Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைத்தீவு மக்களின் வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

Featured Replies

இரணைதீவை விடுவிக்கக்கோரி ஏ-32 வீதியினை மறித்து மக்கள் போராட்டம்

 
இரணைதீவை விடுவிக்கக்கோரி ஏ-32 வீதியினை மறித்து மக்கள் போராட்டம்
 

தங்களது பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

unnamed-3-11.jpg

unnamed-4-14.jpg

unnamed-35.jpg

http://uthayandaily.com/story/7790.html

Edited by நவீனன்

இரணைத்தீவு மக்களின் வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

IRA9.jpg
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 54 நாளாக  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
  கடந்த ஐந்தாம் மாதம்    முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர் இப் போராட்டமானது இன்று தீர்வுகள் எவையும் இன்றி  54  நான்காவது நாளை எட்டிய நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  சுமார் நூற்றுக்கு  மேற்ப்பட்ட மக்கள்  இன்று காலை அங்கிருந்து  சுலோகங்களைத் தாங்கியவாறு  பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர்  இவ்வாறு வீதியை மறித்து போராட்டம் செய்வது சட்டத்திற்கு  முரணானது    போக்குவரத்துக்கு தடையாக இருப்பவர்களை  கைது செய்யவும் முடியும்  இப்போராட்டத்தை நிறுத்த தேவையான ஆயுதங்கள் கருவிகள்  நீதிமன்ற உத்தரவு என்பன  எம்மிடம் உள்ளது  நாம்  எதனையும் செய்யவில்லை  எனவே பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்காத வகையில்  போராட்டத்தை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்

இதற்கமைய மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் சென்று தங்களுக்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து பாதிக்காத வகையில் போராட்டத்தை முன்னெடுத்தனா்.

 
இந்த நிலையில்   சம்பவ இடத்திற்கு சென்ற  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய வீதிமறிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது
 
இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன்   இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம் எதிர்வரும் புதன்கிழமை  எனக்கும் அரசாங்க அதிபரிற்கும் கடற்படையினரிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற உள்ளது அக் கலந்துரையாடலுக்காக இரணைதீவு சம்பந்தப்பட்ட மேலதிக தரவுகளையும் வழங்க உள்ளோம் அதுவரை  ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார் இதற்கமையவே இப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
 
எனினும்  இரணைதீவு மக்களால்  முன்னெடுக்கப்பட்டுவந்த  தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் இவ் சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கா விடின் போராட்டம் வேறு வடிவத்திற்கு மாறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/archives/30745

  • தொடங்கியவர்

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் 

 

 

கிளிநொச்சி, இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ 32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட  வீதிமறிப்புப் போராட்டம்  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய முடிவிற்கு வந்துள்ளது.

unnamed.jpg

இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி பிரதேச செயலர் இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம் எதிர்வரும் புதன்கிழமை  எனக்கும் அரசாங்க அதிபரிற்கும் கடற்படையினரிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற உள்ளது அக் கலந்துரையாடலுக்காக இரணைதீவு சம்பந்தப்பட்ட மேலதிக தரவுகளையும் வழங்க உள்ளோம் அதுவரை  ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார் இதற்கமையவே இப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

unnamed-_2_.jpg

எனினும்  இரணைதீவு மக்களால்  முன்னெடுக்கப்பட்டுவந்த  தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் இவ் சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கா விடின் போராட்டம் வேறு வடிவத்திற்கு மாறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர் .

http://www.virakesari.lk/article/21174

 

  • தொடங்கியவர்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரணைத்தீவு மக்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.