Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசப்பான யதார்த்தம்

Featured Replies

கசப்பான யதார்த்தம்

 

இலங்கையில் என்­ன­தான் நல்­லி­ணக்­கம் பேசி­னா­லும் சிங்­கள, பௌத்த இன­வா­தத்­தில் ஊறிப்­போ­யி­ருக்­கும் அதன் தன்­மையை அவ்­வ­ளவு இல­கு­வில் மாற்­றி­வி­ட­முடி யாது. தாம் ஊறி­யி­ருப்­பது சிங்­கள, பௌத்த இன­வா­தத் திற்­குள்­தான் என்­பதை உணர முடி­யா­த­வர்­க­ளா­கவே பலர் அதற்­குள் ஊறித் திளைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­து­தான் மிகக் கொடுமை.

இதற்கு மிகச் சிறந்த பிந்­திய உதா­ர­ணம் பொதுபலசேனாவின் பொதுச் செய­லா­ளர் ஞான­சார தேர­ரைக் கைது செய்­வது குறித்து பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிரி­யந்த ஜயக்­கொடி தெரி­வித்­தி­ருக்­கும் கருத்து. சிங்­கள அரச இயந்­தி­ரத்­தின் அச்­சாணி எது என்­பதை அச்­சொட்­டாக வெளிப்ப டுத்­து­கி­றது அவ­ரது கருத்து. தமி­ழர்­க­ளின் அச்­சம்­கொள்­ளும் ஆணி­வேர் எது என்­ப­தை­யும் அதுவே வெளிப்­ப­டுத்­தி­வி­டு­கி­றது.

‘‘பொது­ம­கன் ஒரு­வ­ரைக் கைது செய்­வ­தற்­கும் தேரர் ஒரு­வ­ரைக் கைது செய்­வ­தற்­கும் இடையே வித்­தி­யா­சம் இருக்­கி­றது. விசா­ர­ணைக்­காகப் பொது மக்­க­ளின் இடங்க ளுக்­குச் சர்வ சாதா­ர­ண­மா­கச் செல்ல முடி­யும். இந்த நடை­முறை விகா­ரை­க­ளுக்­குள் சாத்­தி­யப்­ப­டாது‘‘ என்­றார் ஜயக்­கொடி.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு பேசும்­போதே அவர் அத­னைத் தெரி­வித்­தார். இலங்­கை­யில் சட்­டத்­தின் முன்­பாக பொது மக­னும் தேரர்­க­ளும் ஒன்­றாக மதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் அல்­லர் என்­பதை அவ­ரது கருத்துத் தெளி­வாக விளக்­கு­கி­றது.

பௌத்த சிங்­க­ள­வ­ரி­லும் பார்க்க பௌத்த தேரர்­கள் எப்­போ­துமே ஒரு­படி மேலே­தான் என்­ப­தையே அவர் சொல்­லா­மல் சொல்­கி­றார். தேரர்­கள் என்ன தவறு செய்­தா­லும் விகா­ரைக ளுக்­குள் நுழை­வதோ தேரர்­க­ளைக் கைது செய்­வதோ இலகு வான காரி­யம் அல்ல என்­ப­தையே அவர் தெளி­வு­ப­டுத்­து­கி­றார்.

பொது­மகன் ஒரு­வ­ரைக் கைது செய்­வ­தற்­கும் சம­யத் தலை­வர் ஒரு­வ­ரைக் கைது செய்­வ­தற்­கும் இடையே வித்­தி­யா­சம் இருக்கி றது என்று அவர் கூற­வில்லை. இங்­கே­தான் சிங்­கள, பௌத்த இன­வா­தத்­தின் கூறத் தெளி­வாக இனங்­காண முடி­கி­றது.
இலங்­கை­யில் சட்­டம் ஒழுங்­கைப் பேணும் ஒரே அமைப்பு பொலிஸ்­தான். அப்­ப­டி­யி­ருக்­கை­யில் இலங்­கைப் பொலி­ஸா­ரின் முன் அனை­வ­ரும் சம­மா­ன­வர்­களே. சாதா­ரண மக்­க­ளைக் கையாள்­வ­தி­லும் தலை­வர்­க­ளைக் கையாள்­வ­தி­லும் வேறு­பா­டு­கள் இருந்­தால் அது­வும் ஒரு பொதுப் பண்பு நிறைந்­த­தா­கவே இருக்க வேண்­டும். அதா­வது எந்த மதத் தலை­வ­ராக இருந்­தா­லும் அவர்­கள் மீது பொலி­ஸா­ரால் இல­கு­வில் கைவைக்க முடி­யாது என்று பொலிஸ் பேச்­சா­ளர் கூறி­யி­ருந்­தால் அதனை ஓர­ள­வுக்­கா­க­வது ஏற்­றுக்­கொள்ள முடிந்­தி­ருக்­கும்.

ஆனால் அவரோ, தேரர்­களை மட்­டுமே குறிப்­பிட்­டார். ஏனெ­னில் அது­தான் இலங்­கை­யின் யதார்த்­தம். பௌத்­த­மும் தேரர்­க­ளும்­தான் இங்கே முக்­கி­யம். இந்து, கிறிஸ்­தவ, முஸ்­லிம் மதத் தலை­வர்­க­ளுக்கு தேரர்­க­ளுக்கு நிக­ரான இடம் கிடை­யாது. பௌத்த சிங்­கள பொது­ம­க­னுக்­குக் கிடைக்­கும் மரி­யா­தை­யி­லும் பார்க்க குறைந்த மதிப்பே அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும்.
போர்க் காலத்­தில் இதனை நேர­டி­யா­கவே பார்க்க முடிந்­தது. அனு­ப­விக்க முடிந்­தது. போர் முடிந்த பின்­ன­ரும் மகிந்த ராஜ­பக்ச கோலோச்­சிய காலத்­தி­லும் அந்த நிலமை அப்­ப­டியே இருந்­தது. ஏனெ­னில் மகிந்­த­விற்­கும் பௌத்த சிங்­க­ளம் மட்­டுமே முக்­கி­ய­மாக இருந்­தது. ஆனால், தற்­போ­தைய அர­சின் காலத்­தி­லும் அது அப்­ப­டி­யே­தான் இருக்­கி­றது என்­ப­தன் யதார்த்­தம்­தான் பொலிஸ் பேச்­சா­ள­ரின் வாய்க்­கூ­டாக வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ், முஸ்­லிம் மக்­க­ளின் வாக்­கு­க­ளை­யும் பெற்­றுத்­தான் நாட்­டின் அரச தலை­வ­ரும் அர­சும் பத­விக்கு வந்­தா­லும் அடிப்­படை மனோ­நி­லை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையே பொலிஸ் பேச்­சா­ள­ரின் கருத்­துப் புடம்­போட்­டுக் காட்­டு­கி­றது.
இத­னால்­தான் இலங்­கை­யின் பொலிஸ் மீதும் நீதி­யின் மீதும் தமக்கு நம்­பிக்­கை­யில்லை என்­றும் அவற்­றால் முன்னெ டுக்­கப்­ப­டும் எந்த விசா­ர­ணை­யை­யும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்­றும் உள்ளூரில் நடக்­கும் எந்­த­வொரு விசா­ரணை யாயி­னும் அதன் ஊடா­கத் தமக்கு நீதி கிடைக்­காது என்­றும் பன்­னாட்­ட­ள­வில் நடை­பெ­றும் விசா­ரணை ஒன்­றின் ஊடா­கவே நீதி கிடைக்­கும் என்று தமி­ழர்­கள் எண்­ணு­கி­றார்­கள். அதன்­படி நடக்­கி­றார்­கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளிலும் இந்த நிலமையில் மாற்றம் ஏதுமில்லை என்பதே கள யதார்த்தம். நல்லிணக்கம் பற்றியும் தீர்வு பற்றியும் பேசப்படும்போது இதுவொரு கசப்பான யதார்த்தமே!

http://uthayandaily.com/story/7913.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.