Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனத்துக்காகப் போராடி 100 நாள் உயிர் வாழ்ந்தால் போதும்....பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்

Featured Replies

இனத்துக்காகப் போராடி 100 நாள் உயிர் வாழ்ந்தால் போதும்

p7-820cad73f753d869737f4448ceec1c46aab694d3.jpg

 

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு பேட்டி

நேர்காணல்: லியோ நிரோஷதர்ஷன்

மனோ கணேசன் சிறந்த மனிதர். அவர் தொடர்­பாக எனக்கு தவா­றான நிலைப்பாடே காணப்­பட்­டது. நல்­லி­ணக்க அமைச்சின் பொறுப்­புக்­களை அவரால் முன்­னெ­டுக்க முடியும் என நான் நம்­பு­கின்றேன்.

நாட்டில் ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக கடந்த 30 ஆண்டு காலம் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர் கொண்டோம். அவ்­வா­றா­ன­தொரு நிலைமை இன்றோ நாளையோ அல்­லது இன்னும் ஐந்து வரு­டத்­திலோ ஏற்­ப­டலாம். அதனை தடுக்கும் நோக்­கி­லேயே பொது­பல சேனா செயற்­பட்­டுள்­ளது.

எனக்கு உயி­ரச்­சு­றுத்தல் உள்­ளது. அது குறித்த தக­வல்­களை சம்­மந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளேன். நீதி ­மன்­றத்­திற்கும் அறி­ விக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வாறா­யினும் எமக்கு மரணம் எவ்­வாறு வரும் என்ற தெரி­யாது. ஆனால் வெறு­ மனே மர­ணிக்க நான் விரும்பவில்லை. 

இலங்­கையை போன்று முஸ்­லிம்­களின் உயி­ருக்கு பாது­காப்­பான நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. ஆனால் விடு­தலை. புலி­களை விட 100 மடங்கு முன்­னோக்­கிய ஆபத்­தான ஒன்­றா­கவே இஸ்லாம் அடிப்­ப­டை­வாதம் நாட்டில் உரு­வெ­டுத்து வரு­கின்­றது. ஆகவே அனைத்து இன மக்­க­ளி­னதும் நாட்­டி­னதும் பாது­காப்பை கருத்தில் கொண்டு பொது­பல சேனா தொடர்ந்தும் போராடும் என அந்த அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.  

புத்­தரின் தர்ம போத­னையின் அடிப்­ப­டையில் வாழும் என்னை திருட்டில் ஈடு­படும் அடிப்­ப­டை­வா­தி பயங்­க­ர­வாதி என விமர்­சிக்­கின்­றனர். ஆனால் உண்­மைகள் வெளிவரும் போது நான் உயி­ருடன் இல்லா விட்­டாலும் மக்கள் எனக்கு சிலை வைப்­பார்கள். எனவே அர­சாங்கம் இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தி­களின் பிரச்­சி­னைக்கு அவ­ச­ர­மாக தீர்வு காண வேண்டும் எனவும் ஞான­சார தேரர் வலி­யு­றுத்­தினார்.

பொது­பல சேனாவின் பொதுச்செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் ஞான­சார தேரர் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில்,

 

கேள்வி: முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாகக்கூறி பல தரப்­பு­களும் கடு­மை­யாக உங்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றது. இது தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன ?

பதில்: தவ­றான நிலைப்­பா­டாகும். எம்மிடம் தமிழ் , சிங்­களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறு­பாடு இல்லை. நாட்டில் இன­வா­தத்­திற்கு மற்­று­மொரு சந்­தர்ப்பம் அளிக்க முடி­யாது என்­பதே எமது நோக்­க­மாகும். திருட்டை பிடித்துக் கொடுப்­ப­வரை தாக்­கு­கின்­றனர். ஆனால் திரு­டனை யாரும் கண்டு கொள்­வ­தில்லை. திரு­டனை பிடித்­துக்­கொ­டுப்­ப­வரை தாக்­கு­வதும் விமர்­சிப்­ப­து­மான செயற்­பா­டு­களே இடம்­பெ­று­கின்­றன.

நாட்டில் கலா­சா­ரத்தை சிதைக்கும் குழுக்கள் செயற்­ப­டு­கின்­றன. வடக்கு மற்றும் கிழக்கில் சென்று பாருங்கள். அங்கு வாழும் தமிழ் மக்­க­ளிடம் கேட்டால் உண்­மை­களை அறிந்­து­கொள்ள முடியும். தென் பகு­தி­யிலும் சில பகு­தி­க­ளுக்கு சென்று பார்த்தால் உண்மை நிலை வெளிப்­படும்.

நாட்டில் ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக கடந்த 30 ஆண்டு காலம் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர் கொண்டோம். அவ்­வா­றா­ன­தொரு நிலைமை இன்றோ நாளையோ அல்­லது இன்னும் ஐந்து வரு­டத்­திலோ ஏற்­ப­டலாம். அதனைத்தடுக்கும் நோக்­கி­லேயே பொது­பல சேனா செயற்­பட்­டுள்­ளது.

 

கேள்வி:இஸ்லாம் மீது குற்றம் சாட்டு கின்றீர்கள். எதிர்­காலத்தில் அச்­சு­றுத்தல் என்கிறீர்கள்? எவ்வாறு இப்படி கூறுகின்றீர் கள்? 

பதில்: இந்த விட­யத்தை பொது­பல சேனா பேசு­வதை விட தற்­போது அனு­பவம் மிக்க உய­ரிய மகாநா­யக்க சங்­கத்­தினர் கையில் எடுத்­துள்­ளனர். இந்த விட­யத்தை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பதே எமக்­குள்ள சிறந்த வழி­யாகும். ஆனால் பிரச்­சினை அது­வல்ல. இஸ்லாம் மதத்தை பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கு பௌத்த மதம் தொடர்பில் கேள்­வி­களை எழுப்ப முடியும். ஆனால் பௌத்­தர்­க­ளுக்கு இஸ்லாம் மதம் குறித்து எவ்­வி­த­மான கருத்தும் தெரி­விக்க முடி­யாது. இந்­நி­லையில் நாட்டின் ஜன­நா­ய­கத்தை எவ்­வாறு கணிப்­பது.

இஸ்லாம் மத கட­வுளின் கட்­ட­ளை­களை செயற்­ப­டுத்­து­ப­வர்­களே முஸ்­லிம்கள். அவர்கள் தங்­க­ளது நிலைப்­பாட்டில் இருந்து செயற்­ப­டு­கின்­றனர். மறு­புறம் பௌத்த மர­பு­களை சிதைக்­கின்­றனர். இதனை தான் நாங்கள் எதிர்க்­கின்றோம். சாதா­ரண முஸ்லிம் மக்­களை நாங்கள் எதிர்க்க வில்லை. கலா­சார ரீதி­யா­கவும் சட்­ட ரீதியாகவும் , எமது உணவு முறைமை உள்­ளிட்ட அனைத்­தையும் ஆக்­கி­ர­மிக்­கின்­றனர். பிரி­வி­னை­வாதத்­துடன் வரும் இவ்­வா­றான அடிப்­ப­டை­வாதத்தையே நாம் எதிர்க்­கின்றோம். இதனை புரிந்து கொள்­வதில் ஏற்­பட்­டுள்ள சிக்கல் நிலையே பிரச்­சினையாக மாறியுள்­ளது.

 

கேள்வி: இஸ்லாம் மதத்தை எதிர்ப்­பதும் - இந்து மதம் மீதான பொது­ப­ல­சே­னாவின் ஆத­ரவு போக்­கையும் எவ்­வாறு நியாயப்­ப­டுத்த முடியும்?

பதில்: மத பிரச்­சி­னை­களை ஒரு புறம் வைப்போம். எமக்கு வேறு­பா­டுகள் இல்லை. உங்­க­ளது கையை வெட்­டி­னாலும் எனது கையை வெட்­டி­னாலும் வெளிவரப் போவது என்­னவோ சிவப்பு உதிரம் தான். எனவே இங்கு மனி­தா­பி­மானம் தொடர்­பான பிரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது. இதனை சிதைக்கும் வகையில் செயற்­படும் இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்­தி­னையே எதிர்க்­கின்றோம். நல்­ல­வர்­களும் கெட்­ட­வர்­களும் அனைத்து சமூ­கத்­திலும் உள்­ளனர். இது சமுதா­யத்தின் நிய­தி­யாகும்.

ஆனால் எமக்­குள்ள பிரச்­சி­னை என்­பது சாதா­ரண மக்­களை நோக்­கி­ய­தல்ல. நாட்டின் சட்­டத்தை சிதைத்து செயற்­ப­டு­ப­வர்கள் தொடர்பில் எமக்கு பிரச்­சி­னைகள் உள்­ளன. அவ்­வா­றான குழுக்­களை அடை­யாளம் கண்டு எதிர்ப்­பதே எமது செயற்­பா­டா­கவும் காணப்­ப­டு­கின்­றது. அனை­வரும் நாட்டின் சட்­டத்தை மதிக்க வேண்டும்.

உதா­ர­ண­மாக வன­வள சட்டம் தமி­ழர்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் ஒரு வித­மாக செயற்­ப­டு­கின்­றது. ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கு அந்த சட்டம் வேறு வித­மாக செயற்­ப­டு­கின்­றது. பல முஸ்லிம் தரப்­புகள் வன­வள சட்­டத்­தையும் தொல்­பொருள் சட்­டத்­தையும் மீறு­கின்­றன. இவ்­வா­றான விட­யங்­களில் சட்­டத்தை வலுப்­ப­டுத்தி அனைத்து சமூ­கத்­திற்கும் நீதி கிடைக்கும் வகையில் செயற்­பட வேண்­டி­யதே அவ­சி­ய­மாகும். எனவே இங்கு இஸ்லாம, இந்து என்­பதை விட சட்­டமே முதன்­மை­யாக வேண்டும்.

அடிப்­ப­டை­வா­திகள் அனைத்து பிரி­வு­க­ளிலும் உள்­ளனர். ஆனால் பொது­ப­ல­சே­னவை எவ்­வாறு அடிப்­ப­டை­வா­திகள் என கூறு­கின்­றனர் என்­பது எமக்கு புரிய வில்லை. நான் இன­வா­தியும் அல்ல மத­வா­தியும் அல்ல. சாதா­ரண மனிதன். புத்­தரின் தர்ம போத­னையின் அடிப்­ப­டையில் வாழும் ஒரு­வரே நான். ஆனால் திருட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள், பொது­பல சேனாவை மத­வா­திகள் அடிப்­ப­டை­வா­திகள் என விமர்­சிக்­கின்­றனர். ஆனால் உண்­மை­களை நீண்ட நாட்­க­ளுக்கு மறைத்து வைக்க முடி­யாது. தற்­போது வெ ளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன. அதனை எதிர் கொள்ள வேண்­டிய நிலையே எமக்­குள்­ளது.

 

கேள்வி: போர் காலத்தில் இவ்­வா­றான அடிப்­ப­டை­வாதத்­திற்கு எதி­ரான செயற்­பா­டு­களில் நீங்கள் ஈடு­படவில்லை. ஆனால் தற்­போது காணப்­படக் கூடிய அமை­தி­யான சூழலில் ஏன் இவ்­வாறு கடு­மை­யான செயற்­பா­டுகள் ?

பதில்: போர் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் என்­னைப்­போல செயற்­பட்ட ஒரு பிக்கு நாட்டில் இல்லை என்றே நான் கரு­து­கின்றேன். அக்­கா­லப்­ப­கு­தியில் 2007 ஆம் ஆண்டு விடு­தலைப்புலி­க­ளுக்கு எதி­ரான போரை ஆயுத ரீதியில் முடி­விற்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போது, குமார் ரூப­சிங்­கவின் தேசிய சமா­தான பேரவை போன்ற அமைப்­புகள் அதற்கு எதி­ராக செயற்­பட்­டன. தற்­போ­தைய அர­சாங்­கத்தில் உள்ள சிரால் லக்­தி­லக போன்­ற­வர்­களும் சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டன.

அந்த காலப்­ப­கு­தியில் சமா­தான பேர­வையை தோல்­வி­ய­டைய செய்­ததும் நான் தான். போர் நிறுத்த காலப்­ப­கு­தி­யிலும் கிழக்­கிற்கு சென்று போராட்­டங்­களை நடத்­தினோம். அந்த போராட்­டங்கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­னவை அல்ல. விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளையே நாங்கள் முன்­னெ­டுத்தோம்.

1998 ஆம் ஆண்டில் இருந்து எமது போராட்டம் ஆரம்­பித்­தது. 2009 ஆம் ஆண்டு போராட்­டத்­திற்­கான வெற்றி எமக்கு கிடைத்­தது. அன்று நாட்­டிற்கு தேவைப்­பட்ட ஆன்­மீக தலை­மைத்­து­வத்தை வழங்­கினோம். இன்­றுள்ள சவால்­க­ளையும் அதே நிலைப்­பாட்டில் இருந்து வெற்றி கொள்வோம்.

 

கேள்வி: இஸ்லாம் மதத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்­க­ளுக்கு தீ வைப்­ப­தா­கவும் உங்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. அமைச்­சர்­க­ளான ரிஷாத் பதி­ யூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்­ற­வர்­களும் உங்­களை கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர். இது குறித்து?

பதில்: எந்­த­வொரு சந்­தர்ப்­பத்திலும் உணர்­வு­க­ளுக்கு அடி­மைப்­ப­டாது புத்­தி­சா­லித்­த­ன­மாக சிந்­திக்­கு­மாறு கேட்டுக் கொள்­கின்றேன். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் யாரும் பேசு­வ­தில்லை. சோமா­வதி பகு­தியில் உள்ள வெஹே­ர­கொ­டவில் பெரும் தொகை­யான தூபிகள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு 15 தூபிகள் இடித்து தள்­ளப்­பட்­டுள்­ளன. அந்த இடத்தில் மாட்டு கொட்­டில்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அடை­யா­ளங்­களை அழிக்க இட­ம­ளிக்க முடி­யாது. அதே போன்று மாணிக்­க­ம­டு­விற்கு சென்று பார்த்­தாலும் அதே சிதைவு நிலைதான் காணப்­ப­டு­கின்­றது. பாலி மொழியில் மாணிக்க என்­பது மாணிக்கக்­கல்லை குறிக்கும் சொல்­லாகும். தீக­வா­வியில் வைப்­ப­தற்­காக மறைத்து கொண்டு வரப்­பட்ட மாணிக்கம் நிறைந்த பொதியை வைத்­தி­ருந்த இடமே கிழக்கின் மாணிக்­க­மடு இது சத்­தா­திஸ்ஸ மன்­னரின் கோட்­டை­யாகும்.

இதனை இன்று முஸ்­லிம்கள் மாயா­மடு என கூறு­கின்­றனர். இதனை சிதைவு என கூறாது வேறு எவ்­வாறு கூற முடி­கின்­றது. மற்­று­மொரு விடயம் சிவ­னொ­ளி­பாத மலை­யாகும். 1988 பேரா­சி­ரியர் விம­ல­சூ­ரிய முஸ்லிம் சிறார்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்­கப்­படும் தவ­றான வர­லாறு தொடர்­பான நூல் ஒன்­றினை எழு­தி­யி­ருந்தார்.

அதா­வது 600 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இமன் பதுதா என்­ப­வரே சிவ­னொ­ளி­பாத மலையை கண்­டு­பி­டித்­த­தாக கற்­றுக்­கொ­டுக்­கின்­றனர். இத­னூ­டாக சிவ­னொ­ளி­பாத மலை முஸ்­லிம்­களின் உரிமம் என்­ப­தையே கூற வரு­கின்­றனர். இந்­நி­லையில் வர­லாற்றை தவ­றாக கற்கும் பிள்­ளைகள் எதிர்­கா­லத்தில் போராட்­டத்­திற்கு வர மாட்­டார்­களா ? இவற்­றையே பொது­ப­ல­சேனா சுட்­டிக்­காட்­டு­கின்­றது. இதனால் இன்று நாங்கள் பயங்­க­ர­வா­தி­யாக மத­வா­தி­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்றோம்.

தர்­ம­பால மாவத்தை, ஹசன் மாவத்தை என பெயர் மாற்றும் போது மௌனித்­தி­ருந்தால் நல்­லி­ணக்கம் . ஏல­பொல குமா­ரி­ஹாமி வீதி பள்ளி வீதி­யாகும் போது மௌனித்­தி­ருந்தால் சிறந்த பிக்­குகள் நாங்கள். அதனை சுட்­டிக்­காட்­டினால் பயங்­க­ர­வாதி என்­கின்­றனர். அதே போன்று வில்­பத்து காட­ழிப்பு தொடர்­பாக பேசு­வ­தற்கு முன்னர் , வீட்டு தோட்­டத்தில் உள்ள மரத்தை வெட்­டு­வ­தாயின் எத்­தனை அனு­ம­தி­ பெற வேண்­டி­யுள்­ளது.

அந்த சட்டம் ஏன் வில்­பத்துக்கு செல்­லு ­ப­டி­யா­காது என்­பதை பேச வேண்டும். ரிஷாத் பதி­யூ­தீனின் பிரச்­சி­னையை பிறகு பார்க்­கலாம். தமிழ் மற்றும் சிங்­க­ள­வர்கள் காட்டில் விறகு வெட்­டினால் சட்­டத்தை தூக்­கிக்­கொண்டு வரு­கின்­றனர். ஏன் அந்த சட்டம் ரிஷாத் பதி­யூ­தீ­னிக்கு இல்லை. எனவே இது வேறு மட்­டத்தில் பேசப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­யாகும். அதற்­கான புறச்­சூழல் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது என்றே நான் கரு­து­கின்றேன்.

 

கேள்வி:நல்­லி­ணக்கம் தொடர்பில் பேசும் போது அண்­மையில் மனோ கணே­சனின் அமைச்­சுக்கு சென்று அந்த அமைச்­சுக்கு அவர் தகு­தி­யில்லை என கூறி­யி­ருந்­தீர்கள்? இது குறித்து தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: இல்லை, மனோ கணேசன் சிறந்த மனிதர் . அவர் தொடர்­பாக எனக்கு தவறான நிலைப்­பாடே காணப்­பட்­டது. நல்­லி­ணக்க அமைச்சின் பொறுப்­புக்­களை அவரால் முன்­னெ­டுக்க முடியும் என நான் நம்­பு­கின்றேன். ஆனால் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மற்றும் தூத­ர­கங்­களின் நிகழ்ச்சி நிரல்கள் அல்ல. மனோ கணே­ச­னுக்கு தேசிய திட்டம் ஒன்று இருக்க வேண்டும். மனச்­சாட்­சிக்கு நேர்­மை­யாக செயற்­பட வேண்டும்.

மிக விரைவில் மீண்டும் மனோ கணே­சனை சந்­திக்க உள்ளேன். ஊட­கங்­க­ளில்­லாத சூழலில் அவரை சந்­திக்க விரும்­பு­கின்றேன். அவ­ருடன் தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் எமக்­கில்லை. சந்­திப்பு 5 நிமி­டத்­திற்கு முன்னர் இரத்து செய்­யப்­பட்­ட­மை­யி­னா­லேயே அமைச்சில் சற்று குழப்­ப­மான சூழல் ஏற்­பட்­டது. எனவே அவ­ருக்கு தேவை­யான ஒத்­து­ழைப்­புக்­களை எதிர்­கா­லத்தில் வழங்­குவோம்.

கேள்வி: உயி­ரச்­சு­றுத்தல் உள்­ள­தாக கூறி­யி­ருந்­தீர்கள். ஐ எஸ் அமைப்பின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்­ளீர்கள் . இதன் உண்மை தன்மை என்ன ?

பதில்: எனக்கு உயி­ரச்­சு­றுத்தல் உள்­ளது. அது குறித்த தக­வல்­களை சம்பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளேன். நீதி­மன்­றத்­திற்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் எமக்கு மரணம் எவ்­வாறு வரும் என்ற தெரி­யாது. ஆனால் வெறு­மனே மர­ணிக்க நான் விரும்ப வில்லை. பிரச்­சி­னை­க­ளுக்­காக முன்­னின்று இனத்­துக்­காக போராடி 100 நாட்கள் உயிர் வாழ்ந்­தாலும் போதும் என்றே நான் கரு­து­கின்றேன். இந்த நிலைப்­பாட்டில் இருந்து கொண்டு தான் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுக்­கின்றேன்.

அனைத்து தரப்­பு­க­ளிலும் எமக்கு எதி­ரிகள் உள்­ளனர். சிலர் போராட்­டத்தை தவ­றான பார்­வையில் காணு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்சி, சுதந்­திர கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இவர்கள் அனை­வரும் தமது கட்சி கண்­ணாடி ஊடாக பார்க்­கின்­றனர். இவர்கள் அனை­வரும் கட்சி கண்­ணா­டி­களை அகற்றி விட்டு பார்த்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும்.

பய­ணத்தை ஆரம்­பித்து தொடரும் போது அட்­டைகள் காலில் தொற்­று­வது இயற்­கை­யா­னது. ஆனால் எமது இலக்கு புனி­த­மா­னது என்றால் அது வெற்றி இலக்கை அடையும். இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் அந்த ஆசிர்வாதம் எமக்­குள்­ளது. சத்­திய தர்­மத்தின் வழி­யி­லேயே நாங்கள் பய­ணிக்­கின்றோம். எனவே இன்று திரைக்கு பின்னால் இருந்து கொண்டு ஆட்டம் போடும் குழுக்கள் வெளிவரும் நாட்கள் வரும். அந்த காலம் வரு­கையில் நாங்கள் சில சந்­தர்ப்­பங்­களில் மர­ணித்­தி­ருப்போம். ஆனால் மக்கள் எமக்கு சிலை வைப்ப­வர்கள். எமது எச்­ச­ரிக்­கையை பொருட்­ப­டுத்­தா­மையின் விளைவே இது என்று ஒருநாள் உணர்­வார்கள். 

1983 ஆம் ஆண்டில் விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­கரன் ஆயுதம் தூக்­கு­வ­தற்கு முன்னர் செல்­வ­நா­யகம் போன்­ற­வர்கள் 1930 களில் அதற்­கான அடித்­த­ளத்தை போட்­டனர். எனவே இன்று முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் குரல் எழுப்­பு­கின்றோம். விடு­தலை புலி­களை விட 100 மடங்கு முன்­னோக்­கிய ஒன்­றா­கவே இது அமையும். நல்­லி­ணக்­கத்தை விரும்பும் சிங்­களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாத வாப்­வாதம் பெரும் பிரச்­சி­னை­யாக அமையும்.

எனவே அவ­சர­மாக இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றதை போன்று இந்த பிரச்­சி­னைக்கும் அவ­சரமாக தீர்வு காணப்­பட வேண்டும். பிள­வு­படக்கூடிய அனைத்து விட­யங்­களும் இன்று நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. முகத்தை மறைத்தல் , தாடி வளர்த்தல் , உணவு முறைமை ஹலால் மய­மாக்கும் திட்டம் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

நாட்­டிற்கு அழிவை ஏற்­ப­டுத்திக் கொள்ள கூடாது. அறி­வு­சார்ந்த முஸ்லிம் சமூகம் இந்த பிரச்­சி­னையை பேசு­வ­தற்கு முன்­வர வேண்டும். அப்­போது தான் தீர்வை எட்ட முடியும். இலங்­கையை போன்று நல்­லி­ணக்கம் மிக்க, உயி­ரச்­சு­றுத்தல் அற்ற நாடு முஸ்­லிம்­க­ளுக்கு உலகில் வேறு எங்­குமே இல்லை. இலங்­கையை போன்று பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு உள்­ளதா? உயிர் அச்சுறுத்தல் இன்றி முஸ்­லிம்கள் இலங்­கையில் வாழ்­கின்­றனர். பௌத்­தர்­களின் நல்­லி­ணக்­கத்­தினால் தான் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

 

கேள்வி: இலங்­கையில் ஐஸ். எஸ். ஐஸ். எஸ். செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றதா ?

பதில்: இதற்­கான ஆதா­ரங்­களை பொது­ப­ல­சேனா பொறுப்­பு­டைய தரப்­பு­க­ளுக்கு வழங்க உள்­ளது. நாங்கள் பேசினால் பல்­வேறு விமர்­ச­னங்கள் வரு­கின்­றன. எனவே பொறுப்­பு­டைய பௌத்த தலை­வர்கள் மற்றும் ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் ஆதா­ரங்­களை வழங்க உள்ளோம். அதன் பின்னர் பிரச்­சி­னைக்கு தீர்வை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்த உள்ளோம்.

 

கேள்வி:பொது­ப­ல­சே­னாவின் பின்­ன­ணியில் வலு­வான நாடு ஒன்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதன் உண்மை தன்மை என்ன ?

பதில்: இதற்கு சுருக்­க­மான பதில் என்றால் ,

வேறு நாடொன்றின் பின்­னணி எனக்­கி­ருந்தால் இந்த நாட்டின் ஆட்­சியை கைப்­பற்­றி­யி­ருப்பேன். ஒவ்­வொரு கருத்­துக்­களை கூறு­கின்­றனர். எமது நாட்டின் அர­சி­யல்­வா­திகள் சாத்­திரம் பார்ப்­பது போன்று கருத்­துக்­களை கூறு­கின்­றனர். கோத்தபாய, மஹிந்த போன்றவர்கள் பொதுபலசேனாவின் பின்னணியில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே இவை அனைத்துமே உண்மையற்ற வெறும் வார்த்தைகள் மாத்திரமேயாகும்.  

 

கேள்வி:முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு தயாரில்லையா ?

பதில்:கடந்த அரசாங்கத்துடனும் பேசினோம். மக்கள் கருத்துக்களுக்கு செவிமடுக்காத சர்வாதிகார ஆட்சியாகவே கடந்த ஆட்சி கருதப்பட்டது. எனவே தான் நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல நியாயமாக செயற்படும் என்று எதிர்பார்த்த போதிலும் நாட்டு மக்களுக்கு தற்போது உண்மை நிலை வெளிப்பட்டுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிரச்சினையை நல்லாட்சி அரசாங்கம் பொதுபலசேனாவை விட சிறந்த வகையில் நோக்கும் என்றே கருதினோம்.

ஆனால் மஹிந்த ஆட்சியை போன்று இவர்களும் எம்மை குறை கூறுகின்றனர். எனவே பிரச்சினையை தீர்க்க வேண்டிய தேவை இவர்களுக்கும் இல்லை என்றே தெரிகின்றது. ஆனால் ஜனாதிபதி தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். அவருக்கு போதுமான ஒத்துழைப்புகள் இல்லை.

கேள்வி: முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக எதிர்காலத்திலும் செயற்படுவீர்களா ?

பதில்: நிச்சயமாக. அடிப்படைவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராக போராடுவோம். அது மாத்திரம் அல்ல இனவாதம் மதவாதம் போன்றவற்றுக்கு எதிராகவும் போராடுவோம். உண்மைகளை மக்கள் அறிய தொடங்கியுள்ளனர். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் எந்த போர்வையில் வந்தாலும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பொதுபல சேனாவின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-24#page-1

  • தொடங்கியவர்

 

பொதுபலசேனாவின் போராட்டம் தொடரும் ; கலகொட அத்தே ஞானசார தேரர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.