Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதற்குத் தயார் அமைச்சர் டெனீஸ்வரன் உறுதி

Featured Replies

மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதற்குத் தயார்

அமைச்சர் டெனீஸ்வரன் உறுதி

 
 
மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய  தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதற்குத் தயார்
  •  

 

“சுயா­தீ­ன­மான – – சட்­ட­வ­லு­வுள்ள -– மாகாண சபை உறுப் பினர்­களை உள்­ள­டக்­கிய தெரி­வுக் குழு விசா­ர­ணைக்கே முகம் கொடுக்­கத் தயா­ரா­க­வுள்­ளேன். இதனை உள்­ள­டக்கி விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்­ட­தும் எனது விடுப்­புக் கடி­தத்தை, தேவை ஏற்­ப­டின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும் வகை­யில் பதவி வில­கல் கடி­தத்­தைக்­கூட கொடுப்­ப­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன்” இவ்­வாறு வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், இரு அமைச்­சுக்­கள் மீதும் புதிய விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­ப­டும் என்று பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் நேற்­றுத் தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பில் அமைச்­சர் டெனீஸ்வரனின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழல் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சருக்கு அறிக்கையிட்ட விசாரணைக் குழுவின் விடயங்களை அவர் இப்போதுதான் சரியாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

எனது அமைச்சு மீது முறைப்பாடு தெரிவித்த சாட்சி கடந்த விசாரணைக்கு வரவில்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டே அந்தச் சாட்சி, அசமந்தப் போக்காக விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. அந்தச் சாட்சிக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்குவதை வரவேற்கின்றேன்.

புதிய விசாரணை, சுயாதீனமான – சட்டவலுவுள்ள – மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவாக அமைய வேண்டும். அந்த விசாரணையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன். அப்படியான விசாரணைக் குழு அமைக்கப்பட்டால், முதலமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போன்று எனது ஒரு மாத விடுப்புக் கடிதத்தை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.

தேவைப்படின், விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எனது பதவி விலகல் கடிதத்தைக் கூட நான் சமர்பிக்கத் தயாராகவே இருக்கின்றேன் – என்றார்.

http://uthayandaily.com/story/7795.html

  • தொடங்கியவர்

குற்றச்சாட்டை நிரூபியுங்கள் இருமடங்கு பணம் தருகிறேன்

அமைச்சர் டெனீஸ்வரன் சவால்

 
குற்றச்சாட்டை நிரூபியுங்கள் இருமடங்கு பணம் தருகிறேன்
 

‘என் மீது சுமத்­தப்­பட்டுள்ள ஊழல் குற்­றச்சாட்டு நிரூபிக்­கப்­பட்­டால், ஊழல் செய்த­தா­கக் கூறப்­ப­டும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தரு­வேன்”இவ்­வாறு சவால் விடுக்கிறார் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்­துத்துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன்.

யாழ்ப்­பா­ணம் வீதி அபி­வி­ருத்தி திணைக்க­ளத்தின் கேட்­போர்
கூடத்­தில் நேற்று முற்­ப­கல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தொடர்பாக நடைபெற்ற பிரச்சினை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். என்னை ஒரு மாதகால விடுப்பில் செல்லுமாறு எனக்கு பணிக்கப்பட்டது. ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை. நான் ஊழல் செய்யவில்லை.

அதனால் நான் விடுப்பில் போக தயாரகஇல்லை. நீதியான முறையில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளபடக் கூடிய விசாரணைக் குழு அமையுமாயின் அந்த விசாரணைக்கு நான் தயார். அதற்கு ஒரு மாதகாலம் அல்ல, தேவை ஏற்படின் எனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பேன்.

சாட்சி

என்மீது ஊழல் குற்றச்சாட்டுத் தொடுத்த சாட்சி வரவில்லை என்றும் என்னை ஒன்றும் கேட்கவில்லை என்று பலர் கூறுகின்றார்கள். அந்தச் சாட்சி அந்த நாளில் ஜெனிவாவில் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் சாட்சி அந்த நாளில் யாழ்ப்பாணத்தில்தான் இருந்துள்ளார் என்பதனை நான் நன்கு அறிவேன்.

என்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டு முறையான விசாரணைக் குழு மூலமாக நிருபிக்கப்பட்டால் அந்தத் தொகையின் இரண்டு மடங்கை நான் தருவேன். இன்னமும் நான் பயன்படுத்தும் வாகனத்துக்கு எரிபொருள் செலவு போதாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். இது எனக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் செலவை விட அதிகமாகவே எனக்குச் செலவு ஏற்படுகின்றது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெரிவிப்பேன்.

கட்சி மாறவில்லை

நான் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து விட்டேன், கட்சி மாறிவிட்டேன் என்று கூறுகின்றார்கள். அதில் எந்த உன்மையும் இல்லை. நான் இப்போதும் ரெலோ கட்சியில் தான் உள்ளேன். 2013 ஆம் ஆண்டு நான் கட்சி மூலமாகத்தான் அமைச்சராக பதவிஏற்றேன். இன்றும் அதே கட்சியில் தான் உள்ளேன். எனது கட்சி ஜனநாய முறையை விட்டு வழி தவறி நடந்தால் நான் கட்சி மாறவேண்டிய நிலை ஏற்படும்.

அமைச்சர்கள் மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் வைப்பார்கள். அதனை உரிய விசாரணைக்குழு மூலமாகப் பரிசீலினை செய்த பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். இல்லை என்றால் மக்களுக்காக செயற்படும் மாகாண சபை என்ற பெயர் இல்லாமல் போய் வடக்கு மாகாண சபை விசாரணை சபையாக மாறும்.

ராசியில்லாத ஆசனம்?

அவைத் தலைவர் என்பவர் மரியாதைக்கு உரியவர். அதனால்தான் அவரின் ஆசனம் அண்மையில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அது எமக்கு ராசி இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. அந்தக் கதிரை வந்த பிறகு வடக்கு மாகாண சபையில் அமைதியின்மை காணப்படுகின்றது. ஆனால் கடந்த வடக்கு மாகாணசபை அமர்வு மிக அமைதியாக நடைபெற்றது மிகவும் வரவேற்கத்தக்கது” என்றார்.

http://uthayandaily.com/story/7884.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.