Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு நவசமசமாஜக்கட்சி குற்றச்சாட்டு

Featured Replies

அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு

நவசமசமாஜக்கட்சி குற்றச்சாட்டு

 
அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு
 

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தலை­மை­யி­லான வடக்கு மாகாண சபை தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் தேவை­யற்ற செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடுபடுவதாக நவ சமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கவலை தெரிவித்த அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண, தென் மாகாண சபையும் இதுபோன்ற செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

நவ சமசமாஜக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரட்ணவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது:

சிவாஜிலிங்கம் போன்றோர் சில நேரம் தமிழ் மக்களின் சார்பில் இனவாதப் பேச்சுக்களை வெளியிடுகின்றனர். சில நேரம் இனவாதத்தைத் தூண்டும் கடினமான பேச்சுக்களையும் கூறுகின்றனர். அதில் ஒன்றையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைத் தீர்மானத்திற்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அதனைத் தோற்கடிக்கும் நோக்கில் வடக்கில் சில இனவாதக் குழுக்கள் முயற்சித்து வருகின்றன.

இது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுகின்றோம். யாழ்ப்பாணத்துக்குச் சென்றும் இதற்கு எதிராக நான் பேசியுள்ளேன். இன்று வடக்கு இனவாதிகள் தென்னிலங்கை இனவாதிகளை பலப்படுத்துகின்ற அதேவேளை, தெற்கு இனவாதிகள், வடக்கு இனவாதிகளைஅ சக்திப்படுத்துகின்றனர்.

தென்மாகாண சபையும் தமக்கு உட்படாத சில பிரேரணைகளை நிறைவேற்றுகின்றது. வடக்கு மாகாண சபையிலும் இது இடம்பெறுகின்றது. வடக்கு மாகாண சபை குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம். கடந்த காலங்களில் அதிகாரங்களைச் சரிவர பயன்படுத்தாமல் விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் சில அரசியல் அறிவிப்புக்களை விடுத்து வருகின்றது. எனினும் அந்தப் பேச்சுக்களால் எந்தவித பயனும் இல்லை. தென்மாகாண சபையும் இருந்திருந்து இதுபோன்ற செயற்பாட்டில் ஈடுபடும்-என்றார்.(த)

http://uthayandaily.com/story/7872.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.