Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரியுடன் விக்கி ஆதரவு அணி நள்ளிரவில் திடீரெனச் சந்திப்பு

Featured Replies

சங்­க­ரி­யு­டன் விக்கி ஆதரவு அணி நள்­ளி­ரவில் திடீ­ரெனச் சந்­திப்பு

 
சங்­க­ரி­யு­டன் விக்கி ஆதரவு அணி நள்­ளி­ரவில் திடீ­ரெனச் சந்­திப்பு
 

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யு­டன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவு அணி­ யைச் சேர்ந்த மூவர் நேற்று முன்­தி­னம் இரவு 11 மணி­ய­ள­வில் திடீர் சந்­திப்பு நடத்­தி­யுள்­ள­னர்.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி ­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யின் கொழும்பு இல்­லத்­தி­லேயே இந்­தத் திடீர் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்டு வடக்கு அர­சி­ய­லில் பெரும் குழப்­ப­நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக கையெ­ழுத்­திட்;ட வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், திரு­மதி அனந்தி சசி­த­ரன், ஜி.ரி.லிங்­க­நா­தன் மூவ­ருமே, வீP.ஆனந்­த­சங்­க­ரி­யு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

ஆனந்­த­சங்­க­ரி­யின் பிறந்­த­நாளை முன்­னிட்டு அவ­ரைச் சென்று சந்­தித்­தாக, சந்­திப்­பில் கலந்து கொண்ட உறுப்­பி­னர் ஒரு­வர் குறிப்­பிட்­டார். ஆனந்­த­சங்­கரி தான் எழு­திய புத்­த­கத்தை தமக்­குத் தந்­த­தா­க­வும், யாழ்ப்­பா­ணம் வரும்­போது, முத­ல­மைச்­ச­ரைச் சந்­திக்க விரும்­பி­னால் ஏற்­பாடு செய்து தரு­வோம் என்று அவ­ருக்கு கூறி­ய­தா­க­வும், அந்த உறுப்­பி­னர் மேலும் தெரி­வித்­தார். இந்­தச் சந்­திப்­பில் வேறு விட­யங்­கள் பேசப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­னார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­ட­போது, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் தலை­மைப் பொறுப்பை முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கத் தயா­ராக இருப்­ப­தாக, வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­தி­ருந்­தமை நினை­வில் கொள்­ளத்­தக்­கது.

http://uthayandaily.com/story/8082.html

2 hours ago, நவீனன் said:

சங்­க­ரி­யு­டன் விக்கி ஆதரவு அணி நள்­ளி­ரவில் திடீ­ரெனச் சந்­திப்பு

 
முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக கையெ­ழுத்­திட்;ட வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், திரு­மதி அனந்தி சசி­த­ரன், ஜி.ரி.லிங்­க­நா­தன் மூவ­ருமே, வீP.ஆனந்­த­சங்­க­ரி­யு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

ம் கொண்டு வரப்­பட்­ட­போது, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் தலை­மைப் பொறுப்பை முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கத் தயா­ராக இருப்­ப­தாக, வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­தி­ருந்­தமை நினை­வில் கொள்­ளத்­தக்­கது.

http://uthayandaily.com/story/8082.html

எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், திரு­மதி அனந்தி சசி­த­ரன், ஜி.ரி.லிங்­க­நா­தன் மூவ­ரும் ,ஆனந்­த­சங்­க­ரியை சென்று சந்தித்ததை "சங்­க­ரி­யு­டன் விக்கி ஆதரவு அணி நள்­ளி­ரவில் திடீ­ரெனச் சந்­திப்பு" எனக் கேவலமாகத் தலைப்பிட்டு செய்தியாக்கி உதயன் பத்திரிகை தனது ஊடக விபசாரத்தினை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியுள்ளது. 

வடமாகண சபையை குழப்பி  தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து , அவர்களிடையே பிளவை ஏற்படுத்தும்  தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் நிகழ்சி நிரலை செயற்படுத்திவரும்  உதயன் பத்திரிகையில் இப்படியான செய்திகள் வருவது ஒன்றும் புதினமல்ல
எல்லா செய்லகளுக்கும் ஒரு நீதியுண்டு எனபதனை உதயன் உணர அதிக காலம் எடுக்கப் போவதில்லை

அதனை இறைவன் பார்த்துக்கொள்வார்.

  • தொடங்கியவர்
‘சங்கரியுடனான சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல’
 

முருகவேல் சண்முகன்

வட மாகாண சபை உறுப்பினர்களான, எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், லிங்கநாதன் ஆகியோர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை, கொழும்பில், அவரது வீட்டில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவு சந்தித்திருந்தனர்.

இந்நிலையில், ஒரு மணித்தியாலமளவில் நடைபெற்ற இச்சந்திப்பு பற்றி தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், குறித்த சந்திப்பானது அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனத் தெரிவித்தார்.   

மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இச்சந்திப்பின்போது, வட மாகாண சபையின் அண்மைய நிகழ்வுகள், சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.   

இது தவிர, வட மாகாண சபையின் அண்மைய நிகழ்வுகளைத் தொடர்ந்து, வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக, ஆனந்தசங்கரி தெரிவித்ததாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாக, ஆனந்தசங்கரியிடம் தெரிவித்ததாகக் கூறினார்.   

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தலைமைப் பதவி ஏற்க வருமாறு, விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் கலந்துரையாடினீர்களா என சிவாஜிலிங்கத்திடம் வினவியமைக்கு, “இனப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நாம், அதையே முன்னிலைப்படுத்த வேண்டும். ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். பிரிந்து நின்று, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது” என்று கூறினார். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சங்கரியுடனான-சந்திப்பு-அரசியல்-நோக்கம்-கொண்டதல்ல/71-199503

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.