Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரர் விடயத்தில் அரங்கேற்றப்பட்ட போலி நாடகங்கள் : அம்பலமாகும் உண்மைகள்!

Featured Replies

நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது. அவர் நீதியைக்கண்டு ஒளியவில்லை தனது பாதுகாப்பிற்காகவே மறைந்துள்ளார் எனவும் தேரர் தரப்பு தெரிவித்தது.

மேலும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தம்பி மூலமாக தேரர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் பொலிசார் கைது செய்ய வந்ததும் அதற்காகவே எனவும் பொதுபலசேனா குற்றச்சாட்டினை முன்வைத்தது.

எனினும் நேற்று அந்த குற்றச்சாட்டுகளோ, உயிர் அச்சுறுத்தல் விடயமோ பேசப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதேபோல ஞானசாரரைக் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவரை கூடிய விரைவில் கைது செய்யபோவதாகவும், அதற்கு பொதுமக்களின் உதவியையும் கூட பொலிசார் கோரியிருந்தனர்.

அரசு தரப்பும் இது விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. அசமந்த போக்கினையே கடைபிடித்து வந்தது. உதாரணமாக ஒளிந்துள்ளவரை கைது செய்வது கடினம் என அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஞானசாரரைக் கைது செய்ய முடியாமல் போனதில் தனது இயலாமையை தெரிவித்துக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் பொலிசாரினதும், அரசினதும் இழுத்தடிப்புகள் தெளிவு படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஞானசாரருக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பும், தமது செயற்பாடுகளுக்கும் எவருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஞானசாரரும், பொதுபல சேனாவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஞானசாரர் நேற்று சரணடைந்து, அதே வேகத்தில் பிணையில் வந்தும் விட்டார்.

குறிப்பாக தேரர் நேற்று சரணடைந்தது தனக்கு எதிரான இரு வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் முகமாகவே.

ஆனால் அவரை கைது செய்ய 5 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டது, ஞானசாரர் வழக்குகளில் ஆஜராகாத குற்றச்சாட்டுகளுக்காக அல்ல.

அவர் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவித்தார், முஸ்லிம் மதத்தினையும் அல்லாவையும் அவதூறாக பேசியக் குற்றச்சாட்டுக்காகவே.

இந்தக் குற்றச்சாட்டுகளே ஞானசாரதேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தேரர் அல்லாவை அவதூறாக பேசவில்லை அது சுத்தமான சிங்களச் சொல் எனவே அது போலியான குற்றச்சாட்டு எனவும் பொதுபலசேனா ஊடகங்களுக்கு தெரிவித்தது. என்றாலும் நேற்றைய தினம் அந்த குற்றச்சாட்டுகள் நிமித்தம் ஞானசாரர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன எனவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தது, வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் படி ஞானசார தேரர் விவகாரத்தில் ஆரம்பத்தில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறியதும், பொலிஸார் அவரை சிறையில் வைத்து கொலை செய்ய உள்ளதாக கூறியதும் போலியானவை என்று கூறப்படுகின்றது.

அதேபோல் 5 விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டு வருவதாக சித்தரிக்கப்பட்ட ஞானசாரர் நேற்று சர்வ சாதாரணமாக நீதிமன்றத்திற்கு வந்து சென்றதன் மூலம்., அவரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

காரணம் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பொலிஸாரின் தேடுதல் வேட்டையும் உண்மையாக இருந்தால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

எனவே இந்த தேரர் விடயத்தில் பின்னணியில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர் என்பதே வெளிப்படை. இதேவேளை கொழும்பு ஊடகம் ஒன்றும் அமைச்சர் ஒருவர் இதன் பின்னணியில் இருக்கின்றார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஆக மொத்தத்தில் ஞானசாரர் இனவாதம் பரப்பியது, தலைறைவாக இருந்தமை, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக கூறியமை, 5 பொலிஸ் குழுக்கள் அவரைத் தேடுவதாக கூறியமை., உட்பட அனைத்துமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பதும் இன்றைய நிலையில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/politics/01/149776?ref=home-feed

 

http://www.tamilwin.com/politics/01/149776?ref=home-feed

  • தொடங்கியவர்

இரு முறை சிக்கியும் ஞானசார தேரர் தப்பித்தது எப்படி? உதவியது யார்?

கடந்த பல நாட்களாக பொலிஸாருக்கு பெரும் தலையிடியாக இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.

நீதிமன்றில் ஆஜராகிய போதும் ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார். தனது வழக்கறிஞர்கள் ஊடாக இன்றைய தினம் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் இரண்டின் சந்தேக நபரான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இரண்டு முறை பிடியாணை பிறபிக்கப்பட்டது.

இவ்வாறு நீதிமன்றத்தை தவிர்த்த நபர் ஒருவர் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட முடியும் என சட்டத்தரணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரர் மறைந்திருந்த போது அவரை பாதுகாப்பதாக பல்வேறு தரப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக பிரபல அமைச்சர்கள் சிலரின் மீது விரல் நீட்டப்பட்டது.

அதற்கமைய அவ்வாறான அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவரை பொலிஸார் கைது செய்யவில்லை.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் ஞானசார தேரர் உள்ளமையினால் அவரை கைது செய்ய முடியவில்லை என அரசாங்கத்தின் பிரபல அமைச்சரிடம் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/security/01/149762

  • தொடங்கியவர்

மூன்று நீதி­மன்­றங்­க­ளாலும் ஞான­சார தேர­ருக்கு பிணை - கைதானவருக்கு பிணை வழங்குவதை எதிர்க்காத பொலிஸார் 

p16-f125927583e1a2de0e144d1c6d2a25f277c0711e.jpg

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று மூன்று நீதி­மன்­றங்­க­ளி னால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்­றினால் விடுக்­கப்­பட்ட பிடி­யாணை, அவர் அங்கு சர­ண­டைந்ததை தொடர்ந்து மீளப்­பெ­றப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது.  

அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினால் புதுக்­க­டையில் உள்ள கொழும்பு பிர­தான நீதி வான் நீதி­மன்றம், 4 ஆம் இலக்க மேல­திக நீதிவான் நீதி ­மன்றம் ஆகி­ய­வற்றில் தாக்கல் செய்­யப்­பட்ட

 வழக்­குகள் தொடர்பில் ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு ஆஜர்­செய்­யப்­பட்ட நிலையில் அந்த நீதி­மன்­றங்­க­ளாலும் அவர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார்.

கோட்டை நீதி­மன்றில் சர­ண­டைந்த ஞான­சாரர்

முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்து மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­காத பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர்­செய்­யு­மாறு கோட்டை நீதி­மன்றம் கடந்த 15 ஆம் திகதி உத்­த­ரவு பிறப்­பித்­தது. 770/14, 758/14 ஆகிய வழக்­கெண்­களைக் கொண்ட இரு வழக்­குகள் தொடர்­பி­லேயே கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார். அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய இரு வழக்­குகள் தொடர்­பிலும் தலா ஒவ்­வொரு பிடி­யாணை வீதம் இரு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

2014.04.09 ஆம் திகதி கொம்­பனி வீதி நிப்பொன் ஹோட்­டலில் நடைப் பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி, அதனை குழப்­பி­யமை, திட்­ட­மிட்ட அத்­து­மீறல் மற்றும் தாக்­குதல் உள்­ளிட்ட 8 குற்­றச்­சாட்­டுக்கள் ஞான­சார தேர­ருக்கும் மேலும் 6 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இஸ்­லாத்­தையும் குர் ஆனையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மட்டும் பிறி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 இந்த இரு வழக்­கு­க­ளிலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்று காலை 10.18 மணிக்கு கல­கொட அத்தே ஞான­சார தேரர் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் சர­ண­டைந்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் அங்கு சர­ண­டையும் போது சுமார் நூற்­றுக்கும் அதி­க­மான தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­யி­ருந்­தனர்.

 இந் நிலையில் சட்­டத்­த­ரணி சுதர்­ஷனி குண­ரத்­னவின் இடை­யீட்டு மனு­வுக்கு அமைய ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டார்.

இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த, உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை எனவும் உரிய தவ­ணையில் ஆஜ­ரா­காமை தொடர்பில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­யா­ணையை மீளப் பெறு­மாறும் நீதி­மன்றைக் கோரினார்.

இந்த நிலையில் இரு வழக்கு தொடர்­பி­லான முன்­னைய ஆவ­ணங்­களை பரி­சீ­லனை செய்த கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, ஒரு வழக்கில் இது­வரை ஞான­சார தேரர் தவ­றா­னது மன்றில் ஆஜ­ரா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார். மற்­றைய வழக்கில் ஒரு தவ­ணை­யி­லேயே மன்றில் ஆஜ­ராக தவ­றி­யுள்­ள­தா­கவும் அந்த வழக்கில் மறு­நாளே அவர் ஆஜ­ராகி ஆஜ­ரா­கா­மைக்­கான கார­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். இந்த நிலை­மையை அவ­தா­னத்தில் கொண்டு குறித்த இரு வழக்­கு­க­ளிலும் ஞான­சார தேர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டி­ருந்த பிணை நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே செல்ல நீதிவான் லங்கா ஜய­ரத்ன அனு­ம­தி­ய­ளித்தார். அத்­துடன் அவ்­விரு வழக்­கு­க­ளிலும் விதிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை மீளப்­பெற்ற நீதிவான் வழக்கின் தவ­ணை­களில் தவ­றாது ஆஜ­ராக வேண்டும் ஞான­சார தேர­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

ஓ.சி.பி.டி. யில் முன்­னி­லை­யான ஞான­சார தேரர்:

 கோட்டை நீதி­மன்றில் பிணை பெற்ற பின்னர் ஞான­சார தேரர் நேராக புறக்­கோட்டை மிஹிந்து மாவத்­தையில் உள்ள ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளிக்க சென்றார். இதன்­போது அங்கு ஞான­சார தேரரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் அவரை இரு வழக்­குகள் தொடர்பில் கைது­செய்­தனர். 73854, 73465 ஆகிய இலக்­கங்­களைக் கொண்ட புதுக்­கடை 4 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றம் மற்றும் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் உள்ள வழக்­குகள் தொடர்­பி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

 குற்றம் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி கமல் சில்­வாவின் கீழ் செயற்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்­பி­லான பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த லிய­னகே, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார ஆகியோர் அடங்­கிய குழு­வினர் ஞான­சார தேரரைக் கைது­செய்­தனர்.

 நீதி­மன்றில் ஆஜர்

 கைது செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் பொலிஸார் ஊடாக புதுக் கடையில் அமைந்­துள்ள நீதி­மன்ற வளா­கத்­துக்கு அழைத்து வரப்­பட்டார். இதன்­போதும் பெரு­ம­ள­வான பெளத்த தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­னர்இ

மேல­திக நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்

 இவ்­வாறு நீதி­மன்­றுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சாரர் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் ஆஜர்­செய்­யப்­பட்டார். முன்­ன­தாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சர்­வ­தேச சிவில், அர­சியல் இணக்­கப்­பட்டு சட்­டத்தின் விதி விதா­னக்­களின் பிர­காரம் இர­க­சிய, பாது­காக்­கப்­பட்ட பீ அறிக்கை ஒன்­றூ­டாக இவ்­வ­ழக்கில் அறிக்கை சமர்­பித்­தி­ருந்த பொலிஸார் நேற்று அந்த குற்­றச்­சாட்­டுக்­களை இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டாக தாக்கல் செய்த மேல­திக அறிக்கை ஊடாக மாற்­றி­ய­மைத்­தனர். அதன்­படி நேற்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் மட்டும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்றில் முன்­னி­லை­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து நீதி­மன்றை விளித்த மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முதலில் தாக்கல் செய்­யப்­பட்ட சிவில், அர­சியல் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை பொலிஸார் விலக்­கிக்­கொண்டு தற்­போது தண்­டனை சட்டக் கோவையின் கீழ் சில குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர். பிணையை மறுக்க பிணைச் சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள எந்த விட­யத்­தையும் பொலிஸார் முன்­வைக்­க­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­களும் பிணை வழங்­கத்­தக்­கதே. பிணை வழங்க பொலிஸார் எந்த எதிர்ப்பும் இல்லை என்­கின்­றனர்.

எனவே ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சொந்தப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல ஞான­சார தேரரை அனு­ம­திக்­குறேன் என நீதிவான் அறி­வித்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்

இத­னை­ய­டுத்து ஞான­சார தேரர் பொலன்­ன­று­வையில் வைத்து மத முரண்­பாட்டை தோற்­று­விக்கும் கருத்­துக்­களை வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கில் ஆஜர்­செய்­யப்­பட்டார்.

இதன்­போது ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 120 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல கலகொட அத்தே ஞானசார தேரரை பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார அனுமதித்தார்.

அத்துடன் ஞானசார தேரருக்கோ அவர் சார்ந்த பொது பல சேனா அமைப்புக்கோ வேறு இன, மதங்களை துற்றும் வகையில், வெறுப்பூட்டும் வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக எச்சரித்தார். சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிவான் அவ்வாறு அறிக்கை கிடைத்தால் பிணை இரத்தாகும் என தெரிவித்ததுடன் வழக்கை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஞானசார தேரர் நேற்று மாலை 4.15 மணியளவில் நீதிமன்றில் இருந்து வெளியேறிச் சென்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மீது
எந்த நடவடிக்கையும்
எடுக்க கூடாது

காலம் காலமாக
புலிகள் சொல்லி வந்ததை
மக்கள் மறக்க விடாது
நினைவில் வைத்து இருக்க
உதவுபவர்

இவர் செய்யும்
அரசியல்
எமக்கு சாதகமானது

ஆனால் அதை
சாதகமாகும் அரசியல்
தலைமை இன்று
எம்மிடம் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.