில் கடு­மை­யான குழப்­பமும் வாக்­கு­வா­தமும் ஏற்­பட்­டது.  

இதன்­கா­ர­ண­மாக சபை நட­வ­டிக்­கை­களை சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­ய­வுக்கு இரு தட­வை­கள் ஒத்­தி­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. எழுப்­பிய கேள்­வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான நிலைமை ஏற்­பட்­டது. 

 தினேஷ் குண­வர்த்­தன ‍எம்.பி.தனது கேள்­வியில், டெங்கு நோய் கார­ண­மாக தற்­போது நாட்டில் பெரும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. நீர்­கொ­ழும்பு, ஐ.டி.எச் வைத்­தி­ய­சா­லைகள் நோயா­ளர்­க­ளினால் நிறைந்து வழி­கின்­றன. இதற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை. உறங்­கு­வ­தற்கு மெத்­தைகள் இன்றி நோயா­ளர்கள் பெரும் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். ஆகவே டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன? என்றார்.  

அதற்கு பதி­ல­ளித்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷமன் கிரி­யெல்ல, டெங்கு நோய் தொடர்­பான கேள்­விக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை (இன்று) பதி­ல­ளிப்பார். எனினும் இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.  

இதன்­போது சபையில் கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோஷம் எழுப்பி, குழப்பம் விளை­வித்­தனர். ஆளும் , எதி­ர­ணி­யி­னர்­க­ளுக்கு இடையில் கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதில் வழங்­கியே தீர வேண்டும். பிர­த­ம­ருக்கும் டெங்­குவா என எதி­ர­ணி­யினர் கோஷ­மிட்­டனர்.

இதன்­போது சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல தினேஷ் குண­வர்­தன எம்.பியை பார்த்து, உங்­க­ளுக்கு என்ன மூளை வியா­தியா என கேள்வி எழுப்­பினார். பிர­தமர் நாளை (இன்று) வந்து பதில் தருவார் என்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திசா­நா­யக்க குறிப்­பி­டு­கையில், சபா­நா­யகர் அவர்­களே இந்த விட­யத்தை சாதா­ர­ண­மாக கணிப்­பிட முடி­யாது. இந்த சந்­தர்ப்­பத்தில் ஐ.டி.எச் வைத்­தி­ய­சாலை மூடப்­பட்­டுள்­ளது. நோயா­ளர்­க­ளுக்கு உறங்­கு­வ­தற்கு இட­மின்றி அவ­தி­யுற்று வரு­கின்­றனர். 

ஆகவே இந்த சந்­தர்ப்­பத்தில் பதி­ல­ளிப்­ப­தற்கு பிர­த­ம­ரையும் காண­வில்லை. முக்­கி­ய­மாக பொறுப்­பு­வாய்ந்த சுகா­தார அமைச்­சரும் இல்லை. வேறு தினங்­க­ளில ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களில் கண்ட மாதிரி பேசி திரிவார். எங்கே தற்­போது காண­வில்லை. எனவே தாம­திக்க இட­ம­ளிக்க முடி­யாது உடன் பதி்ல வழங்க வேண்டும் என்றார். 

தற்­போது பிர­தமர் சபையில் இல்­லாத கார­ணத்­தினால் ஒன்றும் செய்ய முடி­யாது. பிர­தமர் நாளை (இன்று) பதில் வழங்­குவார் என்றார். இதன்­போது கடு­மை­யான எதிர்ப்பு வெளி­யிட்­ப­பட்­டது. நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கேள்வி என்­பது அவ­சர நிலை­மையை கருத்­திற்­கொண்டு கேட்­கப்­பட கூடிய கேள்­வி­யாகும். ஆகவே இந்த கேள்­வியை தட்­டிக்­க­ழிக்க இட­ம­ளிக்க முடி­யாது. உடன் பதி்ல் வழங்க வேண்டும் என கூட்டு எதி­ரணி எம்.பி வாசு­தேவ நாண­யக்­கார குற்றம் சாட்­டினார். 

அச்­ச­ம­யத்தில் எழுந்த அமைச்சர் தயா கமகே, பிர­த­ம­ருக்கு சபைக்கு வர முடி­யாது. டெங்கு நோய் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யா­டல்­களில் பிர­தமர் ஈடுப்­பட்­டுள்ளார். ஆகவே நிச்­சி­ய­மாக நாளை (இன்று) பதில் வழங்­குவார் என்றார்.

இதன்­போது கோப­ம­டைந்த அநுர குமார திசா­நா­யக்க எம்.பி, இது­வ­ரைக்கும் பல உயிர்கள் இழந்­துள்ள நிலையில் இதன் பின்னர் உங்கள் தலைவர் பேச்­சு­வார்த்தை நடத்தி என்ன செய்ய போகின்றார். இது என்ன அர­சாங்கம் என கடு­மை­யான வார்த்­தை­க­ளினால் சாடினார். 

சபை நட­வ­டிக்­கைகள் மோச­ம­டைந்­ததை அடுத்து கட்சி தலை­வர்­க­ளுடன் கூடி ஆராய்ந்து உரிய பதிலை வழங்­கு­வ­தற்­காக சபை நட­வ­டிக்­கை­களை 10 நிமி­டத்­திற்கு ஒத்­தி­வைப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய அறி­வித்தார். அதன்­பி­ர­காரம் பிற்­பகல் 1.50 மணிக்கு சபை நட­வ­டிக்­கைகள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. பின்னர் 2.15 மணிக்கு சபை நட­வ­டிக்­கைகள் மீளவும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

சபை நட­வ­டிக்கைள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­வுடன் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக குறிப்­பிட்டு , சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ள­தா­கவும் தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பதில் வழங்­கு­வ­தாக கூறியுள்ளார் . ஆகவே சுகாதார அமைச்சருக்கு பதில் வழங்க கட்சி தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர் என்றார்.

இதன்பின்னர் சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தல், அமைச்சு அறிவித்தல் நிறைவடைந்தவுடன் மீளவும் சுகாதார அமைச்சரின் பதிலுக்காக சபை நடவடிக்கைகளை பிற்பகல் 2.45 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்தார்.

அதன்பின்னர் பிற்பகல் 3. 15 மணிக்கு மீளவும் சபை நடவடிக்கை ஆரம்பமானது. இதனையடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பதில் வழங்கினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-21#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.