Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பேரூந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் : கண்டும்காணாதது போல் செயற்படும் மாநகர சபை

Featured Replies

யாழ்.பேரூந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் : கண்டும்காணாதது போல் செயற்படும் மாநகர சபை

 

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் உள்ள கழிவு வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளானது யாழ்.மாநகர சபையால் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பில் தமது விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.

IMG_4699_copy.JPG

குறிப்ப்பாக நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் அதிகாரிகள் பொது இடத்தில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் இக் குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசட்டையீனமாக செயற்படுவது குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

IMG_4662_copy.jpg

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் யாழ்.மத்திய பேரூந்து நிலையமானது வியாபாரிகளுக்கு வியாபார நிலையங்களை நாள் வாடகைக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட வியாபார நிலையங்களிற்கு அண்மையில் ஒர் கழிவு வாய்க்கால் வடிகால் காணப்படுகின்றது. இவ் கழிவு வாய்க்கால் வடிகாலுக்குள் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளதால் கழிவு நீரானது வெளியேற முடியாது அதற்குள் தேங்கியுள்ளது.

IMG_4655_copy.JPG

குறித்த கழிவு நீர் வடிகாலுக்குள் பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் கடதாசிப் பெட்டிகள், உணவகங்கள் மற்றும் பழ வியாபார நிலைய கழிவுகள் என பல கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டு கழிவு நீர் வெளியேறாத வகையில் காணப்படுகின்றது.

IMG_4651_copy.JPG

இந்நிலையில் கழிவுகள் அகற்றப்படாமை குறித்து அப் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கையில்,

இப் பகுதியில் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக குப்பை கழிவுகள் அகற்படாது உள்ளன. குறிப்பாக எமக்கு பேரூந்து நிலையத்திற்குள் வியாபார நிலையங்களை அமைப்பதற்கு மத்திய பேரூந்து நிலையமே அனுமதியளித்து அதற்கான வாடகை பணத்தை பெற்றுக்கொள்கின்றது. இது தொடர்பாக யாழ்.மாநகர சபையினருக்கும், பேரூந்து நிலைய தரப்பினருக்கும் இடையில் பிரச்சனை ஒன்று காணப்படுவதாக அறிகின்றோம். இவ் பிரச்சினையை பிரதானப்படுத்தி மாநகர சபையினர் தற்போது குப்பைகளை அகற்றுவதை நிறுத்தியுள்ளனர்.

IMG_4655_copy.JPG

யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் பொதுமக்களது பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் குழாய்களினால் வெளியேறும் நீரானது குறித்த இவ் வடிகால் ஊடாகவே வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது குறித்த வடிகாலுக்குள் பொலித்தீன், பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் வியாபார நிலைய கழிவு பொருட்கள் இருப்பதால் நீரானது வெளியேற முடியாது அடைத்து கிடக்கின்றது.

IMG_4643_copy.jpg

இவ்வாறு அடைத்து கிடக்கும் குப்பை கழிவுகளை நாங்கள் துப்பரவு செய்ய முயற்சித்தாலும் இவற்றை எங்கே கொட்டுவது என்பது தொடர்பில் பிரச்சனை காணப்படுகின்றது. நாம் எமது வியாபார நிலைய கழிவுகளை தற்போதைய குப்பைகளை கொட்டும் முறையில் அவற்றை வகை பிரித்து கொடுத்தாலுஔ அதனை மாநகரசபையினர் எடுத்துச் செல்வதில்லை. என தெரிவித்திருந்தனர்.

IMG_4634_copy.jpg

இந்நிலையில் இது விடயமாக நாளாந்தம் பேரூந்து நிலையத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் தெரிவிக்கையில்,

இவ் குப்பை கழிவுகளால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தோற்று நோய்களை பரப்பகூடிய ஈ, போன்றனவும் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக பேரூந்து நிலையத்தை அண்டியுள்ள உணவகங்களில் உணவு அருந்துவதற்கு கூட ஒர் அருவருப்பான நிலையே காணப்படுகின்றது. இவ் குப்பை கால்வாய்க்குள் கழிவு நீர் தேங்கியுள்ளது மாத்திரமன்றி சிலர் அதற்குள்ளேயே வெற்றிலை துப்பல்களையும் போடுகின்றார்கள். இதனால் மிகவும் அருவருக்கத்தக்க பகுதியாகவும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த பகுதியாகவும் மாறிவருகின்றது.

மேலும் நாட்டில் டெங்கு நேய் பரவி வருவதாக சுகாதார துறையினர் கூறிவருவதுடன் அதனை கட்டுபடுத்துவதற்கு வீடு வீடாக சோதனை செய்யும் பரிசோதகர்கள் எவரும் கூட இவ்வாறு பொது இடத்தில் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை உற்பத்தி செய்யும் வகையில் காணப்படும் இவ் வடிகால்களை கண்டுகொள்ளாது அசட்டையீனமாக செயற்படுவது குறித்தும் பொதுமக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/21112

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.