Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க.,கூட்டமைப்பு,மு.கா.வே சமஷ்டி முறையை கொண்டுவர முயற்சி ஒருபோதும் இடமளியோம் என்கிறார் தினேஷ்

Featured Replies

ஐ.தே.க.,கூட்டமைப்பு,மு.கா.வே சமஷ்டி முறையை கொண்டுவர முயற்சி

dibesh-1-da70a4ec7845e43a4339a454b97ceb15a387a79c.jpg

 

ஒருபோதும் இடமளியோம் என்கிறார் தினேஷ்

 (ரொபட் அன்­டனி)

 அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து சர்­வ­ஜ­ன ­வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் வீடு சென்­று­விடும். அதில் எவ்­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. ஒற்­றை­யாட்­சிக்கு பங்கம் ஏற்­படும் வகை­யி­லான எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்­புக்கும் நாங்கள் இட­ம­ளிக்க மாட்டோம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். கூட்டு எதி­ர­ணியே பாரா­ளு­மன்­றத்தில் இன்று உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­கின்­றது. பேர­ளவில் எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு

 தமது பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்­வ­தற்கே நேரம் போதாமல் இருக்­கின்­றது என்றும் கூட்டு எதி­ர­ணியின் தலைவர் சுட்­டிக்­காட்­டினார்.  இதே­வேளை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் இணைந்து நாட்டில் சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்சி செய்­கி­றது. அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்றும் தினேஷ் குண­வர்த்­தன கூறினார்.  

 நாட்டில் தற்­போ­தைய அர­சியல் நிலைமை தொடர்பில் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்:-  எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்­வ­தாக தெரி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்குள் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கே நேரம் போதாமல் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் எந்­த­வ­கை­யிலும் நாட்டின் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு எதிர்க்­கட்­சி­யா­னது முன்­னிற்­க­வில்லை.

 குறிப்­பாக நாட்டில் பொரு­ளா­தாரப் பிரச்­சினை, டெங்கு, மற்றும் குப்­பைப்­பி­ரச்­சினை, வடக்கில் மீனவர் பிரச்­சினை வரட்சி, மோச­மான கால­நிலை என பல்­வேறு சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இது தொடர்பில் அர­சாங்­கமும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. எதிர்க்­கட்­சியும் கவ­னத்தில் கொள்­ளாமல் இருக்­கி­றது. எனினும் மக்­களின் உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் கூட்டு எதி­ர­ணி­யா­னது இந்த மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் குரல்­கொ­டுத்து வரு­கின்­றது.  

 விசே­ட­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யா­னது எமக்கு கிடைக்­க­வேண்­டி­ய­தாகும். ஆனால் அர­சாங்கம் தமக்கு தேவை­யா­ன­வர்­களை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. மேலும் நாம் தற்­போது மக்­க­ளுக்கு தேவை­யான விட­யங்­களை செய்து வரு­கின்றோம். உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக நாங்­களே செயற்­பட்டு வரு­கின்றோம். இதே­வேளை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் இணைந்து நாட்டில் சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்சி செய்­கி­றது. அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். கூட்டு எதி­ர­ணியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் சமஷ்­டியை எதிர்ப்­ப­துடன் ஒற்­றை­யாட்­சிக்­காக முன்­னிற்­கின்­றன.

 எனவே சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். இதே­வேளை சமஷ்­டி­மு­றை­மை­யுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அர­சாங்கம் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பை நடத்­து­மாயின் நிச்­சயம் வீடு­செல்லும் என்­பதை மிகவும் திட­மாக கூறு­கின்றோம். காரணம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தினால் அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும் வெற்­றி­பெற முடி­யாது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் தமிழ் கூட்­ட­மைப்­பிற்­குமே இதற்­கா­ன­தேவை காணப்­ப­டு­கின்­றது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். இதே­வேளை அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது அல்­லது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­ட­மா­னது எவ்­வாறு அமையும் என இது­வரை கூறப்­ப­ட­வில்லை.

 ஆனால் எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்தின் கீழேயே இருக்­க­வேண்டும். எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் புதிய தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைத்த பின்­னரே அது தொடர்பில் நாம் கருத்து வெளி­யி­ட­மு­டியும். எனினும் ஒற்­றை­யாட்­சியை தவிர்த்து எந்­த­வொரு தீர்­வுத்­திட்­டத்­திற்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். முதலில் அரசாங்கம் என்ன செய்கின்றது என்று பார்ப்போம். அதன் பின்னர் எமது நடவடிக்கைகளை எடுப்போம். தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையாக இல்லை. மாறாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியுள்ளது. அரசாங்கத்தினால் இவ்வருடம் வரவு, செலவுத்திட்டத்தையே கொண்டுவர முடியுமா எனத் தெரியவில்லை. அந்தளவிற்கு பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகின்றன. அரசாங்கம் என்ன செய்கின்றது என்று பார்ப்போம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.