Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை?

Featured Replies

போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை?
 

image_1ee28db807.jpg- சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

“வடமாகாண சபை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, முதலமைச்சருக்கு ஆதரவாகக் கிளிநொச்சி பகுதியில் கடமை நேரங்களில் போராட்டம் நடத்திய அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாகவும் அதனை அண்டிய பகுதிகளிலும், கடந்த 19ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள கரைச்சிப் பிரதேச சிற்றூழியர்கள் கடமை நேரத்தில் கையொப்பமிட்டு, போராட்ட நடவடிக்கைளை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, கடமை நேரங்களில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, கடமை நேரங்களில் இவ்வாறு அரசியலில் ஈடுபட்ட அசிரியர்கள் கரைச்சி பிரதேச சபை சிற்றூழியர்கள் தொடர்பில், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.